Jump to content

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்!


Recommended Posts

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

kamal.jpg

கமல் குணரத்ன இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியடையும் குறிப்பிடத்தக்கது.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் மேற்கொண்டதையடுத்து வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.

https://www.virakesari.lk/article/69188

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் மாவை கும்பல் செய்ததெல்லாம்.. சொந்த இனத்தை அழித்த..போர்க்குற்றவாளிகளை.. இனப்படுகொலையாளர்களை எல்லாம் வெள்ளையடிக்க உதவியதும்.. பதவியில் அமர்த்தியதும்.. கெளரவித்ததும் தான். இது தான் இவர்கள் செய்த கடந்த 10 வருட சாணக்கிய அரசியல்.

காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை

படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை

கொடும் பாலியல் குற்றங்களை இழைத்த இராணுவம் ஒட்டுக்குழுக்களுக்கு தண்டனை இல்லை

நிலப்பறிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

பெளத்த மத திணிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

தமிழ் மக்களின் உரிமை மறுப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

இணைத்தலைமை நாடுகள்.. என்போர்... போரை முன்னெடுத்த போது வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

ஐநா தீர்மானத்தின் இனங்காணப்பட்ட போர்க்குற்றங்கள்.. குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கை இல்லை.

ஐநா மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி சொறீலங்கா எந்தச் செயற்பாடுகளையும் செய்ய முனையவில்லை.

வெறும் கால நீட்டிப்பும்.. இழுத்தடிப்பும் மட்டுமே நிகழ்கிறது.

அரசியல் கைதிகளின் விடுதலை.. புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும் இயல்பான சமூக வாழ்க்கைக்கு என்று எங்கும் காத்திரமான நடவடிக்கை இல்லை.

போரினால்.. பாதிக்கப்பட்ட மக்களின் சமூக.. பொருளாதார மீட்சிக்கு எந்த குறுகிய.. நீண்ட கால திட்டங்களும் செயற்பாட்டில் இல்லை.

இப்படி.. எதுவுமே.. உருப்படியாக இல்லை..

இதில சம் சும் மாவை கும்பலுக்கு அமைச்சுப் பதவி வேணுமாம். இதுகளை எந்தக் கணக்குக்குள் சேர்ப்பது.

புலம்பெயர் தமிழர்களும் சுற்றுலாச் செல்வதில் தான் ஆர்வம். சொந்த மண்ணின்.. மக்களின்.. இருப்பை.. உரிமையை இலங்கைத் தீவில் உறுதி செய்வதில் அவர்களுக்கு தொடர் அழுத்தங்களை சர்வதேச சமூகத்திற்கு.. குறிப்பாக தாம் வாழும் நாடுகளில் இருக்கும் அரசியல் கட்சிகளின் ஊடாக கொடுக்க எந்த காத்திரமான நடவடிக்கையும் இல்லை.

வரப் போகும்... பிரித்தானிய பொதுத் தேர்தலையாவது இதற்குப் பயன்படுத்தி.. பிரதான கட்சிகள்.. சொறீலங்காவில்..போர்க்குற்றவாளிகள்.. மனித உரிமை மீறியோர்.. ஆட்சியில்.. அதிகாரங்களில் அமர வைக்கப்படுவதைக் கண்டிக்க.. உலக அரங்கில் அதற்கு எதிராக குரல் எழுப்ப.. தூண்ட வேண்டும்.

கனடாவில்.. ஹரி ஆனந்த சங்கரி மட்டும் தான் சிலதைச் சொல்லி உள்ளார். மற்றவர்கள்.. எல்லாம் அமுசடக்கமாகி விட்டார்கள்.

தாயகத்தில் சிவாஜிலிங்கத்திற்கு இருக்கும்.. துணிவு.. மக்களின் குரலை பிரதிபலிக்கனும் என்ற எண்ணம்.. சம் சும் மாவை கும்பல் உட்பட பலருக்குக் கிடையாது. 

