Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பச்சைப்பாவாடை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்பாவாடை

கவி அருணாசலம்

64-DC34-E3-8-A64-4035-9-D03-7-BCB3-D0007

அப்போ எனக்கு பதினைந்து வயது. வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன். வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை.

வல்லிபுர ஆழ்வார் ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் அவருக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன.

முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதாலோ என்னவோ பச்சையும் எங்களைக் கண்டுவிட்டது. கண்டதும் வெருண்டு தாயின் பின் ஒளிந்து கொண்டது.

 

எப்படியும் மேகத்தை நீங்கி நிலவு தெரியும் எனக் காத்திருந்தோம். நினைப்பு வீணாகவில்லை. நிலவு வெளி வந்தது. நாங்கள் தன்னைப் பார்க்கிறோமா என்று பார்ப்பதுக்கு முதலில் அவள் தலை தெரியும் பிறகு விழி நோக்கும். அண்ணல்கள் நாங்களும் நோக்க தாயின் பெரிய உருப்படிக்குள் அந்த நிலவு மீண்டும் மறையும். இப்படியே கொஞ்ச நேரம் விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன.

எங்களுக்குள் குதூகலம் குடிகொண்டது. இப்படி ஒரு தடவை அவள் எட்டிப் பாக்கும் போதுபாக்கிறாளடா..பாக்க்கிறாளடாஎன்று என்னை அறியாமல் சத்தமாகச் சொல்லி விட்டேன்.

எங்கை பாக்கிறாள்? எங்கை பாக்கிறாள்? „ என்று ஒரு குரல் கேட்டது.அந்தக் குரல் நிச்சயமாக கலையரசனுடையதோ மகேந்திரனுடையதோ இல்லை. ஆனால் எனக்கு நன்றாகப் பரீட்சயமான குரல்தான். குரல் எனக்குப் பின்னால் மேலிருந்து வந்தது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எனது தமிழ் வாத்தியார் ஏகாம்பர மாஸ்ரர். இப்போ நிலவு போய் மேகம் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது. பக்கத்தில் பார்த்தேன் கலையரசனுமில்லை மகேந்திரனுமில்லை. நிலமை அறிந்து இருவரும் ஓடிவிட்டார்கள். எங்கள் மொழியில் சொல்வதானால்மாறிட்டாங்கள்’.

ஏகாம்பர மாஸ்ரர் எனது கையைப் பிடித்துக் கொண்டார்.

கவி அந்தப் பச்சைப் பாவாடை போட்டிருக்கிறாள் அதையே சொல்லுறாய்? „ கேட்டது ஏகாம்பர மாஸ்ரர்.

தலையைக் குனிந்து கொண்டு விழியை உயர்த்தினேன் பச்சை என்னை பாவமாகப் பார்ப்பது போலிருந்தது.

“கவி என்ன பயப்பிடுறாய்.? உனக்கு வயசு வந்திட்டுது நீ பெட்டைகளைப் பாக்கலாம். பிழையில்லை. அந்த பச்சைக்குப் பக்கத்திலையிருக்கிற மஞ்சளும் அவ்வளவு மோசமில்லை. நீயென்ன சொல்லுறாய்.?  வார்த்தைகளால் வாத்தியார் கொன்று கொண்டிருந்தார்.

மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறிக் கொண்டேன். வெளியேறும் போது, “நாளையான் கட்டுரைக்கு கடற்கரைத் தீர்த்தத்தைப் பற்றி எழுது என்ன? „

ஏகாம்பர மாஸ்ரரின் வார்த்தைகள் காதில் விழ எனக்கு கலருகள் எல்லாம் மறைந்து போய் கறுப்பு மட்டும்  தெரிய இருட்டுக்குள் நடப்பது போலிருந்தது.

 

15.11.2019இல் தனது 86 வயதில் மறைந்த எனது மதிப்புக்குரிய தமிழ்,சமய ஆசிரியரான திரு.சேனாதிராஜா ஏகாம்பரநாதன் அவர்கள்   என்றும் என் நினைவில் இருப்பார்

 • Like 11
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kavi arunasalam said:

15.11.2019இல் தனது 86 வயதில் மறைந்த எனது மதிப்புக்குரிய தமிழ்,சமய ஆசிரியரான திரு.சேனாதிராஜா ஏகாம்பரநாதன் அவர்கள்   என்றும் என் நினைவில் இருப்பார்

வேலாயுதம் மகா வித்தியாசாலை அதிபராக இருந்த ஏகாம்பரநாதன் ஆசிரியர் மாணவர்களின் வயதுக்கோளாறுகளைப் புரிந்தவர்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா அன்றுதான் எவ்வளவு சுவையான அனுபவங்கள்......கவி அருணாசலம்....!  உங்களுக்கு வல்லிபுரக்கோவில் என்றால் எங்களுக்கு மானிப்பாய் மருதடி விநாயகர், வருடப்பிறப்பன்று தேர் உற்சவம் சொல்லி வேல இல்லை.....!  😂

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் நினைச்சேன் அந்த பசசை தாவணி அவருடைய மகளாக்கும் என்று 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 5:40 PM, ரதி said:

நான் நினைச்சேன் அந்த பசசை தாவணி அவருடைய மகளாக்கும் என்று 😀

சேம் ப்ளட் 😄

 

