• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ampanai

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்

Recommended Posts

இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார்.

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ, இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் அரசியல் குறித்து, எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், கலாநிதி பாஸில் உடன் பிபிசி தமிழ் பேசிய போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

"தேர்தலுக்குப் பின்னரான தற்போதைய சூழ்நிலையை மிகக் கவனமாகப் புரிந்து கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போவது பற்றி யோசிக்க வேண்டும்" எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் பாஸில் உடன் பேசியபோது, அவர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

"இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரை, அவர்களின் அரசியல் போக்கு, மிக முக்கியமான மாற்றம் மற்றும் சிக்கல்களுக்குள் அகப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

 

முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறான எதிர்ப்பு அரசியல் நிலைமைகளை - சிங்கள பெரும்பான்மை சமூகத்திலிருந்து எதிர் நோக்கினார்களோ, அதனை ஒத்த மாதிரியான நிகழ்வுகள், யுத்தத்துக்குப் பின்னரும் இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக எழுச்சியடைய முற்பட்ட தமிழ் சமூகமானது, பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் ரீதியான செயற்பாட்டின் ஊடாக, சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலை தென்பட்டிருக்கிற வேளையிலே, முஸ்லிம் சமூகம் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு எழுச்சியடைந்து வருகிறது. ஆனால், தற்போது அந்த சமூகமும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீளவும் ஒரு சவாலுக்கு உட்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரைக்கும், யுத்தத்திற்கு பின்னர் அவர்களுடைய அரசியல், சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் குறித்து எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார இருப்புக்கள் அழிவுக்குட்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகள் தோன்றியிருக்கின்றன.

அதேவேளையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலானது, முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் இருப்பின் மீதும், அவர்களின் சுதந்திரமாக வாழ்வுரிமை மற்றும் மனித உரிமைகள் மீதும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில்தான், இலங்கையினுடைய ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளதோடு, அதில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.

 

சிங்கள சமூகத்தின் ஒன்றிணைவு

பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 52.25 வீத வாக்குகளை பெற்றிருக்கிறார். மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 41.99 வீத வாக்குகளை மட்டும் பெற்றிருக்கின்றார். இந்த நிலைவரமானது இந்த நாட்டினுடைய சிறுபான்மையினர் பற்றிய மிக முக்கியமான செய்தியை சொல்ல வருகிறது.

இலங்கையில், முஸ்லிம்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் மிக முக்கிய அம்சமாக, சிங்கள தேசிய வாதத்தின் மீள் எழுச்சி இடம்பெற்றிருக்கிறது.

சிங்கள மக்களோடு வாழ்கிற முஸ்லிம்கள் சார்பாக விடப்பட்ட தவறுகள் இதற்குப் பங்களித்திருக்கலாமென்றும் பார்க்கப்படுகிறது.

தற்போது 52 வீதத்தையும் தாண்டிய வெற்றியினை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றிருக்கும் நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்த தேர்தலில் வழிநடத்தப்பட்டமை குறித்தும் நாங்கள் மிக கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சிங்கள பெரும்பான்மை மக்கள், பல விடயங்களுடாக ஒன்றிணைக்கப்பட்டார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துப் பிரச்சாரங்களின் ஊடாகவும், எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஊடாகவும், அந்த ஒழுங்கமைப்புகள் இடம்பெற்றன.

மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் பாதுகாப்புப் பற்றிய ஒரு அச்சம் ஏற்பட்டதோடு, பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் தேவையும் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு தேசிய சூழல், சர்வதேசத்தின் தலையீடு போன்றன பின்னணியில் இருந்திருக்கலாம் என்கிற பார்வையும் உள்ளது. இதன் அடிப்படையில் சிங்களச் சமூகம் ஒன்றிணைந்திருக்கின்ற வேளையிலே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிகக் கவனமாகச் சிந்தித்து, தமது சமூகத்தை வழி நடத்தியிருக்க வேண்டும் என்கிற கருத்து உள்ளது.

