• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ampanai

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன நியமனம்!

Recommended Posts

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

kamal.jpg

கமல் குணரத்ன இறுதிப்போரின் போது இராணுவத்தின் 53 ஆவது படையணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தியடையும் குறிப்பிடத்தக்கது.

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் மேற்கொண்டதையடுத்து வழங்கப்பட்ட முதல் நியமனம் இதுவாகும்.

https://www.virakesari.lk/article/69188

Share this post


Link to post
Share on other sites

EJquKDdWoAAHB1D?format=png&name=large 

Share this post


Link to post
Share on other sites

சம் சும் மாவை கும்பல் செய்ததெல்லாம்.. சொந்த இனத்தை அழித்த..போர்க்குற்றவாளிகளை.. இனப்படுகொலையாளர்களை எல்லாம் வெள்ளையடிக்க உதவியதும்.. பதவியில் அமர்த்தியதும்.. கெளரவித்ததும் தான். இது தான் இவர்கள் செய்த கடந்த 10 வருட சாணக்கிய அரசியல்.

காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை

படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி இல்லை

கொடும் பாலியல் குற்றங்களை இழைத்த இராணுவம் ஒட்டுக்குழுக்களுக்கு தண்டனை இல்லை

நிலப்பறிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

பெளத்த மத திணிப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

தமிழ் மக்களின் உரிமை மறுப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை

இணைத்தலைமை நாடுகள்.. என்போர்... போரை முன்னெடுத்த போது வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

ஐநா தீர்மானத்தின் இனங்காணப்பட்ட போர்க்குற்றங்கள்.. குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கை இல்லை.

ஐநா மனித உரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி சொறீலங்கா எந்தச் செயற்பாடுகளையும் செய்ய முனையவில்லை.

வெறும் கால நீட்டிப்பும்.. இழுத்தடிப்பும் மட்டுமே நிகழ்கிறது.

அரசியல் கைதிகளின் விடுதலை.. புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும் இயல்பான சமூக வாழ்க்கைக்கு என்று எங்கும் காத்திரமான நடவடிக்கை இல்லை.

போரினால்.. பாதிக்கப்பட்ட மக்களின் சமூக.. பொருளாதார மீட்சிக்கு எந்த குறுகிய.. நீண்ட கால திட்டங்களும் செயற்பாட்டில் இல்லை.

இப்படி.. எதுவுமே.. உருப்படியாக இல்லை..

இதில சம் சும் மாவை கும்பலுக்கு அமைச்சுப் பதவி வேணுமாம். இதுகளை எந்தக் கணக்குக்குள் சேர்ப்பது.

புலம்பெயர் தமிழர்களும் சுற்றுலாச் செல்வதில் தான் ஆர்வம். சொந்த மண்ணின்.. மக்களின்.. இருப்பை.. உரிமையை இலங்கைத் தீவில் உறுதி செய்வதில் அவர்களுக்கு தொடர் அழுத்தங்களை சர்வதேச சமூகத்திற்கு.. குறிப்பாக தாம் வாழும் நாடுகளில் இருக்கும் அரசியல் கட்சிகளின் ஊடாக கொடுக்க எந்த காத்திரமான நடவடிக்கையும் இல்லை.

வரப் போகும்... பிரித்தானிய பொதுத் தேர்தலையாவது இதற்குப் பயன்படுத்தி.. பிரதான கட்சிகள்.. சொறீலங்காவில்..போர்க்குற்றவாளிகள்.. மனித உரிமை மீறியோர்.. ஆட்சியில்.. அதிகாரங்களில் அமர வைக்கப்படுவதைக் கண்டிக்க.. உலக அரங்கில் அதற்கு எதிராக குரல் எழுப்ப.. தூண்ட வேண்டும்.

கனடாவில்.. ஹரி ஆனந்த சங்கரி மட்டும் தான் சிலதைச் சொல்லி உள்ளார். மற்றவர்கள்.. எல்லாம் அமுசடக்கமாகி விட்டார்கள்.

தாயகத்தில் சிவாஜிலிங்கத்திற்கு இருக்கும்.. துணிவு.. மக்களின் குரலை பிரதிபலிக்கனும் என்ற எண்ணம்.. சம் சும் மாவை கும்பல் உட்பட பலருக்குக் கிடையாது. 

