• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம்

Recommended Posts

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுகள் பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பாகும். சிறுபான்மை தமிழ் மக்களிடம் இந்த அரசு மோசமாக தோல்யடைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கவும், அவர்களை அரசியலுக்குள் சம குடிமக்களாக இணைக்கவும் இந்த தேர்தல் முடிவு எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அவர்களின் விவகாரங்களில் சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் அவசியத்தை தீவிரமாக வலியுறுத்துகின்றன.

கோட்டாபய பதவியேற்பு. Image captionகோட்டாபய பதவியேற்பு.

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையே அவர்களைப் பாதுகாக்கும். அத்துடன், அவர்களின் நிலம், மொழி, கலாசாரத்தையும் பாதுகாக்க சுயநிர்ணய உரிமை அவசியம் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது எனவும் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவது தீவில் குற்றமிழைத்தோருக்கு தண்டனையில் இருந்து விதிவிலக்களிக்கும் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது.

தற்போதைய உலக ஒழுங்கால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விலக்கும் அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

இந்த தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றி பெற்றுள்ளபோதிலும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசு நிர்வாகத்தின் மாற்றத்தால் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க போராடியவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் துணையிருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

"கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள ஏனைய மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நானும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-50457605

 

My statement on the election of former wartime defence chief Gotabaya Rajapaksa as the President of #SriLanka -Logan Kanapathy

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

?type=3&theater

Share this post


Link to post
Share on other sites

இங்கு கனடாவில் பேஸ்புக்  பச்சோந்திகள்...கோட்டா  நேர்மை,இனவாதம் அற்றவர் என்றூ ஒரே கொக்கரிப்பு...சிலது கோவணத்தையும் கழட்டிபோட்டு பொடியளை கோட்டாவோடை சேர்ந்து எலக்சன் கேட்கட்டாம்.....புளிச்சல் ஏவறைவிட ஊருக்குக்குப் போட்டுவந்து அவிழ்க்கிறவை....எல்லாம் நானே ... போதாக்குறைக்ககு பென்சன் குஞ்சுகளும் ...ஆமாப் போடுகினம்...

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, alvayan said:

இங்கு கனடாவில் பேஸ்புக்  பச்சோந்திகள்...கோட்டா  நேர்மை,இனவாதம் அற்றவர் என்றூ ஒரே கொக்கரிப்பு...சிலது கோவணத்தையும் கழட்டிபோட்டு பொடியளை கோட்டாவோடை சேர்ந்து எலக்சன் கேட்கட்டாம்.....புளிச்சல் ஏவறைவிட ஊருக்குக்குப் போட்டுவந்து அவிழ்க்கிறவை....எல்லாம் நானே ... போதாக்குறைக்ககு பென்சன் குஞ்சுகளும் ...ஆமாப் போடுகினம்...

உங்களிடம் ஒரு கேள்வி. 

யுத்தம் முடிந்து ரத்தம் காய்வதற்க்குள் யுத்தத்தை வழி நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி நமதாட்கள் கேட்டவைள்.  நாங்களும் அதன்படி நடந்தோம்.  இப்ப மட்டும் இவனோட சேர்ந்து வேலைசெய்வதில் ஏன் பிழை கண்டுபிடிகிரியள் ???  

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Maharajah said:

உங்களிடம் ஒரு கேள்வி. 

யுத்தம் முடிந்து ரத்தம் காய்வதற்க்குள் யுத்தத்தை வழி நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி நமதாட்கள் கேட்டவைள்.  நாங்களும் அதன்படி நடந்தோம்.  இப்ப மட்டும் இவனோட சேர்ந்து வேலைசெய்வதில் ஏன் பிழை கண்டுபிடிகிரியள் ???  

அய்யா மகாராசா...கோமகராசா...உங்கள் ஒப்புவமையை இனத்தின் அழிவுடன் திரும்பிப் பார்க்கலாமே..

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, alvayan said:

அய்யா மகாராசா...கோமகராசா...உங்கள் ஒப்புவமையை இனத்தின் அழிவுடன் திரும்பிப் பார்க்கலாமே..

""எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழை ""

இதுவா உங்களின் விருப்பம்  ??  

தென் தமிழீழ எல்லைப்புற கிராமங்களின் நிலை தெரியுமா உங்களுக்கு? 

வன்னியின் பெற்றோரற்ற குழந்தைகளின் நிலை தெரியுமா உங்களுக்கு ? 

உழைப்பாளிகழில்லாத குடும்பங்களின் நிலைதான் உங்களுக்கு தெரியுமா?  

காடுகளின் நடுவே ரெண்டு தகரமும் கிழிஞ்ச பொலித்தீன்,  தறப்பாழ் கூரையின் கீழ் வாழும் மக்களின் நிலை தேடியுமா உங்களுக்கு ? 

 

சும்மா விதண்டாவாதம் கதைக்காதீர்கள்.  முதலில் தமிழ் மக்களின் அன்றாட,  அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு ஒரு வழி காட்டுங்கள்.  மக்கள் பொருளாதார ரிதியிலும், சமூக,  உள ரீதியில் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே எங்கள் எல்லோரது விருப்பமும் சாத்தியமாகும்.  

