• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ஏராளன்

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

Recommended Posts

56 minutes ago, Kadancha said:

அதனால், கோத்தா விரும்பினாலும், அமெரிக்காக விரும்பினாலும், சீனாவே கோத்தாவின் தெரிவு.

கோத்தாவின் மீது அமெரிக்கவிற்கு உள்ள பிடி மனித  உரிமைகள், போர் குற்றங்கள். இதை அமெரிக்கா ஏற்கனவே நினைவு படுத்தி விட்டது.      கோத்த அதிபர் பதவி எடுத்ததில் ஓர் முக்கியமான நோக்கம் அதை வாழ்நாளில் தவிர்பதற்காக. சீன இதை பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை.

மொட்டு விரிந்ததால் மட்டுமே அமெரிக்கா இதை கையில் எடுக்கும் நிலை வந்துள்ளது/வரும். அன்னம் பறந்திருந்தால், அமெரிக்கா இதை கையில் எடுக்கும் தேவை அநேகமாக வந்திருக்காது. 

இந்தியாவை பொறுத்தவரையில்  மனித  உரிமைகளை, போர் குற்றங்களை தானாக கையில் எடுக்காது. ஆனால், அமெரிக்கா எடுத்தால்  ஆதரிக்கும்.

இந்தியா வடக்கிலும் கிழக்கிலும் முதலீடுகளை இந்த ஐந்து வருடத்திற்க்கு செய்ய சிங்களம் விடுமா என்பதையும் காலம் தான் சொல்லும். பலாலி விமான நிலைய அபிவிருத்திகளை கூட ரணில் அரசு அவசரமாய் செய்து முடித்தது. இந்தியாவிற்கு சஜித் தோற்றால் அது முடியாமல் போய்விடும் என தெரிந்திக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. 

Share this post

Link to post
Share on other sites
On ‎11‎/‎19‎/‎2019 at 7:48 AM, Gowin said:

திருகோணமலை டு கொழும்புக்கு ஒரே பாதையோ

On ‎11‎/‎19‎/‎2019 at 12:24 AM, ஏராளன் said:

அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

'One Belt-One Road', Silk Road’s new challenges, opportunities

நிலத்தாலும் நீராலும் அமெரிக்கா தவிர்ந்த கண்டங்களை இணைக்கும் திட்டம்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kadancha said:

நீங்கள் அறிவது மற்றும் புரிவது எல்லாமே black-and-white ஆக, செய்திகள் மற்றும் அறிக்கைகளில் உள்ளவற்றை.

கோத்தா இற்கு, pentagon , zionist தொடர்புகள் இருந்தும், கோத்தா தனது மற்றும் ராஜபக்சே நலன்களின் அடிப்படையில் இயங்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அதற்கு, சீனாவே வசத்திப்படுத்தக்கூடிய உள்ளக மற்றும் வெளியாக அரச, நிதி, மற்றும் நிர்வாக அதிகாரங்கள், செல்வாக்குகள் மற்றும் கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இதை அமெரிக்கா செய்ய முடியாது.

அதனால், கோத்தா விரும்பினாலும், அமெரிக்காக விரும்பினாலும், சீனாவே கோத்தாவின் தெரிவு.

கோத்தாவின் மீது அமெரிக்கவிற்கு உள்ள பிடி மனித  உரிமைகள், போர் குற்றங்கள். இதை அமெரிக்கா ஏற்கனவே நினைவு படுத்தி விட்டது.      கோத்த அதிபர் பதவி எடுத்ததில் ஓர் முக்கியமான நோக்கம் அதை வாழ்நாளில் தவிர்பதற்காக. சீன இதை பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை.

MCC கொடையை மகிந்த கேட்டது, சீனாவின் கடன் சுமையில் இருந்து இடைவெளி பெறும் நோக்கில். அதுவும், மனிதஉரிமை, போர்க்குற்றம் பிரச்சனைகளும், MCC ஐ மகிந்தவிற்கு தடுத்து விட்டது.

இப்போதைய MCC கொடையில், ராபக்சே  குடும்பத்தித்ற்கே பிரச்சனையான விடயம் உள்ளது. காணிச் சந்தையை உருவாக்குதல். ராபக்சே  குடும்பத்தின் நலனில்  இதயத்திலும், மூளையிலும்  கைவைக்கும் விடயம். இது ராஜபக்சேகளின்  கைகளை கட்டி, சீனவின் கைகளை கட்டுவது. சீனாவும் விரும்பாது. காணிச் சந்தை, SOFA இற்கு அவசியம்.

SOFA வில், உள்நாட்டு அரசியல் பிரச்னைகள், சீன தடுக்கின்றமை.    

