Jump to content

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய தேர்வு: கனடா ஆளுங்கட்சி எம்.பி. ஏமாற்றம்

Recommended Posts

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவுகள் பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பாகும். சிறுபான்மை தமிழ் மக்களிடம் இந்த அரசு மோசமாக தோல்யடைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கவும், அவர்களை அரசியலுக்குள் சம குடிமக்களாக இணைக்கவும் இந்த தேர்தல் முடிவு எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அவர்களின் விவகாரங்களில் சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் அவசியத்தை தீவிரமாக வலியுறுத்துகின்றன.

கோட்டாபய பதவியேற்பு. Image captionகோட்டாபய பதவியேற்பு.

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையே அவர்களைப் பாதுகாக்கும். அத்துடன், அவர்களின் நிலம், மொழி, கலாசாரத்தையும் பாதுகாக்க சுயநிர்ணய உரிமை அவசியம் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது எனவும் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவது தீவில் குற்றமிழைத்தோருக்கு தண்டனையில் இருந்து விதிவிலக்களிக்கும் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது.

தற்போதைய உலக ஒழுங்கால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விலக்கும் அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

இந்த தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றி பெற்றுள்ளபோதிலும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசு நிர்வாகத்தின் மாற்றத்தால் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க போராடியவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் துணையிருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

"கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள ஏனைய மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நானும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-50457605

My statement on the election of former wartime defence chief Gotabaya Rajapaksa as the President of #SriLanka -Logan Kanapathy

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

?type=3&theater

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கனடாவில் பேஸ்புக்  பச்சோந்திகள்...கோட்டா  நேர்மை,இனவாதம் அற்றவர் என்றூ ஒரே கொக்கரிப்பு...சிலது கோவணத்தையும் கழட்டிபோட்டு பொடியளை கோட்டாவோடை சேர்ந்து எலக்சன் கேட்கட்டாம்.....புளிச்சல் ஏவறைவிட ஊருக்குக்குப் போட்டுவந்து அவிழ்க்கிறவை....எல்லாம் நானே ... போதாக்குறைக்ககு பென்சன் குஞ்சுகளும் ...ஆமாப் போடுகினம்...

Link to comment
Share on other sites

22 hours ago, alvayan said:

உங்களிடம் ஒரு கேள்வி. 

யுத்தம் முடிந்து ரத்தம் காய்வதற்க்குள் யுத்தத்தை வழி நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி நமதாட்கள் கேட்டவைள்.  நாங்களும் அதன்படி நடந்தோம்.  இப்ப மட்டும் இவனோட சேர்ந்து வேலைசெய்வதில் ஏன் பிழை கண்டுபிடிகிரியள் ???  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

உங்களிடம் ஒரு கேள்வி. 

யுத்தம் முடிந்து ரத்தம் காய்வதற்க்குள் யுத்தத்தை வழி நடாத்திய சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி நமதாட்கள் கேட்டவைள்.  நாங்களும் அதன்படி நடந்தோம்.  இப்ப மட்டும் இவனோட சேர்ந்து வேலைசெய்வதில் ஏன் பிழை கண்டுபிடிகிரியள் ???  

அய்யா மகாராசா...கோமகராசா...உங்கள் ஒப்புவமையை இனத்தின் அழிவுடன் திரும்பிப் பார்க்கலாமே..

Link to comment
Share on other sites

18 hours ago, alvayan said:

அய்யா மகாராசா...கோமகராசா...உங்கள் ஒப்புவமையை இனத்தின் அழிவுடன் திரும்பிப் பார்க்கலாமே..

""எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழை ""

இதுவா உங்களின் விருப்பம்  ??  

தென் தமிழீழ எல்லைப்புற கிராமங்களின் நிலை தெரியுமா உங்களுக்கு? 

வன்னியின் பெற்றோரற்ற குழந்தைகளின் நிலை தெரியுமா உங்களுக்கு ? 

உழைப்பாளிகழில்லாத குடும்பங்களின் நிலைதான் உங்களுக்கு தெரியுமா?  

காடுகளின் நடுவே ரெண்டு தகரமும் கிழிஞ்ச பொலித்தீன்,  தறப்பாழ் கூரையின் கீழ் வாழும் மக்களின் நிலை தேடியுமா உங்களுக்கு ? 

சும்மா விதண்டாவாதம் கதைக்காதீர்கள்.  முதலில் தமிழ் மக்களின் அன்றாட,  அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு ஒரு வழி காட்டுங்கள்.  மக்கள் பொருளாதார ரிதியிலும், சமூக,  உள ரீதியில் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே எங்கள் எல்லோரது விருப்பமும் சாத்தியமாகும்.  

இவற்றிட்கு ஒரு வழியை காட்டிவிட்டு அடுத்த அடியை எல்லோரும் சேர்ந்தே அடுத்து வைப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maharajah said:

அப்ப கோத்தா வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுமோ...அல்லது ஆதரவாளர் சிலருக்கு நன்மை கிடைக்குமோ....சம்  சும்மிடம் நிறைய வசதி இருக்கே கொடி பிடிக்கும் உங்களால் கொமிசன் பிடித்துக் கொண்டும் உதவலாமே.../எங்களுக்கு எல்லாமே தெரியும்....உதவுகிறோம்....அதற்கு இடைஞ்சல் உங்களைப் போன்ற கொடி பிடிப்பாளர்களே..

Link to comment
Share on other sites

6 hours ago, alvayan said:

அப்படியல்ல அல்வாயான், 

நான் சொல்வது மக்களின் எதிர்காலம் தொடர்பானது.  கடந்த 10 வருடங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வரும் என நம்பி (? ) காலம் கடத்திவிட்டோம்.  ஒன்றுமே நடக்கவில்லை.

இனி எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டு மக்களின் அட்டிப்படை வசதிகளையாவது பார்ப்போம் என்கிறேன்.  ஏனென்றால் இனி ஒன்றயுமே எதிர்பார்க்க முடியாது அல்லவா.  இல்லாவிட்டால் இன்னும் 10 வருடங்கள்  கழிந்தால்,  ஏற்கனவே அழிந்துபோயுள்ள மக்களின் நிலை எப்படி இருக்கும் என  சற்று எண்ணிப்பாருங்கள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.