• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
colomban

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்

Recommended Posts

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

Sivajilingam.jpg

 

மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் அவருக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவெனில் மாவீரர் நாளினை அனுஸ்டிப்பதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

ஆகவே கோத்தாபயவிடம் அனுமதியை நாம் கேட்கவில்லை.ஆனால் இதற்கு இடையூறாக அரச தரப்பு இருக்க வேண்டாம்.தடங்கல்களை ஏற்படுத்த வேண்டாம்.என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.இதனை மீறி அரசாங்கம் இடையூறுகளை,தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும்.

பின்னர் அனைத்து இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுச்டிகபடும்.எந்த இடத்திலாவது மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் தடை செய்யப்பட்டால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உடனடியாக நான் அந்த இடத்துக்கு வந்து நான் அந்த துப்பரவு பணிகளுக்கு ஆதரவு கொடுப்பேன்.இந்த தடைகள் உடைத்தெறியப்பட்டு மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம்.

தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்த அத்தனை மாவீரர்களையும் நினைவு கூறுவோம்.விடுதலைக்காக போராடிய அனைவரையும் நெஞ்சில் இருத்தி நினைவு கூறுவோம்.மக்களோடு மக்களாக அனைவரும் உணர்வு பூர்வமாக மாவீரர்  தினம் அனுஸ்டிக்கப் படும்.என்றார்.

https://www.virakesari.lk/article/69191

Share this post


Link to post
Share on other sites
Quote

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் ; சிவாஜிலிங்கம்

இந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......

Share this post


Link to post
Share on other sites

இல்லை. இந்த கூத்தாடி இப்படி பலதும் செய்து தன்னை பிரபலப்படுத்த முயற்சிக்குது. தேர்தல் வெடி பலமாய் வெடிக்கேலை அடுத்த வெடிக்கு பீடிகை போடுறார்.

Share this post


Link to post
Share on other sites

விக்னேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் வாயை மூடிக்கொண்டிருந்தால், மாரித் தவளை  போன்று கத்தாமல் இருந்தால், நிறைய சாதிக்க முடியும்! 

“நுணலும் தன் வாயால் கெடும்” என்பது விக்னேஸ்வரனுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் நிறையவே பொருந்தும்!

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

சிவாஜிலிங்கம் அடக்கி வாசிப்பது... அவருக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது.

உங்கள் கருத்துடன் முரண்பட முடியாது ...
ஒரு பத்துபேர் காணாமல் போய்  இன்னும் சிலர் சிறை போவதிலும் விட.
நாம் மாவீரர்களை மனதில் வணங்கிவிட்டு இருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.


ஆனால் மனதில் இன்னொரு கேள்வியும் வருகிறது 
அவன் அடிமை ஆக்குமுன்னமே ... நாம் எப்படி அடிமையாக வாழ்வதுக்கு என்பதற்கு பயிற்சி எடுப்பது....  என்பது முட்டாள்தனமாக தெரிகிறது. 

எந்த கையும் இல்லாமல் வாழலாம் 
தன் நம்பிக்கை இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது.
சாப்பிட்டுவிட்டு மூச்சுவிடுவதை சிறையிலும் செய்யலாம். 

Share this post


Link to post
Share on other sites

எம்மவர்கள் கடந்த காலத்தை வெகு இலகுவாக மறந்து விடுகிறார்கள். அதற்கு யாழில் உள்ளோரும் விதிவிலக்கல்ல.

இதே கோத்தாவின் அண்ணன் சனாதிபதியாக இருந்த போது மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதியில்லை. இதே சிவாஜிலிங்கம்.. அப்போதும்.. வாழைக்குத்தியோடு பந்தம் ஏற்றி மாவீரர்களை மக்களை நினைவு கூர்ந்தார்.. தன்னால் இயன்ற அளவு அதனை செய்தார்.. கடும் கெடுபிடிகள் மத்தியில்.

நாம் அதிகாரத்திமிருக்கு அடங்கிப்போவதால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. பலஸ்தீனியர்கள்.. இஸ்ரேலின் பலத்துக்கும் அதிகாரத் திமிருக்கும் அடங்கிப் போயிருந்தால்.. இன்று பலஸ்தீன மக்களுக்கு என்று ஒரு அடையாள தேசம் கூட பிறந்திருக்காது. 