 

கவனிக்கத் தவறிய விடயங்கள்

அந்த வகையில் பார்க்கின்ற போது, சிங்கள மக்களின் ஒன்று திரண்ட செயற்பாட்டினை, முஸ்லிம் தலைவர்கள் அனுமானித்துக் கொள்ளவில்லையா, அல்லது விளங்கிக் கொள்ளவில்லையோ என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம்களை வழிநடத்தி வரும் - முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.

 

பலமிழந்த சிறுபான்மையினர்

1990களிலே அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸவுடன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இணைந்திருந்த காலம் மற்றும் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் அஷ்ரப் இணைந்திருந்த காலங்களில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையின மக்கள் இருந்து வந்துள்ளார்கள். 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இதனை மிகத் தெளிவாகக் கண்டோம்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ள இந்தத் தேர்தல் முடிவானது, சிறுபான்மையினரின் ஆதரவில்லாமலேயே, ஜனாதிபதியொருவரை பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவு செய்வதற்கானதொரு நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருந்தாலும் கூட, வடக்கு, கிழக்கிலே தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், பெரும்பாலும் தமது வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கினர். இதன் காரணத்தினால், முஸ்லிம்களுடைய பங்குபற்றுதல் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவரை சிங்கள சமூகம் தெரிவு செய்திருக்கிறது.

இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமை சிறுபான்மையினருக்கு சாதமானது என்று சொல்லப்பட்ட போதிலும், அது இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் முக்கியத்துவம் இழக்கப்பட்டிருக்கிற தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலிலே முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியும் கேள்விக்குரியதாக மாறியுள்ளதோடு, அது தேவையில்லை என்கிற சூழ்நிலையினையும் இந்தத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.

 

செய்ய வேண்டிவை என்ன?

எனவே, முஸ்லிம் தலைமைகள் மீண்டும் மிகக் கவனமாகச் சிந்தித்து, தங்கள் அரசியல் செயல்முறைமையினை கொண்டு நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இங்கு இரண்டு வகையான செய்திகளை என்னால் சொல்ல முடியும். ஒன்று முஸ்லிம் சமூகத்துக்கானது. மற்றையது முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைகளுக்கானது.

முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடன் கவனமாகச் சிந்தித்து பெரும்பான்மைச் சமூகத்தோடு இந்த நாட்டிலே ஒன்றித்துச் செயற்பட வேண்டும் என்கிறதொரு செய்தி சிங்களப் பெரும்பான்மையினரால் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்குரிய வழிமுறைகளை முஸ்லிம்கள் தேட வேண்டும்.

இந்த நாட்டின் இனத்துவ வீதாசாரப் புள்ளி விவரத்தின் படி, 74 வீதத்தினர் சிங்களவர்களாக இருக்கின்றனர். அதன் காரணத்தினால் சிறுபான்மையினர் அரசியலில் பெரும் செல்வாக்கினை தொடர்ந்தும் செலுத்த முடியாத நிலைமை இருப்பதனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைககள் அதிகரித்துக் காணப்படுவதனாலும், முஸ்லிம்கள் ஒத்தியங்கிப் போய் தங்களின் வாழ்க்கையினையும் தம்முடைய எதிர்கால சமூகத்தின் வாழ்க்கையினையும் நிலைப்படுத்துவதற்கான தேவையினைத் தேட வேண்டியுள்ளது.

அடுத்து நான் கூறும் செய்தி, இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கிணங்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, மிக முக்கியமான ஒரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தை எப்படி வழிநடத்துவது என்பதாகும். பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய அரசியல் நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் முஸ்லிம் தலைமைகள் எடுப்பதன் ஊடாகத்தான், முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை கவனமாகப் பரிசீலித்து, அதன் அடிப்படையிலான ஒரு ஆட்சியினைச் செய்யவுள்ளதாக தற்போது மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதனூடாக நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், நாடாளுமன்றத்தில் மூன்றிரலின்டு பெரும்பான்மை ஆதரவினை அவர்கள் திரட்டிக் கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் ஊடாகத்தான் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றினார். அதன்போது முஸ்லிம்களின் உதவியும் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

எனவே, தற்போதைய சூழலை மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போகக் கூடிய நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டும்.

மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தேசியவாதச் செயன்முறைகளும், பௌத்தத்தை மீள் புனர் நிர்மாணம் செய்வதற்கான மீள் எழுச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் - பௌத்தத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டு சின்னாபின்னப்பட்டு வருகின்றனர்.

