Jump to content

தமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை


Recommended Posts

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு விஷேட அழைப்பு விடுத்து இருபக்க அறிக்கையினை வெளியிட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது : 

தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாட்டை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை. 

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக இந்திய பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 

தமிழகத்தில் தமது சுய நல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை. மக்களை பகடை காய்களாக்கும் , எம்மக்களிடையே பகைமையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் தரங்கெட்ட அரசியலைத்தவிர வேறு என்ன ஆக்க பூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு என்னுள் என்னால் தடுக்க முடியவில்லை. 

2009 இல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலான பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு , வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயமாகும். 

அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் , எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது. 

எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படை தன்மையுடனும் , நல்லெண்ணத்துடனும் செயற்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விடுத்து நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது. 

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால் , எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கேட்டுக் கொள்கின்றேன். 

https://www.virakesari.lk/article/69272

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படை தன்மையுடனும் , நல்லெண்ணத்துடனும் செயற்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விடுத்து நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.

இது 'விசேட கோரிக்கையா?' இல்லை 'விசேட கண்டனமா?'

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இது 'விசேட கோரிக்கையா?' இல்லை 'விசேட கண்டனமா?'

சிங்கள-பௌத்த பேரினவாதிகளிடம் பிரபல்யம் ஆகும் விஷேட சுயவிளம்பரம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு தமிழன் எழுதிகொடுத்திருக்கிறான்.  பேச  எழுதிகொடுத்தவை இப்ப அறிக்கை விடவும் பழக்குகினம்.

Link to comment
Share on other sites

சொன்னது நாமல் என்று பார்க்காமல் என்ன சொல்லியிருக்கு என பார்க்கும் போது சொல்லிய அனைத்தும் சரியாகவே உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமாவளவன், நெடுமாறன் நாமல் ராஜபக்ஷ அறிக்கைக்கு பதில்: "எங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்"

தொல் திருமாவளவன்படத்தின் காப்புரிமைTHOL.THIRUMAVALAN/FACEBOO Image captionதொல் திருமாவளவன்

"தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு புத்திமதி சொல்வதைவிட எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான பாதுகாப்பான மறுவாழ்வை அளிப்பதற்கு ராஜபக்சே குடும்பம் முன்வர வேண்டும்" என நாமல் ராஜபக்ஷேவின் குற்றச்சாட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ செவ்வாய்கிழமை வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக கூறியிருந்தார்.

தமிழகத்தில் தங்களது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை தமிழ் மக்கள் மேல் அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கையை தான் அவதானித்ததாகவும் அந்த அறிக்கைகளில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர, வேறேதும் கிடையாது எனவும் அவர் கூறியிருந்தார்.

நமல் ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைNAMAL RAJAPAKSHA/FACEBOOK

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம் கேட்டபோது, "ராஜபக்சே குடும்பத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறார்?" எனக் கேள்வியெழுப்பினார்.

"மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை வேடிக்கையாக உள்ளது. ஈவிரக்கமின்றி அப்பாவித் தமிழர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்த ராஜபக்சே குடும்பத்திலிருந்து தமிழர்கள் மீது கரிசனம் காட்டும் குரல் ஒலிப்பது வெற்றிக்களிப்பின் ஆணவமாகவே வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதால் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு என்ன ஆதாயம் கிடைத்து விடும்? ராஜபக்ஷ குடும்பத்தின் வெற்றி, தமிழர்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியதால் ஆத்திரமடைந்துள்ள நாமல் ராஜபக்ஷ எங்கள் மீது தனது ஆத்திரத்தைக் கொட்டியிருக்கிறார்" என விளக்கமளித்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்தில் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ததையும் இந்த விஜயத்தின்போது அந்தக் குழுவினர் வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சிநேகப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நாமல் கூறியிருந்தார்.

இது குறித்துப் பேசிய திருமாவளவன், "2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற குழுவில் நானும் ஒருவனாக இலங்கைக்கு சென்றிருந்தேன். அப்போது மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்களை நேரில் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் எங்கள் ஆதங்கத்தையும் கவலையையும் பதிவு செய்தோம். அவை மரபு கருதி நாகரீகமான முறையில் எங்கள் வலிகளைப் பகிர்ந்துகொண்டோம். " என்றார்.

மேலும், "ராஜபக்சேவைச் சந்தித்தபோது, என்னை விரல் நீட்டி சுட்டிக்காட்டி திருமாவளவன் போன்றவர்கள் எல்டிடிஇ தரப்பு கருத்தை மட்டும் கேட்கிறார்கள். எங்கள் தரப்புக் கருத்தை கேட்டதேயில்லை. எங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று பேசினார். விடைபெறும்போது மறுபடியும் என்னைச் சுட்டிக்காட்டி போர் நடக்கும்போது பிரபாகரனோடு இவர் வன்னியில் இருந்திருந்தால் இவரும் மேலுலகம் போயிருப்பார் என்றும் நக்கலடித்தார். அந்த அளவுக்கு என் மீது உள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவை நாகரீகம் கருதி அமைதியாக விடைபெற்றோம். ராஜபக்ஷவுடன் நடந்த உரையாடல் இப்படித்தான் இருந்தது. இன்றைக்கு நாமல் ராஜபக்சே சொல்வதைப் போல அது சினேகமாக உரையாடல் அல்ல." என விளக்கமளித்தார் திருமாவளவன்.

திருமாவளவன்படத்தின் காப்புரிமைFACEBOOK

"இன்றைக்கு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் ராஜபக்ஷ குடும்பம் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு புத்திமதி சொல்வதைவிட எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான பாதுகாப்பான மறுவாழ்வை அளிப்பதற்கு முன்வர வேண்டும். அங்கு நிலைகொண்டிருக்கிற ராணுவத்தைத் திரும்பப் பெற்றும் சிங்கள மயமாதலை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன் சிங்களக் குடியேற்றத்தையும் சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளையும் கைவிடுவதற்கு முன்வரவேண்டும்" என்றும் நாமலின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார் திருமாவளவன்.

நாமல் ராஜபக்ஷவின் அறிக்கை, 'சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருப்பதாக' தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியிருக்கிறார்.

"அப்பாவிச் சிங்கள மக்களுக்கு இனவெறியை ஊட்டி, அவர்களை இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டு அரசியல் நடத்துகிற ராஜபக்ஷ கும்பல் எத்தகையது என்பதை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. மனித உரிமை ஆணையத்தால் போர் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் மகனிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது" என பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-50477755

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.