• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்

Recommended Posts

1 hour ago, கிருபன் said:

ரதி,

நீங்கள் எதிர்வு கூறியமாதிரி மட்டக்களப்பு, மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அம்மான், பிள்ளையான், வியாழன் பின்னால் போய் கோத்தாவுக்கு வாக்களிக்கவில்லையே!

கோத்தா வரக்கூடாது என்று வாக்களித்த மக்களை சரணாகதி அரசியல் செய்யச் சொல்வதை பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், பச்சோந்தித்தனம் என்று அரசியலாளர்கள் சொல்வார்கள்😜

இதை இன்னொரு திரியில் கவிஞர் பொயற்றுக்கும் சொல்லியுள்ளேன்.😎

தமிழ், முஸ்லிம் மக்கள்  தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமை மூலம் தெளிவாகவும், துணிச்சலாகவும் சொன்ன செய்திக்கு அவர்களுக்குதான் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கவேண்டும்.

மக்களின் உணர்வுகளை மதிக்காது அரசியல் செய்பவர்கள் ஒருபோதும் மக்களின் மனங்களை மாற்றமாட்டார்கள். 2010, 2015, 2019 தேர்தல்களில் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மாறாமல் தமது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்கள். அதே போல் சிங்களவர்களும் தங்களது பேரினவாதத்தின் பற்றுதலை தெளிவாகவே காட்டியுள்ளனர்.

சலுகைகளுக்காக வாக்குப்போடும் அளவிற்கு மக்கள் இறங்கிவராதபோது, அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க என்ன செய்யவேண்டும் என்றே கட்சிகள் சிந்திக்கவேண்டும்.

கிருபன், நான் மட்டு மக்கள் தான் கோத்தாவுக்கு வாக்களிக்க கூடும் என்று எதிர் பார்த்தேன் ...முஸ்லீம் மக்கள் சஜீத்திற்கு வாக்களி த்தலில் ஒரு வியப்பும் இல்லை....இது வரை நடந்த ரணில்,மைத்திரி ஆட்சியில் தான் முஸ்லிம்களது அதிகாரம் கட்டுக் அடங்காமல் பெருகியது ...ஈஸ்டர் தாக்குதல் தேவாலயங்களில் குண்டு வைக்கும் அளவுக்கு  வளர்ந்தது இவர்களது ஆட் சியில் தான் ...சஜீத் ஆட் சிக்கு வந்திருந்தால் இன்னும் 4 வருடங்களில் இலங்கை முழு இஸ்லாமிய நாடாகி இருக்கும் ...பெரும்பான்மையினர் கோத்தாவுக்கு வோட் போடவும், முஸ்லிம்கள் சஜீத் திற்கு வாக்களிக்கவும் இதுவே காரணம் 

மட்டு மக்கள் தேர்தலில் கோத்தாவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.
முஸ்லிம்கள் சஜீத்திற்கு வாக்குப் போட்டு ,தாங்கள் போடா விடடால் அவர் பதவிக்கு வந்தால் தங்களுக்கு பிரச்சனை என்று நினைத்திருக்க கூடும்.

உண்மையிலேயே தங்கள் பிரச்சனைக்கு அவர் நல்லதொரு தீர்வு தருவார் என்று நம்பி இருக்கலாம்.
கூட்டமைப்பு விசுவாசமும் காரணமாய் இருக்கலாம்...இவர்களை தண்டிக்க இது நேரம் இல்லை .சஜீத்திற்கு வாக்கு போடுங்கோ. மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பை பலி வாங்கலாம் என்று பல பதிவுகளை பார்த்தேன்.

கோத்தா மேல் இன்னும் கோபமும்,பயமும் இருக்கலாம்...அது தேவையற்றது..அந்த நேரத்தில் புலிகள் இருந்தார்கள்...பழி   வாங்க வேண்டிய தேவை இருந்தது ...நாமலும் அரசியலில் ஈடுபடுகிறார்.