சிவாஜி லிங்கம்.. சம் சும் மாவை கும்பலை விட அதிகம் தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யச் செய்கிறார் என்றே நான் கருதுகிறேன். 

Share this post


Link to post
Share on other sites

இது தேவையற்ற வீராப்பு. இவரே இடைஞ்சல் வரணும் என்று எதிர்பார்ப்பது போல் தெரிகிறது

 

Share this post


Link to post
Share on other sites

சிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.

இவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

இந்த மனிசன் இப்பவே வெடியளை கொளுத்திப்போடுது......

மகிந்த கூட்டத்திடம் வாங்கின காசுக்கு குரைக்கிறார் இவர் இப்படி மாரித்தவக்கை போல் கத்துவது போல் கத்தினால் அங்கிருக்கும் கொஞ்சநஞ்ச தமிழ் சனத்துக்கு தான் பாதிப்பு அதிலும் புனர்வாழ்வு எடுத்த போராளிகள் வாழ்வு இன்னும் கேள்வி குறியாகும் தெரிந்தும் தெரிந்து கொண்டு மற்றவன் வாழ்க்கையை கெடுப்பதுக்கு என்று பிறந்து இருக்கு சாவொண்டு வருகிதுல்லை இப்படியானவர்களுக்கு .

கெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா ? எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, பெருமாள் said:

கெத்து இருக்கணும் பாலஸ்தீனமும் நாமும் ஒன்றா ? எமக்கு ஆதரவாய் உலகில் யாரும் கிடையாது இந்த கேவலத்தில் சும்மா சவுண்டு விடுவது எமக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் .

உலகில் நமக்கு யாருமே இல்லை என்று நாம் சொல்லிக்கொள்ள நாமே தான் காரணம்.

ஒன்றில்.. ஹிந்தியாவை நம்புவோம். இல்லை அகதியாய் போய்க்குந்தின.. மேற்குலகை நம்புவோம். எல்லாரும் கைவிட்டால்.. அடிச்சு உதைக்கிற சிங்களவனே தஞ்சம் என்று ஆவோம். இது தான் எங்களுக்கு உலகில் யாருமில்லை என்பதற்கான காரணம்.

பலஸ்தீனர்கள் அப்படியல்ல. அவர்கள் உலகில் எல்லாப் பகுதிகளிலும் தமது நேச சக்திகளைக் கொண்டிருக்க பிரச்சாரங்களையும் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.

பாகிஸ்தானும் அவர்களுக்கு ஆதரவு.. இந்திரா காந்தியின் ஹிந்தியாவும் அவர்களுக்கு ஆதரவு. பிரேசிலும் ஆதரவு.. ஆர்ஜன்டீனாவும் ஆதரவு. சீனாவும் ஆதரவு ரஷ்சியாவும் ஆதரவு. இந்த அணுகுமுறையே.. பின்னர் மேற்குலகும் அவர்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது.

நாம் என்ன செய்கிறோம்.. ஒன்றில்.. ஹிந்தியா.. இல்லை அமெரிக்கா. இந்த இரண்டுமே எமக்கான நேச சக்தி கிடையாது. அது பிராந்திய நலன் விரும்பிகள் அவ்வளவே.

எமது விடுதலைப் போராட்டத்தை இலகுவாக பயங்கரவாதம் என்று சொல்லி நசுக்க... நாம்.. சர்வதேச மயப்படாமையும் ஒரு காரணம். நாம் மேற்குலக மயமானதை சர்வதேச மயம் என்று தப்புக் கணக்குப் போட்டதன் விளைவு இது.

மேலும்.. கோத்தா சிவாஜி கத்தித்தான்.. மாவீரர் தினத்தை தடுப்பார் என்றில்லை. மகிந்தவே தடுத்தவர் தான். ரணில் அனுமதித்த போதும் கடுமையாக எதிர்த்தவர்கள் மகிந்த கும்பல். எனவே சிவாஜின் எதிர்பார்ப்பு ஒன்றும் தவறல்ல.

