• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர் - த.தே.கூ.

Recommended Posts

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு  மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்தார்.

 

TNA.jpg

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கடத்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நிறைவடைந்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலை மிக நேர்த்தியாக நடாத்த துணைநின்ற தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது பணிமனை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அனைத்து அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிருவாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் முன்னோடியான செய்தியைத் தனது தேர்தல் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்திய கருத்துகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர் .

எமது கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடாத, பிரிக்கமுடியாத இலங்கை நாட்டினுள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒருமித்து சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது. 

அதியுச்ச அதிகாரப் பகிர்வு தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்புப் போன்ற பல்வேறு திசை திருப்பல்கள் காணப்பட்ட சூழலில், அவற்றுக்குச் செவிசாய்க்காது, எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாக அன்னத்துக்கு வாக்களித்து, இலங்கை ஆட்சியாளருக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் தமிழ் மக்கள் ஓர் உறுதியான செய்தியைக் கூறி இருக்கின்றனர் . அதாவது தமது உரிமை தொடர்பான வேட்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

இந்த மக்களுக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாக்களிப்பில் காட்டிய ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என விரும்புகின்றேன்.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலை விட இத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் உயர்ந்துள்ளமை கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். திருகோணமலையில் 83% வீதமும், அம்பாறையில் 80% வீதமும், மட்டக்களப்பில் 77% வீதமும், வன்னியில் 73% வீதமும், யாழ்ப்பாணத்தில் 66.5% வீதமுமாக மக்கள் வாக்களித்திருப்பது நிறைவளிக்கின்றது.

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர் , அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய குடியரசுத் தலைவருக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாய் அன்னத்துக்கு வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/69270

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

 

 

