• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ஏராளன்

இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா?

Recommended Posts

இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா?

கோட்டாபயபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி பெரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளதுடன், நாடாளுமன்ற அதிகாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வசமே காணப்படுகின்றன.

நிறைவேற்று அதிகாரத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் தற்போது முரண்பாடுடனான நிலைமையொன்று தோற்றம் பெற்றுள்ளதை காண முடிகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றமொன்று அமைக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது.

அவ்வாறென்றால், கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதியே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியும்.

எனினும், இரண்டு தரப்பினர் ஆட்சியில் உள்ளமையினால் அரசாங்கத்தை உரிய முறையில் நடத்தி செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சபாநாயகர்

இந்த பின்னணியில் இனிவரும் காலங்களில் என்ன செய்யலாம்?

இலங்கை ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய மூன்று விடயங்களை தெளிவூட்டிய சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றை இன்று வெளியிட்டார்.

புதிய ஜனாதிபதி சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தான் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அதிகாரம் தொடர்பில் தெளிவான கருத்தொன்றை மக்கள் வழங்கியுள்ளதாக பலரும் தன்னிடம் தெரிவித்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மூன்று விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் தெளிவூட்டியுள்ளார்.

சபாநாயகர்
 • 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்த முடியும்.
 • நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.
 • பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை இடைகால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதிபதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து இந்த வாரத்திற்குள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

விரைவில் இதற்கான தீர்மானத்தை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50473012

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தல மோடிக்கு கடும் போட்டிய கொடுத்திருக்கார்.. ஞன பழத்தை கொடுத்து விடுங்கப்பா..👌
  • திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 07,  2020 14:01 PM திருச்சி, திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி (வயது 14). எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில், அந்த மாணவி நேற்று மதியம் 12 மணியளவில் சக தோழிகளுடன் விளையாடினாள்.  பின்னர் வீட்டுக்கு சென்ற அவள், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக்கொண்டு முள்காட்டில் கொட்ட சென்றாள். அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து  தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,  சிறுமியின் உடல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது . பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.   இதையடுத்து,  சிறுமி கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/07140154/Girl-who-died-in-Adivathur-in-Trichy-not-sexually.vpf  
  • அரச வாகனங்களை பறிமுதல் செய்ய, விசாரணைகள் முன்னெடுப்பு! முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி, இன்னும் ஒப்படைக்கப்படாத அரச வாகங்களை பறிமுதல் செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி 11 அரச வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு வாகனங்கள் மாத்திரம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை மார்ச் 02 ஆம் திகதிக்குள் அரச வாகனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சக்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எனினும் அந்த அமைச்சர்கள் அவ்வாறு வாகனங்களை ஒப்படைக்கத் தவறியுள்ளதாகவும் தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசிப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தேர்தல் சட்டங்களை மீறி அரச வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அவற்றை பறிமுதல் செய்யவும் தேர்தல் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   https://newuthayan.com/அரச-வாகனங்களை-பறிமுதல்-ச/      
  • அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!   தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டத்தின் பின் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் வாக்களிப்பதற்கு சமூகமளிக்கும் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளத்தை சமர்ப்பித்து தனது வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆள் அடையாளமாக அடையாள அட்டை வாகன சாரதி அனுமதிப்பத்திரம் கடவுச்சீட்டு மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தினால் மதகுருமாருக்கு என வழங்கப்பட்ட அடையாள அட்டை சமூகசேவை திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற முதியோர் அடையாள அட்டை போன்றவை ஏற்றுக்கொள்ளப்படும். இத்தகைய எந்த ஒரு ஆவணமுமில்லாத ஒருவர் தற்காலிகமாக தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். ஜூலை மாதம் 17ம் திகதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தினுடைய தரவுத்தளத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக உட்சேர்க்கப்பட்ட சகல தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரர்களுக்கும் அடையாள அட்டையினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்குரிய விசேட நடவடிக்கையினை ஆள்பதிவு திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அதேபோல 2020 ஜூலை மாதம் 29ஆம் திகதி வரைக்கும் ஆட்பதிவுத் திணைக்கள தரவுத்தளத்தில் உட்சேர்க்கப்படுகின்ற தகவல்களைக் கொண்டு உறுதிப்படுத்திய கடிதத்தினை தேர்தலுக்கு முன்னர் விநியோகிப்பதற்கும் ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தேசிய அடையாள அட்டை இல்லாத அனைத்து வாக்காளர்களும் எதிர்வரும் ஜூன் 29-ஆம் திகதிக்கு முன்னர் தங்களுக்குரிய அடையாள அட்டைக்குரிய விண்ணப்பத்தினை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு விண்ணப்பித்து தங்களுக்குரிய ஆள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளமுடியும். இது தொடர்பில் சகல கிராம சேவையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   https://newuthayan.com/அடையாள-அட்டை-இல்லாத-வாக்/