ஈஸ்டர் தாக்குதல் அமெரிக்கா தான் செய்தது என்று உண்மையில் இருந்தாலும்,  அதை பற்றி சிங்களத்தின் எல்லா அதிகார மையங்களுக்கும் 6 மாததிற்கு முதலே தெரிந்து இருந்தது. எல்லோரும் தத்தம் நன்மை கருதி, கண்டும் காணாமல் இருந்து விட்டதே உண்மை.

உங்களின் புரிதல் எனக்கு தெரியாது, எல்லா western அரசியல், பொருளியல் மற்றும் பாதுகாப்பு வட்டரங்களில்,  கோத்தாவின் வெற்றி சீனாவின் வெற்றியாகவே நோக்கப்படுகிறது.

அரசியல், ரஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவையம், அவற்றின் ஒன்றோடு ஒன்றிணைந்த நலன்கள்  எவ்வாறு அடையப்படுகிறது என்பதின் அறிவையும் யார் வளர்க்க வேண்டும் என்பதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன். 

ஆயினும், நான் அதில் வரும் மாற்றங்கள் பற்றி அறிவை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

நான் அந்த இணைப்பை உங்களுக்காக இணைத்தேனே தவிர அதை வைத்து நான் அரசியல் படிக்கவில்லை. அதற்கு முன்பே பல கருத்துகளை எழுதி விட்டேன்.

நான் முன்னர் இன்னொரு திரியிலும் குறிப்பிட்டது கோத்தா அமெரிக்காவுடனும், மகிந்த சீனாவுடனும், பசில் இந்தியாவுடனும் தொடர்புகளை பேணி வருபவர்கள் என்றும் ராஜபக்ச குடும்பம் 3 நாடுகளையும் கையாள்வார்கள் என்றும்.

கோத்தபாயவை வேட்பாளராக்கியது அமெரிக்கா. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதால் அவை இணைந்தே கோத்தபாயவை வெற்றி பெற வைத்தார்கள். வெளிக்கு அதை காட்டிக்கொள்ளாமல் கதைப்பார்கள்.

MCC கொடையை மகிந்த அமெரிக்காவிடம் கேட்டது சீனாவின் கடன் சுமையிலிருந்து இடைவெளி பெறும் நோக்கிலல்ல. MCC கொடை என்பது 480 மில்லியன் டொலர் 5 வருட காலத்தில் வழங்கப்படுவது. அதை நம்பி யாரும் ஏனைய அபிவிருத்திகளை நிறுத்தி வைக்க மாட்டார்கள். தவிர அது பெயருக்கு தான் கொடையே தவிர அதற்கு சட்டதிட்டங்கள் பல உள்ளன. அது மகிந்தவுக்கு முன்பே தெரியும். தெரிந்தும் தான் கேட்டவர். 

2007 இல் இரகசியமாக ACSA இல் கையெழுத்திட்ட கோத்தா SOFA இலும் இரகசியமாக கையெழுத்திடலாம். அல்லது சற்று இழுத்தடிக்கலாம். ஏற்கனவே SOFA இலுள்ள சில விடயங்கள் போன வருட இறுதியிலிருந்து நடைமுறையில் உள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் ஒத்துழைப்புடன் தான் நடத்தப்பட்டது. அதனால் தான் இலங்கை வாயை மூடிக்கொண்டிருந்தது.

கோத்தாவை தாமே வெற்றிபெற வைத்து விட்டு கோத்தாவின் வெற்றியை சீனாவின் வெற்றியாக தான் ஊடகங்கள் மூலம் எழுதுவார்கள். அதே போல் தான் பின்னுக்கு கோத்தாவுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டு முன்னுக்கு மக்களை ஏமாற்ற மனித உரிமை பற்றி கதைப்பார்கள்.

அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது பற்றி கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது,

“Hambantota port is a national asset and was defined as a strategic asset by us previously, and the intention was never to sell or lease the port for 99 years. We will make it a priority to revisit the already signed agreement with the Chinese government and explore ways as to how best we could bring about a win-win for the two countries.”

இது தேர்தலுக்காக கூறப்பட்டதா அல்லது இது பற்றி ஏதும் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kadancha said:

ஆனால், நீங்கள் இணைத்த க்ஸி ஜின்பிங் இன் ஆங்கில அறிக்கையில் black-and-white ஆகவே உள்ள சீனாவின் திருப்தி இல்லாமையை புரிந்து கொள்ள முடியாதது, இந்தியா பற்றி ஒன்றுமே சொல்லாமல்,  உங்களுடைய புரிதலுக்கு பின்பு port city உதாரண

நான் சொன்னது, Port City உங்களின் உதாரணம் உங்களுடைய புரிதல் படி இருந்தும், க்ஸி ஜின்பிங் சீனாவின் தற்போதைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இந்தியா பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை.  மொத்தத்தில், க்ஸி ஜின்பிங் இன்  அறிக்கை  உங்களுக்கு புரியவில்லை. 

