• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

பொதுஜன பெரமுன இனவாதக் கட்சியல்ல

Recommended Posts

வ.சக்தி

பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கட்சியாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ  வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (18)  காலை களுதாவளை யில் அமைந்துள்ள அவரைது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.....

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கட்சிகளின் இனவாதத்தினால் தான், எமது கட்சிக்கு இம்மாவட்ட த்தில் எதிர்பார்த்த அளவு வாக்குகள் கிடைத்திருக்க வில்லை.    இருந்த போதிலும் கோட்டாபய அமோக வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அபிவிருத்திகளும் நடைபெறும்.  

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்  ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு  வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் பொதுஜன பெரமுன  கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பொதுஜன-பெரமுன-இனவாதக்-கட்சியல்ல/73-241161

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ampanai said:

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அபிவிருத்திகளும் நடைபெறும்.  

பொறுத்திருந்து பாப்போம் காலம் பதில் சொல்லும். 

அண்ணனும் ஒரு காலத்தில்  சொன்னவர், நான் தேர்தலில்  வென்றால் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என்று கூறி வென்றார்.  பின் என்ன செய்தார்? கேட்ட குரல்வளையை நசுக்கி குரல் வெளியே வராமல்ப் பண்ணி விட்டு, பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்று வீரம் பேசிப் பேசியே வாக்கு கேக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ampanai said:

பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கட்சியாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அது அனைவரையும் கொலைசெய்யக் கூடிய  ஒரு பயங்கரவாதக் கும்பல்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!! இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை  சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன்  கிடைக்கும். நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய  நச்சு நீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது, நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை விரைவில்  விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்.   வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து  வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன்; வெண்ணெய் கலந்து  சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும். நீர் முள்ளி உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். நீர்க் கோர்வை,  மகோதரம், நீரடைப்பு குணமாகும். https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/neermulli-seeds-amazing-medicinal-herbs-for-health-119121200069_1.html
    • கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலை நிலப்பரப்பு அதிகமாவதைக் காட்டியுள்ளது. https://www.polimernews.com/dnews/92739/கடல்களற்ற-பூமி-படத்தைதயாரித்த-நாசா-விஞ்ஞானிகள்
    • ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த  இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71023  
    • சரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்