தாயகம்.. தமிழகம்.. உலகத் தமிழினம்.. ஒத்த சக்திகளோடு சேர்ந்து ஒன்றாகி.. ஒற்றுமையாகக் குரல் கொடுக்க மறுப்பின்.. தமிழினப் படுகொலையாளர்கள்.. புதிய தெம்போடு.. தமது அடுத்த அத்தியாயத்தை அரங்கேற்ற சற்றும் பின்நிற்க மாட்டார்கள் என்பதை எல்லோரும் நினைவில் வைப்பது அவசியம்.

கொடும்.. கொலைக்குற்றவாளிகளை எப்படி.. சிறையில் இருந்து நாட்டுக்குள் அனுமதிப்பீர்களோ.. அதற்கு ஈடானதே மகிந்த.. கோத்தா.. சரத் பொன்சேகா.. சரேந்திர சில்வா.. கமல் குணரத்தன போன்றவர்களுக்கான அதிகாரம் அளிப்பதென்பது. 

Link to comment
Share on other sites

அதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய !

இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் 

இதையடுத்து உடனடியாக சில நியமனங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/69235

 

Link to comment
Share on other sites

தமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர் பாதுகாப்பு செயலாளராக நியமனம் என குற்றச்சாட்டு

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன-வை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

1987ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இரண்டாவது லென்டினனாக இணைந்த கமல் குணரத்ன-வுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி யுத்த செயற்படுகளில் முழு மூச்சாக செயற்பட்டு பாதுகாப்பு பிரிவில் பெரிதும் புகழ்பெற்ற இவருக்கு லெப்டினன்ட் கர்ணல் பதவி வழங்கப்பட்டதோடு, 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருந்த மாங்குளம் முகாமை கைப்பற்றியபோது மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் தற்போதைய புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமான உறவை கமல் குணரத்ன கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் 53ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50477762

''நந்திக்கடலுக்கான பாதை"

2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்ய பெரிய பிரயத்தனம் செய்துள்ளார் கமல் குணரத்ன.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் கமல் குணரத்ன பிரேசிலுக்கான இலங்கையின் பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் நாடு திரும்பிய அவர், ஒளி மற்றும் வியத்மக போன்ற கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பாதைக்கு வித்திடும் செயலமர்வுகள், மாநாடுகளை நடத்தி வந்திருந்தார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தின் மீதான யுத்தக் குற்ற கறையை நீக்க ''நந்திக்கடலுக்கான பாதை" என்ற புத்தகத்தை எழுதி அதனூடாக குற்றச்சாட்டுக்களை கமல் குணரத்ன நிராகரித்தார்.

இலங்கையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட நூல்களில் ''நந்திக்கடலுக்கான பாதை" என்ற புத்தகமும் ஒன்றாகும்.

“கோட்டாபய”

மீண்டும் அண்மையில் “கோட்டாபய” என்ற நூலினை வெளியிட்ட அவர், ராணுவத்தை கோட்டாபய ஏன் விட்டுச் சென்றார் என்ற சர்ச்சைக்கு பதில் வழங்கியிருந்தார்.

கோட்டாபய ராணுவத்தில் சேவையில் இருந்தபோது அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது. ராணுவ வீரர் ஒருவர் களத்தில் இருக்கும்போது அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாது. அதேபோல குடும்ப பிரச்சினைகளை சமாளிக்கவும் வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில்தான் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார்.

மாறாக, பயந்து படையை விட்டு ஓடவில்லை என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் பதில்

 

ராணுவத்தின் 53ஆவது படையணி ராணுவத்தின் உயிர்நாடி என 2009ஆம் ஆண்டு கமல் குணரத்ன தெரிவித்திருந்ததாக சர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.

கருணா மற்றும் கமல் குணரத்ன

ட்விட்டர் தளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணையிறவு முதல் முள்ளிவாய்க்கால் வரையில் தமிழர்கள் புதிய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னத்திடமே சரணடைந்திருந்ததாகவும், அந்த தருணத்திலேயே தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் அல்லது காணாமல் போயிருந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு குறிப்பிட்டுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.