ampanai

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்

Recommended Posts

இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார்.

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ, இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் அரசியல் குறித்து, எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், கலாநிதி பாஸில் உடன் பிபிசி தமிழ் பேசிய போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

"தேர்தலுக்குப் பின்னரான தற்போதைய சூழ்நிலையை மிகக் கவனமாகப் புரிந்து கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போவது பற்றி யோசிக்க வேண்டும்" எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் பாஸில் உடன் பேசியபோது, அவர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

"இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரை, அவர்களின் அரசியல் போக்கு, மிக முக்கியமான மாற்றம் மற்றும் சிக்கல்களுக்குள் அகப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

 

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறான எதிர்ப்பு அரசியல் நிலைமைகளை - சிங்கள பெரும்பான்மை சமூகத்திலிருந்து எதிர் நோக்கினார்களோ, அதனை ஒத்த மாதிரியான நிகழ்வுகள், யுத்தத்துக்குப் பின்னரும் இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக எழுச்சியடைய முற்பட்ட தமிழ் சமூகமானது, பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் ரீதியான செயற்பாட்டின் ஊடாக, சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலை தென்பட்டிருக்கிற வேளையிலே, முஸ்லிம் சமூகம் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு எழுச்சியடைந்து வருகிறது. ஆனால், தற்போது அந்த சமூகமும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீளவும் ஒரு சவாலுக்கு உட்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரைக்கும், யுத்தத்திற்கு பின்னர் அவர்களுடைய அரசியல், சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் குறித்து எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார இருப்புக்கள் அழிவுக்குட்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகள் தோன்றியிருக்கின்றன.

அதேவேளையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலானது, முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் இருப்பின் மீதும், அவர்களின் சுதந்திரமாக வாழ்வுரிமை மற்றும் மனித உரிமைகள் மீதும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில்தான், இலங்கையினுடைய ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளதோடு, அதில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

 

சிங்கள சமூகத்தின் ஒன்றிணைவு

பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 52.25 வீத வாக்குகளை பெற்றிருக்கிறார். மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 41.99 வீத வாக்குகளை மட்டும் பெற்றிருக்கின்றார். இந்த நிலைவரமானது இந்த நாட்டினுடைய சிறுபான்மையினர் பற்றிய மிக முக்கியமான செய்தியை சொல்ல வருகிறது.

இலங்கையில், முஸ்லிம்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் மிக முக்கிய அம்சமாக, சிங்கள தேசிய வாதத்தின் மீள் எழுச்சி இடம்பெற்றிருக்கிறது.

சிங்கள மக்களோடு வாழ்கிற முஸ்லிம்கள் சார்பாக விடப்பட்ட தவறுகள் இதற்குப் பங்களித்திருக்கலாமென்றும் பார்க்கப்படுகிறது.

தற்போது 52 வீதத்தையும் தாண்டிய வெற்றியினை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றிருக்கும் நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்த தேர்தலில் வழிநடத்தப்பட்டமை குறித்தும் நாங்கள் மிக கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிங்கள பெரும்பான்மை மக்கள், பல விடயங்களுடாக ஒன்றிணைக்கப்பட்டார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துப் பிரச்சாரங்களின் ஊடாகவும், எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஊடாகவும், அந்த ஒழுங்கமைப்புகள் இடம்பெற்றன.

மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் பாதுகாப்புப் பற்றிய ஒரு அச்சம் ஏற்பட்டதோடு, பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் தேவையும் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு தேசிய சூழல், சர்வதேசத்தின் தலையீடு போன்றன பின்னணியில் இருந்திருக்கலாம் என்கிற பார்வையும் உள்ளது. இதன் அடிப்படையில் சிங்களச் சமூகம் ஒன்றிணைந்திருக்கின்ற வேளையிலே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிகக் கவனமாகச் சிந்தித்து, தமது சமூகத்தை வழி நடத்தியிருக்க வேண்டும் என்கிற கருத்து உள்ளது.

 

கவனிக்கத் தவறிய விடயங்கள்

அந்த வகையில் பார்க்கின்ற போது, சிங்கள மக்களின் ஒன்று திரண்ட செயற்பாட்டினை, முஸ்லிம் தலைவர்கள் அனுமானித்துக் கொள்ளவில்லையா, அல்லது விளங்கிக் கொள்ளவில்லையோ என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம்களை வழிநடத்தி வரும் - முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.

 

பலமிழந்த சிறுபான்மையினர்

1990களிலே அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸவுடன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இணைந்திருந்த காலம் மற்றும் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் அஷ்ரப் இணைந்திருந்த காலங்களில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையின மக்கள் இருந்து வந்துள்ளார்கள். 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இதனை மிகத் தெளிவாகக் கண்டோம்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ள இந்தத் தேர்தல் முடிவானது, சிறுபான்மையினரின் ஆதரவில்லாமலேயே, ஜனாதிபதியொருவரை பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவு செய்வதற்கானதொரு நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருந்தாலும் கூட, வடக்கு, கிழக்கிலே தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், பெரும்பாலும் தமது வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கினர். இதன் காரணத்தினால், முஸ்லிம்களுடைய பங்குபற்றுதல் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவரை சிங்கள சமூகம் தெரிவு செய்திருக்கிறது.

இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமை சிறுபான்மையினருக்கு சாதமானது என்று சொல்லப்பட்ட போதிலும், அது இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் முக்கியத்துவம் இழக்கப்பட்டிருக்கிற தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலிலே முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியும் கேள்விக்குரியதாக மாறியுள்ளதோடு, அது தேவையில்லை என்கிற சூழ்நிலையினையும் இந்தத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.

 

செய்ய வேண்டிவை என்ன?

எனவே, முஸ்லிம் தலைமைகள் மீண்டும் மிகக் கவனமாகச் சிந்தித்து, தங்கள் அரசியல் செயல்முறைமையினை கொண்டு நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இங்கு இரண்டு வகையான செய்திகளை என்னால் சொல்ல முடியும். ஒன்று முஸ்லிம் சமூகத்துக்கானது. மற்றையது முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைகளுக்கானது.

முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடன் கவனமாகச் சிந்தித்து பெரும்பான்மைச் சமூகத்தோடு இந்த நாட்டிலே ஒன்றித்துச் செயற்பட வேண்டும் என்கிறதொரு செய்தி சிங்களப் பெரும்பான்மையினரால் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்குரிய வழிமுறைகளை முஸ்லிம்கள் தேட வேண்டும்.

இந்த நாட்டின் இனத்துவ வீதாசாரப் புள்ளி விவரத்தின் படி, 74 வீதத்தினர் சிங்களவர்களாக இருக்கின்றனர். அதன் காரணத்தினால் சிறுபான்மையினர் அரசியலில் பெரும் செல்வாக்கினை தொடர்ந்தும் செலுத்த முடியாத நிலைமை இருப்பதனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைககள் அதிகரித்துக் காணப்படுவதனாலும், முஸ்லிம்கள் ஒத்தியங்கிப் போய் தங்களின் வாழ்க்கையினையும் தம்முடைய எதிர்கால சமூகத்தின் வாழ்க்கையினையும் நிலைப்படுத்துவதற்கான தேவையினைத் தேட வேண்டியுள்ளது.

