Jump to content

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்


Recommended Posts

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக  கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.

 

gotha.jpg

 

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.

வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/69123

Link to comment
Share on other sites

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை இன்று மாலை 3 அல்லது 4 மணிக்குகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/69124

 

இதுவரையில் 89 தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

13 minutes ago, ampanai said:

3 அல்லது 4 மணிக்குள் இறுதி முடிவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை இன்று மாலை 3 அல்லது 4 மணிக்குகள் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/69124

 

இதுவரையில் 89 தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 மில்லியன் வாக்குகளுள் 3 மில்லியன் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளது. 89 என்பது சிறிய தொகை - 89% அல்ல.    தாம் வெற்றி பெற்றுள்ளதாக இப்போது அறிவித்து இருப்பதன் நோக்கம், பின்னர் உண்மையில் இவர்களின் தோல்வி அறிவிக்கப்படும் போது, அது பொய்யானது என்று சொல்லி கலவரங்களையும் இராணுவ புரட்சியையும் ஆரம்பிக்க ஏதுவாக.

Link to comment
Share on other sites

1 minute ago, Jude said:

15 மில்லியன் வாக்குகளுள் 3 மில்லியன் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளது. தாம் வெற்றி பெற்றுள்ளதாக இப்போது அறிவித்து இருப்பதன் நோக்கம், பின்னர் உண்மையில் இவர்களின் தோல்வி அறிவிக்கப்படும் போது, அது பொய்யானது என்று சொல்லி கலவரங்களையும் இராணுவ புரட்சியையும் ஆரம்பிக்க ஏதுவாக.

இல்லை. அமெரிக்காவில் கூட இவ்வாறு கூறுவார்கள். ( ப்ளூ ஸ்டேட் ரெட் ஸ்டேட், மற்றும் கவுண்டீஸ்) . அது போன்று இவர்களுக்கும் இவ்வளவு வித்தியாசத்தில் இந்த இந்த மாகாணங்களில் வென்றால், பின்னர் தம்மை நெருங்க முடியாது என ஒரு கணக்கு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் சொல்லி இருக்கலாம். 

Link to comment
Share on other sites

முடிவுகளின் பின்னர் தமிழர் தலைமைகள் தங்களை, தங்களின் அரசியல் ஆளுமையை மற்றும் சிங்கள ஒற்றையாட்சி விதிமுறைகளையும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். 

எவ்வாறு சஜித் உப தலைவர் பதவியில் இருந்து விலகினாரோ அவ்வாறு சில தமிழ் அரசியல் தலைமைகளும் விளக்கவேண்டும் / ஓய்வு பெற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

எவ்வாறு சஜித் உப தலைவர் பதவியில் இருந்து விலகினாரோ அவ்வாறு சில தமிழ் அரசியல் தலைமைகளும் விளக்கவேண்டும் / ஓய்வு பெற வேண்டும். 

அந்தளவுக்கு அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் அல்ல நம்ம அரசியல் தலிவர்கள் 😜

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

அந்தளவுக்கு அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள் அல்ல நம்ம அரசியல் தலிவர்கள்

சஜித்தை பொறுத்தவரையில் அவர் அவ்வாறு இரணிலிடம் உறுதி அளித்திருக்ககூடும். அதை அவர் கடைப்பிடித்தது அவரின் பண்பை  காட்டியுள்ளது. சிலவேளைகளில், மீண்டும் அரசியலில் குதிக்க இது உதவும். 
வயது போன ரணிலின் பின்னர் யார் என்ற கேள்வியும் எழுகின்றது. இதுவே ஐ,தே.க. வின் அஸ்தமனமா தெரியவில்லை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் இந்தியாவுக்கு ஆப்பு வைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ampanai said:

சஜித்தை பொறுத்தவரையில் அவர் அவ்வாறு இரணிலிடம் உறுதி அளித்திருக்ககூடும். அதை அவர் கடைப்பிடித்தது அவரின் பண்பை  காட்டியுள்ளது. சிலவேளைகளில், மீண்டும் அரசியலில் குதிக்க இது உதவும். 
வயது போன ரணிலின் பின்னர் யார் என்ற கேள்வியும் எழுகின்றது. இதுவே ஐ,தே.க. வின் அஸ்தமனமா தெரியவில்லை.   