தாயகம்.. தமிழகம்.. உலகத் தமிழினம்.. ஒத்த சக்திகளோடு சேர்ந்து ஒன்றாகி.. ஒற்றுமையாகக் குரல் கொடுக்க மறுப்பின்.. தமிழினப் படுகொலையாளர்கள்.. புதிய தெம்போடு.. தமது அடுத்த அத்தியாயத்தை அரங்கேற்ற சற்றும் பின்நிற்க மாட்டார்கள் என்பதை எல்லோரும் நினைவில் வைப்பது அவசியம்.

கொடும்.. கொலைக்குற்றவாளிகளை எப்படி.. சிறையில் இருந்து நாட்டுக்குள் அனுமதிப்பீர்களோ.. அதற்கு ஈடானதே மகிந்த.. கோத்தா.. சரத் பொன்சேகா.. சரேந்திர சில்வா.. கமல் குணரத்தன போன்றவர்களுக்கான அதிகாரம் அளிப்பதென்பது. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

அதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய !

இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோத்தாபய ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார் 

இதையடுத்து உடனடியாக சில நியமனங்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/69235

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 9 பேர், புன்னகைப்பவர்கள்

Share this post


Link to post
Share on other sites

தமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர் பாதுகாப்பு செயலாளராக நியமனம் என குற்றச்சாட்டு

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன-வை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

1987ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இரண்டாவது லென்டினனாக இணைந்த கமல் குணரத்ன-வுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி யுத்த செயற்படுகளில் முழு மூச்சாக செயற்பட்டு பாதுகாப்பு பிரிவில் பெரிதும் புகழ்பெற்ற இவருக்கு லெப்டினன்ட் கர்ணல் பதவி வழங்கப்பட்டதோடு, 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருந்த மாங்குளம் முகாமை கைப்பற்றியபோது மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் தற்போதைய புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமான உறவை கமல் குணரத்ன கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் 53ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50477762

''நந்திக்கடலுக்கான பாதை"

2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்ய பெரிய பிரயத்தனம் செய்துள்ளார் கமல் குணரத்ன.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் கமல் குணரத்ன பிரேசிலுக்கான இலங்கையின் பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் நாடு திரும்பிய அவர், ஒளி மற்றும் வியத்மக போன்ற கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பாதைக்கு வித்திடும் செயலமர்வுகள், மாநாடுகளை நடத்தி வந்திருந்தார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தின் மீதான யுத்தக் குற்ற கறையை நீக்க ''நந்திக்கடலுக்கான பாதை" என்ற புத்தகத்தை எழுதி அதனூடாக குற்றச்சாட்டுக்களை கமல் குணரத்ன நிராகரித்தார்.

இலங்கையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட நூல்களில் ''நந்திக்கடலுக்கான பாதை" என்ற புத்தகமும் ஒன்றாகும்.

“கோட்டாபய”

மீண்டும் அண்மையில் “கோட்டாபய” என்ற நூலினை வெளியிட்ட அவர், ராணுவத்தை கோட்டாபய ஏன் விட்டுச் சென்றார் என்ற சர்ச்சைக்கு பதில் வழங்கியிருந்தார்.

கோட்டாபய ராணுவத்தில் சேவையில் இருந்தபோது அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது. ராணுவ வீரர் ஒருவர் களத்தில் இருக்கும்போது அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாது. அதேபோல குடும்ப பிரச்சினைகளை சமாளிக்கவும் வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில்தான் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார்.

மாறாக, பயந்து படையை விட்டு ஓடவில்லை என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

சர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் பதில்

 

ராணுவத்தின் 53ஆவது படையணி ராணுவத்தின் உயிர்நாடி என 2009ஆம் ஆண்டு கமல் குணரத்ன தெரிவித்திருந்ததாக சர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.

