Jump to content

துட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...!

Recommended Posts

ருவான் வெலிசாய...! ஒட்டுமொத்த இலங்கையின் - இலங்கையரின் கவனத்தையும்  நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்...! இங்குதான்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம்.

ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. இதை அவருடைய முதல் பேச்சும் ஆழமாக உணர்த்திச் சென்றுள்ளது.

அவரின் இந்த வியாக்கியானங்களை நாம் விளங்கிக் கொள்ள - கோட்டாபய சொல்லும் வரலாற்றுச் செய்தியை உணர நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

நம் கண்முன்,
ஒரு சிறுவன் பஞ்சணையில் படுத்திருக்கிறான். ராஜ களை ததும்பும் அவன் முகம் சோகத்திலும் கோபத்திலும் சிவந்து கிடக்கிறது. கைகளையும் கால்களையும் குறுக்கிக் கிடக்கிறான். அவனின் தாய் அவனைத் தேற்றிக் கொண்டே கேட்கிறாள்.

“காமினி ஏன் இவ்வாறு கஷ்டப்பட்டுப் படுத்திருக்கிறாய்...! கை, கால்களை நீட்டித் தாராளமாகப் படுத்துக் கொள்”, என்கிறாள் தாய்.

கோபத்தில் எள்ளும்கொள்ளுமாய் வெடித்த மகன் சொல்கிறான், “மகா கங்கைக்கு அப்பால் (வடக்கே) தமிழர்கள். கீழே (தெற்கே) சமுத்திரம். கை, கால்களை நீட்டி தாராளமாக நான் படுப்பது எங்ஙனம்...?”

இவ்வாறு கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது? தேற்றுவதுதான் எப்படி? ஏனெனில் அவனுள் இந்தக் குரோதமும் விரோதமும் வளரக் காரணமானவள் அவளல்லவா...? தன் மசக்கை ஆசைகளில் ஒன்றாக “தமிழ் (எல்லாளனின்) தளபதி ஒருவனின் தலையை வெட்டிய - குருதி படிந்த வாளைக் கழுவி, அந்த இரத்த நீரை குடிக்கக் கேட்டவள் அல்லவா அவள்...? அவளுக்குப் பிறந்தவளின் - அவள் அதைக் குடிக்கும்போது கருவில் இருந்த பிள்ளைக்கு தமிழனை விரோதிக்கவும் - பகைக்கவும் சொல்லித்தான் கொடுக்க வேண்டுமா... என்ன?

நீங்கள் நினைப்பது சரிதான்... அந்தச் சிறுவன் வேறு யாருமல்லன். மகாவம்சம் கூறும் இலங்கை வரலாற்றின கதாநாயகன் -  சிங்கள - பௌத்தர்கள் இன்றும் - என்றும் போற்றிப் புகழும் வீரநாயகன் துட்ட கைமுனு அல்லது துட்ட காமினி என அறியப்பட்ட “காமினி அபய”தான். நீதிநெறி வழுவாத மன்னவன் - எதிரிகளும் எதிர்நிற்க அஞ்சும் வீரனான எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றி கொன்றானே அதே வீர(?)நாயகன் துட்ட கைமுனுதான். பல இட்டுக்கட்டிய கதைகளைச் சொல்லும் - தமிழர்களுக்கும் - சிங்களவர்களுக்கும் இனவாதத் தீயை முதலில் பற்ற வைத்த மகாவம்சம் நூலின் நாயகன்தான்.

அந்தத் துட்ட கைமுனு, சூழ்ச்சியால் எல்லாளனை போரில் வென்ற பின்னர், தனது வெற்றியைப் பறைசாற்றவும் பௌத்த மதத்தின் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தவும்  அமைத்ததுதான் ருவான் வெலிசாய.

இந்த விகாரையை துட்டகைமுனு கட்டியபோது,  நவரத்தினங்களையும் தங்கக் கட்டிகளையும், வெள்ளிக்கட்டிகளையும் கொட்டிக் கட்டினான் என்கிறது மகாவம்சம். ஆனால், சூழ்ச்சியாலும் சதியாலும்  வென்ற போரில் சூறையாடப்பட்ட  தமிழர்களின் சொத்துக்களையும், அவர்களைக் கசக்கிப் பிழிந்து பெற்ற வரிகளை வசூலித்தும், போர் கைதிகளாக பிடிபட்ட தமிழர்களை அடிமைகளாக்கி அவர்களை துன்புறுத்தி - வருத்தி அவர்கள் சிந்திய இரத்தத்திலும் - வியர்வையிலும் கட்டப்பட்டதுதான் இந்த விகாரை.

தமிழர்களை வெற்றி கொண்டதன் அடையாளச் சின்னமாக - அன்றைய போரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழர்களின் நினைவுச் சின்னமாக - பல்வேறு துன்பங்களையும் - சித்ரவதைகளையும் - அடக்குமுறைகளையும் தமிழர்கள் எதிர்கொண்டதற்கான சாட்சியமாகவும் நிமிர்ந்து நின்றதுதான் இந்த ருவான் வெலிசாய. இவ்வாறு தமிழின அழிப்பின் - தமிழர்கள் மீதான அடக்குமுறையின் அடையாளமாக நிற்கும் ருவான் வெலிசாயவில்தான் கோட்டாபயவின் அரசியல் பயணம் தொடங்கியது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனவழிப்பு உலகமே வர்ணிக்கும் “முள்ளிவாய்க்கால் இனவழிப்பை” வழிநடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த கோட்டாபய ராஜபக்ச. 2005 இல் தமிழ் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்தபோது - சிங்கள -பௌத்த தீவிர சக்திகளின் தெரிவாக இருந்தவர் இவருடைய மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச. இவர், பதவியேற்றதும் இலங்கை வந்த முன்னாள் இராணுவத்தினனான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார். தமிழர்களுக்கு எதிரான போரை - தனது சகோதரனின் நிறைவேற்று அதிகார ஆசியுடன் முன்னின்று நடத்தினார். இராணுவத் தளபதிகள் குற்றங்கள் இழைக்கவும் - அவர்கள் கட்டுக்கடங்காத போர் மீறல்களை மேற்கொள்ளவும் - சர்வதேச போர் விதிகளை காலில் போட்டு மிதித்து தமிழர்களுக்கு எதிராக அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டார்.

