• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

ஜெர்மன் முறையில் மழை நீர் சேகரிப்பு..! சென்னையில் பணிகள் தீவிரம்

Recommended Posts

ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்திவருகின்றது. இந்த நவீன முறையின் நன்மைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

கோடை காலத்தில் தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவற்றை தவிர்க்க தமிழக அரசு நிர்வாகம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னையில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க பொதுமக்களின் முயற்சிகள் ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொதுகட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், விளையாட்டு திடல்கள் , பூங்காக்கள் என மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிய முறையில் ஏற்படுத்தி வருகிறது.

ஜெர்மனி , அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன மழைநீர் சேகரிப்பு முறையை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது சென்னை மாநகராட்சி.

பாலிஸ்டெரையன் எனும் மக்காத தடிமனான இந்த கலன்களில் நான்கு பக்கமும் சிறு துளைகள் இருக்கும். நான்கு அடி உயரம் மற்றும் இரண்டரை அடி அகலம் கொண்ட கலன்களை மக்காத துணியை கொண்டு மூடி பின்னர் பூமிக்கு பத்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி இறக்கப்படும்.

அதன் மேலே கூழாங்கற்கள் , ஜல்லி கற்கள், மணல் போன்றவைகள் கொண்டு நிரப்பப்படும். பெய்கின்ற மழைநீர் , இதுபோன்ற இயற்கை வடிகட்டி அடுக்குகள் வழியாக வடிகட்டப்பட்டு நேரடியாக நிலத்திற்குள் சென்று சுத்தமான தண்ணீராக சேகரிக்கப்படும். அறுபது டன் எடையைக் கூட சாதாரணமாக தாங்கும் தன்மைக் கொண்ட இந்த கலன்களை கொண்டு பிரதான சாலைகளுக்கு அடியில் கூட மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடியும் என்கிறார் இத்திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ள சிவராம்.

தற்போது நடைமுறையில் உள்ள உறைகிணறு சேமிப்பு முறையில் மழைநீர் ஒரு வழியாக மட்டுமே நிலத்திற்கு செல்லும் ஆனால் இந்த கலன்களில் நான்கு பக்கமும் துளைகள் உள்ளதால் பூமியின் அடியில் நான்கு பக்கங்கள் வழியாகவும் மழைநீர் செல்லும் என்பதால் கணிசமாக மழைநீரை நிலத்தடியில் சேகரிக்க வழிவகை செய்கிறது.

இதுபோன்ற நவீன கலன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் தற்போதைக்கு ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறும் சிவராம், அறுபதாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த மழைநீர் சேகரிப்பு கலன்களின் ஆயுட்காலம் குறைந்தது 50 ஆண்டுகள் என்கிறார்.

முதற்கட்டமாக சென்னையில், இரண்டாயிரம் இடங்களில் இதுபோன்று அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அடுத்த ஆண்டுகளில் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் சாலைகளிலும் கூட இத்திட்டம் அமைக்கப்படவுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் பெய்த சிறு அளவு மழைக்கே சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்றால் நீண்ட காலம் பயன் தரக்கூடிய இது போன்ற தொலைநோக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நகரம் முழுவதும் நடைமுறைப்படுத்தினால் கணிசமான நிலத்தடி நீர் வளத்தை எதிகாலத் தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...!

