• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ஏராளன்

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

Recommended Posts

19 minutes ago, கிருபன் said:

உண்மையாகவா?😂

பக்கம் பக்கமாக இருவரும் பலவற்றையெல்லாம் மினக்கெட்டு வாசித்து விவாதிக்க நேரம் உள்ளவர்கள் என்று நினைத்தேன்🤣

கடஞ்சா அந்த இணைப்பை தந்த போது வாசிப்பதற்கு உள்ளே நுழைந்தேன். பக்கங்களின் எண்ணிக்கையை பார்த்து விட்டு மூடி விட்டேன்.

ஏற்கனவே வாசித்தவற்றை பற்றி எழுதலாம். புதிதாக ஒன்றை வாசிப்பதற்கு பொறுமை, நேரம் வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kadancha said:

ஆனால், கடனை ரத்து  செய்தது, சீன அரசு, சீன சட்டத்தின் கீழ்.

கடன் ஒப்பந்தத்திலேயே உள்ளது, முறைகேடுகள் இருப்பின் கடனை வங்கி ரத்து  செய்யும் அதிகாரம் உள்ளது என்று. 

எனக்கு தெரிந்த வரையில் கடன் வழங்கும் போது கடன் வாங்குபவர் illegal ஆக எதையாவது செய்தால் கடனை ரத்து செய்யலாம். 

ஆனால் இங்கு EXIM வங்கி தனது பங்கு கடனை ஏற்கனவே வழங்கி முடித்து விட்டது.

அத்துடன் மைத்திரி ALIT ஐ குற்றம் சாட்டியதை காரணமாக வைத்து கடனை ரத்து செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை.

ALIT கூட TRC க்கு சொல்லாமல் கொள்ளாமல் தான் விலகியிருந்தது. ALIT இலும் பிழை உள்ளது.

அத்துடன் இந்த பிரச்சினைகளுக்கும் பின்னர் தான் மைத்திரி கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கினார்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kadancha said:

ஒப்பீட்டளவில் சிறிய கோபுரத்திற்கு, இவ்வளவு தூரம் செக்யூரிட்டி கேட்ட சீன, அம்பாந்தோட்டை, மற்றும் port city க்கு (இதை விடயமாக இங்கு இழுக்கவில்லை), எவ்வளவு கேட்டிருக்கும் என்பதை வாசிப்பவர்கள் முடிவு எடுக்கலாம். 

இது சிறிய திட்டமாக இருந்தாலும் இதனை சீனா பெற்றால் அதற்கு இலாபம் உள்ளது.

ஏற்கனவே இந்தியா மிக உயர்ந்த தாமரை கோபுரம் கட்டப்படுவது இந்தியாவை கண்காணிக்க என பல அறிக்கை விட்டு விட்டது.

அத்துடன் சீனா கட்டும் போதே உளவு பார்க்க கூடிய வகையில் தான் கட்டியிருக்கும்.

இதற்குள் Port City, அம்பாந்தோட்டை துறைமுக திட்டங்களை இழுக்க தேவையில்லை. அவை ஏற்கனவே பெரிய திட்டங்கள். Port City க்கு 2014 உடன்படிக்கையில் பிற்காலத்தில் குத்தகைக்கு கொடுப்பது பற்றி எழுதியே வைத்திருந்தார்கள்.

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, கிருபன் said:
  20 minutes ago, Lara said:

எனக்கு இப்பொழுது நேரமும் பொறுமையும் இல்லை.

 

14 minutes ago, கிருபன் said:

உண்மையாகவா?😂

பக்கம் பக்கமாக இருவரும் பலவற்றையெல்லாம் மினக்கெட்டு வாசித்து விவாதிக்க நேரம் உள்ளவர்கள் என்று நினைத்தேன்🤣

 

26 minutes ago, Lara said:

பின்னர் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்.

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

New Sri Lanka government wants to undo deal to lease port to China for 99 years

COLOMBO (BLOOMBERG) - Sri Lanka's new government led by President Gotabaya Rajapaksa wants to undo the previous regime's move to lease the southern port of Hambantota to a Chinese venture, citing national interest.

Former prime minister Ranil Wickremesinghe in 2017 changed the terms, saying it would be difficult to pay the loans taken to build the project.

He agreed to lease the port for 99 years to a venture led by China Merchants Port Holdings Co in return for US$1.1 billion (S$1.5 billion). That helped ease the Chinese part of the debt burden raised to build the port, Mr Wickremesinghe said in an interview in 2018.

"We would like them to give it back," Mr Ajith Nivard Cabraal, a former central bank governor and an economic adviser to former prime minister Mahinda Rajapaksa, said in an interview at his home in a Colombo suburb.

"The ideal situation would be to go back to status quo. We pay back the loan in due course in the way that we had originally agreed without any disturbance at all."

An attempt to rework the transaction will help the new Sri Lankan government, led by Mr Gotabaya Rajapaksa and his brother Mahinda, showcase their drive to change contracts seen as hurting national security, a key campaign platform for Mr Gotabaya Rajapaksa, a former defence secretary.

"China-Sri Lanka cooperation, including the Hambantota port project, are built on the basis of equality and consultation," China's Foreign Ministry said in a faxed statement from its spokesman's office.

"China looks forward to working with Sri Lanka to make Hambantota a new shipping hub in the Indian Ocean and developing the local economy."

China's infrastructure-building in Sri Lanka became part of Beijing's Belt and Road Initiative, prompting concern in India about its geopolitical rival using a port close to its southern coastline for future military or strategic uses. Mr Gotabaya Rajapaksa is in India on Friday (Nov 29) for his first state visit overseas.

China has dismissed worries over any military dimension to its investment in the Hambantota port, which lies on the main shipping routes between Asia and Europe, and said it was mutually beneficial and would aid Sri Lanka's economy.

"Sri Lanka will have to offer it something equally, if not more, attractive in financial terms for Beijing to agree to the cancellation of the lease agreement," said Prof Brahma Chellaney, a professor of strategic studies at the Centre for Policy Research in New Delhi. "With the Rajapaksa family back in power, China hopes to expand its footprint in Sri Lanka."

A similar port deal under the Belt and Road programme in Myanmar was drastically scaled to US$1.3 billion from US$7.5 billion, while in Malaysia the government cancelled US$3 billion worth of pipelines and renegotiated a rail project in 2019, cutting that one's cost by a third to US$11 billion.

"Bilateral agreements once you've signed those, are serious agreements," Mr Cabraal said in his house adorned with pictures of local and foreign leaders.

"At the same time, we've got to look after the national interests. And if one government had bartered it away, there is a necessity for the new government to find ways and means by which it can be done amicably."

For its part, China Merchants, whose US$93 billion of revenue dwarfs Sri Lanka's gross domestic product, has been able to use its experience stretching from China to Europe to help kick start the Hambantota port, which once hardly attracted any ships.

China Merchants' Hambantota joint venture also last month said it had entered into an agreement with Japanese shipping conglomerate Nippon Yusen KK, for vehicle trans-shipment through the port.

New Ports Minister Johnston Fernando wasn't immediately available for comment.

https://www.straitstimes.com/asia/south-asia/sri-lanka-wants-to-undo-deal-to-lease-port-to-china-for-99-years

ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டது தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை அதிபராக சிறிசேனா பதவி வகித்தபோது இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார்.


அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராகியுள்ளார். இந்நிலையில், ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/90758/ஹம்பந்தோடா-துறைமுகத்தைசீனாவுக்கு-குத்தகைக்குவிடும்-ஒப்பந்தம்-ரத்து

Share this post


Link to post
Share on other sites

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலக விரும்புகின்றது இலங்கை

புளும்பேர்க்

தமிழில்- ரஜீபன்

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் விரும்புகின்றது.

தேசிய நலன்களை கருத்தில்கொண்டே புதிய அரசாங்கம் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஆர்வமாகவுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடனை அடைப்பது கடினம் என தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 இல் உடன்படிக்கையில் காணப்பட்ட பதங்களை மாற்றினார்.1.1 பில்லியன் டொலர்களிற்காக துறைமுகத்தை சீனாவின் நிறுவனமொன்றிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அவர் இணங்கினார்.இது துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடன் சுமையிலிருந்து இலங்கை ஒரளவிற்கு விடுபடுவதற்கு உதவியாக அமைந்தது என 2018 இல் பேட்டியொன்றில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

அவர்கள் துறைமுகத்தை எங்களிடம் மீள கையளிக்கவேண்டும் என விரும்புகின்றோம் என தெரிவிக்கின்றார்முன்னாள் மத்திய வங்கி ஆளுநரும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகருமான அஜித்கப்ரால.; கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து எங்களிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.

முன்னர் காணப்பட்ட நிலைக்கு செல்வதே சரியான நடவடிக்கையாக அமையும்,நாங்கள் ஆரம்பத்தில் இணங்கியது போல குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் கடன்களை அவர்களிற்கு செலுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

சீன ஜனாதிபதியின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை பாதித்துவரும் சர்ச்சைகளை  இந்த துறைமுகம் வெளிப்படுத்துகின்றது.கென்யா முதல் மியன்மார் வரை இந்த நிலை காணப்படுகின்றது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு வறிய நாடுகளை கடன்பொறி;க்குள் இழுக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன.

இலங்கையில் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளை  ராஜபக்சவின் கட்சி எதிர்த்துள்ள அதேவேளை பத்து வருடங்களிற்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொந்த ஊரில் இந்த துறைமுகத்தை உருவாக்குவதற்காக சீனாவிடமிருந்து கடன்களை பெற்றார்.

இது ஒரு இறைமையுள்ள உடன்படிக்கை,இது முற்றாக கைவிடப்படாது,பாரிய மாற்றங்களிற்கும் உட்படாது என தெரிவிக்கின்றார் இந்தியாவின் பாதுகாப்பு கற்கை மற்றும் ஆய்விற்கான ஸ்மிருதி பட்நாயக்.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு அவசியம் என தோன்றினால் சீனா சில உடன்படிக்கையின் சில அம்சங்களை மாற்றலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் மாற்றம் செய்ய முனைவது இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு சாதகமான விடயமாக அமையலாம்.தேசத்தின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்  உடன்படிக்கைகளை மாற்றுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்பதை அவர்கள் அதன் மூலம் காண்பிக்கலாம். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் இது முக்கிய விடயமாக காணப்பட்டது.

இதேவேளை  அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட் இலங்கை சீனாவிற்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது பரஸ்பரம் சமத்தும் மற்றும் கலந்தாலோசனைகளை அடிப்படையாக கொண்டது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு எமக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையை இந்து சமுத்திரத்தின் புதிய கப்பல்வாணிப மையமாக்குவதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா ஆர்வமாகவுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

800x-1.jpg

இலங்கையில் சீனாவின் உட்கட்டமைப்பு திட்டங்கள் அந்த நாட்டின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதுடன், தனது பூகோள போட்டி நாடு,தனது தென்பகுதி எல்லையி;ல் உள்ள இந்த துறைமுகத்தை எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய  நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என்ற கரிசனையை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவநோக்கங்களை கொண்டது என வெளியாகும் கரிசனைகளை சீனா நிராகரித்துள்ளது.

இந்த துறைமுகம் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான  முக்கிய கடற்பாதையில் அமைந்துள்ளது.

இந்த துறைமுகம் பரஸ்பர நன்மையை உருவாக்ககூடியது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடியது எனவும் சீனா தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்றால் இலங்கை அதற்கு சமமானதாக எதனையாவது வழங்கவேண்டியிருக்கும்,என தெரிவிக்கின்றார் புதுடில்லியின் கொள்கை ஆய்வு நிலையத்தின் பேராசிரியர் பிரஹ்மா செல்லானே.

