Jump to content

புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

mahinda-rajapaksa-gotabaya-rajapaksa.jpg

இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான தனது சகோதரர் கோதாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ஐந்து வருடங்களாக உகந்த வழிகாட்டி இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த நாட்டுக்கு ஒரு செம்மையான திசைமார்க்கத்தை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் தங்களுக்கு தற்போது கிடைத்திருப்பதாகவும் தங்களது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் அடிமட்டத்தில் இருந்து மேல்நோக்கி  பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டியதும் அந்த இலக்கை அடைவதற்காக அரசியலமைப்பு மற்றும் சட்டச் சீர்திருத்தங்களை அறிமுகஞ்செய்யவேண்டியதும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

' எனது சகோதரரின் வெற்றி குறித்து  ' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் மேலும்  கூறப்பட்டிருப்பதாவது ; 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதும் கூட்டு எதிரணியினதும் ஜனாதிபதி வேட்பாளரான கோதாபய ராஜபக்ச இந்த  ஜனாதிபதி தேர்தலில் தீர்க்கமான ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்.எவருக்குமே அசௌகரியத்தைக் கொடுக்காத வகையில் அமைதியான முறையில் இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு எமது கட்சியின் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் நான் வேண்டிக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் எமக்கு சார்பாக தீர்க்கமான முறையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இன்றைய அரசாங்கத்தின் கடந்த ஐந்து வருடகால செயற்பாடுகளே அதற்கு காரணமாகும்.அதனால், எவருக்குமே அசௌகரியத்தைக் கொடுக்காத முறையில் நாம் நடந்துகொள்ளவேண்டியது நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் செய்யவேண்டிய ஒரு கடமையாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசாங்கத்தினால் கொடுமைக்கும் தொல்லைக்கும் உள்ளாக்கப்பட்ட சகலருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைத் திட்டமொன்றை நாம் முன்னெடுப்போம்.மக்களின் ஆணையை குறுகிய அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கும் பல்வேறு இனவாத, மதவாத குழுக்களுடனான பின்கதவு வழியான உடன்பாடுகளின் ஊடாக மீண்டும் ஒரு தடவை திருடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட 2015 பாணியிலான முயற்சியை தீர்க்கமான முறையில் தோற்கடித்தமைக்காக நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.அரசியல் நோக்கங்களுக்காக மதவாதத்தையும் இனவாதத்தையும் ஊக்கப்படுத்துகின்ற ஆபத்தான விளையாட்டுகளுக்கு முடிவுகட்டவேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.

நாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து வரும் நாட்களில் மக்களுக்கு அறிவிப்போம்.இந்த தேர்தலில் மக்களினால் எமக்கு வழங்கப்பட்ட தெளிவான ஆணையைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற பாரம்பரியங்களுக்கு இணங்க உகந்த முறையில் இன்றைய அரசாங்கம் செயற்படும் என்று நம்புகிறோம்.இது தாய்நாட்டுக்கும் கேசபக்த மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

 

https://www.virakesari.lk/article/69142

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

.இது தாய்நாட்டுக்கும் கேசபக்த மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இது போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் கிடைத்த வெற்றி என்பதை உலகம் அறியாமல் இல்லை.

மேலும் இது, சிங்கள-பௌத்த கலாச்சாரம் என்பது போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிக்கும் மோசமான கலாச்சாரமாக உருவெடுக்கிறது என்பதையும் உலகம் அறியாமல் இல்லை.

மேலும் பெரும்பான்மையான சிங்கள-பௌத்தர்கள் போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிக்கும் மோசமான சமூகம் என்பதையும் உலகம் அறியாமல் இல்லை.

Link to comment
Share on other sites

On 11/17/2019 at 7:52 PM, கிருபன் said:

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பசிலும் 19A பற்றி கருத்து தெரிவுத்துள்ளார்.

Sri Lanka constitution should be changed, 19 amendment abolished: Basil

November 19, 2019 

Sri Lanka constitution has to be changed and a 19th amendment should be abolished, Basil Rajapaksa, brother of President Gotabaya Rajapaksa said in a television interview.

“It is my view that the 19th amendment should be completely abolished,” Rajapaksa, who formed the Sri Lanka Podujana Party of the new President said in an interview with Hiru TV, a privately owned television channel.

“There is a similar view in our party. The 19th has some good parts. It has more bad parts. As a whole it should be removed. But there are some parts which are good, which we can keep.”

He did not specify the bad parts.

The 19th amendment reduced executive powers of the President, and also set up independent commissions, which has strengthened the independence of the judiciary and police.

The 19th amendment also re-established term limits to the presidency. It also banned foreign passport holders from being elected.

Analysts have said that Sri Lanka’s public service lost its independence, started to break down, and became partisan after permanent secretaries to ministries were abolished.

The 19th amendment did not address crisis involving ministry secretaries but a constitutional council and independent commissions improved appointments of judges, the police chief and some other officials, restoring partial independence to the public service.

Fast growing countries in East Asia like Malaysia, Singapore and Hong Kong as well as other countries like New Zealand (chief executive) and Australia (Department Secretary) have permanent secretaries. 

https://economynext.com/sri-lanka-constitution-should-be-changed-19-amendment-abolished-basil-32680/

Link to comment
Share on other sites

7 hours ago, Lara said:

பசிலும் 19A பற்றி கருத்து தெரிவுத்துள்ளார்.

இதை மாற்றாவிட்டால் இவர் அமைச்சர் ஆக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்கும் போத்தலுக்கும் அடிமைப்பட்டு வோட்டுப் போட்டதுகளெல்லாம், இப்ப புத்தன் வந்து மனித நேயம் பற்றி போதித்து அரசியலில் நின்று வோட்டுக் கேட்டால்க் கூட அவருக்கு சஜித்தைவிட மோசமான நிலையே ஏற்படும். புத்த மதம் மனித நேயத்தின் போதனைகளை செயற்பாடுகளை விட்டு, மற்ற இனங்களையும்   மதங்களையும்    அடக்கி  ஆளும் மதமாக மாறிவிட்டது. இதை மதம் என்று சொல்வதே தவறு.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கோத்தா கூறியிருப்பது,

Your elder brother Mahinda is now Prime Minister, while another brother Chamal is minister. How will the relationship with your brothers work now, and will there be a transfer of power towards a more parliamentary system as under the 19th amendment? 

The 19th amendment (passed in 2015) is a failure and if we get 2/3rds majority in parliament we will drop it from the constitution. The only way you can even make the 19th amendment work is with two brothers (laughs) [at the top]. For a country to be governed successfully, you need stability.  This was not the case during the Sirisena-Wickremsinghe government, where they were fighting all the time and there was no development. Without stability, investors won’t come.

https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.