தமிழரின் தாயகத்தை - தமிழருக்கே உரித்தான அரசை மீளக் கேட்ட - அமைக்க முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பு  மௌனிக்கச் செய்யப்பட்டது.  சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அங்கு பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டார்கள் தமிழ் மக்கள். இவ்வாறு தமிழர்களை வெற்றிகொண்ட ராஜபக்ச சகோதரர்களில் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ச 2010 தேர்தலில் போட்டியிட்டபோது, இலங்கையை முதன்முதலில் ஒருங்கிணைத்த - தமிழர்களை அழித்து - அடக்கிய - துட்டகைமுனு மன்னனுக்கு நிகராகக் கொண்டாடப்பட்டார் - போற்றப்பட்டார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு தடை ஏற்பட்டது. எனவே 2019 தேர்தலில் அவர்களுக்குப் பெருவெற்றி ஒன்று தேவைப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைப் பறிகொடுத்த அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அப்போதைய தலைவர் பண்டாரநாயக்க என்ன நோக்கில் தொடங்கினாரோ அதே இலட்சியப் பாதையில் - அதே சிந்தனையை முன்வைத்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தொடங்கப்பட்டது. சிங்கள - பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் ஆட்சிப்பீடம் ஏற அவர்களின் ஆசி மட்டுமே போதும் என்பதை மீண்டும் பறை சாற்றியது கோட்டாபயவின் வெற்றி.

துட்டகைமுனுவின் ஊரான திஸ்ஸமகரகமவை (அம்பாந்தோட்டை) சேர்ந்த கோட்டாபயவும், தனது அண்ணன் வழியிலேயே, சிங்கள - பௌத்தர்கள் போற்றும் நவீன துட்டகைமுனுவான கோட்டாபய ராஜபக்ச, துட்டகைமுனு மன்னன் தமிழர்களை வெற்றி கொண்டு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய செல்வங்களைக் கொண்டு கட்டிய விகாரையான ருவான் வெலிசாயவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து. அங்கேயே பதவிப் பிரமாணத்தையும் செய்து சிங்கள - பௌத்தன் என்ற பெருமிதத்துடன் நவீன துட்டகைமுனுவாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் வகைதொகையின்றி தமிழர்கள் அழிக்கப்பட்ட - தமிழர்களை அழித்தும் - வருத்தியும் பெறப்பட்ட செல்வங்களைக் கொண்டு கட்டப்பட்ட ருவான் வெலிசாயவில், “கோட்டாபய எனும் நான் இந்த நாட்டின் சகல மக்களையும் இன, மத, சாதி பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றுவேன் என உறுதி ஏற்றிருக்கிறார்.

இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து விட்டேனே என துட்டகைமுனு கலங்கியபோது, “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள் தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் - மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக்கூடாதவர்கள்”, என உபதேசமளித்தனர் பிக்குகள். இதனால் துட்டகைமுனு மனம் மாறினான் என்கிறது மகாவம்சம்.

நவீன துட்டகைமுனுவான கோட்டபய ராஜபக்சவும் இதைப் பின்பற்றி துட்டகைமுனுவாகவே வாழ்வாரா? அல்லது கோட்டாபய என்ற “சிங்கள - பௌத்த ஆதிக்கராக சிறுபான்மை மக்களின் மனதில் இருக்கும் விம்பத்தை அழித்து முன்மாதிரியான தலைவராக மாறுவாரா? என்பதை இனிவரும் காலங்கள்தான் பதில் சொல்லும்.

-செங்கையான்

Link to comment
Share on other sites

பிறரை திட்டி தீர்த்தது போதும்.  முதலில் நாங்கள் தோல்வியுற்ற  காரணத்தை (ஒற்றுமை இன்மை,  சுயநலம்,  துரோகத்தனம் ) இல்லாதொழிக்க வழிபாருங்கள்.  

எப்போதும் பிறரின் வெற்றியை இழிவுபடுத்துவதும்,  அதனுடாக எம்மை நாமே திருப்திப் படுத்திக்கொள்வதுமே இதுவரை கண்டது. 

இந்த போலி  ஆய்வாளர்களை வெள்ளை வான்காரனுக்கு தெரியாதோ  ? 

Link to comment
Share on other sites

நன்றி இணைப்பிற்கு.  பல தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. 

Link to comment
Share on other sites

4 hours ago, கலையழகன் said:

ஒரு சிறுவன் பஞ்சணையில் படுத்திருக்கிறான். ராஜ களை ததும்பும் அவன் முகம் சோகத்திலும் கோபத்திலும் சிவந்து கிடக்கிறது. கைகளையும் கால்களையும் குறுக்கிக் கிடக்கிறான். அவனின் தாய் அவனைத் தேற்றிக் கொண்டே கேட்கிறாள்.