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில் சீனா இலங்கையில் மேலும் ஆழமாக கால்பதிக்க எண்ணுகின்றது என்கின்றார் அவர்.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட  மியன்மாரின் துறைமுக திட்டம் மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டது,சீனாவுடனான அபிவிருத்த திட்டங்களை மலேசிய அரசாங்கம் இரத்துச்செய்தது அல்லது கைவிட்டுள்ளது.

இரு தரப்பு உடன்படிக்கைகளில் நீங்கள் கைச்சாத்திட்டால் அவை பின்னர் தீவிரமானவையாக மாறி விடும் என தெரிவித்தார் அஜித் கப்ரால்.

அதேவேளை நாங்கள் தேசத்தின் நலன்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஒரு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை  பண்டமாற்று செய்திருந்தால் அதற்கு உரிய விதத்தில் தீர்வை காண்பதற்கான வழிமுறைகைள கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் அடுத்த அரசாங்கத்திற்குள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

https://www.virakesari.lk/article/70063

 

Share this post


Link to post
Share on other sites

அந்த 99 வருடங்கள் .... இந்தியாவிற்கு தேவையான ஈழ தமிழர்கள் ? 

ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம், அதாவது சீன அரசிற்கு எதிரான கட்சிகள் வென்றுள்ளன. ஹொங்கொங் தான் சீனாவின் இந்த 99 வருடங்கள் என்ற குத்தகைக்கு குந்தகமாக இருக்க போகின்றது. ஹொங்கொங் மக்கள் கூறுவது நிலம் தான் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது, மக்கள் இல்லை என்று. 

அம்பாந்தோட்டையும் இவ்வாறு எழுதப்பட்டது. இதையே சிங்களமும் செய்தது. இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் முடியாது, சீனாவை அகற்றவும் முடியாது. 

இதனால், இந்தியா பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, காங்கேசன்துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது. ஆனால், சிங்களம் இவ்வாறான 99 வருட குத்தகை ஒப்பந்தத்தை செய்யவில்லை. 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்- சீனாவின் நிலைப்பாடு என்ன?

அம்பாந்தோட்டை துறைமுகம் முழுமையாக இலங்கைக்கு சொந்தமானது இலங்கையின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே அந்த துறைமுகம்  உள்ளது என தெரிவித்துள்ள சீனா துறைமுகம் குறித்த எந்த தீர்மானத்தையும் இலங்கையே எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பேச்சாளர் லுவோசொங் இதனை ஆங்கில நாளேடு ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது கூட்டு முயற்சி அந்த துறைமுகத்திற்குள் கப்பல்களை அனுமதிப்பது உட்பட எந்த தீர்மானத்தையும் இலங்கையே எடுக்கவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் அனைத்தும் சம அந்தஸ்த்துடனான கலந்தாலோசனைகள் மற்றும் இருதரப்பிற்கும் நன்மை என்ற உணர்வு ஆகியவற்றைஅடிப்படையாககொண்டது என  சீனா தெரிவித்துள்ளது.

hambatota_no29.jpg

இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றின் கேள்விக்கு அனுப்பிவைத்துள்ள மின்னஞ்சல் பதிலில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் அனைத்தும் சம அந்தஸ்த்துடனான கலந்தாலோசனைகள் மற்றும் இருதரப்பிற்கும் நன்மை என்ற உணர்வு ஆகியவற்றைஅடிப்படையாககொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/70107

Share this post


Link to post
Share on other sites
On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

அந்த 99 வருடங்கள் .... இந்தியாவிற்கு தேவையான ஈழ தமிழர்கள் ? 

நீங்கள் அனைத்தையும் ஈழத்தமிழர்களுடன் இணைத்து பார்க்கிறீர்கள்.

மோடியும் கோத்தாவும் தாம் எவ்வாறு இணைந்து தமிழர்களை ஏமாற்றலாம் என கலந்துரையாடியிருப்பார்கள். 😀

On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம், அதாவது சீன அரசிற்கு எதிரான கட்சிகள் வென்றுள்ளன. ஹொங்கொங் தான் சீனாவின் இந்த 99 வருடங்கள் என்ற குத்தகைக்கு குந்தகமாக இருக்க போகின்றது. ஹொங்கொங் மக்கள் கூறுவது நிலம் தான் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது, மக்கள் இல்லை என்று. 

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் 15,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போது அதற்கெதிராக அம்பாந்தோட்டையில் போராட்டங்கள் நடந்தன.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

அம்பாந்தோட்டையும் இவ்வாறு எழுதப்பட்டது. இதையே சிங்களமும் செய்தது. இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் முடியாது, சீனாவை அகற்றவும் முடியாது. 

ஒப்பந்தத்தை இரத்து செய்யலாம், அதற்கான கடனை வட்டியும் முதலுமாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திருப்பிக்கொடுக்கக்கூடிய நிலையில் இலங்கை இருந்தால். ஆனால் இன்னொரு நாடு பணம் வழங்காவிட்டால் திருப்பி செலுத்துவது இலங்கைக்கு கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் இது பெரிய முதலீடு. அம்பாந்தோட்டை துறைமுக phase 1 அபிவிருத்திக்கு பெற்ற கடனுக்கான வட்டி வீதம் 6.3%. Phase 2 க்கு பெற்ற கடனுக்கான வட்டி வீதம் தெரியவில்லை, ஆனாலும் பெரிய கடன் என்பதால் வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்துவது கடினம்.

அத்துடன் இலங்கையால் இத்துறைமுகத்தை தனித்து இலாபகரமாக இயக்க முடியுமா என்பது கேள்வி.

இப்பொழுது கோத்தபாய சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குத்தகை காலத்தை குறைக்கலாம் அல்லது குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வீதத்தை குறைக்கலாம். குத்தகையை ரத்து செய்தால் அது இலங்கைக்கு நட்டம்.

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
On 11/29/2019 at 11:49 PM, ampanai said:

இதனால், இந்தியா பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, காங்கேசன்துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது. ஆனால், சிங்களம் இவ்வாறான 99 வருட குத்தகை ஒப்பந்தத்தை செய்யவில்லை. 

அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்க முன்னமே காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி விடயமாக இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா வழங்கியது 300 மில்லியன் ரூபாய். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா வழங்கியது 45.27 மில்லியன் டொலர். இவை அனைத்தும் சீனா வழங்கும் கடனின் தூசுக்கு கூட சமனில்லை. இதையெல்லாம் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்றவற்றுடன் ஒப்பிட்டுக்கொண்டு. 🙃

இந்தியா மத்தல விமான நிலையத்தை 40 வருட குத்தகைக்கு தருமாறு இலங்கையை கேட்டிருந்தது. (அதை சீனா கட்டியிருந்தாலும்).

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை இலங்கை, இந்தியா, ஜப்பான் இணைந்து மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்ட போது அதன் 51% பங்குகள் இலங்கைக்கும், 49% பங்குகள் இந்தியா, ஜப்பான் தமக்குள் பங்கிட்டு கொள்ளும் என கூறப்பட்டது. 

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites

MCC compact to be “launched soon” in SL – Alice Wells

November 26, 2019

The controversial Millennium Challenge Corporation (MCC) compact will be launched in Sri Lanka soon, US Principal Deputy Assistant Secretary of State for South and Central Asia Alice Wells said.

Speaking at a discussion at the Wilson Centre in Washington DC on the China-Pakistan Economic Corridor last week, Wells said she is proud of the kind of “thoughtful development” carried out by the MCC in Nepal and elsewhere in enhancing regional connectivity and creating export markets. 

“We have another MCC that we’re launching soon in Sri Lanka that will undertake the same kind of nitty-gritty reforms in land registration and motorway harmonisation that will, we determine, you help unlock economic development,” she said.

“So we have to do our work, and that involves working in closer partnership with our private sector, but we’re proud of the fact that already the United States has almost a trillion dollars in Foreign Direct Investment in the Indo-Pacific and over $1.5 trillion in bilateral trade. So we’re very much a power in the Pacific,” she added.

Wells also spoke at length on Chinese investments in the island, with particular emphasis on the Hambantota Port deal, noting that Sri Lanka ceded its sovereignty to the emerging superpower.

“In Sri Lanka, even though multiple feasibility studies repeatedly rejected the commercial viability of a largescale port facility at Hambantota, Beijing went ahead and loaned the government over one billion dollars for the project. The result: Sri Lanka struggled to service those loans and eventually handed over a 99-year lease on the port to Beijing in return for debt relief,” she said.

“We also see in Sri Lanka a number of Chinese-financed projects sitting vacant and unused, including a $104 million telecommunications tower and a $209 million international airport in the south with zero regularly-scheduled flights.  Indeed, the Center for Global Development found in 2018 that eight One Belt One Road (OBOR) recipient countries including Pakistan, Maldives, Tajikistan and Kyrgyzstan, were at high risk of debt stress due to Chinese financing,” she added.

The Ambassador further said India has been crystal clear from the outset that they saw the geopolitical nature of elements of the OBOR. The US, she said, shares India’s concers over projects that don’t have an economic basis and that lead to countries ceding sovereignty.

“Sri Lanka’s not the only country that has ceded, effectively ceded sovereignty over a key asset. You’ve had reports out of Tajikistan overland swaps in order to get out of excessive debt. And this is a real issue,” said Wells.

“All I can say is that however much you might dislike the World Bank or IMF, they don’t take 99-year leases or strip away the sovereignty of countries that they engage in. So let’s be very clear-eyed about the terms that multilaterals bring to the table, versus the terms that are being imposed under some of these programs,” she added.

https://www.republicnext.com/international-relations/mcc-compact-to-be-launched-soon-in-sri-lanka-ambassador-alice-wells/

Share this post


Link to post
Share on other sites

அமேரிக்கா உட்பட பல நாடுகளுடன் இணைந்து பாரிய கடற்படை ஒத்திகையை இந்தியா வரும் பங்குனியில், விசாகப்பட்தினத்தில் செய்யவுள்ளது. இதில், இலங்கைக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. 

இதற்கு, 'ஆப்ரேஷன் மிலான்' என பெயரிடப்பட்டுள்ளது.  

இது, சீனாவின் கடற்படை விஸ்தரிப்பிற்கு எதிரானதாகவே பார்க்கப்படுகின்றது. 
 

India to host naval drill Milan 2020 in March; to see participation of several countries

Navy---AGENCIES

In a written response to a question in the Rajya Sabha, Naik said 41 nations from South Asia, Southeast Asia, Africa and Europe that share defence cooperation with India have been invited for the drill.

The countries to whom invitations have been sent are Indonesia, France, Mozambique, Sudan, Israel, Qatar, Thailand, Malaysia, Australia, Somalia, Kenya, Egypt, Sri Lanka, Vietnam, Myanmar, New Zealand, USA, Tanzania, Comoros, Maldives, Brunei, Philippines, Japan, UK, Saudi Arabia, Oman,  ..

https://economictimes.indiatimes.com/news/defence/india-to-host-naval-drill-milan-2020-in-march-to-see-participation-of-several-countries/articleshow/72228676.cms

Share this post


Link to post
Share on other sites

http://www.adaderana.lk/news_intensedebate.php?nid=59378

 

Special Representative of Chinese State Council meets PM

Special Representative of Chinese State Council meets PM

December 1, 2019   04:28 pm

Director-General of the Department of Asian Affairs of the Foreign Ministry in China Wu Jianghao called on Prime Minister Mahinda Rajapaksa this morning (01).

Wu Jianghao is Special Representative of the State Council of the People’s Republic of China and has previously served as an Ambassador to Sri Lanka.

Prime Minister’s Media Unit stated that the Prime Minister met with Jianghao this morning at the Temple Trees.

Chinese Ambassador to Sri Lanka Cheng Xueyuan, Chairman of Sri Lanka Podujana Peramuna (SLPP) Prof. G. L. Peiris, and Sri Lanka’s Prime Minister’s Secretary Gamini Senarath were also present at the meeting.

