Jump to content

யாழில் கோட்டாபய ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கோட்டாபய ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம்

யாழில் கோட்டாபய ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம்

நேற்றைய தினம் நடந்து முடிந்த 8ஆவது ஜனாதிபதி தோதலின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் முடிவுகள் நள்ளிரவு முதல் இன்று மாலை வரை வெளியாகியிருந்தன.வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளால் அமோக வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே யாழில் கோட்டாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அது மட்டுமன்றி மேளதாளங்களுடன் ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.மேலும் ஐனாதிபதி தேர்தலிலில் கோட்டாபய ராஐபக்ச வெற்றி பெற்றமையால் யாழிலுள்ள அக்கட்சியினர் வெடி கொழுத்தி கொண்டாடியதுடன், வீதியால் சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர்.(15)25679

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-கோட்டாபய-ஆதரவாளர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் ஆதரவாளர்கள்.. இவ்வளவு ஆயிரமாகக் கூடி இருப்பது.. நாமல் சொன்னதை உறுதிப்படுத்துகிறது. வடக்கிலும் கோத்தாவுக்கு பலத்த ஆதரவு என்று. 

முடியல்ல.. சனநாயகம் வெறும் கேலிக்கூத்தாகி விட்டது.. சொறீலங்காவில்.

கனடா போய் வந்த ஒரு பெளத்த பிக்கு தனது பக்தர்களுக்கு கூறுவதை.. கேளுங்கள்.

இதனை நாமலும்.. கோத்தாவும் வெளிநாட்டில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்து விட்டு வந்தும்.. ஏன் பின்பற்ற மறுக்கிறார்கள். காரணம்.. ரவுடிகளுக்கு ரவுடித்தனம் தான் வரும்.. ரவுடிகளை தான் பிடிக்கும்.. இயக்க முடியும்.

 

Link to comment
Share on other sites

பிழைக்கத் தெரிந்தவர்கள் 

பிழைக்கத் தெரிந்தவர்கள். 

தக்கன பிழைக்கும் என்பது  இதுதானோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்கன பிழைக்கும் என்ற டாவினின் கோட்பாடு இப்போ பிழைத்துக் கொண்டு வருகிறது. சூழல் மாற்றத்தை உயிரினங்கள்... தமக்குள் உள்வாங்கிக் கொள்ளும் வகையில்.. மரபணு சூழல் தகவலை தனக்குள் வாங்கிக் கொள்வதாகவே கருதப்படுகிறது. 

அவை ஏன் வாங்குகின்றன என்றால்.. சுதந்திரமாக வாழ. இப்படி அடிமைகளாக எடுபிடிகளாக அல்ல. 

இவை எல்லாம் டார்வின் தற்செயலான கூர்ப்பாகத் தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.