Sign in to follow this  
nunavilan

ஒளித்து வைக்கப்பட்ட நாடு

Recommended Posts

ஒளித்து வைக்கப்பட்ட நாடு

என் கிராமத்தின் பெயரை திரித்தனர்
மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை
ஒளிக்க முடியுமென நினைத்தனர்
என் நாட்டின் அடையாளமோ
பாறைகளைப் போல உறுதியானது

எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி
என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர்
சூழச்சிகளால் மறைக்க முடியாத
என் நெடு வரலாறோ
நதிகளைப் போல நீண்டது

எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி
என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர்
தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும்
எனது உறுதியான அடையாளங்களோ
தீயைப் போலப் பிரகாசமானது

கண்ணுக்குப் புலப்படாமலெனை
மிக மிக எளிதாக அழிக்க முடியுமென நினைத்தவர்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
காயங்களிலிருந்து
சிந்தப்பட்ட குருதியிலிருந்து
சாம்பலிலிருந்து
நான் எழுவேனென

என் முகத்தை சிதைத்துக்கொண்டிருப்பவர்கள்
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
வலிய பாலை போன்ற அழிவற்ற என் முகத்தை
ஒருத்தி பிரசவிப்பாளென

சாம்பலால் யாவற்றையும் மூடியதாக நம்பியவர் 
ஒருபோதும் அறிந்திருக்கவில்லை
பூமியின் அடியில் புதைக்கப்பட்ட தொன்மச் சிலைபோல
ஒளித்து வைக்கப்பட்ட எனது நாட்டின் பெயரை
நாளை ஒரு குழந்தை தேடுமென

தீபச்செல்வன்

Image may contain: 1 person
 
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அருமை! அருமை!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எங்கப்பா துல்பனை காணம். சமாதானம் செய்ய வந்த விருந்தாளிகளுக்கு, இந்த சாத்து சாத்தி அனுப்பினதை சரி எண்டுறீங்களோ எண்டு நிற்பார்...
  • கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம் In ஆன்மீகம்     May 28, 2020 9:52 am GMT     0 Comments     1216     by : Dhackshala யாழ். தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லும் அடியவரின் கையில் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது. வேலினை பெற்றுக்கொண்ட அடியவர்கள் கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். இந்த யாத்திரை குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி விசாகம் அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர். இம்முறை கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தடைபடும் என எதிர்ப்பார்த்தபோதிலும் முருக பெருமானின் அருளால் இம்முறை யாத்திரை தடங்கல் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அருலாசியுடன் கதிர்காம கந்தனை சென்றடைவோம் என யாத்திரையில் பங்கேற்ற அடியவர் ஒருவர் தெரிவித்தார்.   http://athavannews.com/கதிர்காமம்-நோக்கிய-பாத-ய/
  • நன்னீர்  மீன்களை பொதுவாக தோலை உரிக்கப்பட வேண்டும். இங்கு வரும் pangasius (அது ஓர் cat fish) தோலுடனும், தோல் உரித்ததாகவும் சோதனையாக bbq அல்லது oven செய்து பாருங்கள். மணத்தில், சுவையில் வித்தியாசம் இருக்கும். இது திலப்பியாவுக்கும் பொருந்தும். Salmon இற்கும் பொருந்தும்.   ஏன் கடல் மீன்களுக்கும் பொருந்தும். ஆனால். கடல் மீன்களின் தோலுடையான் சேர்த்து சமைக்கும் மனமும் ருசியும் நாம் பழக்கப்பட்டு விட்டோம்.  razor அளவு கூருடைய filleting knife ஆல்  அநேகமான பெரிய மீன்களின்  செதில்களும் அதனுடன் சேர்ந்த தோலும் லும் வெட்டி நீக்கலாம்.    ஆனால், ஒரு போதுமே முட்கள் நீக்கப்பட கூடாது.
  • கிந்திய ஆமி தமிழ் பெண்களையும் தமிழ் மக்களையும் கொன்று குவித்ததை எல்லாம் மறந்து விட்டீர்கள். ஆனால் தமிழ்நாட்டு கட்சிகளால் மறந்தும் மறைக்கப்படும் அந்த சம்பவங்களை ஒவ்வொரு மேடையிலும் சீமான் காரணங்களை சொல்லி விளங்கப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றார்.    
  • உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட 200 பேர்! தேவையற்ற அச்சம் வேண்டாம் - ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பு கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த கடற்படை கடற்படை உறுப்பினரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடற்படை அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை கஃபூர் கட்டடத்தில் இருந்த கடற்படை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார, இந்த கட்டடமானது கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது, அதன் நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகிறது. குறித்த கட்டடத்தில் இருந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவருடன் அக்கட்டடத்தில் இருந்த சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கடற்படை வீரர் வெலிசர கடற்படை முகாமுக்கு சேவை வழங்கிய குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெலிசர கடற்படை முகாமில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. அதற்கமைய, வெலிசர கடற்படை முகாமுக்கு சேவை வழங்கும் வெளியக உறுப்பினர்களை வேறுபடுத்தி வைப்பதற்கு கஃபூர் கட்டடம் கடற்படையின் கீழ் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த கடற்படை உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144193