 
 
-Director-General of the Department of Asian Affairs of the Foreign Ministry in China Wu Jianghao called on Prime Minister Mahinda Rajapaksa this morning (01).

 

 

 

More discussions needed on MCC agreement: Min. Susil Premajayantha

Written by Staff Writer    28 Nov, 2019 | 2:24 PM

Colombo (News 1st): Minister of State for International Cooperation Susil Premajayantha commenced his duties at the Ministry of External Affairs today (November 28).

When questioned about the fate of the MCC Agreement, he noted that he cannot comment on the agreement as they have to hold discussions within the government, according to their policies.

He added that a statement will be made following discussions with President Gotabaya Rajapaksa, Prime Minister Mahinda Rajapaksa and the cabinet ministers.

Journalists also questioned as to why they are holding discussions when they clearly rejected such agreements before the Presidential elections? Responding to this Minster Premajayantha noted that there are politicians who “can express their views according to their conscious”.

He added that they plan on protecting and upholding the sovereignty and independence of the country as clearly mentioned in their election manifesto.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kadancha said:

December 1, 2019   04:28 pm

Director-General of the Department of Asian Affairs of the Foreign Ministry in China Wu Jianghao called on Prime Minister Mahinda Rajapaksa this morning (01).

Wu Jianghao is Special Representative of the State Council of the People’s Republic of China and has previously served as an Ambassador to Sri Lanka.

சீன அரசு தனது 99 ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை இரத்து செய்வதை விரும்பாது. ஆனால், இந்தியாவிடம் அது தவறு என்கிறார் கோத்தா. 

கோத்தா இந்தியாவிற்கும் மகிந்தா சீனாவிற்கும் பச்சைக்கொடி காட்டப்பார்க்கிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites

You have said publicly you will renegotiate the Hambantota port agreement with China, which India was concerned about. Along with that is the future of Mattala airport, which India has shown an interest in. Now that you are in power, what will you do?

I believe that the Sri Lankan government must have control of all strategically important projects like Hambantota. After all, these are not like hotel or a terminal, but to give control of a port or an airport or our harbours is different. With our control they can do anything, but these 99-year lease agreements [that the previous government signed] will have an impact on our future. The next generation will curse our generation for giving away precious assets otherwise. That is why our party protested these decisions.

But the reason the lease had to be given was because of the debts incurred by the government of President Mahinda Rajapaksa…

No, that is wrong. It is also wrong to say there was a debt trap. In fact during our time the ports authority paid back the first installment [to Chinese banks]. The Sirisena government, on the other hand, got more money as loans and just spent it. If they were worried about the debts piling up why didn’t they first service the debt, rather than give away sovereignty?

https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece

சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை விஜயம்- அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராய இரு தரப்பும் இணக்கம்

https://yarl.com/forum3/topic/235072-சீன-ஜனாதிபதியின்-விசேட-தூதுவர்-இலங்கை-விஜயம்-அம்பாந்தோட்டை-துறைமுகம்-குறித்து-ஆராய-இரு-தரப்பும்-இணக்கம்/

 

Share this post


Link to post
Share on other sites

கோத்தாவின் பாராளுமன்றம் ஒத்திவைப்பு (வேறுதேவைக்காக), mcc ஐ இயற்கையாக தடுத்ததான தோற்றப்பாட்டிற்காகவா?  

 

 

Gazette-notification-proroguing-the-7th-parliament-Sri-Lanka.jpg?ssl=1

 

Share this post


Link to post
Share on other sites

அகலக்கால் விரிக்கும் சீனா பற்றிய ஒரு முழுமையான பார்வை - அமெரிக்க மக்கள் சார்ந்த ( நிறுவனம் சாராத) ஊடகத்தால் 

- கடன் கொடுக்கும் திட்டம் 
- அதிபர் சி அவரகளின் அழுங்குப்பிடி 
- இலஞ்சம், பிரச்சனை உள்ள நாடுகளில் உள்புகும் சீன அரசு 
- அதன் தொலைதூர பார்வை 

Share this post


Link to post
Share on other sites

 

 

 

On 12/5/2019 at 10:34 PM, ampanai said:

அகலக்கால் விரிக்கும் சீனா பற்றிய ஒரு முழுமையான பார்வை - அமெரிக்க மக்கள் சார்ந்த ( நிறுவனம் சாராத) ஊடகத்தால் 

- கடன் கொடுக்கும் திட்டம் 
- அதிபர் சி அவரகளின் அழுங்குப்பிடி 
- இலஞ்சம், பிரச்சனை உள்ள நாடுகளில் உள்புகும் சீன அரசு 
- அதன் தொலைதூர பார்வை 

 

ஒரே பட்டி ஒரே பாதை என்பது நிலம்  மற்றும் கடல் சார்ந்த பாதையை மட்டும் குறிப்பது அல்ல என்பதே எனது புரிதல்.

உ.ம். இயற்கை வளங்களின் ஒரே பட்டி ஒரே பாதை.
 
இப்பொது நடப்பது அடித்தளத்தை கட்டி எழுப்புதல், நிலம், மற்றும் கடல் சார்ந்து.

அண்மைய சீன-ரஷ்யா lng விநியோகமும் இதையே சுட்டுகிறது. இதை சீன செய்ததின் காரணம், தற்போது நடக்கும் ஆர்டிக் வளப்  போட்டியில்,   ரஷ்யா ஊடாக,   தனது பங்கிற்கான சந்தையையும், விநியோக பாதைகளையும் வடிவைமைத்தல் என்ற திட்டத்தின் ஓர் பகுதியாக.   

 

Share this post


Link to post
Share on other sites

சீனா எதிர்பார்ப்பு

இந்தியா எதிர்ப்பு  எதிர்(பார்)ப்பு
தமிழன்( எதிர்) பார்'''''''' பார்க்கின்றான்
சிங்களவன் எதிர்ப்பும் இல்லை எதிர்பார்பும் இல்லை ......மொடையா பார்வை

Share this post


Link to post
Share on other sites
On 11/25/2019 at 4:55 PM, ampanai said:

"எங்கள்" பகுதியில் இருந்து வெளியேறு: இந்தியாவுக்கு நேபாளம் எச்சரிக்கை! 

நேபாளம், இந்தியா மற்றும் திபெத்தின் முக்கோண சந்திப்பில் உள்ள கலபானி பகுதி நேபாளத்தைச் சேர்ந்தது என்றும், இந்தியா உடனடியாக தனது இராணுவத்தை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் நேபாள பிரதமர் கே. பி. ஓலி நேற்று (நவம்பர் 17) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

 

 

Share this post


Link to post
Share on other sites

இந்தியா சீனாவை எதிர்கொள்ள அமைதியான முறையில் தனது கடற்படை பலத்தை அதிகரித்து உள்ளது. இது, அமெரிக்காவிற்ரு சாதகானது - அமெரிக்க ஆய்வு நிறுவனம் 

 

Share this post


Link to post
Share on other sites

எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மையில்லை - டலஸ்

(நா.தனுஜா)

அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவை என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

அத்துடன் இந்த உடன்படிக்கையைக் கருத்திலெடுக்க வேண்டுமா என்ற தீர்மானத்தை எட்டுவதற்கு அதுகுறித்த முழுமையான மீளாய்வொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே அரசாங்கம் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகின்றது என்றும், அதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் வெளியாகும் செய்திகள் எவ்வித அடிப்படையும் அற்றவையாகும்.  

எனினும் கடந்த காலத்தில் இவ்வுடன்படிக்கை தொடர்பில் இல்லாத அபாயமொன்றை நாமாகவே உருவாக்கி பிரசாரம் செய்யவில்லை. உண்மையிலேயே அதில் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அச்சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பூதாகரமாகச் சித்தரித்துவிட்டு, தற்போது அந்த உடன்படிக்கையில் 30 சதவீதமானவையே நாட்டிற்குக் கேடானது என்று   ஆளுந்தரப்பினர் கூறிவருவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/70917

Share this post


Link to post
Share on other sites

UPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான  ஒப்பந்தம் அல்லது எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பிலான அறிவிப்பை உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இன்று  வெளியிட்டார். 

அத்துடன் இதுவரை குறித்த ஒப்பந்ததில் கைச்சாத்திடுவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இதன்போது நீதிமன்றுக்கு அறிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையில்  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் ஊடாக அரசியலமைப்பு உறுப்புரைகள் மீறப்படுவதாக அறிவிக்குமாறும் அந்த ஒப்பந்தம் செயற்படுத்தபடுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கக்  கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று  அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போதே அவர் இதனை நீதிமன்றுக்கு தெளிவுபடுத்தினார்.

நீதியர்சர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியர்சரகள் குழாம் முன்னிலையில்  இன்று மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துடன் இதன்போது ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் மனுக்கள் மீதான பரிசீலனையை மார்ச் மாதம் 25 ஆம் திகதி பரீசீலிப்பதாகவும் அறிவித்தது.