விடுங்கள்.

இந்திய அரசின் port city பற்றிய செல்வாக்கும், ஈடுபடும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. அதற்காக, இந்திய அரச செய்தது மற்றும் சாதித்தது இல்லை என்று ஆகி விடாது.

உங்களுக்கு புரிதலில் பிரச்சினை உள்ளது என நினைக்கிறேன்.

ஏற்கனவே உங்களுக்கு விளக்கம் தந்தேன்.

On 11/19/2019 at 5:34 PM, Lara said:

சீனா, அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் “Belt and road initiative” பற்றி கருத்து தெரிவித்துள்ளது என்பது நான் கூற வந்தது.

அதை “சீனாவின் வழமையான வாழ்த்து” என நான் புரிந்து கொண்டிருப்பதாக நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்திய அரசு Port City விடயத்தில் எதையும் சாதிக்கவில்லை. 😀

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

லாரா ,கடன்சா உங்கள் இருவரின் கருத்தாடல்களில் இருந்து நிறைய விடயங்கள் அறியக் கூடியதாக உள்ளது.

இருவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

தொடர்ந்தும் கருத்தாடுங்கள்.

அங்கதம்🤪

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, Lara said:

ஈஸ்டர் தாக்குதல் இலங்கையின் ஒத்துழைப்புடன் தான் நடத்தப்பட்டது. அதனால் தான் இலங்கை வாயை மூடிக்கொண்டிருந்தது.

இருபது வருசத்திற்குப்பின்னரும் தேடலில் இதுவே கிடைக்கலாம், உண்மையும் ஆகிவிடும்  🙏

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Lara said:

தாமரைக்கோபுரம் தொடர்பாக ALIT நிறுவனத்துடன் 2 பில்லியன் ரூபாய் பணம் தொடர்பான பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. மற்றும்படி தாமரைக்கோபுரம் இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது. முதலில் நீங்கள் ஒன்றை இன்னொன்றுடன் சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

ஒரு குழப்பமும் இல்லை, ராஜபக்சவின் பேரங்கள், சீனாவின் தற்போதையா அதிருப்தி, தாமரை கோபுரபும் அதில் ஓர் விடயமாக, அதன் தொடர்புகள் அறிந்திருந்தால்.

சிறிசேன திறந்து வைத்தாலும் அது சொறி சிங்கள அரசின் கைகளில் இல்லை என்பது உங்களுக்கு தெரியவில்லை.

தாமரை கோபுரத்தின் பண பிரச்னை, வேறு  மட்டத்தில், இப்பொது வேறு பரிமாணம் எடுத்திருக்கிறது.  இதன் காரணமாகவே,  திறக்கப்பட்ட தம்மை கோபுரம் சொறி சிங்கள அரசின் கைகளில் இல்லை.

 இவற்றை தெரிய வேண்டும் என்பதல்ல.

Share this post

Link to post
Share on other sites
47 minutes ago, Lara said:

கோத்தபாயவை வேட்பாளராக்கியது அமெரிக்கா. இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதால் அவை இணைந்தே கோத்தபாயவை வெற்றி பெற வைத்தார்கள். வெளிக்கு அதை காட்டிக்கொள்ளாமல் கதைப்பார்கள்.

பாவம் சஜித். பெரிய  பெரிய வல்லரசுகள் கைவிட்டு விட்டன  😞 

Share this post

Link to post
Share on other sites
52 minutes ago, Lara said:

MCC கொடையை மகிந்த அமெரிக்காவிடம் கேட்டது சீனாவின் கடன் சுமையிலிருந்து இடைவெளி பெறும் நோக்கிலல்ல. MCC கொடை என்பது 480 மில்லியன் டொலர் 5 வருட காலத்தில் வழங்கப்படுவது. அதை நம்பி யாரும் ஏனைய அபிவிருத்திகளை நிறுத்தி வைக்க மாட்டார்கள். தவிர அது பெயருக்கு தான் கொடையே தவிர அதற்கு சட்டதிட்டங்கள் பல உள்ளன. அது மகிந்தவுக்கு முன்பே தெரியும். தெரிந்தும் தான் கேட்டவர். 