கோத்தாவுக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டேன் என்றவர் சிவாஜி. ஆனால்.. கோத்தாவை எதிர்த்தவர்களாக காட்டிக்கொண்ட.. சம் சும் கும்பல்.. ஆனந்த சங்கரி.. போன்ற காட்டிக்கொடுப்பாளர்கள்.. ஓடிப்போய் வாழ்த்தி விட்டார்கள்.

இப்ப என்ன மலையகத்தில் தமிழன் மீது அடி உதை.  இதுக்காகவா வாழ்த்தினீர்கள்.

மகிந்த கும்பலைப் பற்றிய சரியான புரிதல் இன்மையே.. சிவாஜி மீதான அவதூறு என்றே நான் கருதுகிறேன். அதற்காக சிவாஜி தூய்மையான அரசியல்வாதி என்று சொல்லவில்லை. அவர் எதை எதிர்த்தாரோ.. அது அப்படியே நிகழ் வாய்ப்பு இருக்கிறது வெளிப்படை. ஆனால்.. எம்மில் சிலர்.. கோத்தா மறந்து போய் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதிப்பார் என்று கனவு காண்பது தான் சிவாஜியின் கூத்தை விட மோசமாக உள்ளது. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Lara said:

சிவாஜிலிங்கத்தின் கருத்துகளை சிங்கள ஊடகங்கள் வெளியிடுவதுண்டு.

இவர் இப்படி கதைத்தால் அதை வைத்து தெற்கில் சிங்கள இனவாதிகளை கோத்தா மேலும் ஒன்று திரட்டலாம்.

எமது  அரசியல் தலைவர்களின் 70களுக்கு பின்னரான வாய்ச்சவால்களும்,உசுப்பேத்தல்களுமே  ஈழத்தமிழின அழிவுக்கான காரணங்கள்.
 
இந்தா மாவை இப்பவும் போராட்டம் வெடிக்கும் எண்டு கத்திக்கொண்டு திரியுது. இதை கேட்ட சிங்களவன் என்ன செய்வான்?????????