https://www.virakesari.lk/article/71016

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நானும் அதையே நினைத்தேன். Lol
  • கொக்கட்டிச்சோலைப் படுகொலை.! On Jan 28, 2020   தமிழீழத்தில் மீன்பாடும் தேநாடு என வர்ணிக்கப்படும் மட்டுநகர்மண் தேநாடு மட்டுமல்ல. நெல்விளையும் பொற்பூபியும்கூட அழகொளிரும் கிராமங்களை காணவிரும்பும் மனிதர்கள் எங்கும் அலையத்தேவையில்லை. நேராக மட்டுநகர் மண்ணில் காலடி வைத்தால்போதும். திரும்பும் திசையெல்லாம் பொன்விளையும் நெல்வயல்கள். நடுவே ஒரு பெரும்மேடு. அந்தமேட்டின் பத்துப் பன்னிரண்டு தென்னை அவற்றின் நடுவே அழகோடு ஒரு வீடு. நாற்புறமும் நீரால் சூழப்பட்டு தீவு என்ற பெயர்பெற்ற கிராமங்கள் போல நாற்புறமும் வயலால் சூழப்பட்டதீவு மகிழடித்தீவு, அரசடித்தீவு, போரதீவு என வருகின்ற கிராமங்கள் வயல்வெளிகளைச் சார்ந்தது. பெருக்கெடுத்து வரும் அருவிகளின் அருகே பொண்டுகல் சேனை, இலுப்படிச்சேனை, மாவடிச்சேனை என வரும் கிராமங்கள். இவையெல்லாம் மட்டுநகர் மண் வழங்குன்றாமண் என்பதைப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புலப்படுத்திவிடும். சிறுகட்டிப் பெருகவாழும் வீடுகளில் பொற்குவியல் போல் செல்விருந்தோம்பி வரவிருந்து காத்திருக்கும் பண்பாடுமாறாத மனித உள்ளங்கள் தமிழீழ சுதந்திரப்போருக்காயப் பிள்ளைகளை அனுப்பி வைத்த வெற்றிக்காய்க்காத்திருக்கும் வீரமிகுதாய்க்குலம். இவையெல்லாம் தமிழனின் இருப்பு இன்னும் அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டும். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் இந்தமக்கள் தங்கள் மண்ணை சிங்கள ஆக்கிரமிப்பில் பறிகொடுத்துவிட விருப்பில்லை மண்ணை மாத்திரமில்லாது தங்கள் வாழ்வின் அடித்தளமாய் விளங்கும் பண்பாட்டையும் இழந்துவிடத்தயாரில்லை. ஆனால் இவ்விரண்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட சிங்கள பேரினவாதம் கங்கணம் கட்டிநின்றது. வகைதொகையின்றி கொடூரமாக இவர்களை கொலைசெய்வதன்மூலம் அச்ச உணர்வினை ஏற்படுத்தி இம்மண்ணையும் பறித்து, பண்பாட்டையும் பறித்துவிட முடிவு செய்தது. சிங்கள பேரினவாதத்தின் இந்த முடிவின் விளைவுதான் கொக்கட்டிச்சோலைப் படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலைப்படுகொலை, புல்லுமலைப்படுகொலை, உடும்பன்குளப் படுகொலை, தோணிதாண்டான்மடுப் படுகொலை என நீண்டுசெல்லும் தமிழ்ப்படுகொலைகள். சர்வதேச உலகமும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், கண்மூடிக் காணாதது போலிருந்துவிட்டன. இப்படுகொலைகளை மரணத்துக்கஞ்சி படித்த மேதைகள் என்று தமக்கப் பட்டம் வாங்கிக்கொண்ட எங்கள் மக்களும் எழுதிவைக்கத் தவறிவிட்டார்கள். ஒரு பெரும் இன அழிப்பின் துயரத்திலிருந்து மீண்டுவிட எழுந்ததுதான் எங்கள் விடுதலைப்போர். ஆண்டுகள் பல மறைந்தாலும் படுகொலையிலிருந்து தப்பித்துக் கொண்ட ஒருசில மக்களின் மனங்களிலிருந்து அந்தக் கொடூர நினைவுகளை அகற்றிவிட முடியாது. அவர்களின் மனச்சிறைக்குள் அடங்கிக் கிடக்கும் அந்தக் கொடூர நினைவுகனை எங்கள் இனத்திற்கு அறியக்கொடுப்பது வரலாற்றுக்கடமையாகும். 22.03.2001 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி படுவானில் சூரியன் விழுந்துகொண்டிருந்தாலும் பங்குனிப் புழுக்கம் குறைந்து விடவில்லை. கொக்கட்டிச்சோலையிலிருந்து மகிழடித்தீவுக்கு வந்திருந்தேன். மகிழடித்தீவுச் சந்தி கொடூர படுகொலைகளால் மகிழ்வை இழந்து போய்க்கிடந்தது. சந்தியின் அருகே கிறிஸ்தவ தேவாலயமொன்று. சிலுவை சுமந்த யேசுவின் முன்னாலேயே இப்பெரும் படுகொலைகள் அரங்கேறிவிட்டன. தேவாலயத்தினருகே வசதிகள் பலகொண்ட வைத்திய சாலையொன்று இருந்தது, ஆனால் இரும்புப் பூட்டுக்கள் நாலைந்தினால் கம்பிக்கதவுகள் இழுத்துப் பூட்டப்பட்டிருந்தன. டாக்டர்கள் யாரும் இங்கு வந்திருந்து வைத்தியம் செய்யத் தயாரில்லை. படுகொலைகள் நடந்து ஒரு தசாப்தம் கடந்திருந்தாலும் அந்தக் கொடூர நினைவுகள் உயிரை இன்னும் விரட்டிக் கொண்டிருப்பதை அந்த வைத்தியசாலை காட்டியது. சந்தியில் நின்று பார்த்தால் பெரும் வயல்வெளியையும், வயல்வெளியைக்கடந்து மட்டுநகரின் எழு வான்கரையினையும், படுவான்கரையினையும் பிரிக்கும் வாவியையும் துல்லியமாகக் காணலாம். எழுவான்கரையிலிருக்கும் மண்முனை இராணுவமுகாம் மகிழடித் தீவிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலயே இருந்தது. மகிழடித்தீவை நோக்கி அவர்கள் வைத்திருக்கும் பீரங்கிக் குழல்கள் இன்னும் கொலைப்பசியோடுதான் இருக்கின்றன. மகிழடித்தீவு சந்தியிலிருந்து சில நூறு மீற்றர் தூரத்தில் அமெரிக்காவின் நிதியுதவித் திட்டத்தோடு உருவான இறால்ப் பண்ணைத் திட்டத்தின் எச்சசொச்சங்கள் சில தெரிந்தன. 1987ம் ஆண்டு தைத்திங்கள், 28ம் நாள் இறால்பண்ணை தமிழ் மக்களின் இரத்தப்பண்ணையாக மாறியநாள். தைபிறந்தால் வழிபிறக்குமென்றிருந்த நாளில் கொடும்கொலைகள் நடந்துபோனது. வாய்பேசமுடியாத கண்ணீரால் மட்டும் கதைபேசி நிற்கும் பல விதவைகளை உருவாக்கிவிட்ட நாள். இன்றும் இன்னும் வாய்விட்டு அழுதால் கொல்லப்பட்டுவிடுவோம் என்று அஞ்சிநடுங்கும் நிலையை உருவாக்கிய நாள். உலகப் பொலிஸ்காரன் எனச்சொல்லப்படும் அமெரிகாவின் நிதியுதவியோடும், கண்காணிப்போடும் இயங்கிய இறால்பண்ணையில் 135 தமிழ்மக்களின் குருதிச்சேறுபடிந்த துயரம் ஏன் வெளியுலகுக்குத் தெரியவில்லை? ஏன் தெரிவிக்கப்படவில்லை? இந்த கேள்வி மனதில் எழுந்துநிற்க, செல்லத்துரை- ரவிந்திரன் ஆசிரியர் வீட்டு முற்றத்தில் அமர்ந்தேன். இறால்பண்ணைப் படுகொலையில் தப்பிவிட்ட ஒரு சிலரில் இவரும் ஒருவர். அன்று இறால்ப்பண்ணையின் இரவுநேரக் காவலாளியாகக் கடமைபுரிந்தவர். கொலை நடந்த அன்று பகல் நேரக்காவலாளியாக மாற்றம்பெற்றிருந்தார். கொலைத் தாண்டவத்தின் ஒரு பகுதிக்குள் சிக்கித்தடுமாறி தப்பித்துக்கொண்ட இவரிடம் அந்த நாள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். ‘நான் அதிகாலையிலேயே வேலைக்குப் போக வெளிக்கிட்டேன். வெளிக்கிடேக்க ஒருநாளும் இல்லாத மாதிரி ரெண்டு மூண்டு கெலி சுத்திச்சுத்தி அடிச்சுக் கொண்டிருந்தான். ஏதோ நடக்கப்போகுதெண்டு தெரிஞ்சிட்டுது. இறால்பண்ணையை நோக்கி ஓடினேன். ஆம்பிளைங்க கனபேர்பண்ணையை நோக்கி ஓடிவந்தாங்க. வெள்ளக்காரன்ர பண்ணதான் எதுவும் செய்ய மாட்டானெண்டு எல்லோருக்கும் நம்பிக்கை. முதலும் ரெண்டுதடவை இப்பிடி சுத்தி வளைச்சுப் பிடிச்சு விசாரிச்சிட்டு விட்டிருந்தான். அதால, அந்த நம்பிக்கையில ஓடினம். சந்தியில பவல்வாகனம் வந்து நிண்டுது. அதில இருந்து ஆமி குதிச்சுக் குதிச்சு ஒடிப்போய் வீதி ஒரத்தில பதுங்கினாங்க…. முதல் முதல் STF எப்பிடி இருப்பாங்க எண்டதை அண்டைக்குத்தான் பார்த்தம் வீதி ஓரத்தில் பதுங்கி இருந்தவங்க எல்லோருமே இறால்பண்ணையை நோக்கித்தான் துப்பாக்கிய நீட்டியிருந்தாங்கள். ஒருத்தன் எழும்பி நம்மள நோக்கி துவக்க நீட்டினபடி வந்தான். இதப் பார்த்தவுடனேயே எங்களோட நிண்ட ரெண்டுமூண்டுபேர் குனிஞ்சு கொண்டு தண்ணீக்கால மெதுமெதுவாக ஓடினாங்க. ‘அம்பிகைபாதம், ஓடாதேங்கோ. ஓடினா எல்லோரையும் சுடுவான். திரும்பிவாங்கோ’ என மெதுவாய் கூப்பிட்டம். திரும்பி வந்தாங்க. வரேக்க முகமெல்லாம் ஒருமாதிரியா மாறிட்டுது. முதலைக்குடா, முனைக்காடு,மகிழத்தீவு, அம்பிளாந்துறை என எல்லா இடங்களிலுமிருந்து வந்தவங்களும் இதுக்க பட்டிட்டாங்க. வயல்வேலையில நிண்டிட்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த நாரயணப்பிள்ளை திரும்பி பண்ணைக்குள்ள ஓடிவந்தார். முதல் வெடி அவருக்குத்தான் விழுந்தது. அவர் நல்ல வாட்டசாட்டமான மனுசன். முறுக்குமீசையும், எழும்பின தோற்றமும், நல்ல பலசாலி, மூண்டு ஆமி நாங்க நிக்கிற இடத்துக்குவந்திட்டான். வந்து எல்லாரையும் ஒரு இடத்துக்கு வருமாறு கத்திக்கூப்பிட்டான். எல்லாரும் நடுங்கிக்கொண்டு நிற்க ஒரு சூடு சுட்டான். உடன கும்பியா நிண்டவங்க எல்லாம் சிதறினாங்க. நான் என்ன செய்தனெண்டா, இறால்பண்ணைக்குள்ள கிடந்த சின்னச்சின்ன கொட்டில்களோட மெதுமெதுவாக மறஞ்சு ஒடினேன். தெய்வநாயகமெண்ட இளைஞனும் எங்களுக்கு முன்னால ஓடினவர். தீடீரெண்டு ஒரு வெடிச்சத்தம். அவருக்கு என்ன நடந்ததெண்டு தெரியாது நான் உடன தண்ணிபாயிற வாய்க்காலுக்க படுத்திட்டன். எனக்கு முன்னால நேசதுரை எண்ட இளைஞனும் வாய்க்கால் பக்கம் பதுங்கிட்டாங்க, அவன் என்ன செய்தானெண்டா, ஓடினபக்கமா பவல் வாகனத்திருப்பிவிட்டிட்டு அடிக்கத் தொடங்கிட்டான். இஞ்சால குருகிக் காவலுக்கு வந்த சின்னப் பொடியங்களையெல்லாம் சுட்டுச்சுட்டு போடுறான். பாவம், கஸ்ரத்தில காலைலேயே இறாலை காக்காய் தூக்காமல் பாதுகாக்கிறதுக்கு வந்து நிப்பாங்க. காக்காய் காவலுக்கு வந்தா ஏதாவது கிடைக்குமெண்டு வேளைக்கே வந்திடுவாங்க அவங்கள எல்லாம் சுட்டுச்சுட்டுப் போட்டாங்க. நான் போட்டிருந்த உடுப்பெல்லாத்தையும் களட்டிட்டு தலையைத் தூக்கிப் பார்க்கிறதும், ஓடுறதும், படுக்கிறதுமாய் கண்ணாக்காட்டை நோக்கி ஓடினன். கண்ணா ஓரமாய் ஓடீட்டிருக்கும்போதே சூட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் பண்ணைப்பக்கம் சத்தத்தை காணல்ல. திரும்பிப் போய்ப்பாப்பமென்று யோசிச்சன். திரும்பி வரேக்க, தம்பி , உங்கால போகாத, பண்ணேல நிண்ட எல்லாரையும் சுட்டிட்டாங்க என சொல்லித் தடுத்தார். ஒரு முதியவர். நான் ஓடினதுக்கு காரணம், ஏற்கனவே நான் ஆசிரிய நேர்முகப்பரீட்சைக்குப் போகும்போது கரடியானத்து காம்பில மறிச்சு என்ர இறால்ப்பண்ணை அடையாள அட்டையை பறிச்சிட்டாங்ககள் நேர்முகப் பரிட்சை முடிஞ்சு திரும்பி வரேக்க கரடினயனாத்தால வாற பயத்தில, புல்லுமலையில பஸ்சால இறங்கி, நடந்து வந்தனான். அடையாள அட்டை இல்லாத பயத்திலதான் ஓடினனான். கிடந்திருந்தா, நானும் பட்டிருப்பன். இறால்பண்ணைப் படுகொலையில் மககையும் மருமகன் இருவரையும பறிகொடுத்து விதவையாக ஏளைக் குடிசைக்குள் வாழும் திருமதி தம்பிப்போடி ஞானம்மாவை அவரது வீட்டில சந்திச்சுக் கேழுங்கோ என ரவிநாதன் ஆசிரியர் அன்றைய நாளின் ஒரு பகுதியை நினைவுக்குக் கொண்டு வந்தார். இந்தக் கொலை முழுவதையும் முடியும்வரையும் நிண்டு பார்த்துத் தப்பினது றைவர் செல்லத்தம்பியண்ணன் மட்டுந்தான்.