கோட்டா குறித்து யாழ் மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் யார் வந்தாலும் ஒண்டு தான் சிங்களவனை நம்ப ஏலாது என்பது தான் பின்பு எதற்க்கு சஜித் ஜனாதிபதியாக வருவதற்கு வாக்குகளை அள்ளி வழங்கினவர்கள்? நம்பும்படியாக இல்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இங்கும் மொரோக்கோ சிவப்பு வெங்காயம் கிலோ .25p  அதுசரி இவ்வளவு வெங்காயத்தை முஸ்லீம் நாடுகளில் இருந்து இறக்கி சமாளிக்கினம் தானே இந்த பிஜேபி கூட்டம். 
    • எவ்வளவு கஷ்டப்பட்டு இறக்குமதி செய்தால் ... வெளிநாட்டு வெங்காயத்தை வாங்க ஓவரா சிலுத்துக்கிறாங்க மக்கள்..! வெங்காயம் கட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் தொடர் விலை ஏற்றம் தொடர்கிறது. இதன் காரணமாக ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் விரக்தி அடைந்துள்ளனர். மேலும் வெங்காயம் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசுக்கு பல்வேறு கோரிக்கையையும் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினர். இந்த ஒரு நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வரவும் நிலைமையை சமாளிக்கவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தற்போது எகிப்தில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 30 டன் வெங்காயம் திருச்சிக்கு காந்தி நகர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதால் அங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு மார்க்கெட்டுக்கு வினியோகம் செய்யவும், அவ்வாறு வினியோகம் செய்த பின்னர் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூபாய் 120 வரை நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து கர்நாடக மாநிலத்தில் இருந்தும் 150 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவர எகிப்திலிருந்து இறக்குமதி  கொண்டுவரப்பட்ட வெங்காயம் பெரிய அளவிலும், சற்று கருமையாகவும் இருப்பதால் வெங்காயம் வாங்க தயக்கம் காண்பிக்கின்றனர். மேலும் விலை அதிகமாக இருந்தாலும் "நாட்டு" வெங்காயம் தான் வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். https://tamil.asianetnews.com/life-style/people-bother-to-but-onion-which-was-imported-from-egypt-q28zw1
    • (நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 1300 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பின் பிர­காரம், நான்கில் ஒரு­ப­கு­தி­யினர் அரச சேவையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அல்­லது அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இலஞ்சம் வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருக்கும் அதே­வேளை அரச அதி­கா­ரி­க­ளினால் அர­ச­சே­வைகள் வழங்­கப்­படும் போது அதற்குப் பிர­தி­ப­ல­னாகப் பாலியல் இலஞ்சம் கோரப்­படும் நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இலங்­கையின் 9 மாகா­ணங்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்­வ­ருடம் ஏப்ரல் மாதம் வரை­யான காலப்­ப­கு­தியில் 18–80 வயது வரை­யான 1300 பிர­ஜை­க­ளிடம் ட்ரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்­பினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இலஞ்சம், ஊழல் அனு­பவம் தொடர்­பான கருத்­துக்­க­ணிப்பு தொடர்­பான இறுதி அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அது­கு­றித்துத் தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்­பி­லுள்ள ட்ரான்ஸ்­பே­ரன்ஸி இன்­டர்­நெ­ஷனல் அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அந்த சந்­திப்பின் போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது, ஊழல் கார­ண­மாக தனி­நபர் ஒரு­வரின் வாழ்க்கை எவ்­வாறு பாதிப்­ப­டை­கின்­றது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­துடன், தேசிய மட்­டத்தில் ஊழலை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்து பொது­மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தையும் நோக்­காகக் கொண்டே இலஞ்சம் ஊழல் அனு­பவம் தொடர்பில் மக்கள் மத்­தியில் இக்­க­ருத்­துக்­க­ணிப்பு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் நாட்­டு­மக்கள் நீதித்­துறை, அர­சாங்கம் மற்றும் பொலிஸ் ஆகி­ய­வற்றில் எந்தக் கட்­ட­மைப்பைப் பெரிதும் நம்­பு­கின்­றார்கள் என்ற கேள்­விக்கு கருத்­துக்­க­ணிப்பு முடி­வு­களின் பிர­காரம் 73 சத­வீ­த­மானோர் நீதி­மன்­றத்தின் மீது பெரிதும் நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­துடன், அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்கை 47 சத­வீ­த­மா­கவும், பொலிஸார் மீதான நம்­பிக்கை 57 சத­வீ­த­மா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. அதே­வேளை இக்­க­ருத்­துக் ­க­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் நான்கில் ஒரு­ப­குதி மக்கள், தாம் அர­ச­சே­வையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அல்­லது அதனைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு இலஞ்சம் வழங்­கு­வ­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். எனினும் அவர்­களில் மூன்­றி­லொரு பிரி­வினர் இவ்­வாறு இலஞ்சம் வழங்­கு­வது ஏற்­பு­டை­ய­தல்ல என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். நாட்டின் 9 மாகா­ணங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக 1300 பேரிடம் மேற்­கொள்­ளப்­ பட்ட கருத்­துக்­க­ணிப்பில் பதி­ல­ளித்­த­வர்­களில் அரைப்­பங்­கினர் ஊழல் மற்றும் இலஞ்­சத்தின் ஒரு வடி­வ­மாக பாலியல் இலஞ்­சமும் இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டுள்­ளனர். அரச அதி­கா­ரி­க­ளினால் அர­ச­சே­வை கள் வழங்­கப்­படும் போது அதற்குப் பிர­தி ­ப­ல­னாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்­ப­டு­கின்­றது. பாலியல் இலஞ் சம் கோரப்­படும் நிலை­மை­யா­னது கிரா­மப்­பு­றங்­களை விடவும் நகர்ப்­பு­றங்­களில் அதி­க­மாக உள்­ள­போ­திலும் அதனால் தோட்­டப்­புற மக்­களே இல­குவில் பாதிப்­ப­டையக் கூடி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர் என்று கருத்­ துக்­க­ணிப்பு முடி­வுகள் வெளிப்­ப­டுத்­தி­யுள் ­ளன. மேலும் இக்­க­ருத்­துக்­க­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் 86 சத­வீ­மானோர் இலங்­கையில் இலஞ்சம், ஊழல் தொடர்­பான குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­கென ஆணைக்­கு­ழு­வொன்று இயங்­கு­கின்­றது என்­பதை அறிந்­தி­ருக்­கின்ற போதிலும் 72 சத­வீ­த­மானோர் இக்­குற்­றங்கள் குறித்து முறை­யி­டக்­கூ­டிய பொறி­முறை பற்­றிய தெளி­வற்­ற­வர்­க­ளா­கவே உள்­ளனர். இந்­நி­லையில் இக்­க­ருத்­துக்­க­ணிப்பு முடி­வு கள் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அரசு மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய தேவை ­யொன்­றையும் அதற்­கான சந்தர்ப்பத்­தை யும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கி­றது என்று நேற்­றைய தினம் நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர சுட்டிக்காட் டினார்.  அதேவேளை அரசாங்கமும் பொலிஸா ரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற் படுத்தக்கூடிய விதமாக செயற்பட வேண் டும் என்று வலியுறுத்திய அவர், பாலியல் இலஞ்சம் தொடர்பான ஆபத்தான நிலை யையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதன் செயற்பாடு களை விரைவுபடுத்த வேண்டியதன் அவ சியத்தையும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/70772