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • Share0 மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர். தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது , எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம். சுகதேகியாக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் தமிழகத்தில் வழக்காடி வென்று ஒரு கிழமைக்குள் இயற்கை எய்தினார். அவரின் உடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு வந்து, முதலில் கூட்டணி அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைத்த பின்னரே காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்கள். ஆனையிறவு மீள பிடிப்பது பகல் கனவு. 35ஆயிரம் போர் வீரர்களை காப்பாற்றுங்கள் என சர்வதேசத்திடம் மண்டியிடும் காலம் மீண்டும் வரும். அன்றைக்கு பிரபாகரனை சர்வதேசம் சுற்றிவளைக்கும் காலம் வரும் அன்றே யுத்தம் முடிவுக்கு வரும் என அப்போதைய அமைச்சர் ரத்வத்தைக்கு நாடாளுமன்றில் கை நீட்டி கூறியவன் நான். அப்போது என்னருகில் சம்பந்தன் இருந்து என்னை பிரமிப்பாக பார்த்தார். அதன் பின்னர் நடந்தது என்பது வரலாறு. மக்கள் சேவை என வந்த பின்னர் அப்புக்காத்தர் வேலை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைக்கு கிளிநொச்சியில் காணி உறுதி எழுதியே கோடீஸ்வரன் ஆகியிருப்பேன். மகேஸ்வரன், ரவிராஜ், லக்‌ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஸ்டியை முன்வைக்க, மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஸ்டி கோரிக்கையை 49 வீத சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர். சம்பந்தன், மாவை, சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள். காலையில் கூட்டணி அலுவலகத்தில் இருந்து கூட்டணியில் போட்டியிடுவதாக கூறிய சம்பந்தன் பின்னேரம் புலிகளை சந்தித்து தமிழரசு கட்சியில் போட்டியிட்ட பொய்யன். புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது ? கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள். மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். – என்றார். https://newuthayan.com/இதெல்லாம்-சரித்திரம்-தம்/
  • உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை இரான் ஒப்புக்கொண்டுள்ள போதிலும் அந்த நாட்டின் அதி உயர் தலைவர், இரானின் பாதுகாப்பு படைகளை ஆதரித்து பேசியுள்ளார். உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு, இரானின் புரட்சிகர பாதுகாப்பு படை பொறுப்பேற்றுள்ளதாக கூறிய அவர் அந்தப் படை இரானின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதாக கூறியுள்ளார். 2012க்கு பிறகு, எட்டு வருடங்களில் முதன்முறையாக இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார். வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நட்த்திய அந்நாட்டின் தலைமை மதகுருவும் அதி உயர் தலைவருமான காமேனி, தொழுகைக்கு பிறகான உரையில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா விதித்த தடைகளால் இரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இரான் தலைவர்கள் மீதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது உரையில் அலி காமேனி முக்கியமாக என்ன பேசினார்? •டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஒரு ''தீய'' அரசு என விமர்சித்தார். •இரான் மக்களுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளிப்படுத்தும்போதெல்லாம் பொய் கூறுவதாக தெரிவித்த அவர், இரான் மக்களை அமெரிக்கா நஞ்சு தடவிய வாளால் குத்தும் என கூறினார். •இராக்கில் இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல், ''அமெரிக்காவின் முகத்தில் விடப்பட்ட அறை'' என அவர் தெரிவித்தார். •அமெரிக்கா பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ள இரானின் உயரடுக்கு பாதுகாப்பு படை பற்றி பேசிய அவர், ''அது மனித மதிப்புகளை கொண்டிருக்கும் ஒரு மனிதநேய அமைப்பு" என குறிப்பிட்டார். •காசெம் சுலேமானீயின் இறுதிச் சடங்கு மற்றும் இரானின் பதிலடி ஆகியவை வரலாற்றில் ஏற்பட்ட திருப்புமுனை என அவர் கூறினார். படத்தின் காப்புரிமை Getty Images Image caption இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார். இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. புதன்கிழமையன்று, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என ஆயதுல்லா அலி காமேனி தெரிவித்திருந்தார். விமானம் சுடப்பட்டது குறித்து இரான் ராணுவத்திடம் விளக்கம் கேட்டிருந்தார் ஆயதுல்லா அலி காமேனி. இதன்மூலம் மிக அரிதாக இரான் அரசுடன் அவருக்கு உரசல் ஏற்படும் போக்கு காணப்படுவதாக கூறப்பட்டது. விமான