• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

எங்க இனத்திலிருந்துதான் நீங்களும் வந்தீங்க சாமியோவ்....குவார்டர் அடித்து விட்டு கும்மாளமிடும் குரங்கு

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Nov14__646343410015107.jpg

நெல்லை: குரங்காடி வித்தைகாட்டி வரும் குரங்கு அவரைப்போல் தினமும் ஒரு குவார்டர் மதுவை உள்ளே தள்ளிவிட்டு கும்மாளமிடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அந்த ருசிகர செய்திதான் இங்கே தரப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை, மாலை என பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்வார்கள். இதுபோல் குரங்காட்டி ஒருவரும் அடிக்கடி இந்த ரயிலில் வருவார். அவர் கையில் நன்றாக கொழுத்து வளர்ந்த 3 வயது ஆன ஆண் குரங்கை அழைத்து வருவார். ரயிலில் பயணம் செய்பவர்களிடம் குரங்கு அன்பாக சேட்டை செய்யும், நாம் முறைத்துபார்த்தால் அதுவும் முறைக்கும். என்ன சாமியோவ்..அப்படி பார்க்கிறீக..எங்க இனத்தில் இருந்துதான் நீங்களும் வந்தீக..என அந்த குரங்கு நம்பை பார்த்து சொல்லாமல் சொல்லி காட்டும். அடிக்கடி குரங்கை பயணிகள் பார்ப்பதும், அதை சீண்டி பார்க்கவும் தவறமாட்டார்கள். அந்த குரங்காட்டி யார், எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்? என பயணிகள் சிலர் அவரது வாயை நோண்டினார். அப்போது அவர் தனது குரங்கு பற்றி சொன்ன கதை சற்று வித்தியாசமாக இருந்ததால், அவரை பயணிகள் சூழ்ந்து கொண்டு ருசிகர கதையை கேட்க தயாரானார்கள்.

சாமியோவ் நமக்கு ஆறுமுகநேரி பகுதிதாங்க சொந்த ஊர், ரொம்ப வருஷமா இந்த தொழில் உள்ளேன். நான் வளர்க்கும் குரங்கும் எனக்கு ஒரு செல்லப்பிள்ளைதான். அவனை விட்டு என்னால் பிரியமுடியாது. அவனும் என்னை விட்டு பிரியமாட்டான். நான் ஊர் ஊராக சென்று வித்தை காட்டி பிழைத்து வருகிறேன். எனக்கு குடிப்பழக்கம் உண்டு. கிடைக்கும் வருமானத்தை பொறுத்து குவார்ட்டரோ, அதற்கும் மேலோ குடிப்பது வழக்கம். நான் குடிப்பதை என்னோடு குரங்கும் பார்த்துக்கொண்டே இருக்கும். இப்படித்தான் ஒருநாள் குடித்து விட்டு பாட்டிலில் மீதி வைத்திருந்த மதுவை குடித்து விட்டது. அதன் ருசி..அதற்கு பிடித்து விட்டதோ என்னவே...தினமும் நான் குடிக்கும்போது அதை பிடிங்கி குடிக்க ஆரம்பித்தது. நான் பிடுங்கி பார்த்தும் முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி தினமும் நான் குடிக்கும்போது, அதற்கும் ஒரு குவார்டர் வாங்கி கொடுப்பேன். அது தண்ணீர் எதுவும் கலக்காமல் ராவாக அப்படியே ஒரு நொடியில் குடித்து விட்டு பாட்டிலை தூக்கி எறிந்து விடும். அதன் பிறகு கேட்கவேண்டாம். அதன் போதையில் நன்றாக வித்தை காட்டி குத்தாட்டம் போடுவான். நான் சொன்னபடி எல்லாம் செய்வான்.. அவனுடைய செய்கை எனக்கும் பிடித்து போகவே.. நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரு பாட்டில் குடிக்க வைத்துதான் கூட்டிச்செல்வேன். இப்படி ரொம்ப வருஷமா நடக்குங்க சாமி.... ஒரு நாள் வாங்கி கொடுக்கவிட்டால் சும்மா விடமாட்டான் என்னை பிறாண்டி எடுத்து விடுவான்.

இப்படித்தான் ஒருநாள் குரும்பூரில் வித்தைக்காட்டி கொண்டிருந்தேன். அப்போது பேன்ட் சர்ட் அணிந்த இருந்த இருவர் வந்தனர். அவர்கள் பார்க்க போலீஸ்காரர்கள் மாதிரி தெரிந்தது. குரங்கின் வித்தையை ரசித்துக்கொண்டிருந்த அவர்கள்.

