Jump to content

தேர்தல் முடிவுகளும் வாழ்த்துக்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் -
.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றிருக்கிறார். முன்னைபோலில்லாமல் சிறுபாண்மை இனங்கள் தொடர்பான - குறிப்பாக முஸ்லிம்கள் மீதான - எதிர்நிலையை கைவிட்டு- சிறுபாண்மை இனங்களின்/ தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஆட்ச்சி புரியவேண்டுமென்கிற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
.
 
தமிழர் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். நீண்டகால பிரச்சினையான இணைபாட்ச்சி/ சுயநிர்ணய உரிமை என்பவை நம் நிகழ்ச்சி நிரலில் எப்பவும் உள்ளது.
 
தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் -

கவிஞர் ஐயா, இப்படியான நடத்தையைத்தான் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பச்சோந்தித்தனம் என்று சொல்வார்கள்😂🤣

நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இனமக்கள் செறிவாக வாழும் தொகுதிகள் எங்கும் சஜித்துக்கு அமோக வாக்குகள் விழுந்துள்ளன. சிங்கள மக்கள் செறிந்து வாழும் தொகுதிகள் எங்கும் கோத்தபாயவுக்கு 60% அல்லது அதற்கும் மேல் வாக்குகள் விழுந்துள்ளன. இது தெளிவாக பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் இனங்களுக்கும் இடையேயான பெருத்த இடைவெளியைக் காட்டுகின்றது. சிங்கள மக்கள் வெற்றிவாத மனநிலையில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஒடுக்கவே நினைக்கின்றனர். 

வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும், புத்தளம் தொகுதியிலும் தமிழ், முஸ்லிம்களுக்கிடையே கசப்புக்கள் இருந்தாலும் அவர்கள் யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்ததனால் சஜித்துக்கு வாக்களித்துள்ளனர். இது சஜித் தமிழ், முஸ்லிம்களுக்கு நன்மை செய்வார் என்ற நம்பிக்கையினால் அல்ல. மாறாக, கோத்தா ஜனாதிபதியாக வரக்கூடாது என்ற ஒரே நோக்கத்தினால் மட்டுமே.

ஆய்வாளர் நிலாந்தன் கூறியதுபோல, தமிழ், முஸ்லிம்கள் கோத்தாவுக்கு எதிராக வாக்களித்ததனால் நன்மை அடைந்தவர்கள் நான்கு பகுதியினர்.

1. சஜித். ஐ. தே. க. தமிழர்களின் கோரிக்கைகள் எதையும் செவிமடுக்காமல் இருந்தும் அவருக்கு வாக்குகள் விழுந்தன

2. சம்பந்தர், சுமந்திரன். கூட்டமைப்பு. இவர்கள் தமிழ் மக்களை சஜித்துக்கு வாக்களிக்குமாறு கோரியதால்தான் மக்கள் வாக்களித்தனர் என்பது பெரிய நகைச்சுவை! கூட்டமைப்பின் வழிகாட்டுதல் இல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களித்திருப்பர். சம்பந்தரின் வெற்றி நீங்கள் குறிப்பிடுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.

3. மேற்கு நாடுகள். இவர்களுக்கு தங்களுக்கு அணுக்கமான சஜித் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற தேவை இருந்தது. இப்போது கோத்தா ஜனாதிபதியாக வந்துள்ளதால் அவருடன் எப்படி ஒத்துப் போகலாம் என்று யோசிப்பார்கள்.

4. இந்தியா. சீனாவுடன் கோத்தா நெருக்கமாக இருப்பதால் இந்தியாவுக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் சஜித் ஜனாதிபதியாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் கோத்தாவின் வெற்றி உறுதியானவுடன் மோடி உடனடியாகவே வாழ்த்தை (உங்களைப் போலவே) அனுப்பிவிட்டார்😁

கோத்தாவின் வெற்றியால் நன்மை எதையும் அடையாத தமிழ்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைமூலம் காட்டிய உள்ளக்கிடக்கையை, நீங்கள் கோத்தாவுக்கும், எதையுமே உருப்படியாகச் செய்யாத சம்பந்தனுக்கும் உடனடியாகவே வாழ்த்துத் தெரிவித்து கேவலப்படுத்தியுள்ளீர்கள். 😡

நிலாந்தனின் ஆய்வுக் கட்டுரை

 