இலங்கையிலும் அதே சூழ்நிலை உருவாகியிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலே, முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் மிக நிதானமாகச் செயற்பட்டு, தேசிய அரசியலில் பெரும்பான்மையினத்தவரோடு ஒத்துப் போகக் கூடியவாறான செயற்பாடுகளில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50461611

Share this post


Link to post
Share on other sites

இனி எப்பிடியும் அமைச்சு பதவியை கைப்பற்ற முயலுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, ampanai said:

முஸ்லிம்களின் முக்கியத்துவம் இழக்கப்பட்டிருக்கிற தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலிலே முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியும் கேள்விக்குரியதாக மாறியுள்ளதோடு, அது தேவையில்லை என்கிற சூழ்நிலையினையும் இந்தத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.

 

33 minutes ago, ampanai said:

இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம்களை வழிநடத்தி வரும் - முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும்,  தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து பயணிக்க வேண்டிய சந்தர்ப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites
Quote

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்

வழமை போல மாத்தி போட வேண்டியதுதான்...🤣

Share this post


Link to post
Share on other sites
On 11/18/2019 at 11:27 PM, குமாரசாமி said:

வழமை போல மாத்தி போட வேண்டியதுதான்...🤣

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஆனால் அப்படி செய்தால் மொட்டு கட்சிக்கு  பொது தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் 😜😜😜😜