இருக்கலாம் ஆனால் சிங்கள தலைமைகள் யாருமே எமக்கு தீர்வு தந்து தமிழனை அந்த தீவில்  நிம்மதியாய் வாழ விடமாட்டார்கள் விச பாம்பை தமிழர்கள் நல்ல பாம்பென்று சொல்லி கொள்வது போல் இந்த சிங்கள கட்சிகள் . காரணம் எமக்குள் உள்ள ஒற்றுமையின்மை ஒரு ******* கொலிஜ் போன்ற கல்லூரி லெவலிலே  படித்தவர்கள் உள்ள பாடசாலை  uk யில்  மட்டும் இரண்டு மூன்று பிரிவு கொள்ளுபடுது  இப்படி பல உதராணம்கள் ஆரம்பமே அப்படிஎன்றால் ?

என் கருத்து பலரை கோபப்பட வைக்கும் ஆனால் யதார்த்தம் அதுதான் .

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையாளியுமான கோட்டாபய ராஜபக்ச நாளை காலை 9:00 மணிக்கு பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பேரினவாதி சஜித் பிரேமதாச தனது துணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் வென்றவரை வாழ்த்தியுள்ளார்.

குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க மகிந்தவுடன் பேரம் பேசி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் மூலம் பூச்சாண்டி காட்டி பயமுறுத்தி தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த கூத்தமைப்பை அந்த பேரினவாதக் கட்சி கைவிட்டுள்ளது.

பூச்சாண்டிக்கும் பெரிய பேய்க்கும் பயந்து சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் மேலும் கிலிகொண்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் மோதல்களுக்குள் தலையைக் கொடுத்து சிக்கிய நிலையில் சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, போல் said:

பூச்சாண்டிக்கும் பெரிய பேய்க்கும் பயந்து சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் மேலும் கிலிகொண்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு சிங்கள-பௌத்த பேரினவாதிகளின் மோதல்களுக்குள் தலையைக் கொடுத்து சிக்கிய நிலையில் சிறிய பேய்க்கு வாக்களித்த தமிழர் உள்ளனர்.

அப்போதும் சொன்னம் இப்பவும் சொன்னம் கூத்தமைப்பை நம்பி பின்னால் போகிறவர்களுக்கு ஆப்பு என்று அறப்படிச்ச செம்புகள் தான் பரத நாட்டியம் ஆடுனவை என்ன ஒன்று இவ்வளவு நாளும் இல்லாத போர்குற்றம் தடை என்று மேற்குலகு மறுபடியும் ஆனா வில் இருந்து தொடங்குவது போல் சலசலப்பு காட்டுவினம் தங்களுக்கு வேண்டிய அலுவல் முடிந்தவுடன் தமிழர்களை கையை விட்டு விடுவினம் . கொத்தாவும் லேசு பட்ட ஆள் அல்ல முதலைக்கு யார் சுறாவுக்கு யார் என்று தெரிந்து போட தெரிந்த  அரசியல் கதைக்க தெரியாத அரசியல் வியாபாரி அதுக்காக கைகளை வெள்ளையாய் காட்டிய பின் மறுபடியும் வெள்ளைவான் உள்ளே கொண்டு வருவது நிறைய  கஷ்ட்டம் உள்ளது அவருக்கு ஆனாலும்  யுத்த இறுதி நேரம்களில் ராணுவத்துக்கு மத்தியில் இருந்து தமிழ் பெண்கள் ராணுவத்துக்கு தமிழ் ஆண்களின் இரத்தம் இந்து சமுத்திர கடலுக்கு என்று ஓலமிட்டவர் மறக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா மொத்த இலங்கைக்கும் சனாதிபதியாவது என்பது சனநாயகத்தின் சாபக்கேடு.

தமிழ் மக்கள் இவருக்கு வாக்களிக்காத போதும்.. அமெரிக்காவின் கேடுகெட்ட இந்த சனநாயக முறையால்... அவர்களும் இந்தப் போர்க்குற்றவாளியை சொந்த இனத்தை கொன்றொழித்தவனை.. தெரிவு செய்வதாகிறது. ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

எனவே சொறீலங்காவில் தமிழர் பிரதிநிதி ஒருவரும்.. தமிழர்கள் சார்பில் சனாதிபதியாக கோத்தா சிங்கள சனாதிபதியானால்.. நியமிக்கப்படுவதே நியாயம். 