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய கிருபன், உங்கள் நாகரீகமற்ற வார்த்தைகள் நோக வைக்குது.  கிருபன் முதலில் அரசியல் நாகரீகம் தெரிந்த மனிதனாக வார்தைகளை அழந்து எழுதுங்கள்.  யாழ் இணையத்தில் பொறுப்புள்ள முன்னணி உறுப்பினர் நீங்கள் என்பதை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு அரசியல் நிகழ்வை வெற்றியை தற்செயல் நிகழ்வு வளமையான நிகழ்வு என் ஒத்துகொள்வதில் எந்த அரசியலும் இல்லை. அதனை அமைப்பு ரீதியாக உரிமை கோராமல் அரசியல் லாபம் பெற முடியாது. வடகிழக்கு வாக்களிப்பின் கனிகளை ஒருபோதும் சஜித்துக்கு கொடுக்க உடன்பாடில்லை. கூட்டமைப்பு என்கிற கையில் இருக்கிற ஒரே ஒரு  கூடையில்தான் அந்த கனிகளை அடுக்க வேண்டும்.    

சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பச்சோந்தித்தனம் என்கிற வார்த்தைகள் என்னை என் வரலாற்றை உங்களுக்கு தெரியாது என்பதையே காட்டுகிறது. என் ராஜதந்திரப் பணிக்கான வெளியை புலிகள்கூட மதித்தார்கள்.  ஒருபோதும் அநாகரீகமாக கொச்சைப்படுத்தியதில்லை. இதற்க்குமேல் எழுதி உறவை முறிக்க விருப்பமில்லை. நல் வாழ்த்துக்கள். உங்கள் பதிவும் என்பதிலும் நீக்கபடுவதே முறையாகும். 

Link to comment
Share on other sites

8 hours ago, poet said:
 
தமிழர் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். நீண்டகால பிரச்சினையான இணைபாட்ச்சி/ சுயநிர்ணய உரிமை என்பவை நம் நிகழ்ச்சி நிரலில் எப்பவும் உள்ளது.
 
தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.

கோத்தா அண்ட் கோ ஒரு "ஸ்டேட்ஸ்மன்" மாதிரி நடப்பார்களாயின் சம்பந்தராலும் ஹக்கீமாலும் தமது மக்களுக்கு ஒரு அரசியல் உரிமையை வெல்ல முடியும். 

அவர்களை   ஒரு "ஸ்டேட்ஸ்மன்" மாதிரி நடக்க வைக்க யாராலும் முடியாது. அவர்களாக விரும்பினால், அவர்களால் மட்டுமே அது சாத்தியம். அவர்களுக்கு மட்டுமே பௌத்த சிங்கள இனவாதிகளை மீறி ஒரு தீர்வை வைக்கும் பலமும் உள்ளது. 

ஆனால், என்ன செய்வார்கள், தீர்வை தருவார்களா? இல்லை இனவழிப்பை தொடருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில்.  

Link to comment
Share on other sites

18 hours ago, poet said:
இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் -
.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றிருக்கிறார். முன்னைபோலில்லாமல் சிறுபாண்மை இனங்கள் தொடர்பான - குறிப்பாக முஸ்லிம்கள் மீதான - எதிர்நிலையை கைவிட்டு- சிறுபாண்மை இனங்களின்/ தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஆட்ச்சி புரியவேண்டுமென்கிற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
.
 
தமிழர் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். நீண்டகால பிரச்சினையான இணைபாட்ச்சி/ சுயநிர்ணய உரிமை என்பவை நம் நிகழ்ச்சி நிரலில் எப்பவும் உள்ளது.
 
தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.

 

வணக்கம் ஐயா,
இந்த களம் தமிழர்கள் தம் தாயகம் மற்றும் மொழி, கலாச்சாரம், தமிழகம், புலம்பெயர் வாழ்வு என பல அம்சங்களை தந்து, இணைத்து வளர்த்து வருகின்றது. 

குறிப்பாக, இன்றைய தாயக மக்கள் சார்ந்து பலரும் பல வேறு கருத்துக்களை முன்வைக்கும் உரிமை இந்த களத்தில் உள்ளது. அத்துடன்  நாணயமாகவும், பண்பாகவும் கருத்தாடல் செய்யவும் உடன்படவும், எதிர்படவும் உரிமையை இந்த களம் தந்து நிற்கின்றது. அதனால், அதன் நிர்வாகிகள் மதிக்கவும் பாரட்டவும் பட வேண்டியவர்கள். ஆனால், அதற்காக சக உறவுகள் கருத்தாடலில் அவர்களின் உடன்படாமல் இருக்கும் தனித்துவமும், எந்த தயக்கமும் இன்றி எதிர்கருத்துக்களை முன்வைக்கவும் உரிமை உண்டு. அதனால் தான் இது வளர்ந்து செல்கின்றது. 