ஒபாமாவின் நிர்வாகத்தின்  காலத்தில்   சூசன் ரைஸ் ஐ பதவி நீக்க மகிந்த, சீனாவுடனும் , US உடன் underhand  ஆடிய பேரங்கள் தெரியாமல், உங்களுடைய ஊகத்தை சொல்லிறீர்கள்.

தவறு என்று சொல்லவில்லை. ஆனால், வாசகர்களிடம் விட்டு விடுங்கள். 

Share this post

Link to post
Share on other sites
On 11/19/2019 at 12:48 PM, Gowin said:

திருகோணமலை டு கொழும்புக்கு ஒரே பாதையோ?

MCC இன்  ஓர் பகுதி.

Share this post

Link to post
Share on other sites

கடஞ்சா,
இந்த எம்.சி.சி. இனை இதுவரை பெற்ற நாடுகள் பற்றி தெரியுமா? அந்தந்த நாடுகளில் என்னமாதிரியான அரசியல் ஆதரவு/எதிர்ப்புக்கள் இருந்தன? அங்கும் சீனாவின் தாக்கங்கள் இருந்தனவா?  நன்றி 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Lara said:

உங்களுக்கு புரிதலில் பிரச்சினை உள்ளது என நினைக்கிறேன்.

ஏற்கனவே உங்களுக்கு விளக்கம் தந்தேன்.

On 11/19/2019 at 4:34 PM, Lara said:

சீனா, அமெரிக்க சார்பு கோத்தபாய ஜனாதிபதியாக வந்துள்ளதால் “Belt and road initiative” பற்றி கருத்து தெரிவித்துள்ளது என்பது நான் கூற வந்தது.

அதை “சீனாவின் வழமையான வாழ்த்து” என நான் புரிந்து கொண்டிருப்பதாக நீங்கள் விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

 ஆம், க்ஸி ஜின்பிங் இன் முழு அறிக்கையையும் நீங்கள் புரிந்து  கொண்டு,   விளக்கம்  கொடுத்ததாக நான் கருதிக் கொண்டேன்.

அப்போதும் சிந்தித்தேன், port city பற்றி அறிக்கையில் இல்லை, நானும் port சிட்டி ஐ பற்றியொன்றும் எழுதவில்லை, ஏன் அது உங்கள் கருத்தில் வருகிறது என்று.

ஆம், இப்பொது புரிந்து கொண்டேன், அவரவர் அவர்களுக்கு  தெரிந்தவற்றை  கொண்டு,   க்ஸி ஜின்பிங் இன் அறிக்கையில் இருந்து  தனக்கேற்றவாறு புரிந்தவற்றை பற்றி   கருத்து சொல்லி  இருக்கிறார்கள் என்று.

2 hours ago, Lara said:

இந்திய அரசு Port City விடயத்தில் எதையும் சாதிக்கவில்லை.

நீங்கள் அறிந்தவற்றை கொண்டு, black-and -white ஆக  ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும் விளக்கத்தை, ஏற்கனவே வாசகர்ளிடம் விட்டுவிட்டேன்.

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, ampanai said:

கடஞ்சா,
இந்த எம்.சி.சி. இனை இதுவரை பெற்ற நாடுகள் பற்றி தெரியுமா? அந்தந்த நாடுகளில் என்னமாதிரியான அரசியல் ஆதரவு/எதிர்ப்புக்கள் இருந்தன? அங்கும் சீனாவின் தாக்கங்கள் இருந்தனவா?  நன்றி 

நாடுகளை பற்றி தனி தனியாக நான் ஒன்றும் ஆராயவில்லை.

அனால் MCC, அமெரிக்காவின் பொருளாதார, பாதுகாப்பு, அரசியல் நலன்களை, குறிப்பிட்ட நாடுகளில் அல்லது பிரதேசங்களில் அடைவதற்கு உகந்த  பொருளாதார, அரசியல், கலாசார, பாதுகாப்பு சூழல்களை அந்தந்த நாடுகளில் அல்லது பிரதேசங்களில் உருவாக்குவது.

இந்த இணைப்பு, அமெரிக்கா corporate நலன்களை ஆபிரிக்காவில் அடைவதற்கனா சூழலை ஏற்ப்படுத்தும் போது, அது எவவ்வாறு ஆபிரிக்காவின்  வளங்களை, அமெரிக்காவின் corporate பிடிக்குள் கொண்டு வருகிறது என்பது பற்றியது.

https://www.grain.org/article/entries/4062-turning-african-farmland-over-to-big-business

https://www.grain.org/en/article/5121-land-and-seed-laws-under-attack-who-is-pushing-changes-in-africa

MCC ஓர் நாட்டில் பிரவேசிக்கும் போது, usaid (us ), dfid (uk) போன்ற அந்தந்த மேலைத்தேய  நாடுகளின் "உதவி" அமைப்புகளும் பிரவேசிக்கும் வளைவுகள் இருக்கிறது.