நீண்ட கால நோக்கில் பார்த்தால் தமிழர் செய்த மிக மோட்டுத் தனமான வேலை  சஜீத்தை தெரிவு செய்தது
இப்ப பாருங்கள் சிறு பான்மையினரின் ஆதரவு இல்லாமல் கோத்தா வென்றிருக்கிறார் ..யாருக்கு நட்டம்?

முஸ்லீம் மக்கள்.அரசியல்வாதிகள்  காலில் விழுந்தாவது தங்கள் காரியத்தை சாதித்து கொள்வார்கள் ....ஆனால், தமிழரின் நிலை ?தமிழருக்காய் கதைப்பதற்கு ஒழுங்கான அரசியல்வாதிகள் இல்லை .

கோத்தா போர்க் குற்றவாளி அவரை தமிழர்கள் தண்டித்து விட்டார்கள் என்று சர்வதேசத்திற்கு தமிழர்கள் காட்டுவதன் மூலம் அவர்கள் சாதித்தது என்ன? ...தமிழர்கள் சொல்லித் தான் சர்வதேசத்திற்கு இவர் போர்க் குற்றவாளி என்று தெரிய போகுதாக்கும் 

சர்வதேசம் கோத்தாவை பிடித்து உள்ளுக்கு போடப் போகின்றதா? அல்லது தண்டனை கொடுக்கப் போகின்றதா?
எப்படி அவரை தன்ட கைக்குள் போட்டுக் கொண்டு தங்கட நலனைத் தான் பார்க்கும்.

மொக்குத் தமிழர்கள் கடைசி  வரைக்கும் அடிமைகளாய் இருக்க வேண்டியது தான் .

Share this post

Link to post
Share on other sites
44 minutes ago, ரதி said:

மொக்குத் தமிழர்கள் கடைசி  வரைக்கும் அடிமைகளாய் இருக்க வேண்டியது தான்

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். - ஜீவன் சிவா

தமிழர்கள், முஸ்லிம்கள் சோறு கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ, பட்டினியாகச் சாகவேண்டும் என்பதற்காகவோ வாக்களிக்கவில்லை. தாம் தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும் சம உரிமையோடு வாழவேண்டும் என்றுதான் வாக்களித்தனர். கோத்தாவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் மெளனிகளாக, இரண்டாம்தரப் பிரஜைகளாக இருக்கவேண்டி வருமோ என்ற அச்சத்தில்தான் சஜித்துக்கு வாக்களித்தனர். அதற்காக சஜித் தேவதூதன் என்று நினைக்கவில்லை.

கோத்தா தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அச்சங்களைக் களைய ஏதாவது செய்வாரா அல்லது வெற்றிவாத சிங்கள-பெளத்த மேலாதிக்கத்தை மேலும் வளர்த்து அடுத்த தேர்தலிலும் வெல்ல ஆயத்தமாவாரா என்பது அடுத்துவரும் நாட்களில், வருடங்களில் தெரியும்.

கோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்வது வெறும் சரணாகதி அரசியல்.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, nedukkalapoovan said:

எனவே சொறீலங்காவில் தமிழர் பிரதிநிதி ஒருவரும்.. தமிழர்கள் சார்பில் சனாதிபதியாக கோத்தா சிங்கள சனாதிபதியானால்.. நியமிக்கப்படுவதே நியாயம்

அதற்கான வழிவகைகளை உருவாக்கவேண்டியது தமிழ் தலைமைகள் ஆர்வலர்களின் கடமை. 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். - ஜீவன் சிவா

இதை எழுதியவன் யான். இதை ஜீவன் சிவா எனக்கு எதிராகவே சுட்டுப்போட.. அது இப்போ ஜீவன் சிவாவினதாகிவிட்டது.

இப்படித்தான் வரலாறுகள்.. காலத்தோடு.. மாறிப்போய்விடுமோ..??!