அடுத்து நான் கூறும் செய்தி, இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கிணங்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, மிக முக்கியமான ஒரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தை எப்படி வழிநடத்துவது என்பதாகும். பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய அரசியல் நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் முஸ்லிம் தலைமைகள் எடுப்பதன் ஊடாகத்தான், முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை கவனமாகப் பரிசீலித்து, அதன் அடிப்படையிலான ஒரு ஆட்சியினைச் செய்யவுள்ளதாக தற்போது மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதனூடாக நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், நாடாளுமன்றத்தில் மூன்றிரலின்டு பெரும்பான்மை ஆதரவினை அவர்கள் திரட்டிக் கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் ஊடாகத்தான் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றினார். அதன்போது முஸ்லிம்களின் உதவியும் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

எனவே, தற்போதைய சூழலை மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போகக் கூடிய நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டும்.

மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தேசியவாதச் செயன்முறைகளும், பௌத்தத்தை மீள் புனர் நிர்மாணம் செய்வதற்கான மீள் எழுச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் - பௌத்தத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டு சின்னாபின்னப்பட்டு வருகின்றனர்.

இலங்கையிலும் அதே சூழ்நிலை உருவாகியிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலே, முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் மிக நிதானமாகச் செயற்பட்டு, தேசிய அரசியலில் பெரும்பான்மையினத்தவரோடு ஒத்துப் போகக் கூடியவாறான செயற்பாடுகளில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50461611

Share this post


Link to post
Share on other sites

இனி எப்பிடியும் அமைச்சு பதவியை கைப்பற்ற முயலுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, ampanai said:

முஸ்லிம்களின் முக்கியத்துவம் இழக்கப்பட்டிருக்கிற தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலிலே முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியும் கேள்விக்குரியதாக மாறியுள்ளதோடு, அது தேவையில்லை என்கிற சூழ்நிலையினையும் இந்தத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.

 

33 minutes ago, ampanai said:

இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம்களை வழிநடத்தி வரும் - முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும்,  தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites
Quote

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்

வழமை போல மாத்தி போட வேண்டியதுதான்...🤣

Share this post


Link to post
Share on other sites

 

75439412_817687238685857_712742897565931

Share this post


Link to post
Share on other sites
On 11/18/2019 at 11:27 PM, குமாரசாமி said:

வழமை போல மாத்தி போட வேண்டியதுதான்...🤣

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஆனால் அப்படி செய்தால் மொட்டு கட்சிக்கு  பொது தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் 😜😜😜😜