எனவே, இணைந்திருங்கள். தொடர்ந்தும் தயக்கம் இல்லாமல் எழுதுங்கள். அதுதான் சிறந்த வழிகளை ; தெரிவுகளை எமக்கு முன்னால் கொண்டுவரும். அதுதான் சனநாயகம்.

நன்றிகள். 

Link to comment
Share on other sites

நன்றி ampanai,

யாழ்குடும்பத்தினதும் கிருபனதும் உங்களதும் நட்ப்பு எனக்கு பலம். அது எப்பவும் நிலைக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளிடம் ஒரு நாகரிம் இருந்தது. அவர்கள் ஒரு தலைவரை சர்வாதிகாரி.. போர்க்குற்றவாளி.. இனப்படுகொலையாளி.. ஏன் பயங்கரவாதி என்று அடையாளப்படுத்தி விட்டால்.. அதில் இருந்து இலகுவில் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

அந்த வரிசையில்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்றார்கள்.. அழியும் வரை உறுதியாக நின்று அழித்தார்கள். எமது தேசிய தலைவைரை எந்தச் சிங்களவனும் என்றும் வாழ்த்தியது கிடையாது. 

அதேபோல் எமது தேசிய தலைவரும்.. தனது மண்ணுக்கும் மக்களுக்கு எதிரானவர்களை நோக்கி எச்சந்தர்ப்பதிலும் போலி வாழ்த்துக்களை வழங்கியதாகத் தெரியவில்லை.

அதேபோல்...  சாதாரண தமிழ் மக்களிடமும் திடமான சில நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதனை அவர்களுக்கும் காலத்துக்கு காலம் வாக்குச் சீட்டுக்களால் காட்டியே வருகின்றனர்.

எமது தேசிய தலைவர் மீதான ஆதரவாக இருக்கட்டும்.. சிங்கள தேசம் மீதான எதிர்ப்பாக இருக்கட்டும்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு மீதான வெறுப்பாக இருக்கட்டும்.. எம் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் துணிந்து வெளிப்படுத்தியே வந்துள்ளனர்.  அது1977 இல் இருந்து தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது.

சும்மா வாழ்த்துவது என்பது அரசியல் நாகரிகம் என்று சொல்லக் கூடாது.

ஒரு போர்க்குற்றவாளியை.. ஒரு இனத்தை அழித்தவனை.. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவனை.. பல ஆயிரம் பேரின் காணாமல் போவதற்கு உடந்தையானவனை.. அரசுக் கட்டில் ஏற்றி வைத்து வாழ்த்துவதென்பது.. மனித இனத்துக்கு எதிரான ஒரு செயலும் கூட.

ஒரு சாதாரண மனிதனைக் கொன்ற கொலைஞனை.. நாம் வாழ்த்த நமக்கு மனம் வருமாக. ஆனால்.. இந்த நிலையில்லாக் கொள்கைக் கும்பல்கள்.. வாழ்த்தும் போல் தெரிகிறதே. அதுவும்... பலரைக் கொன்றவனையே... வாழ்த்தும்.. வரவேற்கும்.

எமது தேசிய தலைவரை எந்தச் சிங்களவனும் வாழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால்.. எம் மக்களையும் மண்ணையும் தலைமையையும் அழித்தவன் அவன் சிங்களவனாக இருக்கலாம்.. ஹிந்தியனாக இருக்கலாம்.. எம்மவர்களின் சிலர் ஒரு தெளிவான கொள்கை நிலைப்பாடு இன்றி.. கொலைஞர்களை வாழ்த்தி வரவேற்பதென்பது.. இவர்களின் பலவீனத்தையும் அவர்களின் அராஜகத்தையும் அங்கீகரிப்பது போன்றதே ஆகும்.

இந்த அரசியல் நாகரிகம் எமக்குத் தேவை தானா..?! அதிலும் மெளனம் மேலானது. 

ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றவாளியை.. மனித இனத்தை அழித்தவனை..  ஒரு தரப்பு தமக்கான தலைவன் ஆக்குகிறது என்பதற்காக.. நாமும் ஆக்க வேண்டும்.. வாழ்த்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் அந்தக் குற்றவாளி தண்டனை அனுபவிக்கும் வரை அவனை நோக்கி நீதியை நிலைநாட்ட தான் முயல வேண்டும். மாறாக வாழ்த்தி வரவேற்பது என்பது.. எமது பலவீனத்தையே காட்டி நிற்கும். அவனின் அராஜகத்தை சர்வாதிகாரத்தை நாமே அங்கீகரித்து அடங்கிப் போவதாகவே இருக்கும்.

