• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ஏராளன்

நாமார்க்குங் குடியல்லோம்

Recommended Posts

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

பொழிப்புரை :

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின் .
 
திருநாவுக்கரசரின் தேவாரம் தீடிரென்று நினைவு வந்தது.
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ..... சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ... வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.... ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மையென்றும் தீமையென்றும் நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும் துணிந்தபின் பயமில்லையே கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ... சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.  
  • இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது   இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 10,  2020 09:37 AM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.  இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  7,93,802-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,506-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளில்  பதிவாகும் உச்சபட்ச எண்ணிக்கை இதுவாகும்.  அதேபோல், கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 475 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,604- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  4,95,513- ஆக உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  2,76,685 - ஆக உள்ளது.  https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10093707/India-reports-475-deaths-and-the-highest-singleday.vpf  
  • தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,216 பேர் பாதிப்பு: மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்று தமிழகத்தில் இன்று 4,231பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,216 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. 4,231 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 28.7 சதவீதத் தொற்று சென்னையில் (1,216 ) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,26,581-ல் சென்னையில் மட்டும் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 58.2 சதவீதம் ஆகும். 78,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 61.7 சதவீதமாக உள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 72 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 3 லட்சத்து 35 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 4,175 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 145 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 3,35,739. சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1,765-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,765 பேரில் சென்னையில் மட்டுமே 1,169 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 66.2 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 73,728-ல் 1,169 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3% ஆக உள்ளது. சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 30,000 பேருக்குச் சோதனை செய்யப்படுவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 2,23,724 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் சவுதி அரேபியாவைப் பின்னுக்கு தள்ளி 13-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி 19-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இன்றைய எண்ணிக்கை 1,26,581 என்கிற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 104,864 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கத்தாரைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 38,419 ஆக உள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,015 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் எகிப்துக்கு அடுத்தபடியாக ஸ்வீடனைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 25-வது இடத்தில் உள்ளது. * தற்போது 53 அரசு ஆய்வகங்கள், 47 தனியார் ஆய்வகங்கள் என 100 ஆய்வகங்கள் உள்ளன. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு: * டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,652. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 36.8 சதவீதம் ஆகும். * மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 14,91,783. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 1.8 சதவீதம் ஆகும். * இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 42,369. இது .52 சதவீதம் ஆகும். * மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 9.9 சதவீதம். * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,26,581. * இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,231. * மொத்தம் (1,26,581 ) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 78,161 (63.2 %) / பெண்கள் 49,173 (38.8 %)/ மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் ( .01 %) * தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,544 (60.1%) பேர். பெண்கள் 1,687 (39.9 %) பேர். * இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,994 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 78,161 பேர் (61.7 %). * இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 65 பேர் உயிரிழந்தனர். இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 43 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,765 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,169 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 64 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 10 பேர் ஆவர். இது 15.3 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 8 பேர் ஆவர். இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 25 நாட்களேயான பச்சிளங்குழந்தையும் அடக்கம். 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த எவ்வித இணை நோய்கள் எதுவுமில்லாத 32 வயது இளைஞர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் மூச்சுத்திணறால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இதேபோன்று திருவள்ளூரைச் சேர்ந்த 38 வயது இளைஞர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டைச் சேர்ந்த 34 வயது இளைஞர் 3 நாட்கள் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 39 வயது இளைஞர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் எவ்வித நோய் பாதிப்புமில்லாதவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டையைச் சேர்ந்த 36 வயது இளைஞர் எவ்வித நோயுமில்லாத நிலையில் கோவிட் தாக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்ததில் ஆண்கள் 47 பேர் (72.3 %). பெண்கள் 18 (37.7 %) பேர் ஆவர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 58 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர். தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,216 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 3,015. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 28.7 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 71.3 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 7,386, திருவள்ளூர் 5,877, மதுரை 5,299, காஞ்சிபுரம் 3,038, திருவண்ணாமலை 2,758, வேலூர் 2,344, கடலூர் 1,480, தூத்துக்குடி 1,754, ராமநாதபுரம் 1,754, சேலம் 1,502, கள்ளக்குறிச்சி 1,539, விழுப்புரம் 1,370, ராணிப்பேட்டை 1,404, திருநெல்வேலி 1,409, தேனி 1,387, திருச்சி 1,170, விருதுநகர் 1,595, கோயம்பத்தூர் 1026 ஆகியவை 1000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும். அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன. 18 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 18 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னையில் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 5 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன, 12 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 34 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 145 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 4,175 பேர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6,277 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 3,255 பேர் (51.8 %). பெண் குழந்தைகள் 3,022 பேர் (48.2%). 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,04,970 பேர் (82.9%). இதில் ஆண்கள் 64,656 பேர். (61.5%) பெண்கள் 40,292 பேர் (38.5%). மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் (.09%). 60 வயதுக்கு மேற்பட்டோர் 15,334 பேர் (12.1%). இதில் ஆண்கள் 9,475 பேர் (61.7%). பெண்கள் 5,859 பேர் (38.3 %). இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   https://www.hindutamil.in/news/tamilnadu/563585-people-infected-with-coronavirus-in-tamil-nadu-people-affected-in-chennai-9.html