Edited by Dash

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கிறிஸ்தவ தேசம் அவசரப்படுவது ஏன் ?.எமது நாட்டில் ஜனநாயக அரசு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், சிவஞான அறிவு கொண்ட தமிழ் மக்கள் ,சைவநெறி அமைப்புகள், பெளத்த பீடங்கள் என்பன சுயமாக இயங்கி கொண்டிருக்கின்றன. இவைகள் இவ்வாறு இருக்கும் போது, ஏன் கிறிஸ்தவ மத போதகர்கள் அந்தரப்படுகிறார்கள் என்ற கேள்வி அனைத்து மக்கள் மத்தியில் எழுவது இயல்பானது.இவர்கள் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களால் இறக்கி விடப்பட்டுள்ள ஒரு வகை மென்வலு படையினர் என்பதை சாதாரண மக்கள் அறிய வாய்ப்பே இல்லை. இலங்கைக்குள் படையெடுத்து வந்த கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவம் அழிந்து வருவதால் மத போதகர்களும் அருகி வருகிறார்கள். ஆனால் இலங்கையில் இவர்கள் பெருகி வருவது தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வகை அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.கிறிஸ்தவ மத போதகர்களும் பாதிரிமார்களும் இலங்கையின் வரலாற்றைப் புரட்டி போட்டு பெரும் அவல நிலையை ஏற்படுத்துவதில் பெரும் பங்கை வகித்தார்கள். இவர்களால் இயக்கப்பட்ட கல்லூரிகளில் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களே இலங்கை வரலாற்றில் என்றும் இருந்திராத இன முரண்பாட்டைத் தோற்றுவித்தவர்கள். இலங்கையில் அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கும் அச்ச உணர்வின் பிரதான சூத்திரதாரிகள் இவர்களே.எந்த சக்திகள் அதிகாரத்தில் வந்தாலும், இலங்கை வரலாற்றில் முற்றிலும் அன்னியமான கிறிஸ்தவ போதகர்கள் அவர்களுடன் ஒட்டிக் கொள்வாரகள். உதாரணமாக அரசியல், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவைகளாகும். இதன் நோக்கம் சிக்கலான முரண்பாடுகளை பல கோணங்களில் ஏற்படுத்துவதாகும்.வெளிநாடுகளில் இருந்து இயக்கும் வற்றிக்கான் சேர்ச்சுகள் போன்ற நிறுவனங்களின் கிளை அமைப்புகளே மன்னார் விசப் கவுஸ் உட்பட அனைத்து கிறிஸ்தவ மன்றங்களும் ஆகும். உலகையே ஆட்டுவிக்கும் வர்த்தக நிறுவனங்கள், சர்வதேச உளவு அமைப்புக்கள், அறாவட்டிக்கு கடன் வழங்கும் வங்கிகள், உலக யுத்தங்களை தலைமை தாங்கும் நிறுவனங்கள் அனைத்தும் இவர்களுடன் தொடர்புடையவைகளாகும். இதன் ஒரு அங்கமே வெளி நாடுகளிலிருந்து பல அன்னிய பிரதிநிதிகள் இவர்களை சந்தித்து செல்வதாகும்.மன்னார் பகுதியில் வதியும் கிறிஸ்தவர்கள் வாள் முனையில் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளானவர்கள். இவர்களை வைத்தே உலகின் அச்சானியான திருக்கேதீச்சர வளைவை மூசி மூசி உடைத்தெறிந்தார்கள் மன்னார் மாவட்ட பாதிரிகள். இதற்கு நாம் முதலில் முடிவு கட்டாவிட்டால் பாதிக்கப்படுவோர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய சந்ததியினரும் இலங்கையின் பூர்வீக மதத்தவர்களான இந்துக்களுமே.தமிழர்கள் மேல் பிடித்துள்ள அன்னிய மத தொற்று வியாதியான கிறிஸ்தவத்தை முதலில் ஒதுக்கி அழிக்க வேண்டும். இதன் மூலமே பஞ்சம், பசி, பட்டிணி, நோய், பயங்கரவாதம் போன்றன விலகி அமைதியும் சாந்தமும் கொண்ட நிறைவான வாழ்வு கிடைக்கப்பெறும்.“வான்முகில் வழாது பெய்க, மலிவளம் சுரக்க மன்னன், கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மைகொள் சைவ நீதி, விளங்குக உலக மெல்லாம். “ என்ற முருகப் பெருமானின் புராணத்தை தாங்கி அரசாளப் போகும் இந்துக் கட்சி வேட்பாளர்களுக்கு அன்னிய மதப் பிடியிலிருந்து விடுபட்டு இலங்கை முழுவதும் வாழும் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் பாதுகாப்பையும் சுபீட்சமான எதிர்காலத்தையும் கட்டி அமைத்துக் கொள்ள முடியும். பல படங்கள் இனைப்பு---https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_30.html  
  • கொரோனா வைரஸ்: எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்? சைமன் மெயர் பிபிசிக்காக  Getty Images (கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் இரண்டாவது மற்றும் கடைசிபகுதி இது.) நாம் எதிர்காலத்துக்குச் சென்று பார்ப்பதற்கு உதவும் வகையில் எதிர்காலவியல் ஆய்வுத் துறையில் உள்ள ஒரு பழைய உத்தியை நான் இங்குப் பயன்படுத்தப் போகிறேன். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நினைக்கிற இரண்டு காரணிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காரணிகள் வெவ்வேறு விதமாகக் கூட்டுச் சேர்ந்து ஊடாடினால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.  நான் எடுத்துக்கொள்ள விரும்பும் இரண்டு காரணிகள் விழுமியங்கள் மற்றும் மையப்படுத்தல். விழுமியம் என்பது நம் பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கைகளாக எவை இருந்தாலும் அவற்றைக் குறிப்பதாகும். பரிமாற்றத்தையும், பணத்தையும் மேம்படுத்திக்கொள்ள நமது வளங்களைப் பயன்படுத்துகிறோமா? அல்லது வாழ்வை மேம்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துகிறோமா? மையப்படுத்தல் என்பது, விஷயங்கள் எப்படி ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பது. ஏராளமான சிறு அலகுகளாக அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா? அல்லது அதிகாரம் செலுத்தும் ஒரே பெரிய ஆற்றலால் அவை ஒழுங்கமைக்கப்படுகின்றனவா என்பது தொடர்பானது அது. Getty Images இந்தக் காரணிகளை நாம் ஒரு தொகுப்பாக்கிக்கொள்வோம். பிறகு கற்பனையான சூழ்நிலைகளில் அவற்றைப் பொருத்திப் பார்ப்போம்.  கொரோனா வைரஸ் சிக்கலுக்கு, கீழ்க்கண்ட நான்கு தீவிர பாணிகளில் காரணிகளை ஒன்று சேர்த்து எதிர்வினையாற்றிப் பார்ப்போம்.  அரசு முதலாளித்துவம்: பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை. காட்டுமிராண்டி நிலை : பரிமாற்ற மதிப்புக்கு முக்கியத்துவம் தரும், பரவலாக்கப்பட்ட எதிர்வினை.  அரசு சோஷியலிசம்: உயிரை, வாழ்வைப் பாதுகாக்க முக்கியத்துவம் தரும், மையப்படுத்தப்பட்ட எதிர்வினை. பரஸ்பர உதவி: உயிரை வாழ்வைப் பாதுகாக்கும் பரவலாக்கப்பட்ட எதிர்வினை. அரசு முதலாளித்துவம் கோவிட்-19 நோய்த்தொற்று பிரச்சனைக்கு அரசு முதலாளித்துவம் என்று மேலே கூறியிருக்கும் முறையில்தான் பெரும்பாலும், உலகம் முழுவதும் எதிர்வினையாற்றுகிறார்கள். வகைமாதிரியான எடுத்துக்காட்டுகள்: பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க்.  அரசு முதலாளித்துவ சமூகங்கள், பொருளாதாரத்தின் வழிகாட்டும் ஒளியாக பரிமாற்ற மதிப்பு என்பதையே கொண்டிருக்கின்றன. ஆனால் சிக்கல் ஏற்படும்போது சந்தைக்கு அரசு உதவி தேவைப்படும் என்பதை இவை ஏற்றுக்கொள்கின்றன. உடல் நலமின்றியோ, உயிர் பயத்திலோ இருப்பதால் தொழிலாளர்கள் பலரும் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதால், அரசு தலையிட்டு விரிவான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி தருவதன் மூலமாகவோ, கடன் தருவதன் மூலமாகவோ கீன்சிய கருத்தியல் வழியிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் இவை செயல்படுத்துகின்றன. இத்தகைய உதவிகளைக் குறுகிய காலத்துக்கே செய்யவேண்டியிருக்கும் என்பது இங்குள்ள எதிர்பார்ப்பு. வணிகம் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யும் வகையில், எத்தனை நிறுவனங்களைச் செயல்பட அனுமதிக்க முடியுமோ அத்தனை நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பது இந்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சம். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் இன்னமும் உணவு வகைகளை இன்னமும் சந்தையே விநியோகம் செய்கிறது. இதற்காக போட்டி ஒழுங்குமுறை சட்டங்களை அரசு தளர்த்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்கப்படுகின்றன.  வழக்கமான தொழிலாளர் சந்தை செயல்பாட்டை சீர்குலைக்காத வகையில் இது செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டனில் உள்ள எடுத்துக்காட்டைக் கொண்டுபார்த்தால் தொழிலாளர்களுக்கான உதவித் தொகை முதலாளிகள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தொழிலாளி சமூகத்துக்கு எவ்வளவு பயனுள்ள பொருள்களை உற்பத்தி செய்கிறார் என்பதன் அடிப்படையில் பார்க்காமல், அவர் உற்பத்தி செய்கிறவற்றின் பரிமாற்று மதிப்பின் அடிப்படையிலேயே இந்த உதவித்தொகையின் அளவு தீர்மானிக்கப்படுகிறது.  Getty Images இது ஒரு வெற்றிகரமான வழிமுறையாக இருக்குமா? கோவிட்-19 நோய் குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்குமானால், இது வெற்றிகரமான வழிமுறையாக இருக்கக்கூடும். சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் முழு முடக்க நிலை தவிர்க்கப்பட்டுள்ளதால் தொற்று பரவுவது தொடரும் என்றே தெரிகிறது.  எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், அவசியமில்லாத கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இதன் மூலம் கட்டுமானத் தலங்களில் மக்கள் ஒன்று கலப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. சாவு எண்ணிக்கை உயருமானால், அரசுத் தலையீட்டை குறைந்தபட்சமாக வைத்திருப்பது கடினமாக இருக்கும். நோய்த் தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தால் மக்களிடம் ஆவேசம் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆழமடையும்.  இதனால் சந்தை தொடர்ந்து செயல்படுவதைப் பராமரிக்கும் வகையில் மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு உருவாகும். காட்டுமிராண்டி நிலை Getty Images இந்தப் பிரச்சனை தொடருமானால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குக் கொண்டு செல்லும் என்று ஆராய்வதற்காக நாம் கற்பனை செய்த நான்கு நிலைகளிலேயே இதுதான் மோசமான நிலையாக இருக்கும். பரிமாற்ற மதிப்பையே வழிகாட்டும் கொள்கையாக நாம் தொடர்ந்து வைத்திருந்தால், அதேநேரம் நோயாலும், வேலையின்மையாலும், சந்தைக்கு வெளியே விரட்டப்பட்டவர்களுக்கும் ஆதரவு காட்ட மறுத்தால் காட்டுமிராண்டி நிலை என்று நாம் குறிப்பிடும் நிலையே எதிர்காலம். நாம் இதுவரை பார்த்திராத ஒரு கற்பனையான நிலையை இது விவரிக்கிறது.  இந்த சூழ்நிலை வந்தால், அப்போது வணிக நிறுவனங்கள் தோல்வி அடையும். தொழிலாளர்கள் பட்டினி கிடப்பார்கள். ஏனெனில் அப்போது சந்தையின் கடும் எதார்த்த நிலையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க எந்தப் பொறியமைவும் அப்போது இருக்காது. மருத்துவமனைகளுக்கு அசாதாரண நடவடிக்கைகள் மூலம் ஆதரவு கிடைத்திருக்காது. அதனால் அங்கெல்லாம் பெரும் கூட்டம் இருக்கும். மக்கள் இறப்பார்கள். இந்தக் காட்டுமிராண்டி நிலை என்பது ஒரு ஸ்திரமற்ற நிலை. இந்த நிலை ஒரு முழுமையான பேரழிவிலோ அல்லது அரசியல், சமூக சேதங்களுக்குப் பிறகு இங்கு குறிப்பிட்டிருக்கிற பிற நிலைகளுக்கு மாறிச் சென்றோ முடிவடையும்.  இந்த நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? உலகளாவிய தொற்றின் ஒரு நிலையில் தவறுதலாக ஏற்படலாம், அல்லது தொற்று உச்சநிலைக்குச் சென்ற பிறகு வேண்டுமென்றே உருவாக்கப்படலாம் என்ற கவலை இருக்கிறது. தவறுதலாக என்பது, தொற்று மிக மோசமாக வளரும் சூழ்நிலையில் அரசாங்கம் போதிய அளவு தலையிடாவிட்டால் ஏற்படும்.  Getty Images இந்த நிலையில் வணிக நிறுவனங்களுக்கும், வீடுகளுக்கும் உதவிகள் வழங்கப்படலாம். ஆனால் மிகப் பரவலாக ஆகிவிட்ட தொற்று நோயின் காரணமாக ஏற்படும் சந்தை சரிவைத் தடுக்கும் அளவுக்கு இது போதுமானதாக இல்லாவிட்டால் பெரும் குழப்பம் சூழும். இந்நிலையில் மருத்துவமனைகளுக்குக் கூடுதல் நிதியும், ஆட்களும் அனுப்பப்படலாம். ஆனால் அவை போதுமானதாக இல்லாவிட்டால் சிகிச்சை தேவைப்படும் மக்கள் பெருமளவில் திருப்பி அனுப்பப்படலாம்.  அதைப் போலவே ஏற்பட வாய்ப்புள்ள மற்றொரு விளைவு என்னவென்றால், இந்த உலகளாவிய தொற்று நோய் அதன் உச்ச நிலையை அடைந்த பிறகு சகஜ நிலைக்குத் திரும்ப விரும்பும் அரசுகள் ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஜெர்மனியில் இந்த நிலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த நிலை ஒரு பேரழிவாக இருக்கும். இந்த சிக்கன நடவடிக்கைக் காலத்தில் இன்றியமையாத சேவைகளுக்கான நிதி குறைக்கப்படும், அல்லது ரத்து செய்யப்படும் என்பதால் இந்த உலகளாவியத் தொற்றுக்கு எதிர்வினையாற்றுவதற்கான நாடுகளின் வலிமையை இது பாதிக்கும் என்பது மட்டுமே காரணமல்ல.  பொருளாதார சமூகத் தோல்விகள் ஏற்பட்டு அதனால் சமூக, அரசியல் ஆவேசமும், பதற்றமும் ஏற்படும் என்பதாலும், இதன் விளைவாக, அரசு தோல்வியடைந்து, அரசும், சமூக நலத்திட்டங்களும் சிதைந்துபோகும்.  அரசு சோஷியலிசம்  பொருளாதாரத்தின் இதயத்தில் வேறு விதமான விழுமியங்களை நிறுவுகிற பண்பாட்டுப் பெயர்ச்சி ஏற்படுவதன் மூலம் ஏற்பட சாத்தியமுள்ள நிலையே அரசு சோஷியலிசம். பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த நிலையை எதிர்காலத்தில் வந்து அடைவது நாம் ஊகித்த நான்கு சாத்தியங்களில் ஒன்று.  மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்குதல், தொழிலாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவை இந்த அமைப்பில் சந்தையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாக அல்லாமல் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுவதுதான் முக்கிய வேறுபாடாக இருக்கும். இது போன்ற ஒரு நிலைமையில் பொருளாதாரத்தில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமாக இருக்கும் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத் தலையிடும்.  எடுத்துக்காட்டாக, உணவு, ஆற்றல், குடியிருப்பு போன்ற துறைகளை அரசு பாதுகாக்கும். இதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் சந்தையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பாதிக்கப்படாது. அரசு மருத்துவமனைகளைத் தேசிய மயமாக்கும், வீடுகள் குடியிருப்பதற்கு இலவசமாக கிடைக்கும். இறுதியாக அரசே எல்லாவற்றையும் வழங்கும். அடிப்படைப் பொருள்கள், குறைக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டு உற்பத்தி செய்ய சாத்தியமாக இருக்கும் நுகர்வுப் பண்டங்கள் உள்ளிட்ட பண்டங்களை அணுகுவதற்கு எல்லா மக்களுக்கும் வழிவாய்ப்புகள் இருக்கும்.  குடிமக்களுக்கும், அவர்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைப் பெறுவதற்கும் நடுவே, இடைத்தரகர்களாக வேலைதரும் முதலாளிகள் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் ஊதியம் நேரடியாக செலுத்தப்படும். அந்த ஊதியம் அவர்கள் உற்பத்தி செய்த பண்டங்களின் பரிமாற்று மதிப்பைக் கொண்டு கணக்கிடப்பட்டதாக இருக்காது.  