Jump to content

மைத்திரிபால தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்


Recommended Posts

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எனினும் பொதுத் தேர்தலுக்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் ஏனைய அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும். 

எனவே வியாழக்கிழமை மத்திய செயற்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் இதன்போது அது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டும்

மத்திய குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவி;ல்லை. மத்திய குழு கூட்டத்தில் இதனைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/69250

Link to comment
Share on other sites

கனம் மைத்திரி அவர்களே!

நீங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளீர்கள். அதாவது மீண்டும் ஒருமுறை போட்டியிடமாட்டேன் என்றீர்கள். அதன்படி போட்டியிடாமல் பதவி விலகி செல்கிறீர்கள்.

நீங்கள் பதவியில் இருந்தபோது கோத்தபாயாவை வழக்குகளில் இருந்து காப்பாற்றினீர்கள். எனவே அவரும் அந்த நன்றிக்கடனுக்காக உங்களுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டார். 

நீங்கள் பொதுபலசேனா ஞானதேரரை விடுதலை செய்தீர்கள். ஒல்லாந்து நாட்டு பெண்ணை கொலை செய்த கொலையாளியைக்கூட கடைசி நேரத்தில் விடுதலை செய்தீர்கள்.

ஆனால் நீங்கள் வாக்குறுதி அளித்தபடி அரசியல் கைதிகள் 146 பேரில்,  சுதர்சனையாவது விடுதலை செய்திருக்கலாம். சுதர்சனின் குழந்தைகளுக்கு தந்தையை விடுதலை செய்வதாக நீங்கள்தான் கூறினீர்கள். புதுவருடப்பிறப்பிற்கு முன்னர் தந்தை வீடு வருவார் என்று அந்த குழந்தைகளுக்கு ஆசை காட்டினீர்கள்.

ஆனால் அந்த சுதர்சனைக்கூட விடுதலை செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. இத்தனைக்கும் தமிழ் மக்களின் வாக்குகளினால்தான் நீங்கள் பதவியையே பெற்றீர்கள்.

போய் விடுங்கள். !

ஆடி அடங்கும் வாழ்க்கையடா !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.