கோத்தா மட்டும்.. இலங்கைக்கு சனாதிபதியாக முடியாது. அதுவல்ல.. இலங்கை மக்கள் அனைவரின் விருப்பும். குறிப்பாக பெரும்பானமை தமிழ் பேசும் மக்கள் அவருக்கு சனாதிபதியாக வாக்களிக்கவில்லை. அந்த வகையில்.. அவர் அவர்களுக்கு சனாதிபதியாவது மகா கொடுமை. சனநாயக விரோதம்.

அரளிமாளிகையை இரண்டாகப் பிரித்து.. உடனடியாக கோத்தாவுக்கு சமாந்திரமாக இன்னொரு சனாதிபதியை நியமிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் எனி ரணில்.. கோத்தா இழுபறி நடக்கும் போது.. மீண்டும் தமிழ் மக்களின் வாக்கு பலம் பேச வேண்டும்.. கோத்தாவுக்கு எதிராக. மிகவும் காத்திரமாக. 

சர்வதேச அளவில் தமிழ் மக்கள் கோத்தாவின் போர்க்குற்றம்.. இன அழிப்புக்கு நீதி கோட்டு உச்சக்கட்ட நகர்வுகளை மேற்கொள்ள இன்றே ஆரம்பிப்பது மிக மிக மிக அவசியமாகும். 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தமிழீழமும்.. மலையகமும்.. ஒரு நாடு... மிச்சம்... சிங்கள நாடு. சர்வதேசம் இந்தப் பிரிவை புரிந்து கொண்டு அங்கீகரிப்பது மட்டுமே.. இந்தப் பிரிவின் அடித்தளம் சார்ந்து மக்கள் இருவேறு கோணங்களில் பயணிப்பதை மதிப்பதாகும்.

சும்மா நல்லிணக்கம்.. இன ஐக்கியம் என்று பேசி.. பிரிந்து போயுள்ள மனங்களை எந்த வகையில் யாரும் ஒற்றுமைப்படுத்த முடியாது. தமிழ் பேசும் மக்கள்.. சுதந்திரமாகப் பிரிந்து போக அனுமதியுங்கள். இதையே அவர்கள் ஒவ்வொரு சனநாயகத் தேர்தலிலும்.. கடந்த 30 ஆண்டுகளாக இனங்காட்டி வருகின்றனர். ஆனால்.. சனநாயகம் என்று வாய்கிழியக் கத்தும் உலகம்.. சர்வதேசம்.. அது உச்சரிக்கும் சனநாயகத்தால்.. ஒரு தொகுதி மக்கள் காட்டும் விருப்பை மதிக்காமல் விடுவது என்பது.. சனநாயகத்தின் சாபக்கேடு. 

இன்றேல்.. சனநாயகத்தின் இந்த பராபட்ச நடைமுறையை இல்லாமல் ஒழிக்க.. சனநாயகத்தை மறுசீரமைத்து.. பெரும்பான்மை இனத்துக்குள் தம் விருப்பு தலைத்து வாழும் நிலையில் இருந்து சிறுபான்மையினரைக் காக்க.. வேண்டும். தமிழ் மக்கள் பிரிந்து செல்லும் உரிமையை வழங்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களுக்குள் சிறுபான்மை இனங்கள்.. தமது விருப்பை தொலைத்து.. வாழ்வது என்றால்.. அதென்ன மண்ணாங்கட்டி.. சனநாயகம். அதை ஏன் மக்கள் அங்கீகரிக்க வேண்டும். இது குறித்து சனநாயகத்தை வலிந்து திணிக்கும் சர்வதேசம் தான் பதில் சொல்ல வேண்டும். 

Link to comment
Share on other sites

5 minutes ago, nedukkalapoovan said:

கோத்தா மொத்த இலங்கைக்கும் சனாதிபதியாவது என்பது சனநாயகத்தின் சாபக்கேடு.

என்ன செய்வது?
இதான் ஜனநாயகத்தின் சுயரூபம்.