விபத்துக்குள்ளான மூன்று நாட்கள்வரை இரான் அதிகாரிகள் தங்களுக்கு அதில் தொடர்பில்லை என்று கூறிவந்தனர். ஆனால், சர்வதேச அழுத்தத்தால் இரானின் கடும்போக்கு புரட்சிப்படை, அது "போர் ஏவுகணை" என்று தவறுதலாக எண்ணி அதை சுட்டு வீழ்த்திவிட்டோம் என ஒப்புக் கொண்டது. உக்ரைன் நாட்டை சேர்ந்த சர்வதேச விமான சேவையின் போயிங் 737 - 800 விமானம் ஜனவரி 8ஆம் தேதி இரானில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது. இராக்கில் உள்ள அமெரிக்க படைகளை இலக்கு வைத்து இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியானது. அந்த தாக்குதல் அமெரிக்க இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி காசெம் சுலமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டது. என்ன நடக்கிறது இரானில்? படத்தின் காப்புரிமை Getty Images இரானின் செய்தி முகமையான மெர்ரில், டெஹ்ரானில் உள்ள மொசல்லா மசூதியில் 80 வயதான ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தற்போதைய சூழலுக்கும் இந்த தொழுகைக்கும் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடவில்லை. இரான் அதிகாரிகள், இரான் தனது ஒற்றுமையையும் சிறப்பையும் மீண்டும் வெளிப்படுத்தும் நேரமிது என தெரிவித்துள்ளதாக செய்தி முகமை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் 33ஆவது ஆண்டுவிழாவின் போது, டெஹ்ரானில் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/global-51145156
  • நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கிலிடும் தேதி புதிதாக அறிவிப்பு புதுடெல்லி டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்கார வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றும் புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. டெல்லி நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவில் வரும் 22-ம் தேதி 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் முகேஷ் சிங் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிபதி சதீஸ் குமார் அரோரா உத்தரவிட்டார்   கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். இந்தச் சம்பவத்தில் ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையையும் நீதிமன்றம் விதித்தது. டெல்லி நீதிமன்றத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா இம்மாதம் 22-ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற, கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஆனால் மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தண்டனையை வரும் 22-ம் தேதி நிறைவேற்றாமல் ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நீதிமன்ற நீதிபதி சதீஸ் அரோரா முன் இன்று விசாரிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இர்பான் அகமது வாதிடுகையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். ஆதலால், தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை அறிவிக்கக் கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ் அரோரா, பிறப்பித்த உத்தரவில், " வரும் 22-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அந்தத் தேதி மாற்றப்பட்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்" என அறிவித்தார்.     https://www.hindutamil.in/news/india/535291-nirbhaya-case-delhi-court-issues-fresh-death-warrants-against-4-convicts-for-feb-1-6-am-2.html
  • (செய்திப்பிரிவு)  யுத்த நுட்பம் தொடர்பில்  புதிய விடயங்களை  விடுதலை புலிகள்  அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது.   வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது  தீவிரவாத அமைப்பாக  விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது.     இவ்வாறான  பலம் கொண்ட   பயங்கரவாத அமைப்பினை குறுகிய காலத்திற்குள்  நிறைவிற்கு கொண்டு வந்து முப்படையின்  பெருமையினையும் உலகிற்கு   பறைசாற்றியுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  திருகோணமலை   சீன  துறைமுகத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற  விமானப்படை தெரிவிற்கான பயிற்சியை நிறைவு செய்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு   சின்னம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முடிவிற்கு  கொண்டு வர முடியாது என்று கருதப்பட்ட   பயங்கரவாத சிவில் யுத்தத்தை   முடிவிற்கு கொண்டு வந்த பெருமை   முப்படையினரையே  சாரும்.  