இது அல்ல எமது மக்களின் எதிர்பார்ப்பு..என்பதை வாக்குச் சீட்டுக்களால்... அவர்கள் பேசிய விதம் வெளிக்காட்டிய பின்னும்.. இப்படி வாழ்த்துவது கேவலத்திலும் கேவலம் ஆகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதவன் இணையம் லைக்காதானே . கூகிளில் தேடியபோது வேறு இணையம்களில் அந்த செய்தி காணவில்லை என் தேடுதல் பிழையோ .
    • அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்... 😆
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்? Apr 15, 2024 13:23PM IST  2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-sriperumpudhur-constituency-dmk-tr-balu-wins-admk-premkumar-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்? Apr 15, 2024 14:36PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணிமீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரெ.கருப்பையா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கரூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேடசந்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர்,  விராலிமலை மற்றும் மணப்பாறை  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் கரூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரெ.கருப்பையா 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கரூர் தொகுதியில் இந்த முறையும் ஜோதிமணி வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-congress-candidate-jothimani-will-win-with-43-percent-votes-in-karur-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்? Apr 15, 2024 16:30PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்கே.கோபிநாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயபிரகாஷ் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பனின் மகளானவித்யாராணி வீரப்பன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகியவற்றில்   நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத் 43% வாக்குகளைப் பெற்று கிருஷ்ணகிரி தொகுதியில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் நரசிம்மன் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… கிருஷ்ணகிரி தொகுதியில் இந்த முறை கே.கோபிநாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-gopinath-wins-43-percentage-votes-in-krishnagiri-constituency-admk-jayaprakash-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்? Apr 15, 2024 18:57PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? பெரம்பலூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  தமிழ்நாட்டின்  வளர்ந்து வரும் தொகுதிகளில் முக்கியமானது,  கிராமங்களை அதிகம் கொண்டபெரம்பலூர். இங்கே  திமுக சார்பில்  அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன்அருண் நேரு முதல் முறையாக களமிறங்கியிருக்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட,   பாஜக கூட்டணியில் சிட்டிங் எம்.பி. ஐஜேகே நிறுவனர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி களத்தில் இருக்கிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய வேட்பாளர்களுக்கு  இடையில் மும்முனைப்  போட்டி நிலவும் நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது உங்கள் பார்வைக்கு.., பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில்  திமுக வேட்பாளர்  அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று பெரம்பலூர் மக்களின் பிரதிநிதியாகநாடாளுமன்றம் செல்லத் தயாராகிறார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளையும்,  பாஜக கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் 21% வாக்குகளையும் பெற்று இரண்டாம் இடத்துக்குகடுமையாக மோதுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… பெரம்பலூரில் இம்முறை திமுகவின் கொடியே பிரகாசமாக பறக்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-perambalur-constituency-dmk-arun-nehru-wins/   மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு? Apr 15, 2024 20:20PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..?   டெல்டா மண்டலத்தின் விவசாயக் களஞ்சியமான மயிலாடுதுறை  தொகுதியில் தேர்தல் வெற்றியை அறுவடை செய்யப் போவது யார்? டெல்டா மாவட்டங்களின் முக்கிய தொகுதியான மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில்காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா களம் காண்கிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார்.  பாமக சார்பில் ம.க.ஸ்டாலின் போட்டியிட, நாம் தமிழர் சார்பில் பலராலும் அறியப்பட்ட காளியம்மாள்  களம் காண்கிறார்.   டெல்டா மாவட்டத்தின் செழிப்பான  மயிலாடுதுறை தொகுதியில் போட்டி,  திமுக கூட்டணியின்காங்கிரசுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக  மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி  மக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாகவும் மக்களிடம் மின்னம்பலம்நடத்திய சர்வேயின் அடிப்படையில்… காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் சுதா 45% வாக்குகள் பெற்று மயிலாடுதுறையில்முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் பாபு 26% வாக்குகளோடு இரண்டாவது இடத்திலும்,  பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 19% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும்பெறுகிறார்கள்.   நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 9% வாக்குகளைப் பெறுகிறார். 1% வாக்காளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். ஆக மயிலாடுதுறையில் வெற்றியை காங்கிரஸே அறுவடை செய்கிறது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dmk-allaiance-congress-candidate-sudha-won-in-myladudhurai-constituency/
    • சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.