கோத்தான் நல்லவர்.. வல்லவர்.. நல்லாட்சி அதிபர் ஆனாலும் ஆச்சரியமில்லைப் போல் உள்ளதே.

ஆனால்.. கோத்தா பிபிசி மேற்கோளின் படி.. பல ஆயிரம் மக்கள் காணாமல் போவதற்கும்.. மனித உரிமை மீறல்களுக்கும் சொந்தக்காரர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கான நீதியை அவர் பெறாமல்.. தப்பிக்க அனுமதிக்கவே முடியாது. 

Share this post

Link to post
Share on other sites
57 minutes ago, nedukkalapoovan said:

இதை எழுதியவன் யான். இதை ஜீவன் சிவா எனக்கு எதிராகவே சுட்டுப்போட.. அது இப்போ ஜீவன் சிவாவினதாகிவிட்டது

இந்த வரலாறு தெரியாமல் போய் விட்டது!

ஜீவன் சிவாவின் கையெழுத்தில் பார்த்து அவருடைய பொன்மொழி என்று நினைத்துவிட்டேன்.

இந்த வரலாற்றுத் தவறைத் திருத்திவிடுகின்றேன்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். - நெடுக்காலபோவானின் பொன்மொழி 

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, கிருபன் said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். - ஜீவன் சிவா

தமிழர்கள், முஸ்லிம்கள் சோறு கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ, பட்டினியாகச் சாகவேண்டும் என்பதற்காகவோ வாக்களிக்கவில்லை. தாம் தமிழர்களாகவும், முஸ்லிம்களாகவும் சம உரிமையோடு வாழவேண்டும் என்றுதான் வாக்களித்தனர். கோத்தாவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் மெளனிகளாக, இரண்டாம்தரப் பிரஜைகளாக இருக்கவேண்டி வருமோ என்ற அச்சத்தில்தான் சஜித்துக்கு வாக்களித்தனர். அதற்காக சஜித் தேவதூதன் என்று நினைக்கவில்லை.

கோத்தா தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அச்சங்களைக் களைய ஏதாவது செய்வாரா அல்லது வெற்றிவாத சிங்கள-பெளத்த மேலாதிக்கத்தை மேலும் வளர்த்து அடுத்த தேர்தலிலும் வெல்ல ஆயத்தமாவாரா என்பது அடுத்துவரும் நாட்களில், வருடங்களில் தெரியும்.

கோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்வது வெறும் சரணாகதி அரசியல்.

கிருபன் ,உங்கட கதையைப் பார்த்தால் இப்ப நடந்த ஆட்சி காலத்தில் ஏதோ தமிழர்களை முதற் தர பிரஜைகளாய் நடத்தின மாதிரி அல்லவா இருக்கு .

சரணாகதி அடைந்த கோழையாகவே நான் இருந்திட்டு போறேன்...அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை....நீங்கள் இங்கே இருந்து கொண்டு அவர்கள் கோத்தாவை புறக்கணித்து விட்டார்கள் என்று கெக்கரிப்பது மு.புத்தகத்தில் அரசியல் செய்ய மட்டுமே உதவும் 

உண்மையில் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் அங்குள்ள தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியாது .
கோத்தா அழிக்கப்பட வேண்டியவர் அது, இது என்று இப்ப எதிர்ப்பு காட்ட வெளிக்கிட்டால் ஊரில்  தமிழினம் இருந்த அடையாளம் தெரியாமல் அழிந்து விடும்...அவரை  மு.வாய்க்காலில் பார்த்தும் நேருக்கு நேர் மோதுவேன் என்பது சண்டித்தனம் 

எம் இருப்பை தக்க வைக்க அவரோடு சேர்ந்து பயணிப்பதில் தப்பேதும் இல்லை.
 