விமான  படையின் பங்களிப்பு இதில்  பிரதானமானது. இராணுவத்தினர்  புலிகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை தாக்க முன்னர் விமானப்படையினரே  வான் மூல தாக்குதலை மேற்கொண்டு இராணுவத்தினருக்கு பாரிய ஒத்துழைப்பினை  வழங்கினார்கள். இராணுவத்தினரது செயற்பாடுகளுக்கு  வமானப்பட்டையின்  பங்களிப்பு இன்றியமையாதது.  வன்னி  பிரதேசத்தில்   விடுதலை  புலிகள்   பதுங்கு குழிகளின் ஊடாக தாக்குதலை மேற்கொண் ட போது அது  இராணுவத்தினருக்கு பாரிய தடையாக காணப்பட்டன.  அந்த வேளையில்  விமான  படையினரே மறைந்திருந்து  தாக்கும் புலிகள் தொடர்பில்  இராணுவத்தினருக்கு தொடர்ந்து தகவல்களை வழங்கினார்கள்.  வான்வளியில் ஊடாக   செயற்படுத்த  வேண்டிய  அனைத்து  நடவடிக்கைகளையும் விமானப்படையினர்  சிறப்பாக முன்னெடுத்தமையினால்   குறுகிய  காலத்தில்  பயங்கரவாத சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முடிந்தது. உலகில்  தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய விமான படைகளில் இலங்கை  விமான படைக்கு அதிகளவான அனுபவங்கள் உண்டு என்பதை அறிவேன். உலகில்    தீவிரவாத  அமைப்புக்கள் ஏதும்   விமானப்படை வசதியினை கொண்டிருக்கவில்லை. ஈராக், சிரியா  ஆகிய  நாடுகளின்   நிலப்பரப்பினை கைப்பற்றியிருந்த  ஐ.எஸ்.ஐ. எஸ். தீவிரவாத அமைப்புக்கு கூட   விமான படை வசதி காணப்படவில்லை. ஆனால்  விடுதலை புலிகள் அமைப்பிற்கு இந்த   விமான படை வசதி காணப்பட்டன. விடுதலை புலிகள்   வான்படை தாக்குதலின் ஊடான உலக தீவிரவாத அமைப்புக்களுக்கு   புதிய மார்க்கத்தை  காண்பித்தார்கள்.    அக்காலக்கட்டத்தில்   தாக்குதல் இயந்திரங்களை   எம்மவர்கள்  குறுப்பெட்டி என்று புனைப்பெயர்கொண்டு அழைப்பாரகள்.  ஆனால் இதனை பயன்படுத்தியே விடுதலை புலிகள்    கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம், கெரவலபிடிய  எண்ணெய்  தாங்கி கள், கடுநாயக்க  விமான நிலையம் ஆகியவற்றில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.  இத்தாக்குதல்கள் அவர்கள் எதிர்பார்த்ததை  போன்நு று  பாரிள  விளைவுகளை ஏற்படுத்திவிலலை. இத்தாக்குதல்    முறையாக இடம் பெற்றிருந்தால்   பாரிய விளைவுகளை  எதிர்க் கொள்ள  நேரிட்டிருக்கும். தற்கொலை  குண்டுதாரிகள், தற்கொலை  தாக்குதல்கள் ஆகிய  தாக்குதல் முறைகளை   விடுதலை புலிகளே உலகிற்கு அறிமுகம் செய்தார்கள்.   புதிய  பல விடயங்களை விடுதலை புலிகள்  அறிமுகம் செய்தமையினாலே  2008 ஆம் ஆண்டு   விடுதலை புலிகள் அமைப்பினை   அமெரிக்காவின் எப். பி. ஐ. பயங்கரவாத அமைப்பாக  உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. இவ்வாறான  பலம் கொண்ட அமைப்பினை இல்லாதொழித்தமை  இலங்கையின்  முப்படையின்   கௌரவத்தை உலகிற்கே  இன்று  பறைசாற்றியுள்ளது. 30 வருட  கால  யுத்த பின்னணியை கொண்ட விடுதலை புலிகளுடன் 1980ம் ஆண்டே   வான்வெளி தாக்குதலை விமான படை மேற்கொண்டது.இக்காலக்கட்டத்தில் இருந்து  2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் வரையில்  இராணுவத்திற்கு  விமானப் படை  பாரிய  ஒத்துழைப்பினை வழங்கியுள்ளது. பலம் கொண்டு  விடுதலை புலிகள்  தாக்கும் போது  முப்படையினரும் ஒன்றினைந்து  நாட்டுக்காக செயற்பட்டமையினால் பயங்கரவாத அமைப்பினை  முழுமையாக இல்லாதொழிக்க முடிந்துள்ளது. தாய் நாட்டிற்காக உயிர் நீத்த  முப்படையினரும் அரசியலுக்கு அப்பாற் கௌரவிக்கப்பட வேண்டும். யுத்த காலத்தில் முப்படையினர்  ஆற்றிய சேவையினை இன்றும் தொடர்கின்றார்கள்.  இயற்கை அனர்த்தத்தின் போது  தங்களின் உயிரை தியாகம் செய்தும் பொது மக்களை   முப்படையினர் பாதுகாத்துள்ளார்கள். வெள்ள  அனர்த்ததின் போது  வமான படையினர் ஆற்றும் சேவை இன்றியமையாதது.நாட்டின் எல்லை  பாதுகாப்பிற்கும் ஒரு  பகுதி  ஒத்திழைப்பினை வான்படை வழங்குகின்றது. முப்படையில் சேவையாற்றும் வீரர்கள் நாட்டுக்காகவும், படைகளின் இலக்குக்காகவும், செயற்பட வேண்டும். விமான படையின்  சேவை  அளப்பரியது என்றார். https://www.virakesari.lk/article/73394
  • (நா.தனுஜா) 2025 ஆம் ஆண்டு தேர்தலில் நான் களமிறங்கப்போவதில்லை. எனவே 2023 அல்லது 2024 ஆம் ஆண்டாகும் போது கட்சியின் தலைமைத்துவம் குறித்து ஆராயமுடியும். தற்போது இருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்குகளும் இல்லாமல் போனால் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவேற்படும்.   எனவே தற்போது இருப்பதைத் தக்கவைப்பதற்கும், வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்துவதற்கும் நான் தலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் விசேட பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 பேர் சஜித் பிரேமதாஸ தலைமைப்பொறுப்பை ஏற்றுச்செயற்படுவதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார் https://www.virakesari.lk/article/73377