“காமினி ஏன் இவ்வாறு கஷ்டப்பட்டுப் படுத்திருக்கிறாய்...! கை, கால்களை நீட்டித் தாராளமாகப் படுத்துக் கொள்”, என்கிறாள் தாய்.

கோபத்தில் எள்ளும்கொள்ளுமாய் வெடித்த மகன் சொல்கிறான், “மகா கங்கைக்கு அப்பால் (வடக்கே) தமிழர்கள். கீழே (தெற்கே) சமுத்திரம். கை, கால்களை நீட்டி தாராளமாக நான் படுப்பது எங்ஙனம்...?”

இவ்வாறு கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது? தேற்றுவதுதான் எப்படி? ஏனெனில் அவனுள் இந்தக் குரோதமும் விரோதமும் வளரக் காரணமானவள் அவளல்லவா...? தன் மசக்கை ஆசைகளில் ஒன்றாக “தமிழ் (எல்லாளனின்) தளபதி ஒருவனின் தலையை வெட்டிய - குருதி படிந்த வாளைக் கழுவி, அந்த இரத்த நீரை குடிக்கக் கேட்டவள் அல்லவா அவள்...? அவளுக்குப் பிறந்தவளின் - அவள் அதைக் குடிக்கும்போது கருவில் இருந்த பிள்ளைக்கு தமிழனை விரோதிக்கவும் - பகைக்கவும் சொல்லித்தான் கொடுக்க வேண்டுமா... என்ன?

நீங்கள் நினைப்பது சரிதான்... அந்தச் சிறுவன் வேறு யாருமல்லன். மகாவம்சம் கூறும் இலங்கை வரலாற்றின கதாநாயகன் -  சிங்கள - பௌத்தர்கள் இன்றும் - என்றும் போற்றிப் புகழும் வீரநாயகன் துட்ட கைமுனு அல்லது துட்ட காமினி என அறியப்பட்ட “காமினி அபய”தான். நீதிநெறி வழுவாத மன்னவன் - எதிரிகளும் எதிர்நிற்க அஞ்சும் வீரனான எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றி கொன்றானே அதே வீர(?)நாயகன் துட்ட கைமுனுதான். பல இட்டுக்கட்டிய கதைகளைச் சொல்லும் - தமிழர்களுக்கும் - சிங்களவர்களுக்கும் இனவாதத் தீயை முதலில் பற்ற வைத்த மகாவம்சம் நூலின் நாயகன்தான்.

துட்ட கைமுனு, சூழ்ச்சியால் எல்லாளனை போரில் வென்ற பின்னர், தனது வெற்றியைப் பறைசாற்றவும் பௌத்த மதத்தின் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தவும்  அமைத்ததுதான் ருவான் வெலிசாய.

சிங்களவர்கள் தோன்றிய நாடு இலங்கை. தென்னிந்திய தமிழ் மன்னர்கள் தமது பெரும் எண்ணிக்கையையும் பணபலத்தையும் கொண்ட படை எடுப்புகள் மூலம் இந்த சிங்கள மக்களை எப்படி வாட்டி இருக்கிறார்கள் என்பதை அந்த தாயின் வேண்டுகோளில் இருந்தும் இந்த சிறுவனின் கவலையில் இருந்தும் அறிய முடிகிறது. மனிதர்கள் எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள். இனவெறுப்பும், கொலைவெறியும் கடும் பாதிப்புகளாலும் இயலாத்தன்மையாலுமே ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணமே குற்றங்கள் மிகக்குறைந்த, அமைதியான, அறிவாளிகள் வாழும் செல்வந்த நகராக இருந்தது. கடும் பாதிப்புகளாலும் இயலாத்தன்மையாலும் இதே யாழ்ப்பாணத்தவர் உலகில் பல நாடுகளின் எத்தனையோ சட்டங்களை மீறி தாமும் தமது உறவுகளும் வாழ வழி தேட வேண்டியவர்கள் ஆனார்கள். மேலும் பல யாழ்ப்பாணத்தவர்கள், அதில் இளம் பெண்களும் சிறுவர்களும் கூட, தாம் கனவிலும் நினைத்திராத பயங்கரவாத கொலைகளை செய்ய வேண்டியவர்களானார்கள்.

இவர்களோடு ஒப்பிடுகையில் அந்த சிறுவன் காமினி, படைகளை கொன்று உயிர்களை அழிக்காமல், தான் தனியே எல்லாள மகராசனுடன் மோதி, வெற்றி பெற்றபின் அந்த அரசனுக்கு சமாதியும் கட்டி, இன்று வரை அதை கடக்கும் எவரும் வாகனத்தில் இருந்து இறங்கி பாதணிகளை களற்றி, மரியாதை செலுத்தி செல்ல வைத்திருக்கிறான். அவனது பெயரான துட்டு (பல் முன்தள்ளிய) காமினி என்பதை இனவெறித்தமிழர் “துட்ட காமினி” என்றாக்கி, அவனை கூடாதவனாக காட்டி, பல தலைமுறைகளாக இனவெறுப்பை தமிழருக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்.

சிங்களவரும், ஈழத்தமிழரும் இந்த தீவில் வாழ வேண்டியது அவர்களின் தலைவிதி. இந்த இரு இனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து  கொண்டு மற்றவரை மதித்து வாழ முயலாவிட்டால் அழிவதை தவிர வேறு எதிர்காலம் இல்லை. “அவர்கள் தான் எங்களை புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் ஒன்றும் அப்படி புரிந்து கொள்ள தேவையில்லை“ என்று தமிழர்கள் நினைக்கும் வரை அழிவு தொடரும். யாராலுமே உதவமுடியாது.

