Jump to content

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

Sivajilingam.jpg

 

மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் அவருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவெனில் மாவீரர் நாளினை அனுஸ்டிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

ஆகவே கோத்தாபயவிடம் அனுமதியை நாம் கேட்கவில்லை.ஆனால் இதற்கு இடையூறாக அரச தரப்பு இருக்க வேண்டாம்.தடங்கல்களை ஏற்படுத்த வேண்டாம்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.இதனை மீறி அரசாங்கம் இடையூறுகளை,தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

பின்னர் அனைத்து இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுச்டிகபடும்.எந்த இடத்திலாவது மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் தடை செய்யப்பட்டால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக நான் அந்த இடத்துக்கு வந்து நான் அந்த துப்பரவு பணிகளுக்கு ஆதரவு கொடுப்பேன்.இந்த தடைகள் உடைத்தெறியப்பட்டு மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம்.

தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த அத்தனை மாவீரர்களையும் நினைவு கூறுவோம்.விடுதலைக்காக போராடிய அனைவரையும் நெஞ்சில் இருத்தி நினைவு கூறுவோம்.மக்களோடு மக்களாக அனைவரும் உணர்வு பூர்வமாக மாவீரர்  தினம் அனுஸ்டிக்கப் படும்.என்றார்.

https://www.virakesari.lk/article/69191

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்

இந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. இந்த கூத்தாடி இப்படி பலதும் செய்து தன்னை பிரபலப்படுத்த முயற்சிக்குது. தேர்தல் வெடி பலமாய் வெடிக்கேலை அடுத்த வெடிக்கு பீடிகை போடுறார்.

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் வாயை மூடிக்கொண்டிருந்தால், மாரித் தவளை  போன்று கத்தாமல் இருந்தால், நிறைய சாதிக்க முடியும்! 

“நுணலும் தன் வாயால் கெடும்” என்பது விக்னேஸ்வரனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் நிறையவே பொருந்தும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.

உங்கள் கருத்துடன் முரண்பட முடியாது ...
ஒரு பத்துபேர் காணாமல் போய்  இன்னும் சிலர் சிறை போவதிலும் விட.
நாம் மாவீரர்களை மனதில் வணங்கிவிட்டு இருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.


ஆனால் மனதில் இன்னொரு கேள்வியும் வருகிறது 
அவன் அடிமை ஆக்குமுன்னமே ... நாம் எப்படி அடிமையாக வாழ்வதுக்கு என்பதற்கு பயிற்சி எடுப்பது....  என்பது முட்டாள்தனமாக தெரிகிறது. 

எந்த கையும் இல்லாமல் வாழலாம் 
தன் நம்பிக்கை இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது.
சாப்பிட்டுவிட்டு மூச்சுவிடுவதை சிறையிலும் செய்யலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் கடந்த காலத்தை வெகு இலகுவாக மறந்து விடுகிறார்கள். அதற்கு யாழில் உள்ளோரும் விதிவிலக்கல்ல.

இதே கோத்தாவின் அண்ணன் சனாதிபதியாக இருந்த போது மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதியில்லை. இதே சிவாஜிலிங்கம்.. அப்போதும்.. வாழைக்குத்தியோடு பந்தம் ஏற்றி மாவீரர்களை மக்களை நினைவு கூர்ந்தார்.. தன்னால் இயன்ற அளவு அதனை செய்தார்.. கடும் கெடுபிடிகள் மத்தியில்.

நாம் அதிகாரத்திமிருக்கு அடங்கிப்போவதால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. பலஸ்தீனியர்கள்.. இஸ்ரேலின் பலத்துக்கும் அதிகாரத் திமிருக்கும் அடங்கிப் போயிருந்தால்.. இன்று பலஸ்தீன மக்களுக்கு என்று ஒரு அடையாள தேசம் கூட பிறந்திருக்காது. 

சிவாஜி லிங்கம்.. சம் சும் மாவை கும்பலை விட அதிகம் தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யச் செய்கிறார் என்றே நான் கருதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையற்ற வீராப்பு. இவரே இடைஞ்சல் வரணும் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது

 

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.

இவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......