https://www.polimernews.com/dnews/89337/ஜெர்மன்-முறையில்-மழை-நீர்சேகரிப்பு..!-சென்னையில்பணிகள்-தீவிரம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பப்புவா நியூ கினியாவின் ஓர் அங்கமாக இருந்து வரும் போகைன்வில், தனி சுதந்திர நாடாக பிரியவுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த பிராந்தியமான போகைன்வில்லில்,  இன ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதாகவும் கூறி, தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்காக 1988ஆம் ஆண்டு முதல் 1997 வரை நடந்த உள்நாட்டு போரில் சுமார் 20ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 2005ஆம் ஆண்டு போகைன்வில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற நிலையில், தனி நாடு அமைப்பது தொடர்பாக அண்மையில் மக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தனி நாடு கோரும் முடிவுக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர். இதனால் போகைன்வில் புதிய தனி நாடாக அமையவுள்ளது. போகைன்வில்லின் மக்கள் தொகை, சுமார் மூன்று லட்சம் பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/92378/தனி-நாடாகிறது-போகைன்வில்..  
  • சுவிஸ் தூதரக சம்பவம் திட்டமிட்ட நாடகம் : அமைச்சர் அமரவீர  (ஆர்.யசி) சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் முற்று முழுதாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமெனவும்  இது நாடகம் என்பதற்கான ஆதாரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.  எனினும் சுவிஸ் தூதரகம் ஏன் இதனை செய்தது இந்த நாடகத்தின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிக்காரர்கள் யார் என்பதை கண்டறியவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி குழுக் கூட்டம் நேற்று இரவு அலரிமாளிகையில் கூடியது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்இ   சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக  இந்த சம்பவம் முற்று முழுதாக திட்டமிடப்பட்டு நகர்த்தப்பட்ட நாடகமாகும்.  இது ஒரு நாடகம் என்பதற்கான  சாட்சியங்களுடன் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சூழ்ச்சியின் பின்னணியில் யார் இருப்பது என்பதை மட்டுமே இப்போது  நாம் கண்டறிய வேண்டியுள்ளது. இந்த சம்பவம் முற்று முழுதாக நாடகம் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றாகும். ஆகவே அரசாங்கமாக நாம் இந்த சம்பவம் குறித்து கவனமாக அவதானித்து வருகின்றோம்.  எனினும் சுவிஸ் தூதரகம் இதனை செய்ய காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இவ்வாறு செயற்பட்டது. அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்தியுள்ளார்.  அரசாங்கத்தை பலவீனப்படுத்த செய்யப்பட்ட ஒரு விடயமே இது. அதற்கான சாட்சிகள் உள்ளது. அதேபோல் குற்றப்புலனாய்வு பிரிவு இப்போதும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு இடமளித்து நாம் தலையிடாது பார்த்துக்கொண்டுள்ளோம். விரைவில் உண்மைகள் வெளிவரும் என்றார். https://www.virakesari.lk/article/70856
  • இது இலங்கையை முன்னர் ஆண்ட மஹா பராக்கிரமபாஹு எனும் மன்னனின் உருவம். இங்கே இணைகப்பட்டிருக்கும் "முஸ்லீம் தீவிரவாதி" இன் படத்திற்கும்  நான் இணைத்திருக்கும் மகா பராக்கிரமபாஹுவின் உருவத்திற்கும் அதிக வேறுபாடு எனக்குத் தெரியவில்லை. இப்ப்டம் சொல்லவரும் செய்தியென்ன என்கிற தெளிவில்லாமல் உடனேயே முஸ்லீம்களை இழிவுபடுத்துவதாக எப்படி முடிவிற்கு வருகிறீர்கள்?  சிங்களவர்கள் தமிழர்களையும் முஸ்லீம்களையும் நிச்சயம் இழிவுபடுத்துவார்கள் என்பதும், தமிழர்களை அழித்தபோது சிங்களவரூடன் முஸ்லீம்கள் விரும்பியே கைக்கோர்த்து இயங்கினார்கள் என்பதும் நாம் அறிந்ததுதானே? எனக்கு இங்கே நினைவிற்கு வருவது வடிவேலுவின் நகைச்சுவைதான், "உனக்கு வந்தால் ரத்தம், எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?".      
  • "கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியயேறியுள்ளார்." பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க கதிர்காம கந்தன் அருளால் பிறந்ததன் காரணமாக இன்றுமுதல் நீ கந்தப்பா எனவும் அழைக்கப்படுவாய் 🙂