    • சீனாவுடனான நட்புறவை மேலும் வளர்ப்பதில் அரசாங்கம் நாட்டம்: பிரதமர் மஹிந்த சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா அளித்து வருகின்ற உறுதியானதும், நீண்டகால அடிப்படையிலானதுமான ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். சீனாவினால் முன்னெடுக்கப்படும் மண்டலமும், பாதையும் செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு கறித்து சில மேற்குலக ஊடகங்கள் வர்ணிப்பதைப் போன்ற கடன்பொறியாக அமைகிறது என்று தான் நம்பவில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் சீனாவின் ஹார்பர் என்ஜினியரிங் கொழும்பு போர்ட்சிட்டி கம்பனியும் இணைந்து நிர்மாணித்துவரும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட வேளையில் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவிற்கு நேர்காணலொன்றை வழங்கிய போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக கடலிலிருந்து நிறப்பப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பு கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக அன்றையதினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதையொட்டிய நிகழ்விற்காக அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த பிரதமருடன் கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் சியூயுவானும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் சென்றிருந்தனர். 'சீனாவும், இலங்கையும் பலம் பொருந்திய நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்றன. இந்த நட்புறவு நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பிற்கு வலிமை வாய்ந்த அத்திவாரத்தை அமைத்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா வழங்கிவருகின்ற நீண்டகால ஆதரவையும், ஒத்துழைப்பையும் அரசாங்கம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. மண்டலமும், பாதையும் செயற்திட்டத்திலான இலங்கையின் பங்கேற்பு ஒரு கடன்பொறிக்குச் சமனானது என்று மேற்குலகின் சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. சீனாவின் ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பேரார்வம் மிக்க அந்த செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பை அவ்வாறு ஒரு கடன்பொறியாக நான் நினைக்கவில்லை. 'அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காகவும், ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பெறப்பட்ட கடன்களை இலங்கையினால் தெளிவாக மீளச்செலுத்த முடியும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது. ஆனால் நாம் அதை மீளக்கட்டியெழுப்பும் போது கடனை மீளச்செலுத்துவது ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. 'அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்தை ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாகப் பரபரப்பாக்கியிருக்கின்றன. உண்மையில் அவர் சீனாவுடனான அந்த உடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த பின்புலத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் ஊடகங்கள் அதுகுறித்து செய்தியை வெளியிட்டுள்ளன.  இந்த உடன்படிக்கையினால் இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி அதனைக் கூறவில்லை. முன்றைய அரசாங்கத்தைப் போலன்றி எமது அரசு பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்குவதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறினார். 'இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் நெருக்கமான நட்பு நாடுகள் என்ற வகையில் அவற்றை எமக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். இலங்கையில் ஒரு புதிய வர்த்தக மையமாக கொழும்புத் துறைமுக நகரம் தோன்றுவதை உறுதி செய்வதற்கு அந்தத் திட்டத்தை நிர்மாணிக்கும் சீனாவின் பணிகளுக்கு எனது அரசாங்கம் உறுதியான ஆதரவை வழங்கும். கொழும்பு துறைமுக நகரத்தின் முன்னுரிமைக் கொள்கைகளை அரசாங்க மட்டத்தில் துரிதப்படுத்தும் பணிகளை 2020 ஜனவரியிலிருந்து முன்னெடுக்கப்போவதாகவும் பிரதமர் ராஜபக்ஷ நேர்காணலில் தெரிவித்துள்ளார். துறைமுக நகருக்காக கடலிலிருந்து மீட்கப்பட்ட நிலப்பரப்பை கொழும்பு மாவட்டத்தின் பகுதியாகப் பிரகடனப்படுத்தும் நிகழ்வில் நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகளும் இடம்பெற்றன. கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இலங்கையின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் எதிர்வரும் வருடங்களில் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களைக் கவருமெனவும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜீயின் தூதுவராக வூ ஜியாங் ஹுவா கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு டிசம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சீனத்தூதரகம் விடுத்த அறிக்கையொன்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும், நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இணங்கிக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உட்பட பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஒத்துழைப்பை தற்போது நடைமுறையிலிருக்கும் கருத்தொருமிப்பின் அடிப்படையில் இருநாடுகளும் துரிதமாக நடைமுறைப்படுத்தும் என்றும், எதிர்கால ஒத்துழைப்புக்கான புதிய திட்டவரைவொன்று உருவாக்கப்படும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/70767
    • 3 ஆவது நாளாகவும் சி.ஐ.டி.யில் ஆஜரான சுவிஸ் தூதரக ஊழியர்! கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை துல்லியமாக கண்டறிய  நேற்றைய தினம் அவர் விஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.  அத்துடன்  அவரிடம் நேற்றும் நேற்றுமுன்தினம் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான  நான்காம் மாடியில் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70768