என்னை அழைத்து, ஏம்பா..குரங்கை வைத்து வித்தைகாட்டுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தப்பு என்பது உனக்கு தெரியுமா? நாங்கள் வனத்துறையினர். உனது குரங்கை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவோம் என்ற மிரட்டினர். சாமியோவ்...நீங்கள நல்லா இருக்கணும்.. இந்த குரங்கு என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியாதுங்கோ...அதனால் குடிக்காமல் இருக்கவும் முடியாது என்று அவர்களிடம் கெஞ்சினேன். அதற்கு அவர்கள், உன் குரங்கு குடிப்பதாய் சொல்கிறார். அது குடித்து விட்டால் குரங்ைகை விட்டு விடுகிறோம்..இல்லாவிட்டால் குரங்கை பிடித்து சென்றுவிடுவோம் என்றனர்.

நீங்கள் வாங்கி குடுங்க சாமி...அதற்கு பிறகு என்ன நடக்குன்னு பாருங்க..என்று நானும் கூறினேன். உடனே அவர்கள் அங்குள்ள டாஸ்மாக்கிற்கு சென்று இரண்டு குவார்ட்டர் பாட்டில் வாங்கி வந்தனர். ஒன்று உனக்கு..மற்றொன்னு உன் குரங்கிற்கு என கொடுத்தனர். நானும் மூடியை உடைத்து அதனிடம் நீட்டினேன். அதை வாங்கி என் செல்லப்பிள்ளை..மடக்..மடக் என்று குடித்து விட்டான். இதை பார்த்த வனத்துறையினர்..ஆச்சரியப்பட்டு, இப்போது நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்..உன் குரங்கை நாங்கள் பிடித்து போனாலும் அது கண்டிப்பாக காட்டில் நிற்காது என கூறிவிட்டு சென்றனர். இப்படி நான் வளர்க்கும் இந்த பாசக்கார குரங்கால் அது பிழைப்பும், என்னோட பிழைப்பும் போய்க்கொண்டிருக்கிறது என அவர் தனது கதை கூறி முடித்தார். அதற்குள் அவர் இறங்கும் இடம் வந்ததும் இறங்கினார். அந்த குரங்கும் பயணிகளுக்கு டாட்டா காட்டி விட்டு பிரியாவிடை பெற்று சென்றது. மனிதன்தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி போய்விட்டான் என நினைத்தோம். ஆனால் விலங்குகளும் மதுவின் ருசியை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன என்பது  இந்த குரங்காட்டியின் குரங்கு சாட்சியாகும்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541900

