Jump to content

இலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா?

நிலாந்தன்அரசியல் விமர்சகர்
கோட்டாபயபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய

(கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)

லங்கைத் தீவின் ஏழாவது அரசுத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சிராஜ் மஷூர் இலங்கைத்தீவு இப்பொழுதும் இனரீதியாக பிளவுபட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

சிராஜ் மஷூர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர். நடந்து முடிந்த தேர்தலில் மூன்றாவது தரப்பாகிய ஜே.வி.பி.யோடு கூட்டுச் சேர்ந்த அமைப்பு இது.

தேர்தல் முடிவுகளை இலங்கைத் தீவின் வரைபடத்தில் நிறந்தீட்டிப் பார்த்தால் இந்த இனரீதியான பிளவு தெரியவரும். ஒப்பீட்டளவில் வாக்களிப்பு வீதம் முன்னைய தேர்தலை விட அதிகமாக இருக்கும் பகுதிகளை நிறம்தீட்டினால் அது தமிழ் மக்களால் தாயகம் என்று அழைக்கப்படும் பகுதியாகவே காணப்படும். அதுபோலவே சஜித் பிரேமதாசவுக்கு அதிகமாக வாக்களித்தவர்கள் யார் என்று பார்த்தாலும் அதுவும் பெரும்பாலும் தமிழ்ப் பகுதிகளாகவே இருக்கும்.

அதேசமயம் கோட்டாபாய ராஜபக்ஷவை யார் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது பெருமளவுக்கு சிங்கள மக்களின் வாக்குகளாகவே இருக்கும். அதாவது இலங்கைத் தீவின் ஏழாவது ஜனாதிபதியை பெருமளவுக்கு தனி சிங்கள வாக்குகளே தீர்மானித்திருக்கின்றன. அந்த ஜனாதிபதியை பெருமளவுக்கு சிறுபான்மை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

அச்சுறுத்திய வெள்ளை வேன் சாட்சியங்கள்

தமிழ்ப் பகுதிகளில் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தமைக்கும் சஜித் பிரேமதாஸவுக்கு அதிகமாக வாக்களிக்கப்பட்டமைக்கும் காரணம் என்ன?

காரணம் மிகவும் எளிமையானது. தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிக்க விரும்புகிறார்கள். அதோடு கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் அனுபவித்து வந்த சிறிய ஜனநாயக வெளியும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஒரு காரணம். தேர்தல் பரப்புரையின் கடைசி கட்டத்தில் அரசாங்கத்தின் ஓர் அமைச்சராகிய ராஜித சேனாரட்ன ஓர் ஊடக சந்திப்பை ஒழுங்கு செய்தார்.

வெள்ளை வேனில் வந்து ஆட்களை கடத்திச் சென்றது கோட்டாபயவின் உத்தரவின் பேரிலேயே என்று நிரூபிக்கும் சாட்சிகளை அதில் பேசவைத்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பு சிங்கள மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ தமிழ் மக்கள் மத்தியில் பயத்தைக் கூட்டியது. இதுபோன்ற பல பயங்கள் சேர்ந்துதான் கோட்டாபயவுக்கு எதிராக வாக்குகளாக விழுந்தன.

கோட்டாபய மற்றும் மஹிந்தபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய மற்றும் மஹிந்த (கோப்புப் படம்)

எனவே தமிழ்ப் பகுதிகளில் சஜித்துக்கு விழுந்த வாக்குகளை அவருடைய கொள்கைக்கு விழுந்த வாக்குகளாகவோ அல்லது அவருக்கு வாக்களிக்குமாறு கேட்ட கூட்டமைப்புக்கு விழுந்த வாக்குகளாகவோ எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை கோட்டாபயவுக்கு எதிரானவை. ஆகக் குறைந்தது உயிர் வாழ்வதற்கான அற்ப ஜனநாயக வெளிக்காகப் போடப்பட்டவை.

"ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை"

"தமிழர் தரப்பு நிபந்தனையற்ற ஆதரவை 'வலுக்குறைந்த தீமைக்கு' தெரிவிப்பதே அவர்களின் கடமை என்றும் வேறு மாற்றுக்களை அல்லது நிபந்தனைகளை முன்வைத்துப் பேசுவது 'பெரிய தீமைக்கு' வழிகோலிவிடும் என்றும் தென்னிலங்கை தாராளவாத முற்போக்கு சக்திகள் பரிந்துரைப்பது இந்த நாட்டில் ஜனநாயக மீட்சிக்கு வழியேதும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது" என்றும் தமிழ் சிவில் சமூக அமையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை தமிழ்ப் பகுதிகளில் கோட்டாபயவோடு இணைந்து நின்ற டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான் போன்ற தமிழ் அரசியல் வாதிகளின் வாக்கு வங்கியும் சரிந்திருக்கிறது. தேர்தலில் தமிழ் மக்கள் அதிகபட்சம் இன ரீதியாக சிந்தித்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதனை அது காட்டுகிறது.

'நல்லாட்சி'யின் இயலாமையும், ஈஸ்டர் குண்டும்

சிங்கள மக்களும் அப்படித்தான். இனிமேல் ஓர் அரசுத் தலைவரை தெரிவு செய்வதற்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவை இல்லை என்பதனை இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு தமிழ், முஸ்லிம், மலையக வாக்குகளே பெருமளவுக்கு மஹிந்தவை தோற்கடித்தன.

சஜித் பிரேமதாஸபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசஜித் பிரேமதாஸ

அதன்பின் இனி எப்பொழுதும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று முடிவெடுத்து ராஜபக்ஷ அணி கடுமையாக உழைத்தது. "நல்லாட்சி" அரசாங்கத்தின் இயலாமைகளும் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பும் அவர்களுக்கு சாதகமாக நிலைமைகளைத் திருப்பியது. நாட்டுக்கு ஓர் இரும்பு மனிதன் தேவை என்ற உணர்வை அது சிங்கள மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியது.

ஹிட்லர் போன்ற எதேச்சதிகாரி தேவை என்று சொன்ன பௌத்த பிட்சு

ராஜபக்ஷ குடும்பத்திற்கு ஆதரவான அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் அதே தொனியில் கருத்து தெரிவித்திருந்தார். நாட்டுக்கு ஹிட்லரை போன்ற ஓர் எதேச்சாதிகாரி வேண்டுமென்று அவர் கருத்து கூறியிருந்தார். இதனால் நடந்து முடிந்த தேர்தலானது ஓர் இரும்பு மனிதரை தெரிவு செய்வதற்கான போட்டியாக அமைந்தது. இதில் லிபரல் ஜனநாயக வாதிகளாக கருதப்பட்ட அநேகர் ஓரங்கட்டப்பட்டார்கள்.

கடந்த 2015இல் நடந்த அரசுத் தலைவருக்கான தேர்தலில் ஒருவிதமான மாற்றத்திற்கான அலை வீசியது. அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன. எனினும் மேற்கத்தைய லிபரல் ஜனநாயக நோக்குநிலையில் அது மாற்றத்துக்கான ஒரு லிபரல் அலையாகப் பார்க்கப்பட்டது. அமரர் மாளுவ சோபித தேரர் போன்ற மதகுருக்கள் 'சிவில் சமூகங்கள்', 'புத்திஜீவிகள்', 'கருத்துருவாக்கிகள்', அரசியல், சமூக. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் அந்த அலையைக் கூட்டாக சேர்ந்து உருவாக்கினார்கள்.

ஆனால் இம்முறை தேர்தலில் ஒருவித இனவாத அலைதான் வீசியது. இரும்பு மனிதருக்கான போட்டி என்பது இலங்கைத் தீவில் அதன் பிரயோக நிலையில் ஒருவித இனவாத அலைதான். அந்த அலை லிபரல் ஜனநாயகவாதிகளை ஓரம்கட்டியது. நாட்டைப் பாதுகாக்க வல்ல இரும்பு மனிதர் யார் என்பதை நிரூபிக்கும் போட்டியாக அது மாறியது.

கோட்டாபய பதவியேற்பு. Image captionகோட்டாபய பதவியேற்பு.

குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அவருடைய கட்சிக்குள்ளேயே தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக போராட வேண்டியிருந்தது. அப்போராட்டத்தின் முடிவில் சஜித் பிரேமதாச அரசுத் தலைவருக்கான வேட்பாளராக மேலெழும் அளவுக்கே நிலைமைகள் இருந்தன. இப்படியாக ரணில், சந்திரிகா போன்றவர்களை ஒதுக்கிவிட்டு இரும்பு மனிதர்களுக்கான போட்டி உருவாகியது. யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த இரும்பு மனிதர் இப்போட்டியின் முடிவில் வெற்றி பெற்றிருக்கிறார்.

தமிழர்களின் கூட்டு மன நிலை

அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதால்தான் தமிழ் மக்கள் அவ்வாறு வாக்களித்தார்கள் என்பதில்லை. மாறாக 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின் தமிழ் மக்களின் தேர்தல்கால கூட்டு மனோநிலை எனப்படுவது அப்படித்தான் காணப்படுகிறது. அது ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரானது. கடந்த பத்தாண்டுகளாக மாறாது காணப்படும் அக்கூட்டு மனோ நிலைதான் இந்தமுறையும் வெளிப்பட்டிருக்கிறது.

இப்படிப் பார்த்தால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தடவையாக தமிழ் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தை நிராகரித்திருக்கிறார்கள். இந்நிலையில் புதிய அரசுத் தலைவரான கோட்டபாய தமிழ் மக்களைத் எப்படி அணுகப் போகிறார் என்பதில்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல சிங்கள மக்களின் எதிர்காலம் மட்டுமல்ல இலங்கைதீவின் எதிர்காலம் மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் சுற்றோட்டங்களும் தங்கியிருக்கின்றன.

இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா?

தமிழ் மக்களை அவர் இரும்புக் கரம் கொண்டு நசுக்குவாரா? அல்லது இரண்டு தேர்தல்களில் கிடைத்த தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு தமிழ் மக்களின் பயங்களைப் போக்குவாரா?

அவருடைய தேர்தல் அறிக்கைகளின்படி அவர் தமிழ் மக்களுக்கு 13-வது திருத்தத்தைத் தாண்டி எதையும் கொடுக்கப் போவதில்லை என்றே தெரிகிறது. 13-வது திருத்தம் எனப்படுவது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான சட்டமாகும். அச்சட்டத்திலும் அவர் காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் போன்றவற்றைத் தரப்போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறார். அவருக்கு முன்பிருந்த அரசுத் தலைவர்களும் அந்த அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு இன்றுவரை வழங்கவில்லை.

அது மட்டுமல்ல 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானத்தை தாம் கைவிடப் போவதாகவும் கோட்டபாய கூறியிருக்கிறார். அந்தத் தீர்மானமானது இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை நிறுவுவதற்கு உரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான்.

ஆனால் கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கும் உலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூறப் போவதில்லை என்று கூறுகிறார். அவருடைய தேர்தல் பரப்புரைகளில் அவர் தேசத்துக்கு பொறுப்பு கூறுவார் என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படியென்றால் யாருக்கு பொறுப்புக்கூறப் போகிறார்? தனி சிங்கள மக்களுக்கு மட்டும்தானா? ஓர் இரும்பு மனிதனாக வெற்றி பெற்றிருக்கும் அவர் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூறுவாரா இல்லையா என்பதில்தான் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் வெற்றி தங்கியிருக்கிறது.

வளர்ச்சி சாத்தியமா?

அவர் நாட்டின் தலையாய பிரச்சனையாக தேசியப் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் முன்வைக்கிறார். தேசியப் பாதுகாப்பு எனப்படுவது இனப் பிரச்சினையோடு தொடர்புடையது. அதாவது பொறுப்புக்கூறலோடு தொடர்புடையது. அது தீர்க்கப்படாத வரை முழு அளவில் முழுநிறைவான அபிவிருத்தியை முன்னெடுப்பது கடினம்.

அவர் வெற்றி பெற்றது பெருமளவிற்கு தனிச் சிங்கள வாக்குகளால்தான். ஆனால் அந்த வெற்றியின் தொடர்ச்சியை தக்கவைப்பது என்பது தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் அரவணைத்துக் கொள்வதில்தான் தங்கியிருக்கிறது. அதாவது முழு நாட்டுக்கும் பொறுப்பு கூறுவதில்தான் தங்கியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50455796

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.