Link to comment
Share on other sites

மகாவம்ச கதைகளும் சரி துட்டகைமுனு வரலாறும் சரி சிங்கள இனத்தை ஒரு பாதையில் வழிநடத்த உதவுகின்றது. ஒரு விகாரையை கட்டினாலும் சரி அரசமரத்தை நட்டாலும் சரி வரலாற்றை திரித்தாலும் சரி அவைகள் அந்தப் பாதையின் அடயாளங்களாகின்றன. இறுதிப்போர்க் காலத்தில் விலைவாசி ஏற்றம் பொருளாதார நெருக்கடிகளை அனுசரித்து சிங்கள மக்கள் போரை ஒரு அணியில் நின்று ஆதரித்தார்கள்.  தேவாலயம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பின் கோட்டபாயவை தேர்ந்தெடுத்திருக்கின்றது சிங்கள இனம். கோட்டபாய தனது பதவிப்பிரமாணத்துக்கு தேர்ந்தெடுத்த இடத்தின் ஊடாக  தமது இனம் நடந்து செல்லும் வழித்தடத்தில் மீளவும் ஒரு அடயாளத்தை ஏற்படுத்தி வரலாற்றை எதிர்காலத் தலை முறைக்கு நினைவு கூருகின்றார். 

புராணங்கள் கதைகள் கோயில்கள் எதுவும் இனத்தை ஐக்கியப்படுத்தும் வகையில் தமிழர்களிடம் இல்லை. மாறாக அவைகள் இனத்தை சிதைக்கவும் தன்னினத்துக்குள் இரைதேடும் குணத்தை விதைக்கவும் ஊர்வாதங்கள் பிரதேசவாதங்களை ஊக்குவிக்கவுமே வழிவகுக்கின்றது. போரின் அழிவுகளுக்கு பின்னரும் தாழ்ந்தவன் தேரிழுக்க கூடாது என ஜேசிபி இயந்திரத்தை வைத்து தேரிழுத்த நிலையில் தான் இனத்தின்  ஐக்கியப்பாடு இருக்கின்றது. எது விடுதலை யாரிடம் இருந்து யாருக்கு விடுதலை என்பதே தமிழர்களுக்கு இன்னும் தெளிவற்ற நிலை. இதில் கோட்டபாய வந்தால் என்ன சஜித் வந்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். தங்கத் தட்டில்வைத்து தனிநாட்டை கொடுத்தால் கூட அது குரங்கின் கையில் கொடுத்த புமாலை நிலைதான் தமிழர்களுக்கு. 

Link to comment
Share on other sites

18 minutes ago, சண்டமாருதன் said:

தங்கத் தட்டில்வைத்து தனிநாட்டை கொடுத்தால் கூட அது குரங்கின் கையில் கொடுத்த புமாலை நிலைதான் தமிழர்களுக்கு. 

ஒரு சரியான அரசியல் தலைமை தேவை. அதை பெறக்கூடிய ஒரு பொறிமுறை எம்மிடம் இல்லை. 

அமெரிக்கா போன்ற நாட்டில் இப்பொழுது யார் சனநாயக கட்சியின்  சனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்ற விவாதம் பல மாதங்களாக, வெளிப்படையான விவாதங்கள் நடக்கின்றன. அதன் மூலம், மக்கள் ஒரு தலைமையை தெரிவுசெய்யக்கூடிய படிமுறை உள்ளது. 

எமது மக்களுக்கு அவ்வாறான தெரிவுகள் இல்லை. இவர்தான் அரசியல் தலைவர் என்று ஒருவரை நிறுத்தி அவரின் முடிவுகளை ஆதரிக்க வேண்டிய நிலை.   

Link to comment
Share on other sites

7 minutes ago, ampanai said:

தமிழினத்துக்கு ஒரு தலமை என்பதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பதும் கற்பனை நிலையில் கூட தற்போது சாத்தியமற்றது.  முரண்பாடுகள் நிறைந்து சாதி மத பிரதேசவாதமாக பல்வேறு தளங்களில்  ஐக்கியமின்றி சிதைந்துபோன நிலையில் உள்ள இனம் அதே நேரம்  பேரினவாதத்திடம் இருந்து விடுபடவும் வேண்டும்.  இரண்டுக்குமான ஒரு தலைமை எப்படி சாத்தியம் என்பதே  கற்பனைக்கு எட்டாத விசயம். புலிகள் காலத்தில் தமிழினம் விடுதலை அடைந்தால் சரி இல்லையேல் தமிழர்களுக்கென்று ஒரு அரசியலே இருக்காது என்ற நிலை இருந்ததின் காரணம் இதுதான். புலிகளின் முடிவுக்குப் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தளமே  கிடையாது. இன்றைய சுமந்திரன் சம்மந்தர் விக்கி சிவாஜிலிங்கம் யாரானுலும் சரி அவர்கள் தளமற்று அந்தரத்தில் நின்று எதையே செய்கின்றார்கள் தவிர அது இனத்துக்கான அரசியல் எல்லைக்குள் வரமாட்டாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அர்த்தமற்ற ஒன்றுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதற்காக.. சந்திக்கா அம்மையார்.. அனுரத்த ரத்வத்தைக்கு தங்க முலாம் பூசிய வாள் ஒன்றை பரிசளித்து.. அவரை ஒரு நவீன துட்டகைமுனு லெவலுக்கு காட்டினார்.

அதன் பின் மகிந்த.. தன்னைத் தானே.. முள்ளிவாய்க்கால் பெரும் இனவழிப்போடு.. நவீன துட்டகைமுனுவாக காட்டிக் கொண்டார். நவீன மகாவம்சத்தையும் வெளியிட்டார்.