Edited by Dash

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • Aladdin  படம் என்றால் எனக்கும் பிரியம்.
    • ஒருவர் பொது வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்ததின் பின்னர் அவரின் தனிப்பட்ட விடயங்கள் அலசி ஆராயப்படும்.இது உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் உருவெடுத்த ஊடகங்கள் அந்த வேலைகளை கச்சிதமாக நடத்தி முடிக்கின்றன.அதை விட கைத்தொலைபேசி ஊடகவியாளர்களும் வீட்டுக்கு வீடு உருவாகிவிட்டார்கள். அண்மையில் கூட டொனால்ட் ரம்ப் அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முன் ரஷ்யாவில் உல்லாசவிடுதி படுக்கையில் உச்சா போனார் என்ற செய்தி களைகட்டியது. நம்பேல்லையெண்டால் ஆள் உங்கை சுவீசிலைதான் நிக்கிறார்.போய் கேட்டுப்பாருங்கோ 🤣
    • சிறப்புக் கட்டுரை: ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்! மின்னம்பலம் ராஜன் குறை   நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில், பெரியார் பங்கேற்ற 1971ஆம் ஆண்டு சேலம் திராவிடர் கழக ஊர்வலம் குறித்து சில பிழையான, மிகையான சித்திரிப்புகளைச் செய்தது பெரியாரிய இயக்கங்களின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. துக்ளக் பத்திரிகையைப் பாராட்டி பேசுமிடத்து அவர் பெரியாரின் இறை மறுப்பை நினைவுகூர்ந்து பேசியது, அந்த ஊர்வலம் குறித்து சமூக அமைதியைக் குலைக்கும்படி சித்திரித்த துக்ளக் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதை முன்னிட்டு என்றாலும், துக்ளக் பத்திரிகையின் வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சி காரணம் என்றெல்லாம் கூறியது புனைவு. அவருடைய உட்கிடக்கை பாரதீய ஜனதா ஆதரவு மேடையில் பெரியாரின் இறை மறுப்பு கொள்கையைச் சுட்டி, அதை மிகைப்படுத்தி சித்திரித்துப் பேசுவதுதான் என்று தோன்றுகிறது. ரஜினிகாந்தின் இந்த விழைவு புதியதல்ல என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஏற்கனவே பாபா திரைப்படத்தில் அவர் முயன்ற அரசியல்தான் இது. அவருடைய திரையுலகப் பயணத்தில் பெரிய அதிர்ச்சியை கொடுத்த படம் பாபா. பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா என்று பெரும் வெற்றிகளாக, முக்கிய பொதுவெளி நிகழ்வுகளாக மாறியிருந்த அவரது படங்களுக்குப் பிறகு திடீரென ஒரு தோல்விப் படமாக அமைந்தது பாபா. ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருப்பது போல தோல்விக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு முக்கிய காரணத்தை நாம் பரிசீலிக்க வேண்டும். பாபாவின் மனமாற்றம் பாபா படத்தில் இரண்டு பாபாக்கள். ஒரு பாபா இமயமலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாக ரஜினியே கூறிய பாபாஜி என்ற பாபாஜி நாகராஜ். இன்னொன்று, அவருடைய அருளால் குழந்தையாக மறுபிறப்பு எடுத்த அவருடைய சீடர்களில் ஒருவரான ரஜினிகாந்த் பாத்திரமான பாபா (இந்தப் பாத்திரத்தை ரஜினி பாபா என்று குறிப்பிடுவோம்). குழந்தையே இல்லாமல் எல்லா தெய்வங்களையும் வேண்டித் திரியும் தம்பதியருக்கு இந்த தெய்வீகக் குழந்தை பிறக்குமென்பது சாதுக்களால் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோரிடம் அந்த குழந்தை என்ன செய்தாலும் குறுக்கிட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தை இன்பங்களைத் துய்க்கும் ஒரு முரட்டு நாத்திகனாக வளர்கிறது. பாபாவின் லீலை என்னவென்றால் அந்த மனிதன் அவனாகத் தன்னுணர்வு பெற்று தன்னுடைய அருட்பிறப்பை உணர்ந்து மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்பதுதான். பல்வேறு அதிசய நிகழ்வுகள் மூலம் பாபாவின் சக்தியை ரஜினி பாபா புரிந்துகொண்ட பிறகு, மனமாற்றம் அடைந்து பாபாவிடம் செல்ல நினைக்கிறான். ஆனால் இதற்கிடையில் சில ரெளடிகள், அரசியல் தலைவர்களுடன் வரும் மோதலால் அரசியல் ஈடுபாடும் வருகிறது. தேர்தலில் ஒரு நல்ல மனிதனை வெற்றி பெற வைத்துவிட்டு இமயமலைக்குச் செல்லும்போது, அந்த