அவங்களிட்ட கேட்டாத்தான் இந்தக் கொலைபற்றி முழுமையாய் அறியலாம் என ரவிநாதன் ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, ‘நம்மட அண்ணன் ஓராளும் இதில பட்டுத் தப்பினவங்க. இதைப்பாத்த அதிர்ச்சியில நாலஞ்சு நாளாய் மூளை குழம்பி இருந்தவங்க. அவங்களிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க’ என கணபதிப்பிள்ளை மோட்சமலர் என்ற முன்பள்ளி ஆசிரியர் கூறினார். இவ்வாசிரியர் இறால்ப்பண்ணைப் படுகொலையிலும், மகிழடித்தீவு, அரசடியில் நடந்த படுகொலையிலும் தப்பியபர்களில் ஒருவர். 1991ம் ஆண்டு மகிழடித்தீவு படுகொலையில் சூட்டுக் காயங்களோடு உயிர்தப்பியவர். இறால்ப்பண்ணைப் படுகொலையில் மகனையும், மருமகனையும் பறிகொடுத்து விதவையாய் ஏழைக்குடிசைக்குள் வாழும் திருமதி தம்பிப்போடி ஞானம்மாவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினேன். ‘மகன், காலேல குளிச்சிட்டு பள்ளிக்குப்போக வெளிக்கிட்டான். துறைக்கு அங்கால கல்லடி சிவானந்தாக் கல்லூரியிலதான் யுஃடு படிக்கிறவன். அவனோடு படிக்கிற இன்னோரு பொடியன் வந்தான். அவனோடு சைக்கிள்ள தொத்திட்டு மகனும் போய்த்தான். போய்த்த இடையில திரும்பிவந்து சொன்னான், ‘துறைக்கு அங்கால கொமாண்டோஸ் நிக்கிறான், திரும்பிப் போங்கோ எண்டு திரும்பி அனுப்பீட்டாங்கம்மா’ எனசொல்லீட்டிருந்தான். அப்ப, மகள் வந்து சொன்னாள் ‘அம்மா எல்லாரும் இறால் பண்ணைப்பக்கம் போறாங்க, தம்பியையும் அவங்களோட அனுப்புவம்’ என சொல்ல ‘மாமா நிக்கிறார், அப்பா நிக்கிறாரு, அந்தா, சீனியப்பா நிக்கிறாரு. எல்லாரும் நிக்க நான் மட்டும் போகல்ல’ என மகன் மறுத்திட்டான். என்னண்டாலும் செய்யுங்கோ எண்டு சொல்லிட்டு நிக்க சந்தியில இருந்து நாலு கொமாண்டோஸ் இஞ்சநோக்கி வாறாங்க, வந்தவங்க வளவுக்கு உள்பட்டு, குசினிக்க புகுந்து கதவோட மறஞ்சுநிண்ட தங்கச்சிட புருசன புடிச்சிட்டு வெளியில கொண்டு வந்தாங்க. பிள்ளையை தூக்கிவச்சிருந்த மகளாரின்ர புருசனனை ‘அடே குழந்தையை கீழபோட்டிட்டுவா’ என அதட்டி அவரையும் மகனையும் கூட்டீட்டு ஒழுங்கையால போனாங்க. பின்னால அழுதிட்டு ஓடினன் ஒழுங்கையால வந்த மூண்டு கொமாண்டோஸ் மற்ற மகளோட புருசனையும் பிடிச்சிட்டு வந்தான். ரெண்டு மருமகனையும், மகனையும், தம்பியையும் சேத்து நாலுபேரையும் கொண்டு போனான். பின்னால அழுது கொண்டு ஒடின எங்கள சுட்டுப் போடுவம் திரும்பி ஓடுங்க என வெருட்டி துப்பாக்கியை நீட்டினான். சந்திக்கு கொண்டு போகும்வரை பின்னாலேயே ஓடினம். சந்தக்கு போனதும் தங்கச்சீட புருச ரைக்ரரில ஏத்தினாங்க (மயில்வானம்) ஏத்தின உடனேயே தலேல வெடி விழுந்தது. பின்னாடி அடுத்த தங்கச்சியோட புருசன் (கனகசூரியம்) பண்ணப் பக்கம் கூட்டீட்டு போய் அங்க இருந்த ரயர்களை உருட்டீட்டு வாறதப்பார்த்தம். மகனை சந்தியில வேத கோயிலுக்கு முன்னால இருத்தி வச்சிருந்தாங்க, ரயரை உருட்டீட்டு வந்ததுதான் தெரியும். மறுகா என்ன நடக்கு தெண்டு தெரியேல்ல வெடிச்சத்தம் கேக்குது, நான் ஓடிட்டுபோய் கோயிலுக்குப் பக்கத்து வேலியால எட்டிப்பார்த்து கத்தி அழுதன். என்னோட நிறையப் பேரின்ர தாய்மாரெல்லாம் நிண்டு கத்தினாங்கள். மழைதூறீட்டிருந்தது. இறால்குளத்துக்குக்க சுட்ட வொடியெல்லாத்தையும் வச்சிருந்த ஆக்கள கூட்டிட்டுப் போய் தூக்கிவந்து மெசின் பெட்டிக்க அடுக்கிறாங்கள். கொஞ்ச கொமாண்டோஸ் அடுக்கின வொடிக்குமேல மிரிச்சி உழக்கி நடக்கிறாங்க, மறுகாப்பத்தா நம்மடமகன மெசின் பெட்டியில ஏத்திறாங்க. முதுகுப்பக்கமா தெரியுது. முதுகுப் பக்கம் திரும்பச்சொல்லீட்டு வச்சான் வெடியொண்டு. நான் வீரிட்டு கத்தீட்டு ஓடினன். ‘என்ர மகன சுட்டிட்டாங்க. பனமரம் போல என்ரபிள்ளை விழுந்ததைப்பார்த்தன். என ஒப்பாரி வச்சு அழுதாள். (மகன் தில்லைநாதன்) என்ர மகன், இரண்டு மருமகன் தம்பி நாலு பேரையுமே சுட்டிட்டாங்க’ என சொல்லிவிட்டு சேலைத்தலப் பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். விதவைகளாய் நிற்கும் இவரது மகள் இரண்டு பேரின் அருகேயும் அவர்களது பிள்ளைகளும் கண்கலங்கி நின்றனா. ஞானம்மாவின் கணவரும் இறந்துவிட்டதால் விதவைகள் நொந்து, வெந்து வெம்பி அழுதபடி வாழும் மாறாத வடுவினை அந்தப்படுகொலை உருவாக்கிவிட்டது. ‘இறால் பண்ணைப் படுகொலையின் முழுமையும் கண்டு தப்பிய ஒரேயொரு உயிர், றைவர் செல்லத்தம்பியண்ணதான்’ என மகிழடித்தீவில் யாரைக்கேட்டாலும் வியப்போடு கூறினார்.அவரிடம் இந்த உண்மைகளை அறிந்திட விரும்பி அவர்முன்னே ஆவலோடு அமர்ந்தேன். உழைத்துழைத்து வலுவேறிப்போன உடற்கட்டு முதுமையிலும் ஒரு கம்பீரம் இவரிடம் தெரிந்தது. ‘நான் வழக்கமாய் இரவிலேயும், பகல்லேயும் வேலை செய்ளயிறனான்தம்பி. சம்பவம் நடந்த அண்டைக்கு காலேல 5மணிக்கெல்லாம் கப்பல் (கெலிகொப்டர்) சுத்திச்சுத்திப் பறப்கிறதும் போறதும் வாறதுமாயிருந்தான். நான் என்ன செய்தனெண்டால், இறால்பண்ணை ஒபீசுக்கு வந்தன். அப்ப ஒரேவெடிச்சத்தம் கேக்குது. கப்பல் அங்க போறதும் இஞ்ச வாறதுமாய் நிக்குது. நான் பண்ண வாகனத்தை எடுத்துக் கொண்டுபோய் நிக்கிற இடங்களில் நிப்பாட்டினன். நிப்பாட்டிப் போட்டு ஒபீசுக்கு வந்திட்டன். பேமன்னரா வேலைசெய்யிறாக்களும் கசுவலா வேலைசெய்யிறாக்களும் சேர்ந்து ஒண்டாய் நிண்டம். வெள்ளக்காரன்ர பண்ணேல வேலைசெய்யிற எங்கள ஒண்டும் செய்யமாட்டானெண்ட நம்பிக்கையிலதான் நிண்டனாங்கள். அப்பிடி நிற்க, சந்திப்பக்த்hல வந்த கவசவாகனத்தை எங்கடபக்கம் திருப்பிவிட்டு கடகடண்டு அடிக்கத்துவங்கீட்டான். நாங்களெல்லாம் நிலத்தில விழுந்து படுத்திட்டம், நாங்கள் அண்டைக்குத்தான் கொமாண்டோசைக் கண்டோம். பெரியபெரிய புள்ளிப் புள்ளி உடுப்போட மூண்டுபேர் நாங்க நிக்கிற இடத்தக்கு வாறங்க. ஒரு 50யார் தூரதத்துக்கு வந்ததும், அடோ எல்லாம் வெளியிலவா எண்டு சொல்லி படபடெண்டு மேலே சுட்டான். கொச்சத் தமிழில அவன் கூப்பிட்டது எங்களுக்கு விளங்கினதால வெளியில நிரையாய் வந்து நிண்டம். கிடுகிடெண்டு எல்லாரும் நடுங்கத் தொடங்கீட்டம் நடுங்கின நடுக்கத்தில எல்லாற்ற கால்களும் சேத்தில மெது மெதுவாய் புதஞ்சுகொண்டிருந்தது. அவன் வந்தவரத்தில கம்பியப்பிடிச்சு இழுத்தான். பதினொருபட்டுக் கம்பி அடிச்சிருந்தது. ஆனால் கட்டை இறந்து போச்சுது அவன் இழுத்த வேகத்தில கட்டபெயர்திட்ட வந்து அவன்ர தலையில அடிச்சிட்டுது. நெத்தியில சின்ன காயம் வந்து ரத்தம் ஒடிச்சுது அவனுக்கு அதுவும் நல்லா ஏறிச்சுது, அடே அடு அடு எண்டு ஏதோ கேட்டான். நமக்கு ஒண்டும் விளங்கல்ல. கருணா சொன்னான் குறடு இருக்குதா எண்டு கேட்கிறான் எனக்கூறிவிட்டு, குறட்டை எடுத்துக் கொண்டு வந்து குடுத்தான். ரெண்வரி கம்பியை வெட்டிப்போட்டு அடோ எல்லாம் ரைக்ரரில ஏறு ஏறு என சொல்லிக்கொண்டே படபடெண்டு சுட்டான். எல்லாரும் உடன பாஞ்சு ஏறி ரைக்ரரை எடுத்தன். அப்ப பாத்தன் எங்கட கொக்கட்டிச்சோலை கந்தையா டொக்டரையும் அவரின்ர மகனையும் கண் தெரியக் கூடியதாய் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு கூட்டிட்டு வந்திருந்தாங்கள். அவர் பிசாமா சாறத்தால இழுத்து கொடுக்கு கட்டியிருந்தார். ரைகரரொட பண்ணைல இருந்த நம்ம இருபத்தேழுபேரையும் சந்திக்கு கொண்டுவந்தாங்கள். டொக்டரின்ர மேலெல்லாம் ரத்தம் வழியுது. அவர் விம்மி விம்மி அழுதார். எல்லோரையும் ரைக்டரால இறக்கிக் கவசவாகனத்தின்ர ரயருக்கு நேரே வரிசையாய் இருக்கச் சொல்லீட்டு, எல்லாரும் கண்ண இறுக்கி மூடுன உடனே கவசவாகனம் இரஞ்சுது எல்லாருக்கும் மேலால ஏத்தப் போறானெண்டு தெரியுது. அப்ப ‘அடே ஆரது றைவர்’ எண்டு கூப்பிட்டான். ரயருக்கு அருகிருந்த நான் எழும்பினன். எல்லாற்ற சேட்டிலேயும் வெள்ளைக் காரண்ட ஐரென்ரிக்காட் குத்தியிருந்தது. அதையெல்லாம் அவன் பாக்கேல்ல. நம்மட கொக்கட்டிச்சோலை வைரமுத்தரும் இன்னொருவரும் கையெடுத்துக் கும்பிட்டாங்க. அவன் தூசணத்தால் பேசிப்போட்டு காலால அடிச்சான். பிறகு, இரண்டு மூண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போய் எங்கட பண்ணேல கிடந்த ஒம்பதிஞ்சி பம்மொண்டத் தூக்கச் சொன்னான். சாதாரணமா எட்டுப்பேர் சேர்ந்துதான் அதை தூக்கிறனாங்கள். ஆனால் அண்டைக்கு விழுந்த அடியில் வயதுபோன ஒரு ஐயா தனியவே தூக்கினாரு. அதைவிட, அங்க கிடந்த தங்களுக்குத் தேவையான சாமானெல்லாத்தையும் தூக்கி ஏத்தச் சொன்னான். மாறிமாறி அடியும் உதையும் விழுந்தது. சுடப் போறானெண்ட பயத்தில் அடி உதை நோவொண்டும் தெரியேல்ல. எல்லாத்தையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் சந்திக்குக் கொண்டு வந்தான். ஒரு கொமாண்டோஸ் வந்து என்ர தலைமயிரைச் சுத்திப் பிடிச்சு இழுத்தான். அப்ப எனக்கு நல்ல தலைமயிர் இருந்தது. அவன் செய்த சித்திரவதைக்குப் பிறகுதான் வேதனையில மயிரெல்லாம் கொட்டுப்பட்டுது. தலைமயிரைப்பிடிச்சு இழுத்து விழுத்திப் போட்டு சந்தி மதில்கரையோட இழுத்திட்டுப்போய் இருத்தினான். பிறகு வேறொருவன் ஏறி ரைக்ரரையும் கொண்டு