முக்கியமாக, பொருளாதார, பாதுகாப்பு, அரசியல் நலன்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளதால், வெளித்தோற்றத்திற்கு பொருளாதார அபிவிருத்தி, சீரமைப்பு போன்ற திட்டங்களின் பின்னணியில் ராணுவ, பாதுகாப்பு குறிக்கோள்கள்களும், நலன்களும் அமைந்திருக்கும்.   

உதரணமாக,  africom இன் நோக்கங்களை (இணைப்பை வாசிக்கவும் : https://www.thenation.com/article/the-us-militarys-best-kept-secret/)  
அடைவதற்கு, காணி சீர்திருத்தம் மற்றும் அந்தந்த நாடுகளில் உள்ள கேந்திர முக்கியத்துவமான ports இ இணைக்கும் போக்குவரத்துக்கு வசதிகள் மிகவும்   அவசியம்.

us இன்  வெளிநாட்டு ராணுவ தளங்கள்  இயக்கப்படுவது தனிப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களினால், அது ஒரு coporate பிசினஸ் ஆகவே பார்க்கப்படுகிறது .

இலங்கை தீவைப் பொறுத்தவரையில், mcc இன் காணிச் சந்தை உருவாக்குதல் என்பதன் முக்கிய நோக்கங்கள், ராஜபக்சக்களின் கைகளை கட்டுவது, அதன் மூலம் சீனா மேலும் ஊன்றுவதை தடுப்பது, படிப்படியாக சீனாவின் காணி சம்பந்தப்பட்ட முதலீடுகளை public scrutiny உட்படுத்தி, முறைகேடுகளை அம்பலப்படுத்தி (முறை கேடுகள் இருக்கும் வண்ணமே காணிச்ந்தை சீர் திருத்தம் இருக்கும்), நீதி மன்றம் ஊடக அந்த முதலீடுகளை நிறுத்துவது அல்லது பறிமுதல் செய்வது.    இன்னுமோர் நோக்கம், sofa இற்கு தேவையான காணிகளை பெறுவதை இலகுவாக்குவது, சட்ட சிக்கல்களை குறைப்பது அல்லது இல்லாதாக்குவது, public scrutiny (Parliement) ஐ குறைப்பது அல்லது இல்லத்தகுவது. இது அமெரிக்கா பெரு நிறுவங்களின் முதலீட்டுக்கு காணிகளை பெறுவதை இலகுவாக்குவது, சட்ட சிக்கல்களை குறைப்பது அல்லது இல்லாதாக்குவது.

MCC  இல் இருக்கும் பெரும் தெரு அபிவிருத்தியும், சோபா இன் இன்னொமொரு தேவையான தளங்கள் மற்றம் ports கு இடையான போக்குவரத்துக்கு வசதிகளை மேம்படுத்துதல், அல்லது புதிதாக ஆகுதல் எனும் அடிப்படை நோக்கத்துக்காகவே.

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, Kadancha said:

ஒரு குழப்பமும் இல்லை, ராஜபக்சவின் பேரங்கள், சீனாவின் தற்போதையா அதிருப்தி, தாமரை கோபுரபும் அதில் ஓர் விடயமாக, அதன் தொடர்புகள் அறிந்திருந்தால்.

சிறிசேன திறந்து வைத்தாலும் அது சொறி சிங்கள அரசின் கைகளில் இல்லை என்பது உங்களுக்கு தெரியவில்லை.

தாமரை கோபுரத்தின் பண பிரச்னை, வேறு  மட்டத்தில், இப்பொது வேறு பரிமாணம் எடுத்திருக்கிறது.  இதன் காரணமாகவே,  திறக்கப்பட்ட தம்மை கோபுரம் சொறி சிங்கள அரசின் கைகளில் இல்லை.

 இவற்றை தெரிய வேண்டும் என்பதல்ல.

தாமரைக்கோபுர நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தம் CEIEC, ALIT, TRC க்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.

2012 இல் மகிந்தவின் ஆட்சியில் தாமரைக்கோபுர திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது முற்பணமாக 2 பில்லியன் ரூபாய் ALIT நிறுவனத்துக்கு TRC ஆல் வழங்கப்பட்டது, அப்படி ஒரு நிறுவனம் இல்லை, அந்த பணத்துக்கு என்ன நடந்தது என தெரியாது என மைத்திரி கூறியிருந்தார்.