இவற்றிட்கு ஒரு வழியை காட்டிவிட்டு அடுத்த அடியை எல்லோரும் சேர்ந்தே அடுத்து வைப்போம். 

Edited by Maharajah
எழுத்துப்பிழை

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, Maharajah said:

""எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழை ""

இதுவா உங்களின் விருப்பம்  ??  

தென் தமிழீழ எல்லைப்புற கிராமங்களின் நிலை தெரியுமா உங்களுக்கு? 

வன்னியின் பெற்றோரற்ற குழந்தைகளின் நிலை தெரியுமா உங்களுக்கு ? 

உழைப்பாளிகழில்லாத குடும்பங்களின் நிலைதான் உங்களுக்கு தெரியுமா?  

காடுகளின் நடுவே ரெண்டு தகரமும் கிழிஞ்ச பொலித்தீன்,  தறப்பாழ் கூரையின் கீழ் வாழும் மக்களின் நிலை தேடியுமா உங்களுக்கு ? 

 

சும்மா விதண்டாவாதம் கதைக்காதீர்கள்.  முதலில் தமிழ் மக்களின் அன்றாட,  அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு ஒரு வழி காட்டுங்கள்.  மக்கள் பொருளாதார ரிதியிலும், சமூக,  உள ரீதியில் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே எங்கள் எல்லோரது விருப்பமும் சாத்தியமாகும்.  

இவற்றிட்கு ஒரு வழியை காட்டிவிட்டு அடுத்த அடியை எல்லோரும் சேர்ந்தே அடுத்து வைப்போம். 

அப்ப கோத்தா வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுமோ...அல்லது ஆதரவாளர் சிலருக்கு நன்மை கிடைக்குமோ....சம்  சும்மிடம் நிறைய வசதி இருக்கே கொடி பிடிக்கும் உங்களால் கொமிசன் பிடித்துக் கொண்டும் உதவலாமே.../எங்களுக்கு எல்லாமே தெரியும்....உதவுகிறோம்....அதற்கு இடைஞ்சல் உங்களைப் போன்ற கொடி பிடிப்பாளர்களே..

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, alvayan said:

அப்ப கோத்தா வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுமோ...அல்லது ஆதரவாளர் சிலருக்கு நன்மை கிடைக்குமோ....சம்  சும்மிடம் நிறைய வசதி இருக்கே கொடி பிடிக்கும் உங்களால் கொமிசன் பிடித்துக் கொண்டும் உதவலாமே.../எங்களுக்கு எல்லாமே தெரியும்....உதவுகிறோம்....அதற்கு இடைஞ்சல் உங்களைப் போன்ற கொடி பிடிப்பாளர்களே..

அப்படியல்ல அல்வாயான், 

நான் சொல்வது மக்களின் எதிர்காலம் தொடர்பானது.  கடந்த 10 வருடங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வரும் என நம்பி (? ) காலம் கடத்திவிட்டோம்.  ஒன்றுமே நடக்கவில்லை.

இனி எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டு மக்களின் அட்டிப்படை வசதிகளையாவது பார்ப்போம் என்கிறேன்.  ஏனென்றால் இனி ஒன்றயுமே எதிர்பார்க்க முடியாது அல்லவா.  இல்லாவிட்டால் இன்னும் 10 வருடங்கள்  கழிந்தால்,  ஏற்கனவே அழிந்துபோயுள்ள மக்களின் நிலை எப்படி இருக்கும் என  சற்று எண்ணிப்பாருங்கள்.  