மனிதர் கொல்லப்படுவதால் ரஜினி பாபா மக்களை நோக்கி திரும்பி வர படம் முடிகிறது. இந்தத் திரைப்படத்தின் கதையைத் தான் ஒரே நாள் மாலையில் உருவாக்கியதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதற்குமுன் பாபாவின் படம் இருந்த நூலிலிருந்து சில ஒளிப்புள்ளிகள், கீற்றுகள் அவருக்குள் சென்றதாக, அதனால் அவருள் பல மாறுதல்களை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். படம் வெளிவந்த சமயத்தில் தான் இமயமலையில் பாபாவைப் பார்த்ததாகக் கூறினார். பாபா யேசுநாதர் இமயமலைக்கு வந்தபோது அவரைப் பார்த்தவர், அவருக்கு யோக சித்திகளை வழங்கியவர் என்பதையும் கூறியுள்ளார்.   ரஜினிகாந்த் தன் குருவாக பாபாவை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் படத்தில் தன் பெயரையே பாபா என்று வைத்துக்கொண்டார். அதன் மூலம் தன்னை பாபாவின் அம்சம் பொருந்தியவராகக் கூறிக்கொள்கிறார் எனக் கருதலாம். படத்தின் முக்கியமான திருப்புமுனை, இறை நம்பிக்கையில்லாத ரஜினி பாபாவை மாயமாக இமயமலைக்குக் கொண்டு சென்று பாபாஜியை சந்திக்க வைக்கும் காட்சி. இதில் ரஜினி ஐயத்துடனும், விளையாட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார். பாபா அவருக்கு அவரது எல்லைகளை உணர்த்தி, ஒரு பரீட்சையாக மந்திர உபதேசம் செய்து, ஏழு முறை அந்த மந்திரத்தைச் சொன்னால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று கூறிவிடுகிறார். ரஜினி அந்த மந்திரத்தைப் பரிசோதிக்க அதை விரயம் செய்வதும், பின்னர் சக்தியை உணர்வதும், மனம் மாறுவதும் கதை. ஆனால் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது மதுவோ, மாமிசமோ அருந்தியிருக்கக் கூடாது என்பது ஒரு முக்கிய நிபந்தனை. பொதுவாகவே மாமிசமோ, மதுவோ அருந்தக் கூடாது என்று சொல்லும்போது ரஜினி அதெல்லாம் இல்லாமல் தான் இருக்க முடியாது என்று கூறுவார்.   அதனால் மந்திரம் சொல்லும்போதாவது அவற்றை உட்கொள்ளக் கூடாது என்று நிபந்தனை மாற்றப்படும். தன்னை ஆசாபாசங்கள் உள்ள, நாத்திக மனோபாவம் கொண்ட ஒரு சாதாரண நபராகக் காட்டிக்கொண்டு தான் மெள்ள, மெள்ள நம்பிக்கை கொள்வதை, தெய்வீக மனிதராக மாறுவதைச் சித்திரித்தால், தன் ரசிகர்களும் பாபாவின் ஆற்றல்களையும், பாபாவின் அருளைப் பெற்ற தன் ஆற்றல்களையும் ஏற்றுக்கொள்வார்கள் என ரஜினி கருதியிருக்கலாம். படையப்பா படத்தில் கிட்டத்தட்ட தெய்வமாகவே மாறிவிட்ட தன் கதாநாயகப் பிம்பத்தை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டுபோவது என்ற சிந்தனையில் இந்த கதை ரஜினி மனத்தில் தோன்றியிருக்கலாம்.   முற்றிலும் எதிர்பாராத விதமாக ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் இந்தப் படத்தை நிராகரித்துவிட்டார்கள். தானே தயாரித்த இந்தப் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டார் ரஜினி. இது அவருடைய தொழில் வளர்ச்சிக்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய ஒரு பின்னடைவாக அமைந்தது. ரஜினி படம் என்றால் வசூல் மழை பொழியும் என்ற எண்ணம் நிச்சயம் தகர்ந்தது. மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் மூலம் மீண்டார். ஆனாலும் வசூல் அளவில் அவருடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது சவாலாகத்தான் இருந்தது. சந்திரமுகியைத் தொடர்ந்து சிவாஜி வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து வெளியான குசேலன் சொதப்பியது. பின்னர் எந்திரன் வெற்றிக்குப்பிறகு லிங்கா, கோச்சடையான் என இரண்டு தோல்விகள். அதன் பிறகு கபாலி, காலா என்று ஓரளவு சுதாரித்தார். இப்போது பழைய படங்களின் ரீமேக் போல பேட்டை, தர்பார் என்று வருடத்திற்கு ஒரு படம் நடித்து அஜித், விஜய் போன்றவர்களுடன் வசூலில் போட்டியிட முயற்சி செய்கிறார். நான் யானையல்ல குதிரை, விழுந்தால் எழுந்து ஓடுவேன் என வசனமெல்லாம் பேசினார். ஆனால் முற்காலம்போல ஓட முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒருவிதத்தில் ரஜினி