Jump to content

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்


Recommended Posts

  • Replies 61
  • Created
  • Last Reply

ஜெய்ஷங்கரின் வருகை: ’அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது’

-எம்.றொசாந்த்

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிநாட்டமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே தான் கருதுவதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 “இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து சென்றிருப்பது குறித்தும் இந்த சந்திப்பின் பின்னர் கோட்டாபய இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களின் கருத்து என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டெனவும் அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறதெனவும் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளதெனத் தெரிவித்த அவர், அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று தான் ஆழமாக நம்புவதாகவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது தனது எதிர்பார்ப்பெனத் தெரிவித்த அவர், இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பெனவும் கூறினார்.

“ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும்” என்றார்.

“தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையுங் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

“ஆகவே, இறுதி தீர்வு  தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும். ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசாங்கத்திடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜயஷஙகரன-வரக-அரசயல-ரதயல-மகவம-மககயமனத/71-241312

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

இறுதி தீர்வு  தொடர்பில் எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழி வகுப்பப்பட வேண்டும். ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை  புதிய அரசாங்கத்திடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.

அப்பிடி கலந்துரையாடல்கள் நடைபெற யாராவது ஏற்பாடு செய்தா, நான் தான் முதலில் எல்லார் முதுகிலையும் குத்தி, முதலாவது நம்பிக்கைத் துரோகியா இருப்பன் என்டு விக்கினேஸ்வரன் சொல்லாம சொல்றார். 

Link to comment
Share on other sites

China invites Gota to visit at a mutual convenient time

Chinese Ambassador Cheng Xueyuan who called on President Gotabaya Rajapaksa yesterday extended an invitation for him to visit China at a mutually convenient and mature time, a spokesman said yesterday.

A spokesman for the Chinese Embassy said the delegation led by the ambassador, discussed bilateral co-operation.

He elaborated that the President was invited to visit China at a mutually convenient time. He recounted that the meeting took place in a cordial atmosphere.

“We want the new government of Sri Lanka to settle down first,” he explained.

The embassy delegation included Deputy Chief of Mission Hu Wei, Chief of Politics Lou Chong and Second Secretary Liang Zhijun.

President Rajapaksa will undertake his first overseas visit to India on November 29. (Kelum Bandara)

http://www.dailymirror.lk/breaking_news/China-invites-Gota-to-visit-at-a-mutual-convenient-time/108-178269

Link to comment
Share on other sites

- தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும் ஒரு சிங்களவர் சனாதிபதியாக இருப்பார் 
- ஒரு இனவழிப்பின் கூட, உலகம் தமிழர்களுக்கு ஒரு தீர்வை தரவில்லை. 

- தமிழர்கள் ஒரு பொருட்டு அல்ல எனவே உலகம் பார்க்கின்றது ? 
- ஏன் மோடி அரசு தடையை நீடித்தது ?
 

 

Link to comment
Share on other sites

Had a fruitful discussion on bilateral relations between USA and #LKA with Ambassador Aliana Teplitz @USAmbSLM and delegation today 

- கோத்தா

EJ_Fa-4UwAI9EqT?format=jpg&name=medium

EJ_Fa_AVAAcrgXE?format=jpg&name=medium

Link to comment
Share on other sites

India expects new govt. to take forward national reconciliation process

The Indian government expects Sri Lanka’s new government led by President Gotabaya Rajapaksa to take forward the process of national reconciliation in order to meet the aspirations of the Tamil minority for “equality, justice, peace and dignity”.

This was the message conveyed by external affairs minister S. Jaishankar during a meeting with the newly elected Sri Lankan president in Colombo on Tuesday. Jaishankar had visited Sri Lanka as a special envoy of Prime Minister Narendra Modi to convey the premier’s greetings on Rajapaksa’s election win and to invite him to India.

Rajapaksa accepted the invitation and will make a state visit to India during November 29-30. This is expected to be his first visit abroad after assuming office.

“The external affairs minister conveyed to President Rajapaksa India’s expectation that the Sri Lankan government will take forward the process of national reconciliation to arrive at a solution that meets the aspirations of the Tamil community for equality, justice, peace and dignity,” external affairs ministry spokesperson Raveesh Kumar told a regular news briefing on Thursday.

“You must have seen President Rajapaksa’s statement where he affirmed that he will be the president of all Sri Lankans, irrespective of their racial or religious identity and without creating a distinction on whether they voted for him or not,” he said.

Rajapaksa also said during his meeting with Jaishankar that he is committed to ensuring the development of the northern and eastern provinces, which have a sizeable Tamil population, and “considers India a valued partner towards this endeavour”.