முதலைக் குடாப்பக்கம் போறான். நம்மட பண்ணேல வேலைசெய்யிற இருபத்தியேழு பேரையும் ஏத்தீட்டுப் போனான். ஒரு பத்து நிமிசத்தில் படபடெண்டு வெடிகேட்குது இஞ்ச சந்தியில நிண்டவங்கள் சுத்தியிருந்த வீடுகளுக்குள் புகுந்து அங்க இருந்தவங்க ளெல்லாரையும் பிடிச்சுக்கொண்டு வந்து சந்தியில இருத்தினான். கொஞ்சநேரத்தில ரைக்ரர் திரும்பி வந்து மண்முனையைப்பாக்க நிண்டுது. மழை பெய்திட்டிருக்கிறது. அமிர்தநாத்தெண்டு ஒரு பெடியன் பண்ணேல வேலைசெய்யிறவன். அவன் கூட்டிட்டுப் போனான். படாரென்று ஒரு வெடி அவன்ர தலேல விழுந்தது. ரத்தம் சீறிப் பாயிற சத்தம் பெரிசாய் கேட்டது. அரைக்கண்ணால பார்த்தன். தலையில பாயிற ரத்தம் நிலத்தில குழிபறிக்குது. திடீரென்று பார்க்க, ரைக்ரரை யெடுத்துக்கொண்டுபோய் அன்ரி மலேரியாவுல வேலை செய்யிற நம்மட சின்னப்பாதான் மயிலுப் போடியார். அவர் மாடு மேய்க்கப்போன மகனத்தேடி வந்திருக்கார். வேட்டியோட வந்த அவர கவேட்வாகனத்தால பளீரெண்டு ஒரு அடிஅடிச்சான். விழுந்திட்டார். அவரை ஏத்திறதுக்கு ரைக்ரரை கொண்டுபோனான். ரைக்ரரை கொண்டுபோய் திரும்ப பேக்க நொக்கடிச்சு நிண்டிட்டு. உடன றைவரை கொண்டுவா என ஒரு கொமாண்டோச அனுப்பியிருந்தாங்கள். ஏற்கனவே இருபத்தேழு பேரையும் சுட்டுப்போட்டு பெட்டீக்க அடுக்கி வச்சிருந்தான். நடக்கேக்க கால்ல ஏதோ பிசுபிசெண்டு ஒட்டுது, மெதுவாய் குனிஞ்சு பாத்தான் றோட்டு நீட்டுக்கு ரத்தம் படிஞ்சு போய்கிடக்குது. போய் மயிலுப்போடியரையும் தூக்கிப்போட்டிட்டு ஸ்ராட் எடுத்துக் கொடுத்தான. ஸ்ராட் வந்தவுடன் சொன்னான், இறங்கிப் பின்னாலபோய் சவத்துக்கு மேல ஏறு எண்டு. நான் வீமில நிக்கிறனெண்டு ஏறிநிக்க, விட்டான் அடியொண்டு. தாங்கேலாமல் மற்றப் பக்கம் ஓடினன். மற்றப்பக்கமும் வந்து அடிச்சான். தாங்க முடியாமல் சவத்துக்குமேல ஏறிநிண்டன். நாராயணபிள்ளை, கருணேஸ்சேர், குணேஸ், சௌந்தர் ராஜன், கந்தசாமி எல்லாரும் அழுதழுது சவத்துக்குமேல ஏறி இருந்தம். மதியம் 12 மணியைத் தாண்டீடடுது, சந்தி மறைப்பில மெசினக் கொண்டுவந்து நிப்பாட்டீட்டான். தண்ணி விடாய்க்குதெண்டு கேட்டான், பக்கத்தில சோமர் எண்டவர் கடை வச்சிருந்தவர், அவரிட்ட ஒரு உப்புவிஸ்கற் பெட்டி வாங்கினான். ‘ஏய், தண்ணி கொண்டு வா’ என அவரை மிரட்டி தண்ணி எடுப்பிச்சான். ஒரு உப்பு விஸ்கற்ரும் ஒரு முடறு தண்ணியும் எல்லாருக்கும் தந்தான். ஒருமணி இருக்கும் ‘டேய் எல்லாம் கண்ண முளி’ என சொல்லேக்கயே ஒராளுக்கு ஒரு அடிவிழும். நீவா நீவா என விரலால காட்டி நாலுபேர கூட்டீட்டுப்போய் மெசின் பெட்டியில கிடந்த சவத்துக்குமேல ஏத்துவான். பளீர் பளீரெண்டு நாலுவெடி கேக்கும் மாறுகா வருவான். ‘ கண்ணமுளி’ எண்டு சொல்லி அடிவிழும். நீவா நீவா என் நாலுபேரை அல்லது அஞ்சுபேரை கூட்டீத்தும் போவான். பளீர்ப் பளீரெண்டு நாலஞ்சு வெடிக்கேக்கும். அடுத்ததரம் வந்து டேய் கண்முளி…. இப்படியாய் எடுத்தெடுத்துக் கொண்டுபோய் சுட்டுக்கொண்டேயிருந்தான். ‘ஐயா நாங்கள் வறுமைப் பட்டனாங்களய்யா, இரண்டு மூண்டு பிள்ளையளய்யா’ என பலர் கும்பிட்டார்கள். காலால் கும்பிட்ட்டகைக்கு அடிச்சாங்கள் ‘அடோ எங்களுக்கும் அப்பிடித்தாண்டா’ என சொல்லிவிட்டு மறுபடியும் நீவா நீவா என நாலு நாலாய் கொண்டுபோய் சுட்டுக்கொண்டேயிருந்தாங்கள். பெட்டீக்க சவம் நிரம்பிட்டுது, பக்கத்தில மாக்கற் கட்டடமிருந்தது. அதுக்கு கொஞ்சத்தை இழுத்துப்போட்டிட்டு திரும்பவும் சவத்துக்குமேல ஏத்தி ஏத்தி சுட்டாங்கள். பொழுதும் பட்டுக்கொண்டு வந்துவிட்டது. வாகனமொண்டு இரையிற சத்தமொண்டு கேட்டுது கொஞ்சநேரத்தில் அதில வாகனமொண்டு வந்து நின்றது. அடோ எல்லாம் கண்ணமுளி எண்டு சொன்னாங்கள். அப்ப பத்தா கனகசூரியம் என்டவனையும் மகேஸ்வரன் என்டவரையும் கொண்டு போய் அவங்கட முடரை கொறட்டால நசிக்கிறாங்கள். துடிக்கத் துடிக்க குறட்டால நசிச்சே அவங்களக் கொண்டாங்கள். கொடித்துவக்கு கொடித்துவக்கு எண்டு அவங்கட பெரியவன கூப்பிட்டாங்கள். வாகனத்தில வந்திறங்கின பெரியவன சென்விரட்ண என சொன்னாங்கள். சவத்த எல்லாம் பெட்டியில ஏத்திக் அடுக்கினாங்கள். அடுக்கி தேடாகயிற்றால இறுக்கி இறுக்கி கட்டினாங்கள். மேல மேல உயரமாய் அடுக்கி நூற்றி முப்பத்தேழுபேரையும் ஏத்தி கட்டினாங்கள். நான் மெதுவாய் பின்பக்கத்தால நழுவி ஓடினேன். அடோ றைவர் மெதவாக இருண்டதால என்ன அவங்கால காணமுடியேல்ல. சவத்தெல்லாம் எங்க கொண்டு போனங்களோ தெரியாது. அப்படியேபோய் கல்ச்சேனையில புதிதாய் ஒரு காம்ப்போட்டிட்டு இருந்தாங்கள். சவத்தையெல்லாம் எங்க தாட்டாங்கள், எங்க எரிச்சாங்களண்ட தெல்லாம் இண்டைக்குவரைக்கும் யாருக்குமே தெரியாது. முதல் முதல் கொமாண்டோசின்ர சித்திரவதையை அண்டைக்குத்தான் கண்டம் அவங்களைப் போலக் கொலைக்காரப் பாவியள் எங்கேயுமில்ல மகன்’ எனச் செல்லத் தம்பியண்ணன் சொல்லும் போது உடலெல்லாம் வியர்ந்துக் கொட்டியது. பதின்நான்கு ஆண்டுகள் மறைந்துபோனாலும் அவரது வியர்வையும் நடுக்கமும் அந்த கொடூர கொலையிலிருந்து அவரது உள்ளம் விடுபடவில்லை. என்பதைக் காட்டியது. ஆக்கம்: மணலாறு விஜயன் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”   https://www.thaarakam.com/news/110853    
  • மற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா? காரை துர்க்கா   / 2020 ஜனவரி 28 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், அவ்வாறானவர்கள் நொண்டிச்சாட்டுகளைக் கூறித் திரிகின்றனர், என தெரிவித்துள்ளார்.    “மாற்று அணியொன்று தேவையில்லை; மாற்று அணியொன்றை உருவாக்குவதென்பது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதியாகும். அத்துடன், கூட்டமைப்புக்குள் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமூகமாகத்தான் பேசித் தீர்த்துக் கொண்டு வருகின்றோம்.தேர்தல் சம்பந்தமாகக் கூட, சுமூகமான தீர்வுகள் ஏற்பட்டு உள்ளன. எதிலும், எந்தப் பிரச்சினைகளும் இல்லை” எனவும், அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.    “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், கூட்டமைப்புக்குள் மீளவும் வருவதில், எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை” எனச் சுமந்திரன் தெரிவிப்பது போல, அதுவோர் இலகுவான காரியமா, நடக்கக் கூடிய காரியமா?    நேற்று வரை, ‘நீயா நானா’ என, எலியும் பூனையும் போல இருந்தவர்கள், இன்று முதல் ‘நகமும் தசை’யுமாக இருப்பார்களா? தங்கள் பகையை மறந்து, எங்கள் (தமிழ் மக்களுடைய) பிரச்சினை பற்றிச் சிந்திக்கும் அரசியல் முதிர்ச்சி, எந்தத் தமிழ்த் தலைவரிடம் தற்போது இருக்கின்றது?    கூட்டமைப்பிலிருந்து பிடுங்குப்பாடுகளோடும் முரண்பாடுகளோடும் வெளியேறியவர்கள்,  வெளியேறியும் உடனடியாவே புதிதாகத் தனிக்கட்சிகள் அமைத்து அரசியல் செய்பவர்கள், இலகுவாக இவற்றையெல்லாம் உதறித் தள்ளி விட்டு, மீண்டும் வருவார்களா?  சரி! அவ்வாறாக அவர்கள் மீள வந்தாலும், கூட்டமைப்புக்குள் அவர்களினதும் அவர்களது கட்சிகளினதும் வகிபாகம் என்ன?    அரசியல்வாதிகள் (தலைகள்) அனைவருமே, தலைமை தங்களுக்கே வேண்டும் என, அடிபடுகின்ற இக்காலப் பகுதியில் மீளவருபவர்கள், கூட்டமைப்பின் தலைமை சொல்லுவதை, சிரமேற் கொண்டு செயற்படத் தயாராக இருக்கின்றார்களா?    “மாற்று அணி உருவாகுவதாக இருந்தால், அது தமிழ் மக்களின் ஒற்றுமையை, மிக மோசமாகப் பிளவுபடுத்துகின்ற ஒரு நோக்கம் ஆகும்” எனவும், சுமந்திரன் தெரிவித்து உள்ளார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகும்.    ஆனாலும், சிதறும் தமிழ் மக்களின் ஒற்றுமை, சிதையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி என, அனைத்தையும் மறந்தே, தமிழ் மக்களின் மத்தியில் புதிதாகக் கட்சிகளும் அணிகளும் உருவாகி வருகின்றன.    மறுவளமாக, புதிதாகக் கட்சிகள் முளைப்பதற்கு, தாய்க்கட்சிகளும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக உள்ளன என, ஏன் கூற முடியாது? ஆனால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றார்களா?    தமிழ் மக்களது விடுதலைக்கான அறப் போராட்டம், ஆயுதப் போராகத் தோற்றம் பெற்றது. அக்காலப் பகுதியான எண்பதுகளில், பிரிவினைகள் பல்கிப் பெருகி, பல ஆயுதப் போராட்ட இயக்கங்கங்கள் தோற்றம் பெற்றன. பின்னாள்களில், அவை தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டன.    அவர்கள், தங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகள், தங்கள் இனத்தின் பலத்தைப் பாதிக்கும் என, எக்காலத்திலும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.  அன்று அவர்கள், தாங்களும் தங்கள் இயக்கங்களுமே மேலானவை எனக் கருதின. அதுபோலவே, இன்று தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தாங்களும் தங்கள் கட்சிகளுமே புனிதமானவை; விவேகமானவை என்றே கருதுகின்றன.    ஆகவே, தமிழ்த் தலைவர்கள், கடந்த காலத்தைப் படிப்பினையாகக் கொண்டு, பாடம் படிக்கவும் இல்லை; இனியாவது படிக்கத் தயாராகவும் இல்லை என்பதே, வேதனையிலும் வேதனையாக இருக்கின்றது.    இதற்கிடையே, மாற்று அணி என்பது, தேவை இல்லாததாக இருந்தாலும், தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, தமிழ் மக்கள் கூட, மாற்று அணி தொடர்பில் அவ்வப்போது சிந்தித்து உள்ளார்கள்; சிந்தித்து வருகின்றார்கள் என்பதை, ஏற்றுக் கொள்ள வேண்டியே உள்ளது.   அது ஏன்?  