இப்பொ.. கோத்தா.. ருவன்வெலி சயவில் போய் நின்று கொண்டு.. தன்னை அனுராதபுர ராட்சியதின் தொடர்ச்சி துட்டகைமுனுவின் வாரிசாகக் காட்ட முனைகிறார்.

பொலநறுவையாக இருக்கட்டும்.. அனுராதபுரமாக இருக்கட்டும்.. கண்டியாக இருக்கட்டும்.. யாழ்ப்பாணமாக இருக்கட்டும்.. வன்னியாக இருக்கட்டும்.. எல்லாத்தையும் தலைநகராக்கியதே தமிழ் மன்னர்கள் தான். சிங்களவர்கள் கிடையாது. அதுவும் சைவ மன்னர்கள். அதனால் தான் இங்கெல்லாம்... சைவக் கோவில்களை நிறுவி இருந்தனர். இப்போ அவற்றில் பல சேதமடைந்து விட்டன. 

சிகிரியா ஓவியங்கள் கூட காசியப்பன் காலத்தினது. 

அங்குள்ள குகை ஓவியப் பெண்கள்.. அழகிய பொட்டணிந்திருப்பதைவ். கூந்தலில் பூ மாலை அணிந்திருப்பதைக் காணலாம். மேலும் காதணி.. மற்றும் அந்தப் பெண்கள் அணிந்திருக்கும்.. அணி கலன்கள் தமிழர் நாகரிகத்துக்குரியவை.

Image result for சிகிரியா ஓவியம்

Image result for சிகிரியா ஓவியம்

மிஸ்டர்.. கோத்தாவும்.. அவரது கும்பலும்.. இந்த ஓவியங்களையும் மாற்றி வரையலாம். அதற்காக வரலாற்றை இப்படியே தமக்கேற்ற வாறு தொடர்ந்து புனைய முடியாது. 

இலங்கைத் தீவுக்குள் உள்ள மாதன முத்தாக்களை இனவாதத்தின் பெயரால்.. மயக்கி வைக்கலாம்.. ஆனால்.. நவீன உலகோடு தொடர்புடைய இளைய சமுதாயத்தை அதிக காலம் எனி ஏமாற்ற முடியாது. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

. கோத்தாவும்.. அவரது கும்பலும்.. இந்த ஓவியங்களையும் மாற்றி வரையலாம். அதற்காக வரலாற்றை இப்படியே தமக்கேற்ற வாறு தொடர்ந்து புனைய முடியாது. 

இலங்கைத் தீவுக்குள் உள்ள மாதன முத்தாக்களை இனவாதத்தின் பெயரால்.. மயக்கி வைக்கலாம்.. ஆனால்.. நவீன உலகோடு தொடர்புடைய இளைய சமுதாயத்தை அதிக காலம் எனி ஏமாற்ற முடியாது. 

முடியாது ....😀 ? அவர் எங்கே இதெல்லாம் முடித்து வைப்பேன் என்றார்?

கோத்தா தன்னால் முடியும் என்று சொன்னதெல்லாம் முடித்து வைத்ததுதான் வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Jude said:

கோத்தா தன்னால் முடியும் என்று சொன்னதெல்லாம் முடித்து வைத்ததுதான் வரலாறு.

கோத்தா ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து முடித்து வைக்கிறார்.. ஒன்றும் முடியவில்லை. 

முள்ளிவாய்க்கால்.. கோத்தாவின் தனிப்பட்ட முடிப்பல்ல. அது சர்வதேச.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளின்  தேவைக்கான முடித்து வைப்பு. அதில் கோத்தார் குளிர் காய்கிறார் அவ்வளவே.

எனி.. புலி சாட்டு இல்லை.. தமிழர்கள் மீது வெளிப்படையாகக் கை வைக்க.  

தமிழர்கள் 2005 இல் எப்படி வாக்களித்தார்களோ அதையே 2019 இலும் செய்திருக்கிறார்கள். 2005 புலிகள்.. தடுத்தார்கள்.. சுட்டார்கள்.. கையை வெட்டினார்கள்.. விரலை வெட்டினார்கள் என்று கதையளந்தோர்.. இப்போ.. அமுசடக்கமாகி இருக்கிறார்கள்.

சிலர் தமிழ் மக்கள் மீது தங்களின் இயலாமைகளை திணிக்க விரும்புகிறார்கள்.. ஆனால் மக்கள் புத்திசாலிகள். 

Link to comment
Share on other sites

8 minutes ago, nedukkalapoovan said:

முள்ளிவாய்க்கால்.. கோத்தாவின் தனிப்பட்ட முடிப்பல்ல. அது சர்வதேச.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளின்  தேவைக்கான முடித்து வைப்பு. அதில் கோத்தார் குளிர் காய்கிறார் அவ்வளவே.

மற்றவர்களை குறைவாக மதிப்பிட்டு, உங்களை நீங்களே அதியுயர்வாக கருதி, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக்கொண்டு “என்னைப்போல சாதனை செய்தவன் எவனுமே இல்லை” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதில் உள்ள சந்தோசம் இருக்கிறதே, அதற்கு நிகராக எதுவுமே இல்லை.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Jude said:

மற்றவர்களை குறைவாக மதிப்பிட்டு, உங்களை நீங்களே அதியுயர்வாக கருதி, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக்கொண்டு “என்னைப்போல சாதனை செய்தவன் எவனுமே இல்லை” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதில் உள்ள சந்தோசம் இருக்கிறதே, அதற்கு நிகராக எதுவுமே இல்லை.😁

கோத்தா கோட்டையையும் விட்டிட்டு.. 1992 இல் பயந்து ஓடின ஒருத்தர். அவரை வீரனாக.. துட்டகைமுனுவாக காட்ட நினைப்பதெல்லாம் வெறும் அபந்தம்.