Jaishankar was the first senior foreign leader to meet Rajapaksa after he won the presidential election with more than 52% of the vote. India takes an interest in Sri Lanka’s Tamil community because of its strong links with Tamil Nadu state and the implications of developments in the island nation on domestic politics. The 2.2-million Tamil minority accounts for a little more than 11% of Sri Lanka’s population.

Asked about China’s perceived influence in Sri Lanka, Kumar replied: “Our relations with Sri Lanka, or for that matter with any neighbouring country is independent of our relations with third countries.”

India’s multifaceted relationship with Sri Lanka “stands on its own footing and is rooted in our geographical proximity and historical connections”, he said. The Indian Prime Minister had noted in his congratulatory tweet to Rajapaksa that the country is looking forward to “working closely with the Sri Lankan government for deepening our relations and for the peace, prosperity and security of the region”, he added. (Hindustan Times)

http://www.dailymirror.lk/breaking_news/India-expects-new-govt-to-take-forward-national-reconciliation-process/108-178344

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்கள் மீதான இந்தியாவின் கருசனை அதிகரிக்க வேண்டும்

2019-11-23 11:27:24

இந்தியாவை நம்புங்கள். நாங்கள் உங்களைக் கைவிடமாட்டோம் என்று கூறியவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தபோது அவர் இந்த உறுதிமொழியை கூறிவைத்தார். 

இந்தக் கூற்றை அடிக்கடி ஞாபகப்படுத்துவதற்கு நம்மிடம் ஆன அரசியல் தலைமை இல்லை என்பது வேறு விடயம்.
 

தவிர, இரண்டாவது தடவையாகவும் இந்தியத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாகக் கொழும்புக்கு வருகை தந்திருந்தார். சம்பிரதாயத்துக்காகவேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் சந்தித்தார். வெறும் எட்டு நிமிடங்கள் மாத்திரம் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி கூறிய ஒரு முக்கியமான விடயம்; ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக இந்தியாவுக்கு வாருங்கள் எனக் கூட்டமைப்பை அழைத்தமையாகும்.

ஆக, பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகக் குறுகிய நேரம் நடந்திருந்தாலும் இந்தியா வுக்கு வாருங்கள், பேசுவோம் என அவர் விடுத்த அழைப்பு மிகப்பெறுமதி வாய்ந்தது.

எனினும் அந்தப் பெறுமதியான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்து வந் துள்ளது.

இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அவர்கள் எதிர்நோக்குகின்ற சவால்களை எடுத்துக்கூறினால், அது ரணில் விக் கிரமசிங்கவுடனான உறவுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற அடிப்படையில் இந்தியாவுக்குச் செல்வதை - பிரதமர் மோடியைச் சந்திப்பதை கூட்டமைப்பின் சக்தி வாய்ந்த தலைவர்கள் தவிர்த்துக் கொண்டனர்.

இப்போது ஆட்சி மாறிவிட்டது. ஆட்சி மாற்றத்தோடு காட்சியும் மாறுகிறது.
 

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து; தமிழ் மக்களின் பிரச்சினையை எடுத்துக் கூறியிருந்தால், இன்று அது மிகப் பெரும் நன்மை பயப்பதாக இருந்திருக்கும். என்ன செய்வது எங்கள் தலைவிதி இது தான் என்றாகிவிட்ட பின்பு எதைக்கூறியும் எதுவும் ஆகப்போவதில்லை என்பதுதான் உண்மை.

இருந்தும் ஏழை மனம் இன்னமும் எங்கள் இனம் நிம்மதியாக வாழவேண்டும் என நினைக்கிறது.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அவசரமாக இந்தியாவுக்குச் செல்ல வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வேண்டும். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் மட்டும் என்றில்லாமல், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கென குழு ஒன்றைத் தெரிவு செய்து அந்தக் குழுவே சந்திப்பை மேற்கொள்ள வேண்டும். 

இதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் போன்ற தலைவர்கள் இடம்பெறுவது முக்கியமானது. இன்றைய சூழ்நிலையில் ஈழத் தமிழர்கள் இந்தியாவை சிக்கனப் பிடித்துக் கொள்வது மிகவும் அவசியமானது. ஆம், எங்கள் மீதான இந்தியாவின் கருசனையை அதிகரிக்கச் செய்கின்ற உபாயங்களை நாமே முன்னெடுக்க வேண்டும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19907&ctype=news

Link to comment
Share on other sites

சீனா முக்கியமான நாடு இந்தியா அண்டை நாடு

கோட்டாபய ராஜபக்ச­ ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வருகை தந்து ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்தித்துச் சென்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ச­ ஜனாதிபதியாகப் பதவியேற்ற கையோடு அவரை முதலில் சந் தித்த வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் என்பது இங்கு பதிவாகிறது.

ஒரு நாட்டின் புதிய ஜனாதிபதியை வாழ்த்துவது, வரவேற்பது, எங்கள் நாட்டுக்கு விஜயம் செய்யுங்கள் எனக் கேட்பது என அனைத்தும் சம்பிரதாயமானவை.
 

