காலங்காலமாக 1.திறமையானவர்களை ஒதுக்குவதும் 2.திறமையாளர்கள் - உட்கட்ச்சி ஜனநாயகம், கட்டுப்பாடுகளுக்கு அமையாமல் - கட்ச்சியை ஒத்துக்குவதும்தான் நாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பலவறின் அடிப்படை.
தமிழரசுக் கட்ச்சி செல்வநாயகம் காலம்போல ஊர் மவட்ட மாநில மட்டக் கிழைகள் அடிப்படையில் ஜனநாயாக ரீதியாக மக்கள் அதிகார அமைப்பாக மீழக் கட்டியமைக்கப்பட வேண்டும். இது இன்னும் கண்டுகொள்ளப்படாத சம்பந்தர் ஐயாவின் வரலாற்றுப்பணியாகும்.
சுமந்திரன் போன்ற திறமை சாலிகள் தன்னிச்சையாக செயற்படாமல் கட்ச்சி கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயல்படவேண்டும்.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அநாவசியமாக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனால் அதிகளவிலான சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரைசொகுசு பேருந்து சேவையை நிறுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது.
பயணிகளுக்குத் தேவையான வசதிகளை பூர்த்திசெய்யாத பல பேருந்துகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதிக கட்டணத்தை செலுத்தும் பயணிகளுக்குத் தேவையான உயர்தர சேவைகளை வழங்காத பேருந்துகளை இணங்காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
http://athavannews.com/கொழும்பிற்குள்-பிரவேசிக/
தேர்தல் தோல்விக்கு பௌத்த மக்களே காரணம் – ரணில்
பௌத்த மக்களினதும் இளைஞர்களினதும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் கிடைக்காமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய பிரதான காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அக்கட்சியின் இளைஞரணியுடன் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய கலந்துரையாடலின்போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும் இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
எனவே இது குறித்து மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும்.
தற்போது எமது குறைபாடுகள் என்னவென்பதை அறிந்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை” என மேலும் தெரிவித்தார்.
http://athavannews.com/பௌத்த-மக்களினது-வாக்குகள/