உண்மையில் Aerospace Long-March International Trade Co. Ltd என்பதை தான் ALIT என சுருக்கமாக கூறுவார்கள். அப்படி ஒரு நிறுவனம் உண்மையில் உள்ளது.

ALIT கூறியது TRC அப்பணத்தை EXIM வங்கியிலுள்ள CEIEC இன் கணக்கிற்கு தான் வழங்கியது என. அத்துடன் ALIT 2015 ஓகஸ்ட் மாதமே CEIEC இடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விலகி விட்டது எனவும் கூறியது.

TRC உம் தான் CEIEC இன் கணக்குக்கு தான் பணம் வழங்கியதாக கூறியது. மகிந்தவும் அவ்வாறே கூறினார்.

தாமரை கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது. மைத்திரி வருடத்துக்கு 2.4 பில்லியன் ரூபாய் படி கடனை திருப்பிக்கொடுப்பதாக கூறினார். இன்னும் 10 வருடங்களுக்கு இவ்வாறு கொடுக்க வேண்டும் என கூறினார்.

கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் குத்தகைக்கு கொடுக்க நினைக்கலாம். ஆனால் இன்னும் அந்த நிலை வரவில்லை.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, Kadancha said:

MCC இன்  ஓர் பகுதி.

அதே!

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, Kadancha said:

ஒபாமாவின் நிர்வாகத்தின்  காலத்தில்   சூசன் ரைஸ் ஐ பதவி நீக்க மகிந்த, சீனாவுடனும் , US உடன் underhand  ஆடிய பேரங்கள் தெரியாமல், உங்களுடைய ஊகத்தை சொல்லிறீர்கள்.

தவறு என்று சொல்லவில்லை. ஆனால், வாசகர்களிடம் விட்டு விடுங்கள். 

இலங்கை 2005 இலேயே MCC கொடையை தமக்கு தருமாறு கேட்டது. அது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 😀

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, Kadancha said:

ஆம், க்ஸி ஜின்பிங் இன் முழு அறிக்கையையும் நீங்கள் புரிந்து  கொண்டு,   விளக்கம்  கொடுத்ததாக நான் கருதிக் கொண்டேன்.

அப்போதும் சிந்தித்தேன், port city பற்றி அறிக்கையில் இல்லை, நானும் port சிட்டி ஐ பற்றியொன்றும் எழுதவில்லை, ஏன் அது உங்கள் கருத்தில் வருகிறது என்று.

ஆம், இப்பொது புரிந்து கொண்டேன், அவரவர் அவர்களுக்கு  தெரிந்தவற்றை  கொண்டு,  க்ஸி ஜின்பிங் இன் அறிக்கையில் இருந்து  தனக்கேற்றவாறு புரிந்தவற்றை பற்றி   கருத்து சொல்லி  இருக்கிறார்கள் என்று.

“சமீபத்தில், வேறு திரிகளில் சீனா பல்வேறு துறைகளில், விடயங்களில் இருந்து, கிந்தியாவின் சிங்களத்தின் மீதான அழுங்கு  பிடியால், வெளியேற்றப்ட்டிருப்பட்டிருப்பதாக கூறி இருந்தேன்.”

உங்களுடைய இக்கருத்துக்கு தான் நான் Port City சீனாவுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டதை நினைவு படுத்தினேன். சரி, இத்துடன் Port City பற்றிய கதையை விட்டு விடுவோம்.

20 hours ago, Kadancha said:

நீங்கள் அறிந்தவற்றை கொண்டு, black-and -white ஆக  ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும் விளக்கத்தை, ஏற்கனவே வாசகர்ளிடம் விட்டுவிட்டேன்.

இது உங்களுக்கு தான் பொருந்தும்.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் கடஞ்சா,
உங்கள் விரிவான பதிலுக்கு, தேடலுக்கு நன்றிகள்.

வாரஇறுதியில் நீங்கள் பகிர்ந்த இணைப்புக்களை வாசிக்க உள்ளேன்.

இந்த உலகத்திற்குள் நாங்களும் எங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லவேண்டும்.

மீண்டும் உங்களின் நேரத்திற்கும் இவை சம்பந்தமான கருத்துக்களுக்கும் நன்றிகள். 

Share this post

Link to post
Share on other sites

கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் MCC ஐ ஒத்த திட்டம் பற்றி உள்ளது.

எனவே கோத்தா MCC இல் கையொப்பமிடுவார்.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Lara said:

இலங்கை 2005 இலேயே MCC கொடையை தமக்கு தருமாறு கேட்டது. அது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு.  

உண்மையில், mcc  உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே,  சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது.

mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன்.

இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள்.

ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான   காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது.

இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Lara said:

தாமரைக்கோபுர நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தம் CEIEC, ALIT, TRC க்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.

2012 இல் மகிந்தவின் ஆட்சியில் தாமரைக்கோபுர திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது முற்பணமாக 2 பில்லியன் ரூபாய் ALIT நிறுவனத்துக்கு TRC ஆல் வழங்கப்பட்டது, அப்படி ஒரு நிறுவனம் இல்லை, அந்த பணத்துக்கு என்ன நடந்தது என தெரியாது என மைத்திரி கூறியிருந்தார்.

உண்மையில் Aerospace Long-March International Trade Co. Ltd என்பதை தான் ALIT என சுருக்கமாக கூறுவார்கள். அப்படி ஒரு நிறுவனம் உண்மையில் உள்ளது.

ALIT கூறியது TRC அப்பணத்தை EXIM வங்கியிலுள்ள CEIEC இன் கணக்கிற்கு தான் வழங்கியது என. அத்துடன் ALIT 2015 ஓகஸ்ட் மாதமே CEIEC இடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விலகி விட்டது எனவும் கூறியது.

TRC உம் தான் CEIEC இன் கணக்குக்கு தான் பணம் வழங்கியதாக கூறியது. மகிந்தவும் அவ்வாறே கூறினார்.

தாமரை கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது. மைத்திரி வருடத்துக்கு 2.4 பில்லியன் ரூபாய் படி கடனை திருப்பிக்கொடுப்பதாக கூறினார். இன்னும் 10 வருடங்களுக்கு இவ்வாறு கொடுக்க வேண்டும் என கூறினார்.

கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால் குத்தகைக்கு கொடுக்க நினைக்கலாம். ஆனால் இன்னும் அந்த நிலை வரவில்லை.

இவையெல்லாம் பழையவை, கம்பெனிகளுக்கும், சொறி சிங்கள அரசுக்கும் இடையேயான பிரச்சனைகள். தீர்வுகளும் உண்டு.

மைத்திரியின் 10 வருடம், 2.4 பில்லியன் கதையை, அப்படியே black-and-white ஆகவே உள்வாங்கி விட்டீர்கள்.

சுருக்கமாக, சீன அரசு இப்பொது நேரடியாக தலை இட்டு, கடனையும்  ரத்து செய்து விட்டு, சிங்களத்துக்கு தாமரை கோபுரத்தை கையளிப்பதை தடுத்து இருக்கிறது.

இழப்பீடும்  ஒப்பந்தப்படி சிங்களம் செலுத்த வேண்டும்

அது தான், சிங்கள அரசு அறிக்கை, இந்த  10 வருடம், 2.4 பில்லியன். ஆயினும் நம்ப முடியாது.

ஏனெனில், கடன் ரத்து என்பது, உடனடியாக முதலும், முழுவட்டியும் கட்டப்பட வேண்டும், அத்துடன் இழப்பீடும் அதன் வட்டியும் .

அத்துடன், தாமரை கோபுரம், சீனாவின் signal  intelligence post. எனவே, அதை forefeit பண்ணுவது சீனாவின் கைகளில். தாமரை கோரத்தை பொறுத்தவரையில், சிங்கள அரசின் கைகளில் ஒன்றுமே இல்லை.

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Lara said:

எனவே கோத்தா MCC இல் கையொப்பமிடுவார்.

ஏற்கனவே சொல்லிவிட்டேன், கோத்தா, நலன்களின் அடிப்படையில் இயங்குவார். mcc  அவருக்கு ஏற்றதாயின், அதாய் ஏற்றுக் கொள்வார்.  

இப்போதைய நிலையில் mcc, அவர்களின் நலன்களில்   கைவைக்கிறது.

சீன செய்யக் கூடியதை , அமெரிக்கா செய்யும் என்றால், கோத்தாவின் தெரிவு அமெரிக்கா.

மற்றது, கோத்தாவின் விஞ்ஞாபனத்தில், வெளியுறவு பற்றி இருப்பது எல்லாமே பகுதியாக அல்லது முழுமையமாக  செய்யக் (அல்லது அதே நேரத்தில் மறுக்கக் கூடியது கூட) கூடிய nuance உம், நெகிழ்வு தன்மையும்  கொண்டது.

எனவே, கோத்தாவின் விஞ்ஞாபனத்தை face value ஆகவோ, black-and-white ஆகவோ எடுக்க முடியாது.

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ampanai said:

மீண்டும் உங்களின் நேரத்திற்கும் இவை சம்பந்தமான கருத்துக்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் கேடததற்காக நான் ஒன்றும் ஆராயவில்லை.