ஆனால் பதவியேற்ற கையோடு வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உடனடியாகச் சந்திப்பதென்பது மேற்குறிப்பிட்ட சம்பிரதாயங்களுக்குப் புறநீங்கலானது என்பதை இங்கு கவனித்தாக வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகூடிய கவனிப்பைச் செலுத்தி இருந்த இந்தியா, கோட்டாபயவின் வெற்றியை ஓரளவுக்கு உறுதி செய்திருந்தது. அதேநேரம் மகிந்தராஜபக்ச­ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சீனாவுடனான உறவைப் பலப்படுத்தி இருந்ததுடன் இலங்கைக்குள் சீன முதலீடுகளும் இலங்கை - சீன ஒப்பந்தங்களும் அதிகரிக்கலாயின. இந்நடவடிக்கைகள் இந்தியாவுக்கு விருப்பமானதன்று.

எனினும் அண்டை நாடான இலங்கையுடன் பகைப்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை.
 

இதனால் இலங்கை மீதான சீனாவின் உள்ளேற்றத்தை  தீவிரமாகக் கண்காணிக்கின்ற கடமையை மட்டுமே இந்தியா செய்து கொண்டது. 
 

இத்தகையதோர் சூழ்நிலையில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகிய பின்னர் சீனாவின் உள்வருகை கணிசமாகக் கட்டுப் படுத்தப்பட்டதுடன் இந்தியா மீதான நல்லு றவை ஏற்படுத்துவதிலேயே மைத்திரிபால சிறிசேன கருசனை காட்டினார். ஆனால் இப்போது நிலைமை வேறுவிதமாகி விட்டது.

சீனாவின் நெருங்கிய நண்பர்களான மகிந்தராஜபக்ச­வும் கோட்டாபய ராஜபக்ச­வும் முறையே இலங்கையின் பிரதமரும் ஜனாதிபதியும் என்ற பதவியில் இருக்கையில், இலங்கையைத் தன்பக்கமாக வைத்திருப்பது அவசியம் என்ற யதார்த்தத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளது.
 

இதுதவிர, கோட்டாபய ராஜபக்ச­ ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவரை செவ்வி கண்ட ஊடகவியலாளர்கள் சீனா - இந்தியா பற்றிய ஜனாதிபதியின் எண்ணப்பாட்டை வின வியபோது;  சீனா முக்கிய நாடு. இந்தியா அண்டை நாடு எனப் பதிலளித்திருந்தார்.

இந்தப் பதில் இந்தியாவை எந்தவகையிலும் திருப்திப்படுத்தியிருக்க மாட்டாது.
 

எனவேதான் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவசர அவசரமாக இலங் கைக்கு வந்து ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
 

ஆக, எதிர்வரும் காலங்களிலும் இலங்கையுடனான உறவை மிக நெருக்கமாக வைத் திருக்க இந்தியா கடும் பிரயத்தனம் செய்யும் என்பது புரிதற்குரியது.
 

http://valampurii.lk/valampurii/content.php?id=19918&ctype=news

Link to comment
Share on other sites

ஜனா­தி­பதி கோத்­தாபய­வுக்கு அழுத்தம் கொடுப்­பாரா மோடி?

ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ எதிர்­வரும் 29ஆம் திகதி இந்­தி­யா­வுக்கு மேற்­கொள்ளும் பய­ணத்தின் போது, 13ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட­மாட்­டாது என்று தக­வல்கள் கூறு­கின்­றன.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக் ஷ எதிர்வரும் வெள்­ளிக்­கி­ழமை புது­டெல்­லிக்குப் பய­ண­மா­கிறார்.

ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பின் போது, தமிழர் பிரச்­சினை குறித்து இந்­தியப் பிர­தமர் மோடி கலந்­து­ரை­யா­டுவார் என எதிர்­பார்ப்­ப­தாக புது­டெல்லி வட்­டா­ரங்கள் தகவல் வெளி­யிட்­டுள்­ளன.

அத்­துடன், இலங்­கையில் தற்­போது நடை­பெற்று வரும் இந்­திய வீட்டுத் திட்டம் மற்றும் பிற திட்­டங்­களைத் தொட­ரு­வது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­படும் என்றும், இது பெரும்­பாலும் தமி­ழர்­க­ளுக்கு பய­ன­ளிக்கும் என்றும் அந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

எனினும், கடந்த அர­சாங்­கங்­க­ளினால் விவா­திக்­கப்­பட்டு வந்த 13 ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து, கோத்­தாபய ராஜ­பக்­ ஷ­வு­ட­னான முதல் சந்­திப்பில், இந்தியப் பிரதமர் மோடி அழுத்தங்களைக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் புதுடெல்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/69648

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.