Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்


Recommended Posts

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

s.-jaishankar.jpg

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார்.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/69271

கே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்?

ப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.

தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

https://www.bbc.com/tamil/india-50473017

Link to comment
Share on other sites

India’s External Affairs Minister in SL

Hours after the new President assumed duties today, Indian External Affairs Minister Dr. S. Jaishankar accompanied by two officials arrived in Sri Lanka last evening on a short visit, informed sources said.

He is scheduled to leave this morning.

Indian Prime Minister Narendra Modi was the first foreign leader to extend his best wishes to Sri Lanka's newly-elected President. (T.K.G. Kapila)

http://www.dailymirror.lk/breaking_news/Indias-External-Affairs-Minister-in-SL/108-178101

Link to comment
Share on other sites

12 minutes ago, ampanai said:

Hours after the new President assumed duties today, Indian External Affairs Minister Dr. S. Jaishankar accompanied by two officials arrived in Sri Lanka last evening on a short visit, informed sources said.

இந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு   😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

Indian Prime Minister Narendra Modi was the first foreign leader to extend his best wishes to Sri Lanka's newly-elected President.

இது வெளியில் வாழ்த்தாக தெரிவிக்கப்பட்டாலும்,  அழைப்பின் நோக்கமும், மொழிப்பிரயோகமும் அழைப்பாணை கோத்ததாவிற்கு பிறப்பிக்கும் தொனியில் இருந்ததாகவே அறிந்துள்ளேன்.   

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்போ .. பொட்டி அவர்கள் தருவார்களா..? இல்ல இவுங்க தருவார்களா..? ரெல் மீ ..☺️

roflphotos-dot-com-photo-comments-201705

Link to comment
Share on other sites

6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இப்போ .. பொட்டி அவர்கள் தருவார்களா..? இல்ல இவுங்க தருவார்களா..? ரெல் மீ ..☺️

பெட்டி சீனாவில் தயாரித்ததாக இருக்கும் 🙂 

 

Link to comment
Share on other sites

33 minutes ago, ampanai said:

Indian Prime Minister Narendra Modi was the first foreign leader to extend his best wishes to Sri Lanka's newly-elected President.

இந்தியாவுக்கு முதல் மாலைதீவு கூறிவிட்டது.

 

Link to comment
Share on other sites

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று மாலை கொழும்பை வந்தடைந்தார்.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில், இலங்கையின் புதிய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்தியாவுக்கு வருமாறு  அழைப்பு விடுப்பதற்காகவே,  ஜெய்ஷங்கர் கொழும்பை வந்தடைந்துள்ளாரென்றும் அவர், இன்றிரவு ஜனாதிபதி கோட்டாபயவை ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதுடன்    பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவரையும்  சந்திக்கவுள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கழமப-வநதடநதர-இநதய-வளயறவததற-அமசசர/175-241215

Link to comment
Share on other sites

51 minutes ago, ampanai said:

தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ampanai said:

இந்த இருவருட்க்குள் மலையாளிகள் இல்லாவிட்டால் சிறப்பு   😎

யார் கொண்டுவந்தால் என்ன உள்ளுக்கு உள்ளது ஒரே விடயமாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

EJvZ_1kWkAEL-Fp?format=jpg&name=medium

EJvZ_1dWwAAN4jV?format=jpg&name=large

ஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.

கோத்தா எள்ளி  நகையாடும் முகம்.

 

Link to comment
Share on other sites

27 minutes ago, Lara said:

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக செயற்பட்டவர் இந்த ஜெய்சங்கர் என்பதை தமிழர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அன்று செய்த தவறை திருத்தக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகாவும்  பார்க்கலாம்.

அன்று இருந்தது காங்கிரஸ், இன்று பா.ஜ.க.
அன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது. 

 

Link to comment
Share on other sites

29 ஆம் திகதி இந்தியாவுக்கு வருமாறு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை கோத்தபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளாராம்.