இவை நான் உலகை புரியம் முயத்ர்சியில், அவ்வப்போது வருட காலமாக கடந்து வந்ததில் மிகவும்  நன்றாக மனதில் பொதிந்தவை.

வேறு நான் மறந்திருக்கலாம். வேறு எதாவது மனதில், அல்லது தற்செயலாக வேறு தேடலில் கண்டால் இணைத்து விடுகிறேன். 

Share this post

Link to post
Share on other sites

சீனாவுடனான பொருளாதார வழித்தட திட்டத்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் தெற்காசிய விவகாரத்துறை துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells) பொருளாதார வழித்தடத்தால் சீனாவுக்குதான் அதிக லாபம் என்றார்.

இந்தத் திட்டத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் நீண்ட கால பாதிப்பை சந்திக்கும் என்று கூறிய அவர், ஆனால் அமெரிக்க தனியார் நிறுவனங்களின் முதலீடு பாகிஸ்தானுக்கு நன்மையே தரும் என்றார்.  

Share this post

Link to post
Share on other sites
On 11/22/2019 at 2:06 AM, Kadancha said:

திருத்தம்: 2005 இல் மஹிந்த கேட்டது. அதுவும், மஹிந்தவின் சொத்து பெருக்கும் பேரத்தில் ஒரு மறைமுகமாக ஓர் பகுதி ஆக்குவதற்கு.  

உண்மையில், mcc  உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முதலே,  சொறி சிங்கள அரசு us உடன் mcc பெறுவதத்திற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது.

mcc, எப்போது, எந்த இலங்கை அரசின் எந்த பிரதிநிதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை உங்களிடமும், வாசகர்களிடமும் விட் டுவிடுகிறேன்.

இது எல்லாமே பகிரங்கமான தகவல்கள்.

ஆயினும், அப்படி கேட்டிருந்தால், அதற்கும், நிராகரிப்பட்டதற்கான   காரணங்களும் முக்கியமானது. 2014 காரணம் மிக முக்கியமானது.

இது ஒன்றுமே தெரிந்திருக்க வேண்டியதில்லை, இப்போதைய வாதத்தில்.

2005 இல் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது MCC கொடையை பெற apply பண்ணப்பட்டது, சில proposal களுடன். அந்நேரம் மகிந்த பிரதமராக இருந்தார். அதனால் தான் இலங்கை என பொதுவாக குறிப்பிட்டேன். உங்களுக்கு அது தெரியாததால் “திருத்தம்: 2005 இல் மகிந்த கேட்டது” என போட்டு வைத்துள்ளீர்கள். 😀

2005 தேர்தலில் மகிந்த வென்று ஜனாதிபதியானதும் அவர் MCC கொடையை பெறும் முயற்சியை தொடர்ந்தார்.

MCC ஆரம்பிக்கப்பட முன்பே அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டது. அதன் போது புஷ்ஷும் ரணிலும் இதுபற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்கள். 

2004 ஜனவரியில் MCC ஆரம்பிக்கப்பட்டது. 2004 ஏப்ரல் மகிந்த பிரதமரானார். 2004 மே மாதம் MCC கொடை பெற தகுதியான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டது (உள்ளடக்கப்பட்டால் நிதி கட்டாயம் கிடைக்கும் என்றில்லை). 2007 இல் இலங்கையிலுள்ள போர் சூழல் காரணமாக அப்பட்டியலிலிருந்து இலங்கையின் பெயர் நீக்கப்பட்டது.

2013 இறுதியிலும் 2014 க்கான MCC கொடையை பெற தகுதியான நாடுகளின் பட்டியலில் இலங்கையின் பெயர் இல்லை. அதற்கான score இலங்கை பெற்றிருக்கவில்லை. எனவே மகிந்தவால் 2014 இல் MCC கொடையை பெற முடியாது. ஆனால் அவர் விரும்பியிருந்தால் இலங்கையை 2015 க்கான MCC கொடை பெற தகுதியான நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கியிருக்க முடியும்.

2014 இல் அது நடைபெறவில்லை. இது 2014 இல் இலங்கை பெற்ற score.

https://www.mcc.gov/who-we-fund/scorecard/fy-2015/LK

அத்துடன் அமெரிக்கா மைத்திரியை ஜனாதிபதியாக கொண்டுவர திட்டம் போட்டு விட்டது.

2016 இல் தான் மீண்டும் இலங்கை MCC கொடை பெற தகுதியான நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. இது மைத்திரி ஜனாதிபதியான பின் இடம்பெற்ற சில படிமுறைகள்.

EIXtMjIWsAAmfDz?format=jpg&name=medium

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.