Jump to content

கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கையின் ஜனாதிபதி ஆகிறார் - பிரதமர் மோதி வாழ்த்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கையின் ஜனாதிபதி ஆகிறார் - பிரதமர் மோதி வாழ்த்து

மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தினத்தில் இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் கோட்டாபயபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாளை (திங்கட்கிழமை) அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.

அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

கோட்டாபயபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்: கோட்டாபய ராஜபக்ஷ

முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.

தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றார் சஜித் பிரேமதாச.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.

"இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும், அதன் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என்று தனது ட்விட்டர் பதிவில் நரேந்திர மோதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @narendramodi
 

Congratulations @GotabayaR on your victory in the Presidential elections.

I look forward to working closely with you for deepening the close and fraternal ties between our two countries and citizens, and for peace, prosperity as well as security in our region.

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @narendramodi

சஜித் அறிக்கை

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்.

விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே சஜித் பிரேமதாஸ இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸபடத்தின் காப்புரிமைSAJITH PREMADASA/TWITTER Image captionசஜித் பிரேமதாஸ

தான் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக எதிர்கொண்ட தோல்வியை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது 26 வருட அரசியல் வாழ்க்கையில் தன்னுடன் பயணித்த ஆதரவாளர்களுக்கும் சஜித் பிரேமதாஸ இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாகவும், நீதியானதுமான தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் தான் விரைவில் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகும் அமைச்சர்

ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள பின்னணியில், அந்தக் கட்சியைச் சேர்ந்த இலங்கை தொலைத் தொடர்புத் துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ மக்கள் தீர்ப்பை மதித்து தாம் தமது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @fernandoharin
 

Respecting the people's mandate I am stepping down as Minister of Sports, Telecommunications & Foreign Employment. I am also resigning from my positions at UNP. I Take this opportunity to thank every one who supported me in my tenure, hope good work done will be continued

 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @fernandoharin

ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தம்மை இதுவரை ஆதரித்துவந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், "இதுவரை செய்யப்பட்ட நல்ல பணிகள் தொடரும்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதவிகளை ராஜிநாமா செய்கின்றமை நகைச்சுவைான விடயம் - அமைச்சர் மனோ கிண்டல்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தமையானது, நகைச்சுவையான செயற்பாடாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹரீன் பெனாண்டோ மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் தமது, அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 'நாளை புதிய பிரதமர் பதவி ஏற்கும் போது, எல்லா அமைச்சரவை அமைச்சர்களும் பதவி இழப்பர். அதுவே ஜனநாயக சம்பிரதாயம். இந்நிலையில் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது என்பது நகைச்சுவையானதாகும்' என்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆரவளித்து செயற்பட்ட அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிளார் பதவியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் கபீர் ஹாசிம் ராஜிநாமா செய்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்து வந்த பிரதித் தலைவர் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"அமைதியாக கொண்டாட்டம்" கோட்டாபய அறிக்கை

"இலங்கைக்கான புதிய பயணம் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து இலங்கையர்களும் இந்தப் பயணத்தின் அங்கமாக இருப்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். பிரசாரத்தில் ஈடுபட்டதைப் போன்றே அமைதியாகவும், கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் நாம் கொண்டாடலாம்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ. அந்த அறிக்கையை அவர் தமது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @GotabayaR
 

As we usher in a new journey for Sri Lanka, we must remember that all Sri Lankans are part of this journey. Let us rejoice peacefully, with dignity and discipline in the same manner in which we campaigned.

View image on Twitter
 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @GotabayaR

தமிழர் பகுதியில் சஜித் அபார முன்னிலை - தெற்கில் கோட்டாபய முன்னிலை

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிற பல தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்று வந்தாலும், தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவைவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

கோட்டாபயவுக்கு ஆதரவாக தமிழர் கட்சிகள் சில மேற்கொண்ட நிலைப்பாடு, அவருக்கு ஆதரவாக தமிழர் வாக்குகளைப் பெற்றுத் தருவதற்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டம்:

சஜித் பிரேமதாச - 3,12,722

கோட்டாபய - 23,261

வன்னி - முல்லைத் தீவு (உள்நாட்டுப் போரில் இறுதி யுத்தம் நடந்த பகுதி):

சஜித் பிரேமதாச - 47,594 (86.19%)

கோட்டாபய - 4,252 (7.70%)

கிளிநொச்சி மாவட்டம்:சஜித் பிரேமதாச - 55,585

கோட்டாபய ராஜபக்ச - 3,238

வவுனியா மாவட்டம்:சஜித் பிரேமதாச - 65,141

கோட்டாபய ராஜபக்ச - 13,715

முல்லைத்தீவு மாவட்டம்:சஜித் பிரேமதாச - 47,594

கோட்டாபய ராஜபக்ச - 4,252 மன்னார் மாவட்டம்:சஜித் பிரேமதாச - 53,602

கோட்டாபய ராஜபக்ச - 6,435

தபால் வாக்குகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அளித்த தபால் வாக்குகளின் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன.

01. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தொகுதிக்கான தபால் வாக்களிப்பின் பிரகாரம், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 17,961 வாக்குகளை பெற்று முன்னிலையில் திகழ்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தபால் வாக்களிப்பில் 1,563 வாக்குகளை பெற்றுள்ளார்.

தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் வெளியான தபால் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 810 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

02.வன்னி

சஜித் பிரேமதாஸ - 8,402

கோட்டாபய ராஜபக்ஷ - 1,703

அநுரகுமார திஸாநாயக்க - 147

எம்.கே.சிவாஜிலிங்கம் - 144

03.திரிகோணமலை

சஜித் பிரேமதாஸ - 7,871

கோட்டாபய ராஜபக்ஷ - 5,089

அநுர குமார திஸாநாயக்க - 610

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - 74

எம்.கே.சிவாஜிலிங்கம் - 49

04.திகாமட்டுல்ல (அம்பாறை)

சஜித் பிரேமதாஸ - 11,261

கோட்டாபய ராஜபக்ஷ - 10,831

அநுர குமார திஸாநாயக்க - 1,134

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - 146

05.மட்டக்களப்பு

சஜித் பிரேமதாஸ - 9,221

கோட்டாபய ராஜபக்ஷ - 1,255

அநுர குமார திஸாநாயக்க - 349

06.நுவரெலியா

கோட்டாபய ராஜபக்ஷ - 9,151

சஜித் பிரேமதாஸ - 7,696

அநுர குமார திஸாநாயக்க - 638

07.மாத்தளை

கோட்டாபய ராஜபக்ஷ - 13,405

சஜித் பிரேமதாஸ - 6,165

அநுர குமார திஸாநாயக்க - 987

08.கொழும்பு

கோட்டாபய ராஜபக்ஷ - 21,717

சஜித் பிரேமதாஸ - 8,294

அநுர குமார திஸாநாயக்க - 2,229

09.கம்பஹா

கோட்டாபய ராஜபக்ஷ - 30,918

சஜித் பிரேமதாஸ - 12,125

அநுர குமார திஸாநாயக்க - 3,181

10.களுத்துறை

கோட்டாபய ராஜபக்ஷ - 22,586

சஜித் பிரேமதாஸ - 9,172

அநுர குமார திஸாநாயக்க - 1,912

11.ஹம்பாந்தோட்டை

கோட்டாபய ராஜபக்ஷ - 12,983

சஜித் பிரேமதாஸ - 3,947

அநுர குமார திஸாநாயக்க - 1,731

12.காலி

கோட்டாபய ராஜபக்ஷ - 25,099

சஜித் பிரேமதாஸ - 9,093

அநுர குமார திஸாநாயக்க - 2,450

13.மாத்தறை

கோட்டாபய ராஜபக்ஷ - 19,379

சஜித் பிரேமதாஸ - 5,782

அநுர குமார திஸாநாயக்க - 2,153

14.புத்தளம்

கோட்டாபய ராஜபக்ஷ - 7,645

சஜித் பிரேமதாஸ - 4,685

அநுர குமார திஸாநாயக்க - 764

15.குருநாகல்

கோட்டாபய ராஜபக்ஷ - 45,193

சஜித் பிரேமதாஸ - 23,432

அநுர குமார திஸாநாயக்க - 4,400

16.பொலன்னறுவை

கோட்டாபய ராஜபக்ஷ - 9,285

சஜித் பிரேமதாஸ - 5,835

அநுர குமார திஸாநாயக்க - 1,234

17.அநுராதபுரம்

கோட்டாபய ராஜபக்ஷ - 28,957

சஜித் பிரேமதாஸ - 15,367

அநுர குமார திஸாநாயக்க - 2,740

18.பதுளை

கோட்டாபய ராஜபக்ஷ - 21,772

சஜித் பிரேமதாஸ - 11,532

அநுர குமார திஸாநாயக்க - 2,046

19. மொனராகலை மாவட்ட தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ஷ - 13,754

சஜித் பிரேமதாஸ - 6,380

அநுர குமார திஸாநாயக்க - 1,340

20.இரத்தினபுரி

கோட்டாபய ராஜபக்ஷ - 19,061

சஜித் பிரேமதாஸ - 7,940

அநுர குமார திஸாநாயக்க - 1,678

21.கேகாலை

கோட்டாபய ராஜபக்ஷ - 19,869

சஜித் பிரேமதாஸ - 9,868

அநுர குமார திஸாநாயக்க - 1,497

22.கண்டி

கோட்டாபய ராஜபக்ஷ - 34,748

சஜித் பிரேமதாஸ - 16,303

அநுர குமார திஸாநாயக்க - 268

தேர்தல் முறையும் - வாக்கு எண்ணிக்கையும்

இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இரண்டு நிர்வாக மாவட்டங்கள் என்றபோதும் இவை இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக உள்ளன. அதுபோல முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகியவை மூன்று தனித்தனி நிர்வாக மாவட்டங்களாக உள்ளபோதும் இவை மூன்றும் ஒரே தேர்தல் மாவட்டமாக உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இப்படி இவை பகுக்கப்பட்டன. எனவேதான் நிர்வாக மாவட்டங்களை விட தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்று குறைவாக இருக்கின்றன.

வாக்குகள் தொகுதிவாரியாக எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறவரே ஜனாதிபதியாவார்.

இலங்கை தேர்தல்: வெல்லப்போவது யார், கடந்த கால தரவுகள் சொல் தரவுகள் சொல்வது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு, மூன்றாவது தேர்வு என்று ஒருவர் மூன்று பேருக்கு வாக்களிக்க முடியும். முதல் தேர்வு மட்டுமே முதலில் எண்ணி முடிக்கப்படும். அதில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வு பெற்றவர்கள் யார் என்பது எண்ணப்படும்.

தபால் வாக்குகள் மட்டும் மாவட்ட வாரியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50449177

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.