Jump to content

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கும் வாய்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mamalapuram.jpg

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கும் வாய்ப்பு

உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள புராதன நினைவு சின்னங்களை பராமரித்து பாதுகாத்து வரும் தொல்லியல் துறை ஆண்டுதோறும் நவம்பர் 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை உலக பாரம்பரிய வாரமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடற்கரை கோவில் வளாகத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது.

விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

http://athavannews.com/மாமல்லபுரம்-புராதன-சின்ன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

76605029_983007942049383_3296273312463716352_o.jpg?_nc_cat=107&_nc_oc=AQnHD8H_NXs2we21oMr9HkCoRRpAGtMrKZeRuHzBzdSmtnofbqofxEXi4XlO_wvDsEQ&_nc_ht=scontent-frt3-2.xx&oh=57e5364de19ac920d3fd10af0cba3c1a&oe=5E85927E

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

விழாவை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இதை முன்னோடியே சொல்லியிருக்கக் கூடாதா தமிழ்சிறி. 535 யூரோதானே இப்போ பிளேன் ரிக்கெற். போய்ப் பார்ததிருப்பேனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kavi arunasalam said:

இதை முன்னோடியே சொல்லியிருக்கக் கூடாதா தமிழ்சிறி. 535 யூரோதானே இப்போ பிளேன் ரிக்கெற். போய்ப் பார்ததிருப்பேனே

கவி அருணாசலம்.... எனக்கும், நேற்றுத் தான் இந்த செய்தி கண்ணில்  பட்டது.  😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கும், நேற்றுத் தான் இந்த செய்தி கண்ணில்  பட்டது.  😮

 

சர்வர் சுந்தரம் படத்தில் அன்று கே.ஆர் விஜயா தோழியர்களோடு ஓடி, ஆடி பாடிய இடமல்லவா. நல்லதொரு சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டேன்

அடுத்தமுறை முதலிலேயே அறியத்தாருங்கள் தமிழ்சிறி. மன ஆறுதலுக்காக கண்ணதாசன்எழுதிய அந்தப் பாடலை இங்கே இணைக்கிறேன் 

 

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

ஆட விட்டான் இந்த கடலினிலே

 

கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க

கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க

பொட்டு வைத்த பூவையர் போட்டி போட

பொல்லாத பருவத்தை கல்லாக்கியே

 

படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்

பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்

கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்

காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்...

 

அன்னமிவள் வயதோ பதினாரு

ஆண்டுகள் போயின ஆறுநூறு

இன்னும் இவள் முதுமை எய்தவில்லை

என்னதான் ரகசியம் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

 

சர்வர் சுந்தரம் படத்தில் அன்று கே.ஆர் விஜயா தோழியர்களோடு ஓடி, ஆடி பாடிய இடமல்லவா. நல்லதொரு சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டேன்

அடுத்தமுறை முதலிலேயே அறியத்தாருங்கள் தமிழ்சிறி. மன ஆறுதலுக்காக கண்ணதாசன்எழுதிய அந்தப் பாடலை இங்கே இணைக்கிறேன் 

 

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு

கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே

ஆட விட்டான் இந்த கடலினிலே

 

கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க

கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க

பொட்டு வைத்த பூவையர் போட்டி போட

பொல்லாத பருவத்தை கல்லாக்கியே

 

படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான்

பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்

கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்

காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்...

 

அன்னமிவள் வயதோ பதினாரு

ஆண்டுகள் போயின ஆறுநூறு

இன்னும் இவள் முதுமை எய்தவில்லை

என்னதான் ரகசியம் தெரியவில்லை

 

எல்லாவற்ரையும்... நல்ல நினைவில் வைத்திருக்கின்றீர்கள்,  கவி அருணாசலம்.
இந்தப் பாடலை... ஒளிப்பதிவில் பார்க்கும் போது, 
அந்த இடத்தை நாமும், நேரில்... பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.