Link to comment
Share on other sites

 • Jaishankar will be the first foriegn visitor to visit Colombo after the new administration under Gotabaya Rajapaksa assumed office
 • The visit assumes significance given that Gotabaya is seen as pro-China and India would be keeping a close watch to see whether the new administration in Colombo walks a balance between New Delhi and Beijing
 • External Affairs Minister @DrSJaishankar in #SriLanka for a quick visit of 16 hours. Landed around 4pm and to take off early morning after meeting with President @GotabayaR. President has accepted PM @narendramodi invite to visit India on November 29th.
Link to comment
Share on other sites

ஜனாதிபதி கோட்டா இந்தியா செல்கிறார்

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ இம்மாதம் 29ஆம் திகதி தனது முதலாவது வௌிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக கோட்டா பதவியேற்றதும் இந்தியாவுக்குவருமாறு அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று கொழும்பு வந்திருந்த இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் இந்த அழைப்பிதழை கோட்டாவிடம் கையளித்துள்ளதாகவும், அழைப்பிதழை ஏற்று கோட்டா இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் டுவிட் செய்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனதபத-கடட-இநதய-சலகறர/175-241231

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

அன்று இருந்த சீன அரசை விட இன்றுள்ள சீன அரசு மிகப்பலமானது. 

ஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.

Edited by Lara
Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

ஜெய்சங்கர் முன்னர் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்தவர். அவருக்கு சீனாவும் நட்பு.

தூதுவராக இருந்தவர்கள் பொதுவாக அந்த நாட்டை , தாம் வேலைசெய்த  அறிந்திருப்பார்கள். தங்கள் தங்கள் நாட்டின் நலன்களை முன்னெடுக்கும் இலாவகங்களை, சூட்ச்சுமங்களை அறிந்திருப்பார்கள். 

அதற்காக, அவர்கள் எல்லோருரையும் "நட்ப்பானவர்கள்" என பார்க்க முடியாது. 
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்!

பரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள் 😂

சஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.

இங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஐயோ இங்க அரசியல் ஆய்வாளர்களின் அதகளம் தாங்க முடியேல்ல சாமியோவ்!

பரபரப்பு ரிஷி தோற்றார் போங்கள் 😂

சஜித் வெண்டிருந்தாலும் ஜெய்தான் முதல் வரவு. சஜித்தின் முதல் பயணமும் இந்தியாவாகத்தான் இருந்திருக்கும். மோடி அண்மையில் வென்ற பின்னும் முதலில் வந்தது இலங்கைக்குதான்.

இங்கே வழமைக்கு மாறாக ஏதுமில்லை. நாம்தாம் கலர் கலர் கண்ணாடிகளை போட்டுக்கொண்டு நடக்கும் விடயங்களுக்கும், புகைப்படங்களுக்கும் நாம் விரும்பிய வியாக்கியானத்தை கொடுத்துகொண்டிருக்கிறோம்.

இதுதான் உண்மை! ஏதாவது நடவாதா என்ற நப்பாசையுடன் எல்லோரும் அவரவருக்கேற்றபடி அரசியல் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். பிஜேபி அரசு எங்களுக்கு ஆதரவாக ஏதும் செய்யும் என்பதை  நம்ப முடியவில்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முத்தரப்புப் போட்டியில் யாரை யார் முந்துவது என்றதுதான் இப்ப அரங்கேறிட்டு இருக்குது.

ஆனால்.. அமெரிக்கா.. மீண்டும்.. மனித உரிமைகள்.. பொறுப்புக்கூறலை.. முன்னிறுத்தப் போகிறது. அதற்கு கோத்தாவின் பலவீனம் நன்கு தெரியும்.

ஆனால்.. ஒரு சுண்டக்காய் நாடு.. சொறீலங்காவுக்கு உலக வல்லரசுகள் மற்றும் வல்லரசுக் கனவில் உள்ளவை எல்லாம் பதைபதைச்சு பாய்ஞ்சடிக்கிறதைப் பார்க்க சுவாரசியமாக உள்ளது.

விடுதலைப்புலிகளை அழித்ததன்.. பலனை இப்போ ஹிந்தியா நன்கு உணர்ந்திருக்கும். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kadancha said:

ஜெய்சங்கர் முகம் இறுக்கமும், மலர்ச்சி கூட இல்லை.

கோத்தா எள்ளி  நகையாடும் முகம்.

 

கொதாயவின் கை குலுக்கும் முறையை கவனியுங்கள்.  யாரிடம் பிடி உள்ளது ?  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோட்டாபய பதவி ஏற்றவுடன் இலங்கைக்கான இந்திய தூதரகம் அவருடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களது எதிர்வினை (Response ) மரியாதைக் குறைவாக இருந்ததாகவும்,  அதன் வெளிப்பாடே இத்தனை வேகம் என கேள்வி.  (ஆனால் உண்மையை நானறியேன் பராபரமே )

Edited by Maharajah
சொற்பிழை
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.