அதன் பின் கோத்தா.. போர்க்களத்துக்கு போனதும் வெகு குறைவு. கட்டளைகளை இட்டு படுகொலைகளை ஆட்கட்டத்தலைகளை.. கப்பம் பெறுதல்களை.. காணாமல் போகடித்தல்களை செய்தது தான் அதிகம். சரத் பொன்சேகா அளவுக்கு கூட யுத்தத்தை நேரடியாக.. எதிர்கொண்டவரும் அல்ல. 

டென்சில் கொப்பேகடுவ காலத்தில் இருந்து புலிகளை எதிர்கொண்டவர்.. புலிகள் சின்னப் பொடியளாக இருக்கேக்க உந்த வீரத்தை காட்டி.. அப்பவே ஒடுக்கி இருக்கலாமே. இப்ப உங்களால் பெரிய துட்டகைமுனுவாக.. காட்டப்படும் கோத்தா.

முள்ளிவாய்க்கால்.. என்பது சிங்களத்தைப் பொறுத்த வரை.. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை தான்.

நீங்கள் முன்னர் மைத்திரியை சகலகலா வல்லவராகக் காட்டினீர்கள். எனி கோத்தா.

ஆனால் தமிழ் மக்கள்.. இவங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. 

Aillaln-610x250

அனுராதபுரம் எதிரியின் கோட்டைக்குள் புகுந்த இவர்கள் வீரர்கள்.

யாழ் கோட்டையை விட்டிட்டு ஓடின... கோத்தா.. அனுராதபுரத்தில்.. போய் பதுங்கினது.. வீரம் கிடையாது. 

Link to comment
Share on other sites

4 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டதற்காக.. சந்திக்கா அம்மையார்.. அனுரத்த ரத்வத்தைக்கு தங்க முலாம் பூசிய வாள் ஒன்றை பரிசளித்து.. அவரை ஒரு நவீன துட்டகைமுனு லெவலுக்கு காட்டினார்.

அதன் பின் மகிந்த.. தன்னைத் தானே.. முள்ளிவாய்க்கால் பெரும் இனவழிப்போடு.. நவீன துட்டகைமுனுவாக காட்டிக் கொண்டார். நவீன மகாவம்சத்தையும் வெளியிட்டார்.

இப்பொ.. கோத்தா.. ருவன்வெலி சயவில் போய் நின்று கொண்டு.. தன்னை அனுராதபுர ராட்சியதின் தொடர்ச்சி துட்டகைமுனுவின் வாரிசாகக் காட்ட முனைகிறார்.

பொலநறுவையாக இருக்கட்டும்.. அனுராதபுரமாக இருக்கட்டும்.. கண்டியாக இருக்கட்டும்.. யாழ்ப்பாணமாக இருக்கட்டும்.. வன்னியாக இருக்கட்டும்.. எல்லாத்தையும் தலைநகராக்கியதே தமிழ் மன்னர்கள் தான். சிங்களவர்கள் கிடையாது. அதுவும் சைவ மன்னர்கள். அதனால் தான் இங்கெல்லாம்... சைவக் கோவில்களை நிறுவி இருந்தனர். இப்போ அவற்றில் பல சேதமடைந்து விட்டன. 

சிகிரியா ஓவியங்கள் கூட காசியப்பன் காலத்தினது. 

அங்குள்ள குகை ஓவியப் பெண்கள்.. அழகிய பொட்டணிந்திருப்பதைவ். கூந்தலில் பூ மாலை அணிந்திருப்பதைக் காணலாம். மேலும் காதணி.. மற்றும் அந்தப் பெண்கள் அணிந்திருக்கும்.. அணி கலன்கள் தமிழர் நாகரிகத்துக்குரியவை.

Image result for சிகிரியா ஓவியம்

Image result for சிகிரியா ஓவியம்

மிஸ்டர்.. கோத்தாவும்.. அவரது கும்பலும்.. இந்த ஓவியங்களையும் மாற்றி வரையலாம். அதற்காக வரலாற்றை இப்படியே தமக்கேற்ற வாறு தொடர்ந்து புனைய முடியாது. 

இலங்கைத் தீவுக்குள் உள்ள மாதன முத்தாக்களை இனவாதத்தின் பெயரால்.. மயக்கி வைக்கலாம்.. ஆனால்.. நவீன உலகோடு தொடர்புடைய இளைய சமுதாயத்தை அதிக காலம் எனி ஏமாற்ற முடியாது. 

திரும்பவும் எங்கள் முதுகை நாங்களே தட்டி,  தட்டி  சொறிந்து,  சொறிந்து  இன்பம் காண்போம். ( இதைத்தானே காலம் காலமாக செய்துவருகிறோம் )

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

கோத்தா கோட்டையையும் விட்டிட்டு.. 1992 இல் பயந்து ஓடின ஒருத்தர். அவரை வீரனாக.. துட்டகைமுனுவாக காட்ட நினைப்பதெல்லாம் வெறும் அபந்தம்.

அதன் பின் கோத்தா.. போர்க்களத்துக்கு போனதும் வெகு குறைவு. கட்டளைகளை இட்டு படுகொலைகளை ஆட்கட்டத்தலைகளை.. கப்பம் பெறுதல்களை.. காணாமல் போகடித்தல்களை செய்தது தான் அதிகம். சரத் பொன்சேகா அளவுக்கு கூட யுத்தத்தை நேரடியாக.. எதிர்கொண்டவரும் அல்ல. 