Getty Images ஊதியம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்கும். நாம் உயிரோடு இருப்பதால் வாழ்வதற்குத் தேவையானதைப் பெறுவதற்கு நாம் தகுதியுடையவர்கள் என்ற அடிப்படையில் அது இருக்கும். அல்லது செலுத்துகிற உழைப்பின் பயன் அடிப்படையில் இருக்கும். சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள், டெலிவரி வாகனங்களின் டிரைவர்கள், கிடங்குப் பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் ஆகியோரே அந்தப் புதிய உலகின் முதன்மை செயல் அதிகாரிகளாக, அதாவது சிஇஓ-க்களாக, இருப்பார்கள்.  உலகளாவிய தொற்று நீடிப்பதால் ஏற்படும் தாக்கத்தின் காரணமாகவும், அரசு முதலாளித்துவத்தை உருவாக்கும் முயற்சியின் பின் விளைவாகவும் அரசு சோஷியலிசம் உருவாக வாய்ப்பிருக்கிறது. ஆழமான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, இன்று நாம் பார்க்கிற திட்டமான கீன்சிய பொருளியல் கொள்கைகளால்(பணம் அச்சடிப்பது, எளிதாக கடன் கொடுப்பது போன்றவை ) தேவைகளை மீட்டெடுக்க முடியாத அளவுக்கு அளிப்புச் சங்கிலி சீர்குலைந்து போகும் நிலையில், உற்பத்தியை அரசு கையில் எடுக்கும்.  இந்த அணுகுமுறையில் ஆபத்துகள் உண்டு. எதேச்சாதிகாரம் தோன்றாமல் நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் சிறப்பாக செயல்படுத்தினால், கோவிட்-19 தீவிரமாகப் பரவும் நிலையில் நமது மிகச் சிறந்த நம்பிக்கையாக இந்த அமைப்பு இருக்கலாம். சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தின் மையக் கருவான செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக வளங்களை ஒரு வலிமையான அரசு ஒழுங்கமைத்து ஒன்று திரட்டுவதாக இது அமைந்திருக்கும்.  பரஸ்பர உதவி கோவிட்-19 சிக்கலின் விளைவாக ஏற்படும் நெருக்கடியால், மாற்றங்களால் உருவாகும் என்று நாம் கணிக்கிற மற்றொரு நிலை- பரஸ்பர உதவி நிலை.  இந்த நிலையில், உயிரை, வாழ்வைப் பாதுகாப்பதே பொருளாதாரத்தின் வழிகாட்டும் கொள்கையாக இருக்கும். ஆனால் இந்த நிலையில், தீர்மானகரமான பாத்திரத்தை அரசு ஏற்காது. அதற்குப் பதிலாக, தனி நபர்களும், சிறு குழுக்களும் தங்கள் சமூகங்களுக்கான ஆதரவையும், பராமரிப்பையும் ஒருங்கிணைக்கும்.  இந்த நிலையில் உள்ள ஓர் இடர்ப்பாடு, சுகாதாரம் போன்ற துறைகளின் திறனை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வளங்களை வேகமாகவும், வலுவாகவும் திரட்ட முடியாது. ஆனால் சமுதாய ஆதரவு வலைப்பின்னல்களைக் கட்டமைத்து பலவீனமானவர்களைப் பாதுகாக்கவும், காவல்துறை தனிமைப்படுத்தல் விதிகளைப் பின்பற்றுவதன் வாயிலாகவும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை இந்த முறையில் திறமையாக முன்னெடுக்க முடியும்.  Getty Images புதிய ஜனநாயக அமைப்புகள் உருவாவது இந்த நிலையின் மிகுந்த லட்சியவாத வடிவமாக இருக்கும். சமுதாய ஒன்றுகூடல் மூலமாக பெரிய அளவிலான வளங்களை ஒப்பீட்டளவில் வேகமாக திரட்ட முடியலாம். நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் அந்தந்த சமுதாயங்களில் ஒன்றுகூடி வட்டார அளவிலான உத்திகளை வகுக்கவும், அவர்களுக்கு தேவையான திறமை இருந்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த முறையில் முடியும்.  முன்னர் கூறிய மூன்று முறைகளில் எதிலிருந்து வேண்டுமானாலும் இந்த நிலை உருவாகலாம். காட்டுமிராண்டி நிலை, அல்லது, அரசு முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவதற்கு சாத்தியமான வழிகளில் ஒன்றாக இது இருக்கும். அரசு சோஷியலிச நிலைக்கு உதவி செய்யக்கூடியதாகவும் இது இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய எபோலா வைரஸ் பெருந்தொற்றினை சமாளிப்பதற்குச் சமுதாய எதிர்வினையே அச்சாணியாக இருந்தது நமக்குத் தெரியும். ஏற்கெனவே நடைபெற்றுவரும், சமுதாய ஆதரவுப் பணிகள், உதவிப் பொருள் தொகுப்புகள் விநியோகம் ஆகியவற்றில் இந்த எதிர்கால நிலைக்கான வேர்கள் இருக்கின்றன. அரசு எதிர்வினைகளின் தோல்வியாகவும் இவற்றை நாம் பார்க்கலாம். அல்லது, புதிதாகக் கிளம்பும் பிரச்சனை ஒன்றை சமாளிப்பதற்கான நடைமுறை சாத்தியமான, கருணை மிகுந்த சமுதாய எதிர்வினையாகவும் இவற்றைப் பார்க்கலாம்.  நம்பிக்கையும், அச்சமும் இந்த அகக்காட்சிகள் எல்லாம் நிலைமையின் தீவிர வடிவங்கள், அல்லது தீவிர நிலையின் சித்திரங்கள். ஒரு நிலை நழுவி மற்றொன்றாக மாறக்கூடியவை. அரசு முதலாளித்துவம் தோன்றி அது காட்டுமிராண்டி நிலையாக சரியலாம் என்பதே என் அச்சம். அரசு சோஷியலிசமும் பரஸ்பர உதவி நிலையும் ஒன்று கலந்த ஒரு நிலையே எனது நம்பிக்கை. இந்த நிலையில் வலுவான, ஜனநாயகரீதியான அரசு வளங்களைத் திரட்டி, வலுவான சுகாதார அமைப்பைக் கட்டியெழுப்பும்; சந்தையின் விருப்பு வெறுப்புகளில் இருந்து பலவீனமானவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும்; பொருளற்ற வேலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பரஸ்பர உதவிக் குழுக்களை உருவாக்கிக் கொள்கிற குடிமக்களுக்கு எதிர்வினையாற்றக்கூடியதாக, அவர்களை அதிகாரப்படுத்துவதாக இருக்கும்.    இந்த அனைத்து நிலைகளிலும் அஞ்சுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன, நம்பிக்கை கொள்வதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவு. நமது தற்போதைய அமைப்பு முறையில் தீவிரமான குறைபாடுகள் இருப்பதை கோவிட்-19 சிக்கல் எடுத்துக்காட்டுகிறது. சிறப்பான முறையில் இதற்கு எதிர்வினையாற்றுவதற்கு தீவிரமான சமூக மாற்றங்கள் தேவைப்படலாம். இதற்கு சந்தையில் இருந்தும், பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதற்கான முதன்மை வழிமுறையாக லாபம் என்பதையே கொண்டிருப்பதில் இருந்தும் தீவிரமாக விலகிச் செல்லவேண்டும் என்று வாதிட்டிருக்கிறேன்.  இந்த சிக்கலின் ஒரு ஆதாயம், எதிர் காலத்தில் தோன்றக்கூடிய உலகளாவிய தொற்றுகள், பருவநிலை மாற்றம் போன்ற நிகழவிருக்கிற அபாயங்களில் தளர்ந்துவிடாமல் காக்கும் அளவுக்கு மனிதாபிமானம் மிக்க அமைப்பை கட்டியெழுப்பும் சாத்தியத்தை உருவாக்கியிருப்பதுதான்.  சமூக மாற்றம் பல இடங்களில் இருந்து உருவாகி வரலாம்; பலவற்றின் செல்வாக்கினாலும் தோன்றலாம். ஆனால் உருவாகவிருக்கிற சமூக வடிவங்கள் மற்றவர்கள் மீது காட்டுகிற அக்கறை, உயிர் வாழ்க்கை, ஜனநாயகம் ஆகியவற்றை மதிக்கிற அறக் கோட்பாட்டில் இருந்து உருவாகி வரவேண்டும் என்று வலியுறுத்துவதே நம் எல்லோரின் முக்கியக் கடமை.  சிக்கல் மிகுந்த இந்த காலத்தின் மையமான அரசியல் கடமை, வாழ்வதும், இந்த விழுமியங்களின் அடிப்படையில் (மனதளவில்) ஒருங்கிணைவதுமே ஆகும்.  இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க:  கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? நம் எதிர்காலம் என்ன? (சைமன் மெயர், சர்ரே பல்கலைக்கழகத்தின், சூழலியல் பொருளாதார ஆராய்ச்சியாளர். The Conversation தளத்தில் முதல் முதலில் வெளியான கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டு கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் பிபிசி ஃப்யூச்சர் தளத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டது.)   https://www.bbc.com/tamil/global-52174523