மதவெறி, இனவெறி தலைதூக்கியுள்ள சொறிலங்கா, ஹிந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஜனநாயகம் என்டுறது சிறுபான்மையினரை அடிமையாக நடத்த உதவும் ஒருகருவியே.

இதில இருந்து விடுபாடோணும் என்டால், உண்மையான ஜனநாயகத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்டால், சிறுபான்மையர் வாழும் பகுதியில முழுமையான சமஸ்டி கட்டமைப்போட கூடிய ஜனநாயகம் தான் ஓரளவு உதவும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி, மதவெறி, குண்டுவெடிப்பு என பல பயமுறுத்தல், அடாவடி மூலம் ஜனாதிபதியானாலும் முன்னைய சண்டித்தனங்களை முடக்கி வைக்காவிட்டால் தானே வலியப்போய் மாட்டிக்கொண்ட மாதிரி ஆகலாம். எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் அநேகமான சிங்களவர் வன்முறைகளிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என்பது காலங்காலமாய் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. 

Link to comment
Share on other sites

8 minutes ago, satan said:

இனவெறி, மதவெறி, குண்டுவெடிப்பு என பல பயமுறுத்தல், அடாவடி மூலம் ஜனாதிபதியானாலும் முன்னைய சண்டித்தனங்களை முடக்கி வைக்காவிட்டால் தானே வலியப்போய் மாட்டிக்கொண்ட மாதிரி ஆகலாம். எனக்கென்னமோ இன்னும் சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் அநேகமான சிங்களவர் வன்முறைகளிலேயே அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என்பது காலங்காலமாய் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. 

உண்மை!

பெரும்பான்மையான சிங்கள-பௌத்தர்கள் கடத்தல், படுகொலை, கொள்ளை, கப்பம், போன்ற மிக மோசமான சமூகவிரோத செயல்களுக்கு ஆதரவானவர்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக காட்டுகிறது. அதனால் தான் போர்க்குற்றவாளியும் இனப்படுகொலையாளியுமான கோட்டாபய ராஜபக்ச என்ற ஒரு மிலேச்ச பயங்கரவாதியை தமது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் பூர்வீக குடிகளான தமிழர்கள் இப்படியான ஒரு சமூகவிரோதக் கும்பலுடன் நிம்மதியாக வாழமுடியாது என்பதால் தங்கள் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யக்கூடிய ஒரு தீர்வை சர்வதேச சமூகத்திடம் கோரலாம்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர்கள் காலதாமதமின்றி விவேகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

Link to comment
Share on other sites

நாளை அனுராதபுரவில் பதவியேற்கிறார் கோத்தா

சிறிலங்காவின் புதிய  அதிபராக  கோத்தாபய ராஜபக்ச நாளை அனுராதபுரவில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார் என்று, வண. உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுர  ருவன்வெலி மகா தூபி முன்பாக, கோத்தாபய ராஜபக்ச புதிய அதிபராக நாளை காலை பதவியேற்கவுள்ளார் என, முகநூல் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.

அதேவேளை, தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்றும், இன்று மாலையே புதிய அதிபர் பதவியேற்கலாம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41236

பதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவதில் ஹரின் பெர்னான்டோ முழு மூச்சுடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், மேலும் பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகுவர் என்றும் கூறப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41241

நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மங்கள

சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும், பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா அதிபருக்கு  அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

அதேவேளை மங்கள சமரவீர தனது கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “ என் அன்புக்குரிய நாட்டிற்காக நான் அழுகிறேன். இரட்டை இரத்தினங்களான புத்தர் மற்றும், தர்மத்தின் ஆசீர்வாதமும் சிறிலங்காவுக்கு இருக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/11/17/news/41244

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் முடிவுகள் தெரியவில்லை.

ஆயினும், வேறு திரியில் கோத்தவே அதிபர் ஆவர் என்று சொன்னேன்.


அதன் பின்பு தேர்தலை பற்றி ஒன்றுமே எழுதவில்லை.
 