டென்சில் கொப்பேகடுவ காலத்தில் இருந்து புலிகளை எதிர்கொண்டவர்.. புலிகள் சின்னப் பொடியளாக இருக்கேக்க உந்த வீரத்தை காட்டி.. அப்பவே ஒடுக்கி இருக்கலாமே. இப்ப உங்களால் பெரிய துட்டகைமுனுவாக.. காட்டப்படும் கோத்தா.

முள்ளிவாய்க்கால்.. என்பது சிங்களத்தைப் பொறுத்த வரை.. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை தான்.

நீங்கள் முன்னர் மைத்திரியை சகலகலா வல்லவராகக் காட்டினீர்கள். எனி கோத்தா.

ஆனால் தமிழ் மக்கள்.. இவங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. 

Aillaln-610x250

அனுராதபுரம் எதிரியின் கோட்டைக்குள் புகுந்த இவர்கள் வீரர்கள்.

யாழ் கோட்டையை விட்டிட்டு ஓடின... கோத்தா.. அனுராதபுரத்தில்.. போய் பதுங்கினது.. வீரம் கிடையாது. 

நெடுக்ஸ்,

நாங்களும் முப்பது வருடம் கொடிகட்டி பரந்த ஆட்கள்தான்.  இப்போ   ???? 

கோட்டாபய இப்போது இலங்கையின் சனாதிபதி.  நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

Link to comment
Share on other sites

6 hours ago, சண்டமாருதன் said:

தமிழினத்துக்கு ஒரு தலமை என்பதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பதும் கற்பனை நிலையில் கூட தற்போது சாத்தியமற்றது.  முரண்பாடுகள் நிறைந்து சாதி மத பிரதேசவாதமாக பல்வேறு தளங்களில்  ஐக்கியமின்றி சிதைந்துபோன நிலையில் உள்ள இனம் அதே நேரம்  பேரினவாதத்திடம் இருந்து விடுபடவும் வேண்டும்.  இரண்டுக்குமான ஒரு தலைமை எப்படி சாத்தியம் என்பதே  கற்பனைக்கு எட்டாத விசயம். புலிகள் காலத்தில் தமிழினம் விடுதலை அடைந்தால் சரி இல்லையேல் தமிழர்களுக்கென்று ஒரு அரசியலே இருக்காது என்ற நிலை இருந்ததின் காரணம் இதுதான். புலிகளின் முடிவுக்குப் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தளமே  கிடையாது. இன்றைய சுமந்திரன் சம்மந்தர் விக்கி சிவாஜிலிங்கம் யாரானுலும் சரி அவர்கள் தளமற்று அந்தரத்தில் நின்று எதையே செய்கின்றார்கள் தவிர அது இனத்துக்கான அரசியல் எல்லைக்குள் வரமாட்டாது. அவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதும் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அர்த்தமற்ற ஒன்றுதான்.

ஒரு அரசியல் தலைமை வெற்றிடம் உள்ளது தான். அதுவே நமக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் தந்து நிற்கின்றது. 

மீண்டும் ஒரு தலைமை வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jeremiah 49:37-39

Judgment on Elam

34This is the word of the LORD that came to Jeremiah the prophet concerning Elam at the beginning of the reign of Zedekiah king of Judah. 35This is what the LORD of Hosts says:

“Behold, I will shatter Elam’s bow,

the mainstay of their might.

36I will bring the four winds against Elam

from the four corners of the heavens,

and I will scatter them

to all these winds.

There will not be a nation

to which Elam’s exiles will not go.

37So I will shatter Elam before their foes,

before those who seek their lives.

I will bring disaster upon them,

even My fierce anger,

declares the LORD.

I will send out the sword after them

until I finish them off.

38I will set My throne in Elam,

and destroy its king and officials,

declares the LORD.

39Yet in the last days,

I will restore Elam from captivity,i ” (means restore the fortunes of Elam)

declares the LORD.

இது எமது விடுதலையா?

The Mediterranean Peoples (Dravidians) (Extracts from The Original Indian” An Enquiry by Dr. A. Desai. How the Mediterranean people came to be called Dravidians makes interesting story.

The original Dravidians or Elamites arrived from western Asia and then gradually many of them not all mixed with the Aboriginal population there.
The higher strata amongst them were hardly mixed compared to the lower strata .
It is amazing how ignorant people are , Dravidians are a lank haired Canaanite people, they did not originate in Ethiopia ,
they are the original Mediterranean and Sumerian culture ,
the Dravidians mixed with the Semitic Akkadians and Amorites and they also mixed with Indo-Aryan types(Lydians who are the Neo-Hittites.
they are Canaanites an they are not Mongoloids or Australoid .
They were in the Mediterranean in ancient times.

The Pre-Hellenistic Lycians of Asia Minor, who where probably the Mediterranean stock called themselves Trimmili.
Another tribe of this branch in the island of Crete was known by the name Dr(a)mil or Dr(a)miz.
In ancient Sanskrit writings we find the terms Dramili and Dravidi, and then Dravida . which referred to the southern portion of India.
South India was known to the ancient Greek and Roman geographers as Damirica or Limurike.
Many of the low caste or Dalit Tamil have more of the Australoid mixture and this is seen in their features ,
however the most of the middle and upper castes have typical Mediterranean Caucasoid face structures and features and their skin colour may vary from dark to light brown .tanned.
Some have Indo Aryan mixture.