மகிந்த கூட்டத்திடம் வாங்கின காசுக்கு குரைக்கிறார் இவர் இப்படி மாரித்தவக்கை போல் கத்துவது போல் கத்தினால் அங்கிருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ் சனத்துக்கு தான் பாதிப்பு அதிலும் புனர்வாழ்வு எடுத்த போராளிகள் வாழ்வு இன்னும் கேள்வி குறியாகும் தெரிந்தும் தெரிந்து கொண்டு மற்றவன் வாழ்க்கையை கெடுப்பதுக்கு என்று பிறந்து இருக்கு சாவொண்டு வருகிதுல்லை இப்படியானவர்களுக்கு .

கெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா ? எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

கெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா ? எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .

உலகில் நமக்கு யாருமே இல்லை என்று நாம் சொல்லிக்கொள்ள நாமே தான் காரணம்.

ஒன்றில்.. ஹிந்தியாவை நம்புவோம். இல்லை அகதியாய் போய்க்குந்தின.. மேற்குலகை நம்புவோம். எல்லாரும் கைவிட்டால்.. அடிச்சு உதைக்கிற சிங்களவனே தஞ்சம் என்று ஆவோம். இது தான் எங்களுக்கு உலகில் யாருமில்லை என்பதற்கான காரணம்.

பலஸ்தீனர்கள் அப்படியல்ல. அவர்கள் உலகில் எல்லாப் பகுதிகளிலும் தமது நேச சக்திகளைக் கொண்டிருக்க பிரச்சாரங்களையும் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.

பாகிஸ்தானும் அவர்களுக்கு ஆதரவு.. இந்திரா காந்தியின் ஹிந்தியாவும் அவர்களுக்கு ஆதரவு. பிரேசிலும் ஆதரவு.. ஆர்ஜன்டீனாவும் ஆதரவு. சீனாவும் ஆதரவு ரஷ்சியாவும் ஆதரவு. இந்த அணுகுமுறையே.. பின்னர் மேற்குலகும் அவர்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

நாம் என்ன செய்கிறோம்.. ஒன்றில்.. ஹிந்தியா.. இல்லை அமெரிக்கா. இந்த இரண்டுமே எமக்கான நேச சக்தி கிடையாது. அது பிராந்திய நலன் விரும்பிகள் அவ்வளவே.

எமது விடுதலைப் போராட்டத்தை இலகுவாக பயங்கரவாதம் என்று சொல்லி நசுக்க... நாம்.. சர்வதேச மயப்படாமையும் ஒரு காரணம். நாம் மேற்குலக மயமானதை சர்வதேச மயம் என்று தப்புக் கணக்குப் போட்டதன் விளைவு இது.

மேலும்.. கோத்தா சிவாஜி கத்தித்தான்.. மாவீரர் தினத்தை தடுப்பார் என்றில்லை. மகிந்தவே தடுத்தவர் தான். ரணில் அனுமதித்த போதும் கடுமையாக எதிர்த்தவர்கள் மகிந்த கும்பல். எனவே சிவாஜின் எதிர்பார்ப்பு ஒன்றும் தவறல்ல.

கோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேன் என்றவர் சிவாஜி. ஆனால்.. கோத்தாவை எதிர்த்தவர்களாக காட்டிக்கொண்ட.. சம் சும் கும்பல்.. ஆனந்த சங்கரி.. போன்ற காட்டிக்கொடுப்பாளர்கள்.. ஓடிப்போய் வாழ்த்தி விட்டார்கள்.

இப்ப என்ன மலையகத்தில் தமிழன் மீது அடி உதை.  இதுக்காகவா வாழ்த்தினீர்கள்.

மகிந்த கும்பலைப் பற்றிய சரியான புரிதல் இன்மையே.. சிவாஜி மீதான அவதூறு என்றே நான் கருதுகிறேன். அதற்காக சிவாஜி தூய்மையான அரசியல்வாதி என்று சொல்லவில்லை. அவர் எதை எதிர்த்தாரோ.. அது அப்படியே நிகழ் வாய்ப்பு இருக்கிறது வெளிப்படை. ஆனால்.. எம்மில் சிலர்.. கோத்தா மறந்து போய் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிப்பார் என்று கனவு காண்பது தான் சிவாஜியின் கூத்தை விட மோசமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

சிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.

இவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.

எமது  அரசியல் தலைவர்களின் 70களுக்கு பின்னரான வாய்ச்சவால்களும்,உசுப்பேத்தல்களுமே  ஈழத்தமிழின அழிவுக்கான காரணங்கள்.
 
இந்தா மாவை இப்பவும் போராட்டம் வெடிக்கும் எண்டு கத்திக்கொண்டு திரியுது. இதை கேட்ட சிங்களவன் என்ன செய்வான்?????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.