அரசியல்வாதிகளின் பார்வையில் நோக்குகையில், தங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மையால், மாற்று அணிகளைப் புதிதாகத் தோற்றுவிக்கின்றார்கள். மக்களின் பார்வையில், ஏற்கெனவே இருக்கின்ற கட்சிகளின் மீது, நம்பிக்கை குறைதல்; நம்பிக்கை இல்லாமல் போவதால் மாற்று அணிக்கு ஆதரவு வழங்குகின்றார்கள்.     நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என, எல்லோரும் கதைத்துக் கொண்டாலும், அங்கு கூட, தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமே, அதிகமாக உள்ளது என, மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்.  தமிழ் மக்களின் தாய்க்கட்சி; தந்தை செல்வாவால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சி (1949) எனப் பல காரணங்களால், தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டு.    யுத்தம் 2009இல் ஓய்ந்திருந்தாலும், தமிழ் மக்கள் சத்தம் இல்லாத யுத்தத்துக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு தசாப்தம் காலங்களில், போர் இல்லாது போருக்குள் வாழும் மக்களை, தமிழரசுக் கட்சியால் எந்தளவு தூரம் அமைதி நிலைக்கு இட்டுச் செல்ல முடிந்தது?    இந்நிலையில், கூட்டமைப்பின் தலைமை என, பிற தமிழ் அரசியல் கட்சிகளது தலைவர்கள், தமிழரசுக் கட்சியின் தலைமை மீதே, சுட்டு விரல் நீட்டிக் குற்றங்களையும் குறைகளையும் கொட்டித் தீர்க்கின்றனர்.    கூட்டமைப்பில், தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகளாக, டெலோவும் புளொட்டும் இருக்கின்றன. அவை, கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியுடன் சமநிலையில் உள்ளனவோ, சகிப்புத்தன்மையுடன் உள்ளனவோ என, அவர்களுக்கு மட்டுமே தெரியும்.    ஆனால், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவது தொடர்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யதார்த்தபூர்வமாகக் கருத்துத் தெரிவித்து உள்ளார்.   “அதாவது, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள், உள்நுழைவதே சிறப்பானது; அதேவேளை, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரும், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் கூட்டமைப்புக்குள் வருவதென்பது, சாத்தியக் குறைவாகவே உள்ளது. ஏனெனில் அந்தளவுக்குப் பிரிவுகள் வளர்ந்து விட்டன” என்று கூறி உள்ளார்.    மீண்டும், இணைய முடியாதவாறு விலகல்கள் வலுப் பெற்று விட்டன. இது தொடர்பில், யாருடைய வாதம் சரி; யாருடைய வாதம் பிழை எனத் தமிழ் மக்களுக்குப் பரிபூரணமாகத் தெரியாது. ஆனால், பாதிக்கப்பட்டு ஆண்டியாக அலையும் தமிழ் மக்களுக்காக, கட்சி மறந்து, இணைந்து செயற்பட மறுப்பவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளா?    “ஒற்றுமையில்தான், எமது எதிர்காலம் உள்ளது. தற்போது முக்கியமானதொரு காலகட்டத்தில் உள்ளோம். இதில் நாங்கள் அனைவரும், ஒருமித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என, சம்பந்தன் வலியுறுத்தி உள்ளார்.    “கூட்டமைப்பின் தலைமை மாறினால், அதில் இணையத் தயார் என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து, என்னைப் பொறுத்தவரையில் நல்ல விடயமாகப்படுகின்றது. அவரை உள்வாங்கும் போது, கூட்டமைப்பு பலமான சக்தியாகத் திகழும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து உள்ளார்.    இவ்வாறாக, ஒற்றுமை பற்றியும் பிரிந்தவர்களை மீளவும் இணைப்பது தொடர்பிலும் பொதுவெளியில் உரையாடி வருகின்ற கூட்டமைப்பின் பிரமுகர்கள், அதற்குச் செயல் வடிவம் கொடுக்க, களம் இறங்க வேண்டும்.  தமிழரசுக் கட்சியின் தலைமையில் பிரதான பாத்திரம் வகிப்பவராக சுமந்திரன் உள்ளார். அவர் சட்டப்புலமை, மொழிப்புலமை, பேச்சாற்றல், இராஜதந்திரம் எனப் பல திறமைகளைத் தன்வசம் கொண்டு உள்ளார். தற்போதைய நிலையில், தமிழ் மக்களுடைய அரசியலை, முன்கொண்டு செல்வதற்குத் தேவையான நபர்.    ஆனாலும், அவர் அரசியலுக்குள் அரசியல் செய்து, கூட்டமைப்பிலிருந்து விலகியவர்களை, விலக வைக்கப்பட்டவர்களை மனமுவந்து உள்வந்து இணைவதற்கான களத்தை உருவாக்க வேண்டும்.    இதை செய்யத் தவறுமிடத்து, மாற்று அணியொன்றை உருவாக்குவதென்பது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யப்படுகின்ற மாபெரும் சதி என்றால் கூட, மாற்றாகப் பல அணிகள் உருவாகிக் கொண்டே இருக்கும். அத்தகைய போக்கில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.    இவ்வாறாக உருவாகி வருகின்ற மாற்று அணிகள், கூட்டமைப்புக்குச் சவாலாக அமையாது விடலாம். பெருமளவிலான வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறாது விடலாம். ஆனாலும், பெருமளவிலான தமிழ் வாக்குகளைச் சிதைக்க அவற்றினால் முடியும்.  மக்களுக்கு வாக்களிப்பில் இருக்கும்  ஆர்வத்தைத் தவிடுபொடி ஆக்க முடியும்.     இலங்கையில், கடந்த 70 ஆண்டு காலமாக, சிங்கள - தமிழ் இனப்பிணக்கைத் தீர்க்கும் முகமாக, பல உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.    அவை அனைத்தும், தோல்வியிலேயே முடிவடைந்தன. இதற்கு முற்று முழுதாகக் கடந்த அரசாங்கங்களைக் குறை கூற முடியாது. ஆகக்குறைந்தது, ஒரு சதவீதமான தவறையேனும், தமிழ்த் கட்சித் தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் கூட்டாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.    ஆகவே, ‘நீ சரியா, நான் சரியா’ என வேண்டாத பட்டிமன்றம் செய்வதை விடுத்து, நாங்கள் (தமிழ் மக்கள்) சரியாக வாழ்வதற்கான வழிவகைகளை, ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்துவார்களா?     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மற்றொரு-சதியா-மாற்ற-முடியாத-விதியா/91-244617  
  • ஆப்பை இழுக்குமா ‘குரங்கு’? -றம்ஸி குத்தூஸ்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “புதிய கூட்டணி அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளேன்” என்று,   ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொழும்புக்கு அழைத்து, மாபெரும் கூட்டமொன்றை, நேற்று முன்தினம் (26) கூட்டி, அவர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார்.     சஜித் பிரேமதாஸ, இங்கு உரையாற்றுகையில், “கடந்த தேர்தலின்போது, சிறிகொத்தா தலைமையகம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டிருந்தது” என்று வௌிப்படையாகக் குற்றம் சுமத்தினார்.    ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் சில அங்கத்தவர்களுடன் இணைந்து, தனக்கெதிராகச் செயற்பட்டதாகவும் ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தினார்.    ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பில் நடைபெற்ற அக்கூட்டத்தின் விளைவு என்னவென்றால், ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு துண்டுகளாகப் பிரிவதற்கான பாதைகளை அமைத்துக் கொடுத்துள்ளது என்று சொல்வதுதான் பொருத்தமாக அமையும்; அதுதான் உண்மையும் கூட!   ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமைக்குச் சார்பாக ஒரு பிரிவினரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைக்குச் சார்பாக இன்னொரு பிரிவினரும் என்று, பிளவுபடும் இறுதி எல்லையை எட்டியுள்ளது.   முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க ஆகியோர் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவுக்கு எதிராக அன்று செயற்பட்டிருந்தனர்.    இன்று முன்னாள் அமைச்சர் காமினி திஸநாயக்கவின் மகன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸநாயக்க, சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் செயற்படுவதைப் பார்க்கும் போது, இரத்தத்திலுள்ள ஒற்றுமை, இங்கு தெட்டத்தௌிவாகப் புலனாகின்றது.   இங்கு மேலுமொரு கதை உலாவுகின்றது. அது எதுவென்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரியவும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகத்தான் செயற்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.    இது இவ்வாறிருக்க, சஜித் பிரேமதாஸ தலைமையில், கொழும்பில் நடைபெற்ற ‘ஞாயிற்றுக் கிழமைக் கூட்டத்துக்கு’, பங்காளிக்கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், சமூகமளிக்கவில்லை.    ஆனால், ஹெலஉறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக்க கலந்துகொண்டது, தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடென்றே யூகிக்க வேண்டியுள்ளது.   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடன் சற்று முறுகல் நிலையிலுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    இதற்குக் காரணம், அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுடன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இவை எதற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சமூகமளிக்கவில்லை. இந்தத் தகவலின் அடிப்படையை உறுதிப்படுத்தும் முகமாக, ரவூப் ஹக்கீமைப் பலமுறை அலைபேசியூடாகத் தொடர்பு கொண்டபோதும் முடியாமல் போய்விட்டது. அவர் கண்டியிலும் திருகோணமலையிலும் இருப்பதாக அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் ஊடாக அறிய முடிந்தது.    இதேவேளை, கொழும்பு தபாலகத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.    அந்தக்கூட்டம் முடிவடைந்ததும் ரவூப் ஹக்கீமை அணுகி, “கடந்த பல கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றும், நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை”? என்று கேட்டதற்கு,   ரவூப் ஹக்கீம் சொன்ன பதில் இதுதான். “அவரிடம் (ரணில்) சென்றும் எந்தப் பலனுமில்லை; எனது நேரத்தை, நான் வீணடிக்க விரும்பவில்லை” என்பதாகும்.    