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எண்ணும் செயல்முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் (சி.எம்.இ.வி,) மஞ்சுலா கஜநாயக்க வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஐ.டி.ஏ.கே வேட்பாளர்கள் மாவை சேனதிராஜா மற்றும் சசிகலா ரவீராஜ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை குறித்து கருத்து தெரிவித்தார். "மதியம் முதல் எங்கள் கண்காணிப்பாளர்கள் எண்ணும் மையத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் கூடிவருவதைக் குறிப்பிட்டனர். பின்னர் முன்னுரிமை வாக்கு எண்ணிக்கையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது, முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, ரவீராஜ் வெற்றி பெறவில்லை. இருப்பினும், ரவீராஜ் தான் இரண்டாவது இடத்தில் வந்துவிட்டதாக நினைத்தார், அதுவும் அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்தது. ரவீராஜின் மகள் மற்றும் பிற ஆதரவாளர்களின் சமூக ஊடக இடுகைகள் ஏதோ சட்டவிரோதமாக நடக்கிறது என்று கூறியது மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோபமடைந்தனர்.” “அந்த நேரத்தில் சுமந்திரன் தனது பாதுகாப்போடு வந்த போது, ரவீராஜின் ஆதரவாளர்கள் அவர் முன்னிலையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர் மற்றும் பல்வேறு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மோதினர் என்று கஜநாயக்க தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் எஸ்.டி.எஃப் அதிகாரிகள் நிராயுதபாணியாக வந்திருந்தனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களை தங்கள் வாகனங்களுக்குள் விட்டுவிட்டார்கள், ஏனெனில் அவர்கள் விஷயங்களை மோசமாக்க விரும்பவில்லை, நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது.” "இறுதியாக, பொலிஸ் மற்றும் எஸ்.டி.எஃப் அதிகாரிகள் மோதல் போட்டியாளர்களை கலைக்க சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, மேலும் சிலர் காயமடைந்தனர். சேனதிராஜா மற்றும் ரவீராஜ் இருவரின் மகன்களும் காயமடைந்தவர்களில் அடங்குவர். ” வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே எண்ணும் செயல்முறை குறித்த புரிதல் இல்லாததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கஜநாயக்க கூறினார். அவர்களின் அறியாமை மற்றும் சமூக ஊடகங்கள் ஒரு ஆபத்தான கலவையாகும் என்று CMEV தேசிய ஒருங்கிணைப்பாளர் கூறினார். “எண்ணும் செயல்முறை முழுவதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணும் மையத்தில் எங்கள் கண்காணிப்பாளர்கள் ஆவணங்களைச் சரிபார்த்தனர் மற்றும் விஷயங்கள் ஒழுங்காக இருப்பதாகத் தோன்றியது. எண்ணும் செயல்முறையின் இறுதி வரை, ஒரு நபருக்கு பாராளுமன்றம் செல்ல போதுமான முன்னுரிமை வாக்குகள் கிடைத்துள்ளன என்று சொல்வது மிகவும் கடினம். ஐ.டி.ஏ.கே பல கட்சிகளின் கூட்டணி மற்றும் நிறைய உள் பிரச்சினைகள் உள்ளன, இது சம்பவத்திற்கும் பங்களித்தது. ” By Rathindra Kuruwita (The Island) https://island.lk/bloody-rumpus-at-jaffna-central-college-blamed-by-cmev-on-lack-of-understanding-of-counting-process/  
  • ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ கோமள வள்ளி வள்ளி கண்களால் கொல்லும் வில்லி திரும்பினால் நிக்க சொல்லி வச்சு விடவா மல்லி காத்தவ ராயா ராயா மல்லிப்பூ வேணாம் போயா மாலைய வாங்கித்தாயா என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ ஓ நிலா நிலா பறந்து வாயேன் உலகினை மறந்து வாயேன் அழகினால் நெருங்கி வாயேன் அலை அலையாய் தொடாமலே அணைக்குறாயே தடால் என இழுக்கிறானே விடாமலே துரத்துறானே அடாவடியா நான் ஒரு தல ராவணன் புள்ள உனை மணந்திட உடைக்கவா வில்ல குருங்கடல் போல கொதிக்குது ஆசை குளிக்கலாம் வா மெல்ல என் இடுப்புல குலுங்குது சாவி அத வெடக்குன்னு எடுக்கிற பாவி கைகளை தொட்டு கசமுசா செஞ்சா கத்திடுவேன் கூவி ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ இளமையை வருடுவானே இதயத்தை திருடுறானே உயிரினை நெருடுறானே சுகம் சுகமா ஓ தளிர் என இருக்குறாளே பளீர் என சிரிக்குறாளே சுளீர் என முறைக்குறாளே அழகழகா.. உன் மரக்கட வண்டி மீது நான் மெனக்கெட்டு ஏறும் போது கட கட என்று தட தட என்று இழுத்தவன் நீதானே நான் சடுகுடு ஆடும் போது நீ தொடுகிற எல்லைக் கோடு விடு விடு என்று பட பட என்று பறந்தவள் நீ தானே ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ        
  • பட்டறிந்த அனந்தி எச்சரிக்கை மணி அடித்தாவே, யார் கண்டு கொண்டார்கள்?
  • கனடாபணம் ஒருபுறம், அரசாங்கப்பணம் மறுபுறம், கொள்ளை அடித்த பணம் இன்னொருபுறம் வேலை செய்ய, வறுமையில், கொரோனாவால் இழப்புகள் மத்தியில் இருந்த மக்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையே உயர்த்தியது. 
  • உலகெங்கும் நடந்துவரும் இனப்படுகொலைகளில் மறைகரங்களாக  இருப்பது மேலாதிக்க நாடுகளே. பிரச்சினைகளைத் தமக்குச் சாதகமான நிலைவரை இழுத்துச் சென்று  தமது இலக்கை அடைவதே குறிக்கோள் . இதற்க்குச் சிறந்த எடுத்தக்காட்டாக முன்னாள் யூகோசிலாவியாவும் அதன் உடைவுமாகும். அதற்காக இலங்கைச் சிங்களம் ஒன்றும் தெரியாமல்  மற்றவர் சொல்கேட்டுச் செய்யவில்லை. தமது நிகழ்ச்சி நிரலான தனிச்சிங்கள தேசமாக்குதல்  என்ற இலக்கை அந்தந்தக் கால உலக ஓட்டம் மற்றும் நியாயங்களுக்கப்பால் எரியும் வீட்டிலே புடுங்குவதுபோல் நகர்ந்து தனது நலனை அடைந்துவருகிறது.