• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

ஒளித்து வைக்கப்பட்ட நாடு

Recommended Posts

ஒளித்து வைக்கப்பட்ட நாடு

என் கிராமத்தின் பெயரை திரித்தனர்
மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை
ஒளிக்க முடியுமென நினைத்தனர்
என் நாட்டின் அடையாளமோ
பாறைகளைப் போல உறுதியானது

எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி
என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர்
சூழச்சிகளால் மறைக்க முடியாத
என் நெடு வரலாறோ
நதிகளைப் போல நீண்டது

எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி
என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர்
தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும்
எனது உறுதியான அடையாளங்களோ
தீயைப் போலப் பிரகாசமானது

கண்ணுக்குப் புலப்படாமலெனை
மிக மிக எளிதாக அழிக்க முடியுமென நினைத்தவர்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
காயங்களிலிருந்து
சிந்தப்பட்ட குருதியிலிருந்து
சாம்பலிலிருந்து
நான் எழுவேனென

என் முகத்தை சிதைத்துக்கொண்டிருப்பவர்கள்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
வலிய பாலை போன்ற அழிவற்ற என் முகத்தை
ஒருத்தி பிரசவிப்பாளென

சாம்பலால் யாவற்றையும் மூடியதாக நம்பியவர் 
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
பூமியின் அடியில் புதைக்கப்பட்ட தொன்மச் சிலைபோல
ஒளித்து வைக்கப்பட்ட எனது நாட்டின் பெயரை
நாளை ஒரு குழந்தை தேடுமென

தீபச்செல்வன்

Image may contain: 1 person
 
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அருமை! அருமை!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மாமனார், கணவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா: 8 வயது மகளுக்கும் தொற்று உறுதி ஆனது   மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது 8 வயது மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நடிகை ரேகாவின் பங்களாவுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திப்பட உலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பதிவு: ஜூலை 13,  2020 05:45 AM மும்பை,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த மும்பை பங்களா வீட்டு வாசலில் மாநகராட்சி சார்பில் பேனர் தொங்கவிடப்பட்டு இருப்பதையும், மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததையும் படத்தில் காணலாம். கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவுடன் உலகம் போராடிக்கொண்டு இருக்கிறது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்த நோய்க்கிருமியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் நோய்த்தொற்று அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 8½ லட்சத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி இருந்தார். அடுத்த சில மணி நேரத்தில் அமிதாப் பச்சனின் மகனும், பிரபல நடிகருமான 44 வயது அபிஷேக் பச்சனும் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்டார். தனக்கும், தனது தந்தைக்கும் நோய்த் தொற்றின் தாக்கம் லேசாக இருப்பதாகவும், அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் அதில் அவர் கேட்டுக்கொண்டார். அவர்கள் இருவரும் மும்பை வில்லேபார்லேயில் உள்ள நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து நானாவதி தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர் அப்துல் சமத் அன்சாரி கூறுகையில், “தந்தை- மகன் இருவரும் தாங்கள் நன்றாக இருப்பதை உணர்கிறார்கள். நன்றாக தூங்கினார்கள். காலையில் சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அவர்களது உடல் நிலை சீராக உள்ளது” என்றார். பல்வேறு உடல் உபாதைகளால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக அமிதாப் பச்சன் ஏற்கனவே சில தடவை கூறி இருக்கிறார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை அறிந்து அவரது ரசிகர்களை கலக்கம் அடைந்து உள்ளனர். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அமிதாப்பச்சனின் மனைவி நடிகை ஜெயாபச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும், முன்னாள் உலக அழகியுமான 46 வயது ஐஸ்வர்யா ராய், அவரது 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், ஜெயாபச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருப்பதாகவும் மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று மாலை தெரிவித்தார். ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் நோய்த் தொற்று அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொற்றுக்கு ஆளாகாத ஜெயா பச்சனும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. 2-வது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுவதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டு உள்ள நானாவதி ஆஸ்பத்திரி முன்பு நேற்று காலை முதலே ரசிகர்கள் திரள தொடங்கினர். சாலையில் அவர்கள் கூடி நின்றதால், கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் மும்பை ஜூகு பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா முன்பும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அந்த பங்களாவிலும், அமிதாப்பச்சனின் அலுவலகத்திலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். அத்துடன் அந்த பங்களா ‘சீல்‘ வைக்கப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பு பேனரும் அங்கு வைக்கப்பட்டது. இதுதவிர மும்பையில் உள்ள அமிதாப்பச்சனின் மேலும் பங்களாக்களுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13033331/Corona-to-Aishwarya-Rai-following-Husbanad-and-fatherinlaw.vpf  
  • தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா: 3,617 பேர் குணம்; 68 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் 4,244 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 77 ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 617 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 89 ஆயிரத்து 532 பேர் குணம் அடைந்து உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் என 68 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 32 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, விருதுநகரில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், தூத்துக்குடியில் தலா 3 பேரும், தேனி, ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது மொத்த கொரோனா உயிரிழப்பு 1,966 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 843 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 870 முதியவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 571 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக 41 ஆயிரத்து 325 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவரை 15 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13040657/Corona-for-4244-newcomers-in-Tamil-Nadu-3617-cured.vpf    
  • திருமால் பெருமைக்கு நிகர் ஏது  
  • விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும்! கோத்தா ஆலோசனை   விவசாயப் பயிர்கள் ஏற்றுமதியின்போது பூரணப்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். கண்டி – ஹசலக பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மிளகை மீள் ஏற்றுமதி செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மிளகு விதைகள், மிளகுத் தூள் அல்லது வேறு பூரணப்படுத்தப்பட்ட விவசாய பொருட்களாக மாற்றி அதனை ஏற்றுமதி செய்யமுடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பெறுமதி சேர் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், அதிக அளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.   https://newuthayan.com/விவசாய-ஏற்றுமதிகளுக்கு-ம/  
  • சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து வர்த்தமானியை அரசு வெளியிட வேண்டும்..! கபே வலியுறுத்து! கொரோனா தொற்று காலப்பகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீண்டும் கொவிட்-19 அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த சூழலில், இவ்விடயம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அறிக்கையில், ”சுகாதார நடைமுறைகள் தொடர்பான இந்த தாமதமானது, பிரசாரங்கள் நடத்துவதை மிகவும் பாதித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களின் வர்த்தமானி, இவ்விடயங்களை செயற்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு தேவை. இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சுகாதார நெருக்கடி ஏற்படக்கூடும். நிச்சயமாக வாக்காளர்களின் எண்ணிக்கையை இது பாதிக்கும். வழிகாட்டுதல்களை வெளியிடுவது மட்டுமல்ல. அரசாங்கம் அவற்றை வர்த்தமானியிலும் வெளியிட செய்ய வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் அவற்றைச் செயற்படுத்த முடியும். இந்த வழிகாட்டுதல்களை யாரும் எதிர்க்கவில்லை, ஆனால் பிரசாரத்தின் போது யாரும் அவற்றைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. தற்போது நாட்டில் மீண்டும் கொவிட்-19 தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடுவது அவசியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.   https://newuthayan.com/சுகாதார-வழிகாட்டுதல்கள்/