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, ரதி said:

கிருபன் ,உங்கட கதையைப் பார்த்தால் இப்ப நடந்த ஆட்சி காலத்தில் ஏதோ தமிழர்களை முதற் தர பிரஜைகளாய் நடத்தின மாதிரி அல்லவா இருக்கு .

அப்படி நான் சொல்லவில்லையே. சஜித் தேவதூதன் என்று யாரும் நம்பவில்லையே.

தாயகத்தில் வசிக்கும் மக்கள் தாங்களாகவே சஜித்துக்கு பெருவாரியாக வாக்களித்திருந்தனர்.  தங்கள் இருப்பை தக்கவைக்க கோத்தாவோடு சேர்ந்து பயணிக்கத் தயாராக இருந்திருந்தால் கோத்தாவுக்கே வாக்களித்து நாடு முழுவதும் மொட்டை மலரச் செய்திருக்கவேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதற்கான அடிப்படைக் காரணம் கோத்தா மீதான அச்சம்தான். 

வெற்றியின் பின்னரான மகிந்தவின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாசகம் இது.

Quote

மக்களின் ஆணையை குறுகிய அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கும் பல்வேறு இனவாத, மதவாத குழுக்களுடனான பின்கதவு வழியான உடன்பாடுகளின் ஊடாக மீண்டும் ஒரு தடவை திருடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட 2015 பாணியிலான முயற்சியை தீர்க்கமான முறையில் தோற்கடித்தமைக்காக நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.அரசியல் நோக்கங்களுக்காக மதவாதத்தையும் இனவாதத்தையும் ஊக்கப்படுத்துகின்ற ஆபத்தான விளையாட்டுகளுக்கு முடிவுகட்டவேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.

மதவாதம் என்று முஸ்லிம்களையும், இனவாதம் என்று தமிழர்களையும் குறித்துள்ளார்.

எனவே, ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தமது பரம்பரை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க சிங்கள-பெளத்த பேரினவாதத்தையும், போரில் புலிகளை தோற்கடித்த வெற்றிவாதத்தையும்தான் தொடர்ந்தும் பாவிக்கப்போகின்றார்கள்.

2015 இல் மகிந்த தோல்வியடைந்த பின்னர் சிறுபான்மை இனங்களிடம் கை ஏந்தாத பெரும்பான்மை சிங்கள அரசை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து இப்போது அறுவடை செய்துள்ளனர் . எனவே தமிழ், முஸ்லிம்களின் வாக்குகளில் தங்கியிருக்காமல் பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகளினால் மாத்திரம் ஆட்சியமைக்க அவர்கள் அதே அஸ்திரங்களை தொடர்ந்தும் பாவிப்பர்.

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
On ‎11‎/‎17‎/‎2019 at 7:16 PM, கிருபன் said:

அப்படி நான் சொல்லவில்லையே. சஜித் தேவதூதன் என்று யாரும் நம்பவில்லையே.

தாயகத்தில் வசிக்கும் மக்கள் தாங்களாகவே சஜித்துக்கு பெருவாரியாக வாக்களித்திருந்தனர்.  தங்கள் இருப்பை தக்கவைக்க கோத்தாவோடு சேர்ந்து பயணிக்கத் தயாராக இருந்திருந்தால் கோத்தாவுக்கே வாக்களித்து நாடு முழுவதும் மொட்டை மலரச் செய்திருக்கவேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதற்கான அடிப்படைக் காரணம் கோத்தா மீதான அச்சம்தான். 

வெற்றியின் பின்னரான மகிந்தவின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாசகம் இது.

மதவாதம் என்று முஸ்லிம்களையும், இனவாதம் என்று தமிழர்களையும் குறித்துள்ளார்.

எனவே, ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தமது பரம்பரை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க சிங்கள-பெளத்த பேரினவாதத்தையும், போரில் புலிகளை தோற்கடித்த வெற்றிவாதத்தையும்தான் தொடர்ந்தும் பாவிக்கப்போகின்றார்கள்.