  • கொரோனா வைரஸ்: "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்" மேகா மோகன் பிபிசி உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் தேசிய பாலியல் அத்துமீறல் ஹாட்லைன் தொலைபேசிக்கு இந்த வாரம் வந்த அழைப்புகளின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வீடுகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஏழை நாடுகள் மற்றும் சிறிய வீடுகளில் வாழும் மக்கள் இதுபோன்ற அத்துமீறல்களை வெளியில் சொல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஐ.நா. மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த முடக்கநிலை காலத்தில் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆண்களுடன் தாங்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறும் இரண்டு பெண்களுடன் பிபிசி பேட்டி எடுத்தது. கீதா, இந்தியா கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் முடக்கநிலை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. கீதா அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்கிறார். அவருடைய கணவர் தரையில் அவருக்கு அருகில் படுத்திருக்கிறார். சப்தமாக குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார். முந்தின நாள் இரவு குடித்துவிட்டு, மன அதிர்ச்சியுடன் அவர் வந்திருந்தார். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு பொதுப் போக்குவரத்தை சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனவே ஆட்டோ அல்லது ரிக்ஷா ஓட்டுநரான விஜயின் தினசரி வருமானம் ரூ.1,500ல் (£16-க்கும் சற்று அதிகம் ) இருந்து ரூ.700 ஆகக் குறைந்துவிட்டது.    கொரோனா தாக்குதலுக்குப் பிறகு கீதாவின் குடும்பத்தின் வருமானம் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது. ``இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இப்படியே போகுமோ'' என்று அவர் கத்துவார், தான் குடித்துக் கொண்டிருந்த பாட்டிலை சுவரின் மீது வீசி எறிவார். கீதாவின் குழந்தைகள் பயத்தில் அவளுடை தோளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும். சிறிய கட்டிலின் மீது விஜய் படுத்துக் கொண்டதும், குடும்பத்தில் மற்றவர்கள், இந்த கோப நிகழ்ச்சிக்குப் பிறகு தரையைப் பகிர்ந்து கொண்டு ஆழ்ந்து தூங்கிவிடும். ``குழந்தைகளைச் சமாதானப்படுத்துவதற்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது'' என்கிறார் கீதா. ``தங்களுடைய தந்தை கோபமாக இருப்பதை அவர்கள் முன்பும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக மோசமான நிலைக்கு அது போய்விட்டது. கையில் கிடைக்கும் பொருட்களைச் சுவர் மீது வீசி எறிவது, என்னைத் தலைமுடியைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுகிறார்.'' தன்னுடைய கணவர் தன்னை பல முறை அடித்திருப்பது கீதாவுக்கு நினைவிருக்கிறது. திருமணமான நாளன்று இரவில் முதல் முறையாக அவர் அடித்துள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிட அவர் ஒரு முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கிராமப்பகுதி ஒன்றில் ஊருக்கு வெளியே குடியிருப்புப் பகுதியில் குறைந்த வருவாயுடன் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டுக்கு வேண்டிய தண்ணீரை எடுத்து வருவதற்கு அந்தப் பெண் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். தண்ணீர் எடுத்து வந்ததும், காய்கறி தள்ளுவண்டி வருவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் பக்கத்தில் வசிப்பவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருப்பார். அன்றைய தினத்துக்கு வீட்டுக்கு உணவுக்கு வேண்டியவற்றை வாங்கிய பிறகு, காலை உணவைத் தயாரிக்கும் வேலையை கீதா தொடங்குவார். காலை 7 மணிக்கு அவருடைய கணவர் வெளியில் கிளம்புவார். மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்குவார். பிறகு 2 பெரிய குழந்தைகளும் வீடு திரும்பியதும் அவர் வெளியில் செல்வார். ``ஆனால் 14 ஆம் தேதி பள்ளிக்கூடங்களை மூடிய பிறகு நிலைமைகள் மாறிவிட்டன'' என்று கீதா கூறினார். ``குழந்தைகள் எப்போதும் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினர். அது என் கணவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.'' ``வழக்கமாக என்மீது காட்டுவதற்காக கோபத்தை அவர் வைத்திருப்பார். இப்போது தரையில் டம்ளரை வைத்துவிடுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களைப் பார்த்து கத்துகிறார். பிறகு அவருடைய கோபத்தை என் மீது திருப்பும் வகையில், நான் ஏதாவது சொல்வேன். ஆனால் நாங்கள் அதிக நேரம் ஒன்றாக இருப்பதால், அவருடைய கவனத்தை திசை திருப்ப எனக்கு குறைவான அவகாசமே கிடைக்கிறது.'' கீதாவுக்கு ஒரு திட்டம் இருந்தது. தன் கணவர் வேலைக்குப் போன பிறகு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு நடந்து போவார். அங்கே சமுதாய நிர்வாகிகளால் ரகசியமான ஒரு வகுப்பு நடத்தப்படுகிறது. தையல், எழுத மற்றும் படிக்க அங்கு கற்றுத் தரப்படுகிறது. பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருப்பதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டு, குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று கீதா விரும்புகிறார். வகுப்பின்போது, குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களுக்கு உதவுவதில் பயிற்சி பெற்ற கலந்தாய்வு நிபுணர்களை அவர் சந்தித்தார். ஆனால் மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய, இந்தியாவின் 21 நாள் முடக்கநிலை, இவை அனைத்திற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வகுப்புகள் நின்று போய்விட்டன. அதனால் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆலோசனை கூறும் வாய்ப்பு, நிபுணர்களுக்குக் கிடைப்பதில்லை. ராஜஸ்தானில் இரண்டாவது பெரிய நகரமான, ஜோத்பூர் பகுதியில் பெண்களுக்கு உதவக் கூடிய சம்பாலி டிரஸ்ட்டின் தன்னார்வலர் விமலேஷ் சோலங்கி, கொரோனா வைரஸ் காரணமாக பெண்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்கிறார்.  ``முழுமையான முடக்கநிலை என்பது, தினசரி வாழ்க்கையை முற்றிலுமாக இடையூறுக்கு ஆளாகியுள்ளது. இப்போது தள்ளுவண்டிகளில் உணவுப் பொருட்களைக் கொண்டு வருபவர்கள் இல்லை. எனவே தினசரி உணவுக்காக அவர்கள் தினமும் சூப்பர் மார்க்கெட்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.'' ``இதுபோன்ற மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலைகள், ஏற்கெனவே துன்புறுத்தும் துணைவரால் இன்னலுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.'' கய், நியூயார்க், அமெரிக்கா கய் தனது செல்போனை எடுத்து மெல்ல டைப் செய்கிறார். ``நான் உங்களுடன் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அம்மா விரும்புகிறார்.'' அதை அவர் அனுப்புகிறார். விரைவில் பதில் வருகிறது: ``அது நல்லது.'' இனிமேல் ஒருபோதும் நுழைய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்ட வீட்டில் கடந்த வாரம் அந்த டீன்ஏஜ் வயதுப் பெண் நுழைந்தார். ``வீட்டுக்குள் நான் காலடி எடுத்து வைத்த மறுநொடி என் மூளை அதிர்ச்சியாகிவிட்டது'' என்று மென்மையாக அவர் கூறுகிறார். ``எல்லாமே மாறிவிட்டன, எல்லா உணர்வுகளும் மாறிவிட்டன.' உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பல ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி வருவதாக அவர் கூறும், தன் தந்தையுடன் அவர் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் என்பது ஒரு சக்கரத்தைப் போல கடந்து சென்றுவிடக் கூடிய விஷயம் என்று கய் நினைத்திருந்தார். ஆனால் நிலைமைகள் மாறிவிட்டன. அவருடைய தாயார் வேலை பார்க்கும் கடையின் அலுவலர்களின் மன அமைதி குறைந்துவிட்டது. இந்த வைரஸ் எல்லைகளை கடந்துவிட்டது, 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது, இப்போது நியூயார்க்கிலும் பரவியுள்ளது என்ற செய்தி அவர்களை பதற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டது. கடையில் வேலை பார்ப்பது என்பது தினமும் வாடிக்கையாளர்களுடன் கலந்து பழகும் வகையிலான விஷயம். கய்யின் தாயாரும், அவருடன் பணிபுரியும் இரண்டு பேரும், வாடிக்கையாளர்களுடன் ஏற்படும் தொடர்பு பற்றி கவலை அடைந்தனர். ஆனால் அவர்கள் நீண்ட காலம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காலவரையின்றி கடை மூடப்பட்டது. அதனால் பணியாளர்கள் தேவையில்லை என்றாகிவிட்டது. கய்யின் தாயாருக்கு அந்த வேலைக்காக ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர்கள் (£12) கிடைக்கும். அவருடைய சுகாதாரக் காப்பீடு ஐந்து நாட்களுக்கு மட்டும் பயன்தரக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கய்யின் வாழ்க்கையில் பெரும்பகுதியில் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய தாயாருக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ``அவருக்குப் பாதிப்பு இருந்தது. இங்கே எல்லாமே குழப்பமாக உள்ளது. நீ உன் தந்தையின் வீட்டுக்குப் போயாக வேண்டும் என்று அவர் கத்தினார்'' என்று கய் தெரிவித்தார். துயரத்தில் இருந்த கய்யின் நரம்புகளை சில்லிடச் செய்வதாக அந்த வார்த்தைகள் இருந்தன. அம்மாவுக்கு சிறுது அவகாசம் கொடுத்தால் நிலைமை மாறிவிடும் என்று நினைத்து, தன் அறையிலேயே கய் முடங்கிக் கிடந்தார். ஆனால் மாடியில் இருந்து இறங்கிச் சென்றதும், ``நீ ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்'' என்று தாயார் கேட்டிருக்கிறார். தன் தந்தையால் ஏற்பட்ட உடல் ரீதியிலான மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு தான் கய் சிகிச்சை பெற்றிருந்தார். குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னிடம் தன் தந்தை அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார் என்று கய் தெரிவித்தார். தனக்கு நடந்த துன்புறுத்தல்கள் பற்றி தாயிடமும், சகோதரியிடமும் முழுமையாக அவள் கூறியது கிடையாது. அது ஆரம்ப காலக்கட்டம். ஆனால் கய்யின் சிகிச்சை அவருக்கு உதவிகரமாக இருந்தது. அதிக கட்டுப்பாட்டில் இருப்பதாக கய் உணர்ந்தார். எதிர்காலம் பற்றி அவருக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த இல்லத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சிகிச்சையாளர் தெரிவித்தார். கடந்த வாரம் அவர் தன் தந்தையுடன் தங்குவதற்குச் சென்றுவிட்டார். ``அவர் எல்லா நேரமும் இங்கே தான் இருக்கிறார்'' என்று அவர் முணுமுணுத்தார். ``பகல் நேரத்தில் முன் அறையில் உள்ள கம்ப்யூட்டரில் அவர் டி.வி. பார்க்கிறார். இரவில் அவர் ஆபாசப் படம் பார்க்கும் சப்தம் எனக்கு கேட்கிறது'' என்று கய் தெரிவித்தார். அவர் விழித்திருக்கும்போது பழங்கள், ஐஸ்கிரீம் கலந்த காலை உணவை தயாரிப்பதாக கய் தெரிவித்தார். ``அந்த சப்தம் எனக்கு பிடிக்காது. அவ்வளவு அதிகமான சப்தம் கேட்கும். அது எனக்கு பயத்தைத் தருவதாக இருக்கும். என்னுடைய நாளின் தொடக்கம் அப்படி தான் தொடங்கும். நாள் முழுக்க நான் விழிப்புடன் இருந்தாக வேண்டும்'' என்று கய் கூறினார். இங்கே திரும்பி வந்ததில் இருந்து கய் நன்றாகத் தூங்கவில்லை. அவருடைய அறையின் கதவில் உள்புறம் பூட்டு கிடையாது. உடல் ரீதியாக அடக்குமுறைக்கான வழக்கமாக அது இருக்கும். அவருக்கு கோபம் ஊட்டும் வகையில் கய் ஏதாவது செய்தால் மட்டும் அப்படி நடக்கும். எனவே அவருடைய பதையில் இருந்து விலகி இருக்க கய் திட்டமிட்டுள்ளார். குளியலறைக்கு ஓடிச் செல்வதற்கும், தனது உணவை சமையலறையில் தயாரிப்பதற்கு ஓடிச் செல்வதற்கு மட்டுமே தன் அறையைவிட்டு கய் வெளியே வருகிறார். முன்பு மின்சப்ளை துண்டிக்கப்பட்ட போது இருவரும் மோதிக் கொண்டனர். அப்போது அத்துமீறல் மோசமானதாக இருந்தது. ``வரலாற்றில் விநோதமான காலக்கட்டத்தில் வாழ்வதைப் போல அவர் நடந்து கொள்வார். ஆனால், அத்துமீறல் பற்றி எதுவும் பேசுவதில்லை'' என்று கய் கூறினார். ``நான் கட்டுப்பாட்டை இழப்பது போன்ற உணர்வை அது எனக்குத் தரும். அவர் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்ற அச்சம் என்னைக் கொல்கிறது'' என்றார் கய். நாள் முழுக்க ஆன்லைனில் பொழுதைக் கழிக்கிறார் கய். அண்மையில் திரைப்படங்கள் குறித்து யூடியூப் விடியோ கட்டுரைகளை அவர் பார்த்துள்ளார். தான் பார்த்திராத திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களைப் பார்ப்பது அவருக்குப் பிடித்திருக்கிறது. தனது தாய் சீக்கிரம் தன்னை திரும்ப அழைத்துக் கொள்வார் என்றோ அல்லது கொரோனா நோய்த் தொற்று சீக்கிரம் முடிவுக்கு வந்து, தான் வாழ்வதற்கு வேறு ஒரு இடத்தை சீக்கிரம் கண்டறிய முடியும் என்றோ கய் நம்புகிறார். Getty Images குடும்ப வன்முறை குறித்த அழைப்புகள் அதிகரிப்பை சமாளிக்க காவல் துறையினர் தயாராக இருப்பதாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குடும்ப வன்முறை நிவாரண ஆணையாளர் நிகோலே ஜேக்கப்ஸ் தெரிவித்தார். ``இதுபோன்ற குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும் என்பதை காவல் துறை எதிர்பார்த்திருந்தது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை புரிய வைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்'' என்று பிபிசியிடம் அவர் கூறினார். ``அந்த அழைப்புகளுக்கு முன்னுரிமை தருகிறோம் என்பதை அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு நபர் 999 அழைப்புகள் அமைதியாக செய்து, அலுவலர் அந்த அழைப்பை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவர் எடுத்தவுடன் இருமியோ அல்லது வேறு ஏதாவது ஒலி எழுப்பிவிட்டோ 5, 5 அழுத்தினால் போதும்.'' உத்தரவாதம் இல்லாத குடியேற்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு ``தடை ஏதும் இருக்கக் கூடாது, இந்த நேரத்தில் அத்துமீறல் குறித்து புகார் செய்தால், வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும்'' என்று அந்தப் பெண் அதிகாரி கூறினார். அகதி நிலையில் இருக்கும் முக்கிய தொழிலாளர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சமூக கவனிப்பு மற்றும் சிறப்பு சேவைகளில் உள்ள தொழிலாளர்கள், இந்த வைரஸ் தொற்று காலத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். `கண்கள் மற்றும் காதுகள்' பெண்களுக்கான ஐ.