 • Haha 1
Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்குள்ளும் பல குட்டிக்கதைகள் இருந்துகொண்டேதான் இருக்கும்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 10:40 AM, ரதி said:

நான் நினைச்சேன் அந்த பசசை தாவணி அவருடைய மகளாக்கும் என்று 😀

இருந்திருக்கலாம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 4:40 AM, ரதி said:

நான் நினைச்சேன் அந்த பசசை தாவணி அவருடைய மகளாக்கும் என்று 😀

நானும் அதையே நினைத்தேன். Lol

 • Haha 1
Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 10:40 AM, ரதி said:

நான் நினைச்சேன் அந்த பசசை தாவணி அவருடைய மகளாக்கும் என்று 😀

நானும்

கடல்தீர்த்த கட்டுரை என்னவானது? எழுதினீர்களோ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நாஞ்சில் said:

கடல்தீர்த்த கட்டுரை என்னவானது? எழுதினீர்களோ?

இல்லை. அந்த விடயத்தை வல்லிபுரக் கோவிலிலேயே அவர் மறந்துவிட்டார். நான்தான் இன்னும் மறக்காமல் இருக்கிறேன்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மன்னிப்பு எல்லாம் தேவை இல்லை. ஆளையால் தெரியாமல் யாழ் களத்தில் கருது பரிமாற்றம் செய்யும்போது தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புக்கள் கூடத்தான். எனவே உங்கள் விளக்கம் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயாத்தை தந்ததுதான் உண்மை. எனக்கு களத்தில் ஒரு சிலரைவிட மற்றவர்கள் எல்லாரும் என்ன வயது, ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல்தான் இருக்கிறது. நீங்கள் என்னைவிட மிகவும் வயது குறைந்தவர் என்று தெரிகிறது. மூத்த சகோதரி நிச்சயம் எனது வயதாக இருக்கமாட்டா என்பதால் தங்கள்  complement யை  ஏற்றுக்கொள்கிறேன். எங்கட காலத்தில மிஷன் கொஞ்சம் Bootcamp மாதிரித்தான் . அதனால்தான் அடிக்கடி தப்பி ஓடி மூன்று  பிள்ளயார் கோயில் , கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவ காண இருந்த பஸ் ஸ்டாண்டுகள் எல்லாத்திலயும் தான் எமது பொழுதுபோக்கு. 70' களில் நள்ளிரவு வேளைகளில் கூட நண்பிகள் கூட்டம் மிஷன், கோயில், வெசாக் விளக்கு என்று காலி வீதியில் தனியா நடந்து போகக்கூடியதாக இருந்தது. பின்னுக்கே கூட்டமாக வரும்  bodyguards ஆள் தனி பாதுகாப்பு வேற. சுமந்திரன், வரகுணன் எல்லோரும்தான்.வருடத்தில் இப்படி ஓரிரு நாட்கள் தான் இப்படி போக வீட்டில் இருந்து அனுமதி கிடைக்கும். அதுவும் மிஷன் என்று சொல்லிவிட்டு கோவிலில் போய் பிராக்கு பாக்கிறது. எல்லா பெடியன்களுக்கும் பட்டப்பெயர் வைத்துதான் கதைப்பது. அப்போதெல்லாம் நேரடியாக பேசுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டம், நாங்கள் ஒரு கூட்டம். சாடை மாடையில்  தான் கதை. பெடியள் மட்டும் சத்தம் போட்டு கதைப்பார்கள். சவோய், சப்ஹயர், ஈரோஸ் தியட்டர்களுக்கு டியூஷன் என்று சொல்லிவிட்டு போவது என்று அந்த காலங்கள் இனி திரும்பி வரவே மாட்டுது.
  • பிரச்சினை என்னவென்றால் யாரும் எமக்கு நேர்மையுடன் உதவ வருவர் என்ற எதிர்பார்ப்பே அர்த்தமற்றது! உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை! அவர்களுக்கு தேவையான எங்களுக்கு இழப்பில்லாத ஒன்றைக் கொடுத்து, எங்களுக்கு அவசியமான ஒன்றைப் பெற்றுக் கொள்வோம் என்ற flexibility இருந்திருக்க வேண்டும்!  இங்கே பலர் நோர்வேயை திட்டி தீர்க்கும் அதே நேரம், ஜப்பானில் நடந்த உதவி மாநாட்டை ஏன் நாம் புறக்கணித்து பேச்சுக்களை முடித்து வைத்தோம் என்று கேள்வி கேட்பதேயில்லை! ஏன்? அது தான் ஈழவரின் பலவீனம் என நினைக்கிறேன். எங்கள் குறைபாட்டை ஆராயவே மாட்டோம், மற்றவர் குறைபாட்டைப் பற்றி மூக்குச் சிந்திக் காலத்தை வீணாக்குவோம்!
  • எனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும்  நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன. ☹️ ஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.  👍
  • அப்பாவுக்கு சமஸ்க்ரிதம் உற்பட பல வட இந்திய மொழிகள் தெரிந்திருந்தது. அவர் கேட்டும் நான் ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை இன்னும் தொடர்கிறது. ஒய்வு காலத்தில் சமஸ்க்ரிதம், வீணை இவை இரண்டையும் விட்டதில் இருந்து தொடர்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.