விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள நீரேற்றும் மோட்டாரை இயக்குவதற்கு ஊராட்சி செயலரே வடிவமைத்திருக்கும் “சைக்கிள் படகு” பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாலப்பட்டு கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பக்கத்திலுள்ள பெரிய ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
ஏரியில் தண்ணீர் இல்லாத காலத்தில், அதன் நடுவே அமைந்திருக்கும் மோட்டார் அறைக்குச் சென்று மோட்டாரை இயக்கி வந்தனர். அண்மையில் பெய்த மழை காரணமாக ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பியதால், மோட்டாரை இயக்குவது சவாலாக மாறியது. இதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி செயலாளர் பாலமுருகன் பிவிசி குழாய்களாலான மிதிவண்டிபோல் இயக்கும் படகு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
முன்னும் பின்னும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள் படகில் 2 பேர் வரை பயணிக்கலாம்....
160 கிலோ வரை எடை தாங்கும் சக்தியுடன் இதனை வடிவமைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், மோட்டாரில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் அதனை கரைக்கு கொண்டுவரவும் உபயோகமாக இருக்கும் என்றார்.
இளங்கலை வரலாறு முடித்திருக்கும் பாலமுருகன் இதுபோன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. நீச்சல் தெரியாமல் தண்ணீரில் யாரேனும் சிக்கிக் கொண்டால் கூட அவரது இந்த எளிமையான கண்டுபிடிப்பு மூலம் மீட்க முடியும் என அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.
https://www.polimernews.com/dnews/92086/ஏரியை-கடக்க-எளிதான-வாகனம்..“தண்ணீரில்-ஓடும்-சைக்கிள்படகு”
அலன் தம்பதிகள் கடத்தலில் ஆரம்பமாகி.. மானிப்பாய் கோவில் கொள்ளை.. ஈறாக.. இவர் செய்து வரும் ஊழல் பஞ்சமகா பாதகங்கள் குறித்து முதலில் விசாரிக்கனும்.. எப்படி வசதி தாடிக்கார குத்தி அங்கிள்.
ரணில் இந்தப் பாதையில் தான் போவார் என்று எப்பவோ நாங்கள் இங்கு யாழில் எழுதிட்டம்.
எங்களின் வயதை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு அரசியல் அனுபவம் உள்ள சம் மாவை கும்பல்.. தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இந்த நேபாளா காரர்களுக்கும் வடகிழக்கு தமிழருக்கும் மட்டுமே டெங்கு வருது சிங்களவருக்கு முஸ்லீம்மக்களுக்கு {பண்டி தொழுவத்தை விட மட்டமான ஏரியாவில் இருப்பவர்கள் }அவர்களுக்கு எல்லாம் வருவதில்லையா ?