Jump to content

இளைஞர் - யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்


Recommended Posts

-க. அகரன்

எதிர்வரும் காலங்களில் இளைஞர் - யுவதிகளை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்த ஈழவர் ஜனநாயக முண்ணனியின் தலைவர் க. துஷ்யந்தன், அவர்களை அரசியல் ரீதியாக  ஒன்றிணைத்து, தமிழ் - சிங்கள மக்களிடையே சகோதர ஒற்றுமையை உருவாக்கி, தமக்கு இருக்கின்ற அடிப்படை, தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.

வவுனியாவில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடனான சந்திப்பின் போது, விரிவாக பேசியிருந்ததாகவும் அதற்கு பசில் சாதகமான பதில்களை தமக்கு வழங்கியிருந்தாரெனவும் தெரிவித்தார். 

கோட்டாபயவுக்கு தமிழ் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்களென்று எண்ணியிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் அது நடைபெறவில்லையெனவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசியல் வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்த அவர், எதிர்கால செயற்பாட்டின் மூலம் தான், மக்களின் மனங்களை அவரால் வெல்லமுடியுமெனவும் கூறினார்.

இன்று அமைந்திருக்கின்ற இந்தப் புதிய அரசாங்கம், தமிழர்களின் பிரச்சினைகளில் கூடிய கவனம் செலுத்துமென நம்புவதாகவும், துஷ்யந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக அநல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையெனவும் இதனாலேயே நல்லாட்சி அரசாங்கத்துக்கு தாம் ஆதரவை வழங்கவில்லையெனவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/இளைஞர்-யுவதிகளை-ஒன்றிணைத்து-தேசிய-பிரச்சினைகளுக்குத்-தீர்வு-காண்போம்/72-241196

Link to comment
Share on other sites

சிங்கள, தமிழ் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் தேசிய தேவையின் முயற்சியில் ஜனாதிபதி வெற்றியடையவேண்டும் சி.வி.கே.சிவஞானம்

சிங்கள, தமிழ் சமூகங்களையும் மிகத் துரிதமாக ஒன்றிணைக்கும் தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் ஜனாதிபதி வெற்றியடையவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்

 

இது தொடர்பில் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறித்து எமது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

மும்மக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.தாங்கள் சத்தியப் பிரமாணம் செய்ததும் நாட்டு மக்களுக்கு அற்றிய உரையை கேட்ட பின்பே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

தங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்பதற்கு அப்பால் தாங்கள் இந்த முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவீர்கள் என்ற தங்களது கூற்றை மிகவும் பாராட்டுகின்றேன்.

கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமை பற்றிய தங்களது ஏமாற்றத்தை தாங்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.

தமிழர்கள் ஆகிய நாம் இனவாதிகள் அல்ல என்பதை தங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

உண்மையாகவே ஒன்றிரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு சிங்கள பௌத்த தலைவருக்கே நாம் எப்பொழுதும் வாக்களித்திருக்கின்றோம்.

ஒரு பொறுப்பு வாய்ந்த இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் முன்னைய எல்லா தேர்தல்களையும் பார்க்க இந்த தேர்தலில் தமிழர்களும், சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைகிறேன்.

எனது விசுவாசமான அபிப்பிராயத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள் எனக்கருதுகின்றேன்.

இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.

மிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும் சுமார் எழுபதாயிரம் வரையிலான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை உடன் வகுத்து அமுல் செய்யும்படி தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன். 

தாங்கள் கூறியபடியும் தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டிக் கொண்டபடியும் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடாத்த நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/69255

Link to comment
Share on other sites

வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன்

கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்த நாட்டில் வடக்கு மற்று கிழக்குக்கும் தெற்கும் இடையில்இருக்கும் பாரிய இடைவெளியினை குறைப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன் என ஜனநாயக மக்கள்முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

 

janagan.jpg

அவர் மேலும் குறிப்பிடும் போது.. 

தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அடிப்படையில் பெருபான்மை மக்களின்ஆணித்தரமான ஆணையினைப் பெற்ற ஜனாதிபதிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கும் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்களுக்குமான இடைவெளியினை குறைத்து தன்னுடைய வரலாற்றுச் சாதனையாகச் செயற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். போர் முடிவுக்கு கொண்டுவந்த பிறகும்கூட இந்த இடைவெளியினை அன்றைய அரசு காலத்தில் நிரப்ப முடியவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது. 

இன்று வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்கு வழங்கி இல்லாது போனது அந்த மக்கள் போர் முடிந்த பிறகு இருந்த சூழ்நிலையினால் ஏற்பட்ட அவநம்பிக்கையை மட்டுமே காட்டுகிறது.

ஆகவே ஒரு நாட்டின் தலைவராக இந்த மக்களின் அவநம்பிக்கையினை இல்லாமல் செய்வதற்கு பெருபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும் உதவும் என்று நம்புகிறோம். 

இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் தலைமைகளின் கோரிக்கைகளுக்கு உட்படாமல் தமது சொந்த முடிவில் தங்கள் அவநம்பிக்கையின் வெளிப்பாட்டையே வாக்குகளாக வழங்கிஉள்ளார்கள் என்பதை ஆட்சி அமைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

அதேவேளை மீண்டும் தமிழ் பேசும்மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைமைகளை புதிய அரசின் பக்கம் முழுமையாக உள்வாங்கப்பட்டால் மக்களின் அவநம்பிக்கை தொடரும் என்பதையும் அதனால் நாம் இலங்கையர் என்ற எண்ணம் தமிழ் பேசும்மக்கள் மத்தியில் உருவாவது மந்தம் அடையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இதே சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்தளத்தினூடாக இந்த புதிய ஜனாதிபதி மீதோ அல்லது அமையப்போகும் அரசாங்கத்தின் மீதோ வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அச்சமோ அவநம்பிக்கையோ அடைய வேண்டிய அவசியமில்லை எனக்குறிப்பிட்டதை வரவேற்க வேண்டும். இளைய தலைமுறை இரண்டு பக்கத்திலும் முற்போக்குடன் சிந்திப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. 

மேலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையினை இந்த தேர்தலில் வலிமையாகக்காட்டியுள்ளார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய வெற்றியாகப் பார்க்குமானால் அதற்கானபதிலையும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர்குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/69254

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன்

இவரின் மூளை என்னமா சுருண்டு சுருண்டு வேலைசெய்யுது🤣🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.