2015 இல் மகிந்த தோல்வியடைந்த பின்னர் சிறுபான்மை இனங்களிடம் கை ஏந்தாத பெரும்பான்மை சிங்கள அரசை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து இப்போது அறுவடை செய்துள்ளனர் . எனவே தமிழ், முஸ்லிம்களின் வாக்குகளில் தங்கியிருக்காமல் பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகளினால் மாத்திரம் ஆட்சியமைக்க அவர்கள் அதே அஸ்திரங்களை தொடர்ந்தும் பாவிப்பர்.

கோத்தாவுக்கு வாக்களிக்காமைக்கு முக்கிய காரணம் அவர் மேல் இருந்த பயம் தான்  அதை நானும் ஏற்கிறேன் ...ஆனால் உங்கட கதையைப் பார்த்தால் கோத்தா மட்டும் தான் வில்லன் என்பது போலவும் மற்றவர்கள் எல்லோரும் தமிழர்களை தங்க தாப்பாலத்தில் வைத்துத் தங்கின மாதிரியும் அல்லவா இருக்குது.

ஒரு நாட்டின்  ஜனாதிபதி இன,மதமற்ற நாட்டை உருவாக்குவேன் என்று சொல்வதில் என்ன தப்பு ?...இனவாதமும், மதவாதமும் இலங்கையில் ஓங்கி வளர வேண்டும் என்பது தான் உங்களை போல புலத்தில் இருப்பவர்களது ஆசை .. அங்கு எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்க வேண்டும் அப்பத் தான் இங்கிருந்து கொண்டு விசைப்பலகையில் தடடலாம்...நான் அப்பவே சொன்னேன் பார்த்தியா அப்படியே நடந்திட்டுது என்று கதையளக்கலாம் .

ஒரு கதைக்கு அங்குள்ள தமிழ் மக்கள் கோத்தாவை தெரிவு செய்து இருந்தால் உங்களை போல ஆட்கள் அவர்களை துரோகியாக்கி இருப்பீர்கள்.
நான் அங்குள்ள மக்கள் எப்படி கோத்தாவோடு சேர்ந்து பயணித்து தங்கள் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்று எழுத போக அதற்கு இத்தலை வியாக்கியானங்களும் ,அர்த்தமற்ற  பேசசுக்களும்...

கோத்தா பெரும்பான்மையினரின் வாக்கால் மட்டும் வென்று வந்திருக்கார் ...அங்குள்ள தமிழருக்கு எப்படி உதவலாம் என்பதை விட்டுட்டு ...
முடிந்து போன கதைகளை கதைத்து என்ன பிரயோசனம்?

கோத்தா பேசாமல் இருந்தாலும் உங்களை போல புலம் பெயர் உசுப்பேத்தல் மன்னர்கள் சும்மா இருக்க மாட்டீர்கள் ..
இங்கே இருந்து தூண்டி விடுறது ,அங்கே இருப்பவர்கள் ஆட ,...இங்கே பார் நான் அப்பவே சொன்னேன் கோத்தா கெட்டவன் என்று வந்து புலம்பிறது ...

"காமாலை கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று பார்க்காமல் அங்குள்ளவர்கள் நிம்மதியாய் வாழ உருப்படியான ஐடியா கொடுங்கோ .
என்னைப் பொறுத்த வரையில் மகிந்தா தன்ட புதல்வர்களையும் அரசியலில் இறக்கும் நோக்கம் இருப்பதால்,தமிழர்களையும் அரவணைத்து செல்வார் என்று எதிர் பார்க்கிறேன் 
தமிழர்களும் அவர்களோடு சேர்ந்து பயணித்து தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இனி மேல் இத் திரியில் எழுதுவதற்கு எதுவும் இல்லை ...கோத்தா என்ட மாமாவும் இல்லை ...சர்வதேச ரீதியில் பலமான ஒரு தலைவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் ...அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போம் 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this