பிம்பத்தின் முதல் தகர்ப்பு பாபா என்றால் மிகையாகாது. அதற்குக் காரணம் அவர் கட்டமைக்க முயற்சி செய்த நாத்திகம், ஆத்திகம் முரண். பெரியாரின் நாத்திகமும், சமூக நீதியும் பாபா படத்தில் நாத்திகராக இருக்கும்போது பெரியாரைக் குறிப்பிடுவார். திராவிட அரசியலில் முக்கியக் குறியீடாக, பிம்பமாக இருக்கும் பெரியாரை நாத்திகராகச் சித்திரித்து அவர் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடலாம் என்ற விழைவே இதில் தென்படுகிறது. இதில் மிகப்பெரிய பிழை என்னவென்றால் பெரியாரின் இயக்கத்தின் மையம் நாத்திகப் பிரசாரம் அல்ல. அது சமூக நீதி எனப்படும் ஏற்றத் தாழ்வு நீக்கத்தையே மையமாகக் கொண்டது. பார்ப்பனீய இந்துமதம் சாதீய ஏற்றத் தாழ்வைப் பேணுவதால், பார்ப்பனர்களை உயர்பிறப்பாளர்களாகக் கருதுவதால் அதை எதிர்ப்பது அவசியமாகியதே தவிர, கடவுள் மறுப்பையே இறுதி லட்சியமாகக் கொண்டவரில்லை பெரியார். அப்படி இருந்திருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கையே சாத்தியமில்லை. சமூக நீதியே முக்கியம், பகுத்தறிவு, நாத்திகம் போன்றவை அதற்கு உறுதுணை மட்டுமே என்பதால்தான் கோயில்கள் இருக்கும்வரை அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடிகிறது. இது மக்களுக்கு இயல்பாகப் புரிகின்ற விஷயம். அதனால்தான் அவர்கள் கடவுளை வழிபட்டாலும், பெரியாரையும் பெரிதும் மதிப்பார்கள். பெரியாரும் கடவுள் பற்றாளர்களுடன் சேர்ந்து இயங்க மறுத்ததில்லை. தன்னுடைய இயக்கத்தின் செயல்பாடுகளுக்குக் கடவுள் மறுப்பை முன் நிபந்தனையாக வைத்ததும் இல்லை. குன்றக்குடி அடிகளாருடன் அவருக்கு இருந்த நல்லுறவே இதற்கு முக்கியச் சாட்சி. மக்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளைப் பேணுவதற்கும் கடவுள் நம்பிக்கை காரணமாக இருக்கக் கூடாது என்பதால், கடவுள் கொள்கையைக் கேள்வி கேட்கும் ஆற்றலை வலியுறுத்தினாரே தவிர, கடவுள் மறுப்பு மட்டுமே சமூகத்தை மாற்றிவிடும் என்று எண்ணும் அளவு எளிய மனம் படைத்தவரல்ல பெரியார்.   இதனால் பெரியாரின் கடவுள் மறுப்பை மையப்படுத்தி, அதை மறுத்து, மக்களின் இயல்பான பாதுகாப்பின்மை சார்ந்த இறையுணர்வை, புனிதங்களுக்கான ஆசையைத் தூண்டிவிட்டால் திராவிட இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என நினைப்பது பயன் தராது. ரஜினி இதைப் புரிந்துகொள்வது முக்கியம். வேறொன்றையும் அவர் நினைவில்கொள்ள வேண்டும். அவர் என்ன தத்துவம் பேசுகிறார் என்பதற்காக யாரும் அவர் படங்களுக்குச் செல்வதில்லை. அவரது ஸ்டைல் எனப்படும் அங்க சேஷ்டைகளுக்காகத்தான் செல்கிறார்கள். பாபாவில் ஆன்மிகம் பேசி வீழ்ந்த பிம்பத்தை, சந்திரமுகியில் வேட்டையனாக “லகலகலகலக” என்று வில்லத்தனமாக ஒலியெழுப்பிதான் மீட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. எந்திரனில் “மே” என்று ஆடு போல கத்தியபோது அரங்கம் அதிர்ந்தது. இதை வைத்துக்கொண்டு அரை நூற்றுண்டுக்காலம் தமிழ் சமூகத்தை மானமுள்ள சமூகமாக மாற்ற ஓய்வின்றி உழைத்த ஒரு மாமனிதனை கேள்விக்கு உட்படுத்திவிடலாம் என நினைப்பது அறியாமையின்றி வேறொன்றும் இல்லை. பாபா படத்தில் ஒரு பாட்டு கவிஞர் வாலி எழுதியிருப்பார். ‘ஆயிரம் கோடி அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்’ என்று. அந்த அதிசயங்களில் ஒன்றாக நாத்திகம் மறைந்து ஆத்திகம் பூப்பதும் வரும். அந்த வரிகளைக் கவனிக்க வேண்டும். கடவுளை மறுத்து இவன் நாள் தோறும் கூறினானே நாத்திகம் பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே பூத்த தென்ன ஆத்திகம் திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி அதிசயம் அதிசயம் பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி பெரியார், ராஜாஜி ஆகும் அதிசயம் பாபாவின் ஜாதகத்தில் இருக்கலாம். தமிழக வரலாற்றில் அதற்கு இடம் கிடையாது. இங்கு பெரியார்கள் மட்டுமே பெருகுவார்கள். ஏனெனில் பெரியார் என்பது நாத்திகமல்ல; சமூக நீதி.   https://minnambalam.com/k/2020/01/20/15