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தம்முடைய எள்ளு பாட்டி தமிழ்நாட்டில் உள்ள கடலூரை சேர்ந்தவர் என்று, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு தொழில் குழுமமான விர்ஜின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) தெரிவித்துள்ளார். தமது முன்னோர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 4 தலைமுறைகள் கடலூரில் வாழ்ந்ததாகவும், தமது எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த Aria என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். தமது ரத்தத்தில் இந்திய கலப்பு இருப்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். https://www.polimernews.com/dnews/92455/என்னுடைய-எள்ளு-பாட்டிகடலூரை-சேர்ந்தவர்--பிரிட்டன்-தொழிலதிபர்-தகவல்
  • மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.! மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், லீக்ஸ், கரட், பீட்ரூட் மற்றும் போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெண்டிக்காய், பயற்றங்காய், புடலங்காய், பாகற்காய், கத்தரிக்காய் உட்பட்ட மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளது. http://www.vanakkamlondon.com/மரக்கறிகளின்-விலைஅதிகரி/
  • முன்னம் ஒரு பதிவைப்பார்த்திருந்தேன் புங்குடுதீவில் ஒரு கோவில் மண்டபம் கட்டுகிறார்கள் அம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களும் பல இலட்சம் செலவு என, இதுபோல் குறிக்கட்டுவான் நோக்கிப் பயணம்படும்போது பிரதான வீதியிலிருந்து தூரமாக அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு உள்நுழைவு வளைவொண்றை பிரதான வீதியின் திருப்பத்தில் கட்டுகிறார்கள் அதன் செலவு பலகோடியைத்தொடும் என்பது எனது கணிப்பு. சரி விசையத்துக்கு வருவம் தற்போதைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களது கருத்துப்படி காற்றாலைகள் சரியான சுற்றாடல் தொடர்பான ஆராய்வு இல்லாது கண்டமேனிக்கு அமைத்தால் அப்பிரதேசத்தின் உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் காலப்போக்கில் அவ்விடத்தின் ஈரலிப்புத்தன்மை மற்றும் அப்பகுதியில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும் என. நூறு விகிதம் இல்லாதுவிட்டாலும் தற்போது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்கத்துக்கு மாறான மின்னாறல் தயாரிப்பு என்பது காற்றாலையை விட செலவு குறைந்ததும் சாமானியர்களும் அதில் மிதலீடு செய்யக்கூடியதுமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் முறையே. மீண்டும் புங்குடுதீவுக்கு வருகிறன்  தற்போது யாழ்குடாநாட்டில் அதிகநிலப்பிரதேசம்  கட்டாந்தரையாக இருப்பதும் எளிதில் வெளியார் எவரும் உள்நுளைய முடியாதபடியான புவியியல் அமைப்பைக் கொண்டிருப்பதும் அதேவேளை இலகுவான போக்குவரத்துக்கான உள்ளகக் கட்டமைப்பை ஓரளவுக்குக் கொண்டிருப்பதும் புங்குடுதீவுதான் அப்பிரதேசத்தில் பரிசோதனை முறையிலாவது நாம் சூரிய ஒளியின் மின் தயாரிக்கும் முறையினை மேற்கொள்ளுவோமாகவிருந்தால் காலப்போக்கில் அது சிறந்த பயனைத் தரும். நான் மேலே குறிப்பிட்ட முதல் பந்தியை விரும்பினால மீண்டும் வாசிக்கவும் கொசுறாக.தற்போது கனடாவில் வாழும் பொன் சுந்தரலிங்கம் அவர்களது முயற்சியில் புஙுடுதீவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது அதற்கு புலம்பெயர் தேசங்களிலிருந்தே நிதி சேமிக்கப்பட்டது அதற்குக்காசு கொடுத்தவரில் ஒருவர் கூறினார் மண்டபத்தைக் கட்டி விட்டிருக்கினம் மற்றப்படி அங்கினைக்கை ஆடுமாடுகள் வந்து ஒதுங்குதுகள் என. இப்படியான வீணாப்போன விடையங்களில் நாம் ஈடுபடாமலும் கோயில் மண்டபம் கட்டுறன் தேர் கட்டி தேருக்கு மண்டபமும் கட்டுறன் எனக்கூறு கோடிக்கணக்கில காசை முடக்கி தேரிழுக்க ஆக்கள் இல்லாமல் ஜே பி சி இயந்திரத்தை வைத்து இழுத்து  தெருவில் விடுவதுமாக இராது, புலம்பெயர்தேசத்தில் வாழும் நம்ம்மவர்கள் ஒருவர் இரண்டு சூரியத்தகடுகளுக்கு காசுகொடுத்து மின்சாரம் தயாரிக்க முற்பட்டால் காலப்போக்கில் யாழ்குடாநாட்டின் மின்சாரத்தேவையில் கணிசமான அளவை புங்குடுதீவு வினியோகிக்கும்.  காற்றாலை என்பது பெரிய பெரிய முதலாளிகளுக்கான முதலீடு. 
  • "எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மூடப்பட்டு, நெல் களஞ்சிய சாலையாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது." இதே அரசு மீண்டும் சீனா சார்ந்து 'அபிவிருத்திகளை' செய்து அவற்றையும்  களஞ்சிய சாலைகளாக மாற்றப்படலாம், மக்கள் கடனாளிகளாக மாற்றவும் படலாம்.  
  • வேகமாக வளர்ந்து வரும் முஸ்லீம் மக்களின் வீதத்தை வட இந்தியாவில் குறைக்க, இந்துத்துவா சார்ந்த பா.ஜ.க.  இந்த முடிவை எடுத்துள்ளது என பார்க்கலாம். இதன் மூலம் வரும் தேர்தலிகளில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க உதவும்.  தென் இந்தியாவில், தமிழர்கள் உட்பட, இதே அணுகுறையை எடுக்கவில்லை. தமிழக அரசியல் களத்திலும், இது ஒரு முதல்வரை முடிவு செய்யும் விடயமும் இல்லை. எனவே,  பா.ஜ.க. ஈழ தமிழர்கள் சார்ந்து பார்க்கவும் இல்லை.  மேற்குலகம் சார்ந்த நாடுகளில் ஈழ அகதிகள் புகலிடம் கேட்டபொழுது, பலரிடமும் ஏன் நீங்கள் உங்கள் அண்டைய நாடான இந்தியாவில் புகலிடம் கேட்கவில்லை என்று வினவப்பட்டதும் உண்டு.