கருணா மற்றும் கமல் குணரத்ன

ட்விட்டர் தளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணையிறவு முதல் முள்ளிவாய்க்கால் வரையில் தமிழர்கள் புதிய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னத்திடமே சரணடைந்திருந்ததாகவும், அந்த தருணத்திலேயே தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் அல்லது காணாமல் போயிருந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு குறிப்பிட்டுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • எனக்கு இங்கிலாந்து கல்விமுறைகள் பற்றி அதிகம் தெரியாது..ஆனால் பின்தங்கிய பாடசாலைகளுக்குள் கறுப்பின மக்களும்,  பங்களாதேச மக்களும் அதிகமாக உள்ள இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றால் பின்தங்கிய வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் பெறுபேறுகள் எப்படி? யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு என்பதால் பாடசாலைகள் என்ன செய்ய முடியும்.. அத்துடன், அங்கே படிக்கும் சில திறமையான மாணவர்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்.. பாதிக்கப்பட்ட மாணவர்கள்  பரீட்சை முடிவுகளை மீள் பரிசோதனை செய்ய வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்
  • பிரான்சிலும் இதே நிலைதான். இதில் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களும் அடங்கும். வெளியிலிருந்து எதிர்பார்த்த ஒரு குண்டூசிக்கு மதிப்பிலாத பொருள் உள்நாட்டுக்குள் வரத் தடைப்பட்டதால் பாரிய நிறுவனங்கள் தமது உற்பதியைத் தொடர முடியாமல் முடங்கிக் கிடந்தன. செலவு அதிகமானாலும் பரவாயொல்லை இந்த நிலை இனிமேல் ஏற்படக் கூடாது என்ற முடிவையே பிரான்ஸ் ஜனாதிபதியும் எடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்படப் போவது வறிய நாடுகளே. 
  • இது இவருடைய தேர்தலை மையப்படுத்தி எடுத்திருந்த முடிவாக இருக்குமோ என நினைத்தாலும் கூட இந்த COVID-19ன் பாதிப்பினால் உள்நாட்டு வளங்களில் தங்கியிருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது எனலாம்.. அதேபோல, நடைமுறைக்கு எவ்வளவு தூரம் சாத்தியமோ தெரியாது.. ஆனால் சில offshore வேலைகளை  திரும்பவும் உள்ளூரிற்கே கொண்டு வர இருப்பதாக நான் வேலை பார்க்கும் நிறுவனமும் அறிவித்துள்ளது..ஏனெனில் lockdown சமயத்தில் இந்தியா, பிலீப்பீன்ஸ் teamsற்கு உடனடியாக வீட்டிலிருந்தே வேலைபார்க்க  remote access கொடுக்கமுடியாமல் போனதால், நிறைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியதாயிற்று..       
  • இனரீதியாக இல்லை. ஆனால், பின்தங்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக , தெற்கு லண்டனில் கறுப்பர்கள் கூடுதலாக வாழும் பிரிக்ஸ்ட்ன், கிழக்கு லண்டனில் பங்களாதேஸ் காரர்கள் வாழும் வைட்சேப்பல் போன்ற இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில பிரச்னை என்னவென்றால், வருடந்தோறும், சராசரிக்கும் குறைவாவாக பெறுபேறு எடுக்கும் பாடசாலைகள் உள்ள பகுதிகள் எல்லாம், இம்முறை குய்யோ, முறையோ... என்று அலம்பறை பண்ணுவது. ஆகிலும் அரிக்கண்டம் கொடுத்தால், அரசு... சரி டிசம்பரில் சோதனை வைக்கிறோம் எடுங்கோ எண்டால், எல்லோரும் பம்முவினம். அரசு என்னவும் செய்யலாம். பல்கலைக்கழகங்களை கூட ஜனவரியில் ஆரம்பியுங்கள் என்றும் சொல்ல முடியும்.  
  • முன்பு யுத்த காலங்களில் பலரை துரோகிகள் என்று தவறான தகவல்களை எமது தமிழ்  தேசிய புலம்பெயர் ஊடகங்கள் என்று நாம் நம்பிய தனியார் வெப் பேஜ்கள்  செய்தபோது அவர்கள் கூறியவை எல்லாவற்றையும் உண்மை என்றே நான் கூட நம்பியிருந்தேன். இப்போது தான் தெரிகிறது. புலம் பெயர் தேசிய ஊடகங்கள் என்று தமக்கு தாமே பெயர் வைத்த  தனி நபர்கள்  எத்தனை  அடாவடியும் அயோக்கிதனங்களையும் செய்திருக்கின்றன என்று.