ஆனால், பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடப் போகின்றீர்கள் என்று கேட்டதற்கும், முறையான பதில் அளிக்காமல், மழுப்பிவிட்டு, அவ்விடத்தை விட்டுத் திடீரென மறைந்து விட்டார் ரவூப் ஹக்கீம்.  அவரை நம்பித்தான், ஒரு சமூகம் காத்துக் கொண்டிருப்பதை சகிக்க முடியாமலுள்ளது.   இவை இவ்வாறு இருக்க, “ஒன்றிணைந்து செயற்பட்டால், அரசாங்கத்தைப் பொதுத்தேர்தலில் மாற்றியமைக்க முடியுமென, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். அதாவது, இந்தக் கருத்தை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், இவரின் இக்கருத்து, பிழையான ஒரு செயற்பாட்டையும் வழிகாட்டலையுமே போதிக்கின்றது.    கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது, பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். அப்போது ஜனாதிபதியாகத் தெரிவாவதற்கு, ஐ.தே.கவின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே மிக முக்கிய காரணியாக இருந்தது; இதுதான் உறுதியான உண்மை கூட.    ஆனால், இதே மைத்திரிபால சிறிசேனா, இதன்பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று, பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் எதிராகச் செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு தேசியப் பட்டியலூடக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி, அதற்கு மேலதிகமாக அமைச்சுப் பொறுப்புகளையும் கொடுத்து, அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டதை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மறந்து விட்டாரா?    நல்லாட்சி என்று பிரசாரப்படுத்தப்பட்ட, கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இழுபறிகளை நினைத்துப் பார்த்தால், வேறு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியும் மற்றுமொரு கட்சியைச் சேர்ந்த அரசாங்கமும் அமைந்தால் என்ன நடக்கும், மீண்டும் ஐந்து வருடங்களுக்கு இழுபறி நிலையா?     “தற்போது எமது தவறுகளைத் திருத்திக் கொண்டு, புதிய வடிவில் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராக வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். அதுமட்டுமல்ல,    “கட்சிக்குத் தேவையானதை, ஆதரவாளர்கள் கேட்கும் போது, அதை வழங்காவிட்டால், அப்போது, ஆதரவாளர்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்” என்று புத்திமதி கூறும் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு துருவங்களாகப் பிளவுபடப்போகின்றது என்பதை அறியவில்லையா?    யானையின் கால்களை ரணில் விக்கிரமசிங்கவும் யானையின் வாலை பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவும் பிடித்துக் கொண்டிப்பது ஹரினின் கண்களுக்கோ, புத்திக்கோ புலப்படவில்லையோ?    அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போதுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்; ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படும் கதை’ போலாகிவிடும்.    ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக, அரசாங்கம் மேற்கொண்ட பிரசாத்தின் பிரதான விடயங்களில் முக்கியமானவை, மத்திய வங்கி மோசடியும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுமாகும்.    இந்த இரண்டில் ஒன்றுக்காவது, இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவில்லை என்று ஹரின் பெர்னாண்டோ கூறிக்கொண்டிருக்கின்றார்.   சரி! அவர்கள் கூறுவதைச் சற்று நோக்குவோமானால், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து, நல்லாட்சி அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைத்தது. அந்தத் தெரிவுக்குழு இறுதி அறிக்கையையும் கையளித்தது. அதுசம்பந்தமாகத் தற்போது என்ன நடைபெற்றுள்ளது?   சரி! மத்திய வங்கி மோசடி குறித்து, இதுவரை அரசாங்கம் மக்களுக்குத் தீர்வை முன்வைக்கவில்லை எனக் கூறுகின்றார். சரி! நல்லாட்சி அரசாங்கமோ, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபாலவோ, அன்றைய பிரதமர் ரணிலோ, அர்ஜுன மஹேந்திரனை ஏன் கைது செய்யவில்லை?    இவர்களே களவுசெய்ய வாய்ப்பையும் தப்பிப்பதற்குப் பாதுகாப்பையும் வழங்கிவிட்டு, இப்போது நடந்துகொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினரோ அரசாங்கமோ பிணைமுறி மோசடியாளர்கள் பற்றி, இவ்வளவு தகவல்கள் இருந்தும், எவ்வாறாவது அவர்களைக் கைதுசெய்ய வேண்டுமென நினைக்காதது இன்னும் புரியாத புதிராகவேயுள்ளன.    ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் முதலில், ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைத்து, ஒற்றுமையாக ஆட்சியை அமைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.    ஐ.தே.க பிள­வ­டைந்து, தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால், அதனால் ஒரு­போதும் வெற்­றி­ய­டைய முடி­யாதெனக் கூறிய கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சிரேஷ்ட தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து தீர்­வொன்றைக் காண­வேண்டும். அந்­த­வ­கையில், தற்­போது கரு ஜய­சூ­ரிய இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யீடு செய்­தி­ருப்­பதால் விரைவில் இப்­பி­ரச்­சி­னைக்கு முடிவு கிட்டும் என்று நம்­பு­வ­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்தமையை இங்கு நினைவுபடுத்தலாம்.   ஆனால், நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜுபுர் ரஹுமானுக்குத் தெரியுமோ தெரியாதோ கட்சியின் பிளவு உறுதியாகி விட்டது என்பது. ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலும் பிரிந்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.    வீழ்ச்சியின் விழிம்பில் உள்ள கட்சியைக் காப்பாற்றுவதற்குத் தலைகள் தவறும்போது, ஆதரவாளர்களே முன்வரவேண்டும். இப்போதுள்ள நிலையில், ஐ.தே.கவுக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்துவது இவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இந்தப் பிளவு தொடருமானால், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விடும் என்பது உறுதி.    ரஞ்சன் என்ற ‘வைரஸ்’ உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸைப் போல், ஐக்கிய தேசியக் கட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு விவகாரம்.    ரஞ்சன் ராமநாயக்கவின் பெயர், பேசு பொருளாக உலாவிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஐ.தே.கவுக்குள் நிலவும் உட்புசல்களால், அதன் பயணப்பாதை திசைமாறுவதாக, சில அதிகாரமற்ற அரசியல்வாதிகள் அங்கலாய்க்கிறார்கள்.   இவர்களின் இத்தகைய சிந்தனைகளால்தான் இவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவில்லையென்று நம்பத்தான் வேண்டும்.    ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்றத்தில், “குறைந்தது இரண்டு நாளுக்காவது, என்னைப் பிணையில் விடுங்கள்; மேலும் சில பதிவுகள் உள்ளன; அவற்றையும் சல்லாடை போட்டுத் தேடினால், துல்லியமாக விளங்கலாம்; எந்தப் பொந்தில் என்ன பாம்பு உள்ளதென்பதைப் பார்க்கலாம்” எனக் கூறியிருந்தார்.   இவர் யார் யாருடன் பேசினாரோ, அனைத்துக் குரல் பதிவுகளும் இவரிடம் உண்டு. ரஞ்சன் ராமநாயக்க அரசியல்வாதி மட்டுமல்ல, சிங்கள திரையுலகில் முன்னணி கதாநாயகனும் ஆவார்.    இவரின் பிரபல்யம், பெரும்பாலும் பெரும்பான்மை மக்களின் கவனத்தில் தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பிரபல்யமாக இருந்தும், இவரின் இந்தச் செயற்பாடு பெரும் அதிருப்தியை அளித்துள்ளது.    இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் எனத் தொடர்ந்து கொண்டுதான் போகின்றது.    ஆனால், இவரின் வீட்டுக் சென்ற பொலிஸார், அங்கு சோதனையிட்டபோது, இந்தக் குரல் பதிவுகளைக் கண்டு பிடித்துள்ளனர். அது பொலிஸாரின் செயற்பாடு; அவற்றைக்குறை கூறமுடியாது.    கடந்த நாடாளுமன்றத் தொடரில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, “எனது தொலைபேசியை, கணினியை எடுத்துச் சென்ற பொலிஸ், எனது சிறப்புரிமைகளை மீறிச் செயற்பட்டமை குறித்து, எனது செயற்பட்டால் பாதிப்படைந்த அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். வேண்டுமென நான் எதனையும் செய்யவில்லை. என்னால் யாரும் பாதிப்படையக் கூடாது. எனது பாதுகாப்புக்காக, நான் இவற்றைச் செய்தேன்” எனவும் கூறியிருந்தார்.  இதைக் கணிக்கும் போது, இவரின் செயற்பாடு, திரைப்படம் ஒன்றில் சம்பவிப்பது அல்லது நடிப்பது போல்தான் உள்ளது.    இதேவேளை, நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, “எனது போராட்டம் தொடரும்; அரசாங்கத்தின் பக்கமிருந்து என்னிடம் பேசியோரின் விவரங்களையும் நான் இந்தச் சபையில் தைரியமாகச் சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்னிடம் ஓடியோ மட்டுமல்ல, வீடியோவும் உண்டு. அவற்றை வெளியிடுவேன். சாட்சிகளை விலைக்கு வாங்கச் செய்யும் முயற்சிகளை நான் அறிவேன். இவற்றுக்கெல்லாம் பெரும் விலை பேசப்பட்டது. அவற்றை நான் சொல்வேன். பிணைமுறி மோசடியாளர்கள் என்னிடம் பேசியவையும் உள்ளன” என ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.        http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆப்பை-இழுக்குமா-குரங்கு/91-244618