நா. அமைப்பின் செயல் இயக்குநர் பூம்ஜிலே மிலாம்போ-நிக்குக்கா இந்தக் கருத்தை தான் பிபிசியிடம் கூறினார். எளிதில் பாதிக்கும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு, பாதுகாப்பான உடைகள் அளிக்க வேண்டியது அவசர கால தேவையாக உள்ளது என்றார் அவர். ``சமுதாய அளவில் தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் சென்றடைந்து, ஆபத்து வாய்ப்பில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க களப் பணியாளர்களுக்கு எங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உலக அளவில் அரசு நிதி இதற்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது'' என்று அவர் குறிப்பிட்டார். தேசிய அத்துமீறல் ஹாட்லைன்களுக்கான அழைப்புகள் அதிகரித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போல அல்லாமல், பல வளரும் நாடுகளில், அதற்கு நேர் எதிரான சூழலுக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். ``பல நாடுகளில் உள்ள குறைந்த சமூக பொருளாதார பின்னணி கொண்ட மக்கள், ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில், அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுடன் வாழ்ந்து வருவதால், அதுபற்றி வெளியில் தெரிவிப்பது சாத்தியமற்றது'' என்று அவர் தெரிவித்தார். ``மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய்த் தொற்று தாக்குதல் முடிவுக்கு வந்து பல மாதங்கள் கழித்துதான், அங்கு வீடுகளில் பாலினம் சார்ந்த அடக்குமுறை சம்பவங்கள் அதிகரித்திருந்தன என்ற தகவல் எங்களுக்குத் தெரிய வந்தது.'' இதற்கிடையில், பிரிட்டனில் குடும்ப அத்துமீறல்களைக் கையாள்வதற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு, இதுதான் சரியான தருணம் என்று ஜேக்கப்ஸ் கூறியுள்ளார். ``தேசிய சுகாதார சேவைத் துறை தன்னார்வலர்களாக நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். குடும்ப வன்முறைகளை அடையாளம் காண்பதற்கான வழிமுறைகள் அவர்களுக்குத் தெரிந்திருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் சமூகத்தில் அவர்கள் தான் நம்முடைய கண்கள் மற்றும் காதுகளாக இருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார். (இரண்டு பெண்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.) https://www.bbc.com/tamil/global-52175185
  • சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது. ஏனெனில் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், இஸ்லாமியம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளின் பாவாடைகளைப் பிடித்ததுக் கொண்டு சிவ பூமியை பிளக்க முயன்றார்கள் முள்ளிவாய்க்காலில் மாண்டதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் தமிழ்தேச துரோகிகளா? கிறிஸ்தவ போராளிகளாலும் , கிறிஸ்தவ மதத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஈழ போா் அதே போன்று இவர்களின் முன்னோா்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதே தமிழர்களின் அரசும் , பல இலட்சம் தமிழர்களும் கொள்ளை அடிக்கப்பட்ட பல கோடி பெறுமதியான சொத்துக்களும் ஆகும்.  புலிகளுடன் ஒட்டிக் கொண்ட பாதிரிகள் கூட்டம் புலிகளை அடியோடு அழிக்க முன் நின்று பாடுபட்டு புலிகளை அழித்த பெருமைக் குரியவர்கள். கிளிநொச்சி, வவுணியா , மன்னாா் போன்ற இடங்களல் இலங்கை இராணுவத்திற்கு தமிழ் ஈழ விடுதலை புலிகளை காட்டிக் கொடுத்து அவர்களின் அழிவுக்கு காரணமானவர் சரனீஸ்வரன் தற்பொழுது கிறிஸ்தவ மத போதகர் என்ற அடையாளங்ளுடன் திரிகின்றாா்.  "இவர் போன்றே  ஜெகத்கஸ்பாரின் தலைமையில் ஒன்று கூடிய ஒரு பகுதி கிறிஸ்தவ மிசனறிகள் நடேசனுடன் சோ்த்து முக்கிய தளபதிகள் 700 போராளிகளை சரன் அடையவைத்து கொலை செய்வித்தார்கள்." "பிரான்சிஸ் மிசனறி தலைமையில் கூடிய பிறிதொரு சதிகார கிறிஸ்தவ மிசனறிகள் இளம்பருதி, எழிலன், இராகுலன், வேலவன், தங்கன், மஜித், இன்பம், போண்டா ரூபன், குமாரவேல், ருபன், ராஜா மாஸ்டர் உள்ளிட்ட தளபதிகள் சுமார் 900 ற்கும் மேற்பட்ட முக்கிய தளபதிகள், போராளிகளை தங்களின் ஊடாக சரன் அடையவைத்து கொலை செய்வித்தார்கள்." தமிழ் ஈழ போராட்ட கிறிஸ்தவ போராளிகள் போர்க்களத்துக்குச் செல்வார்கள் அங்கே போரில் ஈடுபடுவார்கள் அங்கு கொலைகள் நடக்கும், அழிவுகள் ஏற்படும் திரும்பி வருகின்ற அத்தகையோா்களிடம் பாதிரிமார்கள் அவர்களிடம் சென்று நீங்கள் தேவாலயத்திற்கு வந்து செய்த கொலைகளுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் (ச்ஒந்fஎஷ்இஒந்) உங்களுக்குப் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்று சொல்வார்கள்  பாதிரிமார்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதால் அது இரகசியமாகவே இருக்கும் என்றும் சொல்வார்கள் இதனை நம்பிய கிறிஸ்தவ போராளிகள் மன ஆறுதல் வேண்டிய கிறிஸ்தவ போராளிகள் பாதிரிமார்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். கொள்ளை கொலை நடந்த இடங்கள் சமர்களின் நிலைகள் வலிமைகள் தொய்வுகள் தோல்விகள் வெற்றிகள் காயங்கள் என அந்த வாக்குமூலம் நீளும் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பாதிரியார் வவுனியா செல்வார். அங்கு அதை அப்படியே எதிரிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு கூறுவார் மேலைநாட்டு புலனாய்வாளர்களுக்குச் சொல்வார்கள். தமிழ் பேசும் கிறிஸ்தவ பாதிரிகளிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட இலங்கை புலனாய்வுப் பிரிவினர் , சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் ஈழபோராளிகளை அழிப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு முள்ளிவாய்காலில் இருந்து என்றும் திரும்பி வரமுடியாதவாறு போா்களத்தை மூடினாா்கள். தமிழ் ஈழ போராட்ட அமைப்புகளை அழிப்பித்த கிறிஸ்தவ மிசனறிகள் தமிழர்களுக்குள் பிாிவினை வாதங்களை ஏற்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியின் அடிப்படையில் பிாித்து மோத வைத்து அழிப்பதற்காக அவன் காட்டி கொடுத்தான் , இவன் காட்டி கொடுத்தான் என்று பிாித்து மேய்ந்த பைபில் துரோக கதையை அவிட்டு விட்டவர்கள். இந்த கிறிஸ்தவர்களின் முன்னோா்களினால் தான் தமிழர்களின் அரசுகள் போா்த்துக்கீயர்களுக்கு  காட்டிக் கொடுக்கப்பட்டு   அழிக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் தமிழர் சமுதாயத்தை காட்டிக் கொடுத்து அழிப்பிதவர்களின் சிறப்பியல் அடையாளம் கிறிஸ்தவ மதம் ஆகும் அதே போன்று ஏனைய நாடுகளிலும் இது போன்று நடைபெற்றே உள்ளது.  இலங்கையில் தமிழர்களும் பெளத்த சிங்கள மக்களும் மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் தமிழர் தேசத்தில் இருந்து கிறிஸ்தவம் துடைத்து எறியப்படல் வேண்டும் இதற்கு பெளத்த பீடங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதன் ஊடாகவே பெளத்த மதத்தின் பாதுகாப்பு தமிழகளிடமே இருக்கின்றது என்பதனை உணர வேண்டும் அப்பொழுதான் தமிழர்களும் பெளத்த சிங்கள மக்ளும் இனைந்து சிவபூமியை மீட்க முடியும்.  
  • முருங்கைக்காய் மசாலா குழம்பு. வித்தியாசமான சுவையில்......!   👍