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

குள்ளநரி ரணில் விக்கிரமசிங்க மகிந்தவுடன் பேரம் பேசி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

பதவிகளை இராஜினாமா செய்கின்ற ரணில்? மற்றும் பல அமைச்சர்கள்; கூடுகின்றது முக்கிய கூட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதன்படி தொழில்நுட்பத்திறன், விளையாட்டுத்துறை அமைச்சரான ஹரீன் பெர்ணான்டோ, தேசிய பொருளாதார கொள்கை வருப்பு இராஜாங்க அமைச்சர் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் இதற்கான அறிவிப்பை தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவும் இராஜினாமா?

பதவியை இராஜினாமா செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மாலை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் பின் அவர் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/131425

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

 

 

1 hour ago, போல் said:

இந்த சூழ்நிலையில் பூர்வீக குடிகளான தமிழர்கள் இப்படியான ஒரு சமூகவிரோதக் கும்பலுடன் நிம்மதியாக வாழமுடியாது என்பதால் தங்கள் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யக்கூடிய ஒரு தீர்வை சர்வதேச சமூகத்திடம் கோரலாம்.

கிடைக்கும் சந்தர்ப்பங்களை தமிழர்கள் காலதாமதமின்றி விவேகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!

இப்படியே மன பால் குடித்து கொண்டு திரியுங்கோ......!!!! அப்படி பெற்று தருவதானால் 4ம் கட்ட ஈழ போரே நடந்து இருக்காது .....அல்லாவிடில் 2009-2015 வரையாவது பெற்று தந்திருக்க வேணும், சீன ஆதரவு ராஜபக்‌ஷவே இருக்கும் போது வராத தீர்வு தம்க்கு ஆதரவான ராஜபக்ச இருக்கும் போது வரும் என நினைப்பது மடத்தனம்ெந்த்ஹு முதல் கவலை யாதெனில்  வடக்கின் அடாவடி மினிஸ்ட்டரிம் இருந்து எமது காணிகளை எப்படி காப்பாற்ற் போகிறோம். அராலி சிவன் கோவில் காணி கைவிட்டு போகாமல் மக்கள் போராடி கொண்டு இருந்த்தார்கள், அது முதலில் கைவிட்டு போகும் போல இருக்கு.

 

Link to comment
Share on other sites

37 minutes ago, Dash said:

இப்படியே மன பால் குடித்து கொண்டு திரியுங்கோ......!!!!

நீங்கள் மனப்பால் குடித்தபடி பிற்போக்குத்தனமா சிந்திக்கின்றது மாதிரியே எல்லாரும் சிந்திப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.

சூழ்நிலைக்கேற்ப அடுத்த நகர்வுகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

Just now, போல் said:

நீங்கள் மனப்பால் குடித்தபடி பிற்போக்குத்தனமா சிந்திக்கின்றது மாதிரியே எல்லாரும் சிந்திப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.

சூழ்நிலைக்கேற்ப அடுத்த நகர்வுகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

அந்த திட்டம் என்னவென்று நீங்கள் குறிப்பிட்டால் எமக்கு கொஞ்சம் தெரிவித்தால் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

6 minutes ago, Dash said:

அந்த திட்டம் என்னவென்று நீங்கள் குறிப்பிட்டால் எமக்கு கொஞ்சம் தெரிவித்தால் பேருதவியாக இருக்கும்.

இக்கட்டான சூழ்நிலைகளில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும்.
குறை சொல்வதை விட்டுவிட்டு நீங்களே உங்கள் திட்டத்தை / எண்ணங்களைச் ஏன் சொல்லக்கூடாது?

நீங்கள் தற்போதைய சூழ்நிலையில் ஆதங்கப்பட்டு குறை சொல்லிக் கருத்தெழுதியிருந்தால் அதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.  

இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுமை  முக்கியம் DASH அவர்களே!

நாம் இருக்கும் சூழ்நிலையில் எமக்கு பொறுமை அவசியமாகிறது. பொறுமையும் நம்பிக்கையும் இல்லையென்றால் என்றோ துவண்டு வீழ்ந்திருப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு😀 ....தமிழ் மக்கள் இவரை பகைக்காமல்,இவரோடு உறவாடி தமக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எதிர்த்து நிற்பதால் இழப்புகளும்,தோல்விகளும் தான் அதிகம்...முஸ்லிம்களை பாருங்கள் தேர்தலில் சஜீத்திற்கு வோட் போட்டு  விட்டு ,கோத்தா வென்றதும் அவரை வாழ்த்தி வெடி கொளுத்துகிறார்கள் ...எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்யாமல்,பணிந்து போய் எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எந்த நேரமும் நேருக்கு,நேர் மொத வேண்டும் என்றில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா தான் சொன்னபடி வெறும் சிங்கள மக்களின் வாக்குகளால் வென்றுவிட்ட நிலையில்... தமிழர்கள் பணிந்து குனிந்து எதையும் பெற முடியாது என்பதே யதார்த்தம்.

இருக்கும் தெரிவு... போர்க்குற்றவாளியான.. கோத்தாவை பிற நாடுகளில் போர்க்குற்றம் இழைத்த அரசுத் தலைவர்களை தண்டித்தது போல் சர்வதேசம் தண்டிக்க கோருவதும்.. அதற்கான அழுத்தத்தை ஏற்படுத்துவம் தான்.

ஏலவே.. போர்க்குற்றவாளிகளான.. மிலேசவிச்.. சதாம் குசைன்.. ஹடாபி உட்பட பலர் போர்க்குற்றங்களுக்கு சர்வதேசத்தால் தண்டிக்கப்பட்டிருந்தனர்.

பிபிசி இன்றைய இந்த வெற்றிச் செய்தியோடு.. இவரின் மனித உரிமை மீறல்கள்.. குறித்துக் குறிப்பிட்டுள்ளதோடு.. கடந்த கால போர்க்கால காணொளியையும் இணைத்துள்ளது.

ஆனால்.. நம்மவர்கள்.. பணிவோம்.. குனிவோம்.. ஏதாவது தூக்கிப் போடுவார்கள் என்று காத்துக்கிடக்கச் சொல்கிறார்கள்.

He is popular among Sinhalese-dominated parts of the island, but is disliked by Tamils because of his alleged links to human rights abuses carried out during the final stages of the civil war.

https://www.bbc.co.uk/news/world-asia-50449677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

கோத்தாவுக்கு எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு😀 ....தமிழ் மக்கள் இவரை பகைக்காமல்,இவரோடு உறவாடி தமக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எதிர்த்து நிற்பதால் இழப்புகளும்,தோல்விகளும் தான் அதிகம்...முஸ்லிம்களை பாருங்கள் தேர்தலில் சஜீத்திற்கு வோட் போட்டு  விட்டு ,கோத்தா வென்றதும் அவரை வாழ்த்தி வெடி கொளுத்துகிறார்கள் ...எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்யாமல்,பணிந்து போய் எமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும்...எந்த நேரமும் நேருக்கு,நேர் மொத வேண்டும் என்றில்லை 
 

ரதி,

நீங்கள் எதிர்வு கூறியமாதிரி மட்டக்களப்பு, மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அம்மான், பிள்ளையான், வியாழன் பின்னால் போய் கோத்தாவுக்கு வாக்களிக்கவில்லையே!

கோத்தா வரக்கூடாது என்று வாக்களித்த மக்களை சரணாகதி அரசியல் செய்யச் சொல்வதை பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், பச்சோந்தித்தனம் என்று அரசியலாளர்கள் சொல்வார்கள்😜

இதை இன்னொரு திரியில் கவிஞர் பொயற்றுக்கும் சொல்லியுள்ளேன்.😎

தமிழ், முஸ்லிம் மக்கள்  தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமை மூலம் தெளிவாகவும், துணிச்சலாகவும் சொன்ன செய்திக்கு அவர்களுக்குதான் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கவேண்டும்.

மக்களின் உணர்வுகளை மதிக்காது அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் மக்களின் மனங்களை மாற்றமாட்டார்கள். 2010, 2015, 2019 தேர்தல்களில் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மாறாமல் தமது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்கள். அதே போல் சிங்களவர்களும் தங்களது பேரினவாதத்தின் பற்றுதலை தெளிவாகவே காட்டியுள்ளனர்.

சலுகைகளுக்காக வாக்குப்போடும் அளவிற்கு மக்கள் இறங்கிவராதபோது, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க என்ன செய்யவேண்டும் என்றே கட்சிகள் சிந்திக்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.