Link to comment
Share on other sites

33 minutes ago, Kadancha said:

கடைஞ்சா, 

என் மக்கள் அழுதபோது வராத மேசியா, எனது குழந்தைகள் கதறியபோது வராத ஜேசுகிறீஸ்து,  எனது சகோதரிகள் வல்லுறவு செய்யப்பட்டபோது காக்காத கிருஷ்ணன்,  எனது வயதான பெற்றோர் இயலாமையின் வெட்கத்தால் கூனிக் குறிக்கியபோது கண்ணீர் துடைக்காத சிவன் ஒருவரும் எனக்குத்தான் தேவை இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Maharajah said:

என் மக்கள் அழுதபோது வராத மேசியா, எனது குழந்தைகள் கதறியபோது வராத ஜேசுகிறீஸ்து,  எனது சகோதரிகள் வல்லுறவு செய்யப்பட்டபோது காக்காத கிருஷ்ணன்,  எனது வயதான பெற்றோர் இயலாமையின் வெட்கத்தால் கூனிக் குறிக்கியபோது கண்ணீர் துடைக்காத சிவன் ஒருவரும் எனக்குத்தான் தேவை இல்லை.  

கிருஷ்ணன், சிவன், இயேசு போன்றோர் இந்த உலகத்தில் இப்போது இல்லை.

மேற்படி நபர்கள், உலகத்தில் இருந்தாலும் வந்திருக்க மாட்டார்கள்.

அவனவன் தலைவலியை அவன்தான் குணப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

கோத்தா கோட்டையையும் விட்டிட்டு.. 1992 இல் பயந்து ஓடின ஒருத்தர். அவரை வீரனாக.. துட்டகைமுனுவாக காட்ட நினைப்பதெல்லாம் வெறும் அபந்தம்.

அதன் பின் கோத்தா.. போர்க்களத்துக்கு போனதும் வெகு குறைவு. கட்டளைகளை இட்டு படுகொலைகளை ஆட்கட்டத்தலைகளை.. கப்பம் பெறுதல்களை.. காணாமல் போகடித்தல்களை செய்தது தான் அதிகம். சரத் பொன்சேகா அளவுக்கு கூட யுத்தத்தை நேரடியாக.. எதிர்கொண்டவரும் அல்ல. 

டென்சில் கொப்பேகடுவ காலத்தில் இருந்து புலிகளை எதிர்கொண்டவர்.. புலிகள் சின்னப் பொடியளாக இருக்கேக்க உந்த வீரத்தை காட்டி.. அப்பவே ஒடுக்கி இருக்கலாமே. இப்ப உங்களால் பெரிய துட்டகைமுனுவாக.. காட்டப்படும் கோத்தா.

முள்ளிவாய்க்கால்.. என்பது சிங்களத்தைப் பொறுத்த வரை.. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை தான்.

நீங்கள் முன்னர் மைத்திரியை சகலகலா வல்லவராகக் காட்டினீர்கள். எனி கோத்தா.

ஆனால் தமிழ் மக்கள்.. இவங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. 

Aillaln-610x250

அனுராதபுரம் எதிரியின் கோட்டைக்குள் புகுந்த இவர்கள் வீரர்கள்.

யாழ் கோட்டையை விட்டிட்டு ஓடின... கோத்தா.. அனுராதபுரத்தில்.. போய் பதுங்கினது.. வீரம் கிடையாது. 

நித‌ர்ச‌ன‌ உண்மை ச‌கோத‌ரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maharajah said:

திரும்பவும் எங்கள் முதுகை நாங்களே தட்டி,  தட்டி  சொறிந்து,  சொறிந்து  இன்பம் காண்போம். ( இதைத்தானே காலம் காலமாக செய்துவருகிறோம் )

நீங்களும்தான் ஓவரு காலையும் மலம் கழிக்கிறீர்கள் 
உங்கள் மலமும்தான் நாறுகிறது...

ஆகவே அதுதான் உண்மை என்று மீதமுள்ள நாள்பூராக அதை பற்றி பேசி 
எதை காண போகிறீர்கள்? 

ஈழத்தமிழருடைய விடுதலை போராட்டம் என்பது உலகிலேயே 
மகத்தானது பூகோள ரீதியாக தீவக அமைந்து கடலால் சூழ்ந்தததால் 
எந்த ஒரு ஆதரவும் இன்றி சொந்த வைராக்கியத்தில் மட்டுமே 
அத்திவாரம் ஏற்றி கட்டபட்ட ஒரே ஒரு விடுதலை போராடடம் என்பதால் மட்டுமே 
பலரது கண்ணை அது உறுத்திக்கொண்டு இருந்தது. 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன.   அடுத்த 10 வருடங்களுக்கு ராஜபக்ஸக்கள் தான் ஆளப்போறார்கள்.  தமிழ் மக்களின் நிலை இன்னும் மாறவில்லை.  தொடர்ந்தும் தற் பெருமை பேசிக்கொண்டு இருக்கப்போகின்றோமா அல்லது  சனத்துக்கு ஏதாவது செய்யப்போகின்றோமா ????? இதே போக்கில் போனால் 20 வருடங்கள் கழித்து மக்களின் நிலை என்ன  ??? 

("""""நீங்களும்தான் ஓவரு காலையும் மலம் கழிக்கிறீர்கள் 
உங்கள் மலமும்தான் நாறுகிறது...""""

நீங்கள் இன்னும் கொஞ்சம் நாகரீகமான வார்த்தை பிரயோகத்தை பாவித்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maharajah said:

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன.   அடுத்த 10 வருடங்களுக்கு ராஜபக்ஸக்கள் தான் ஆளப்போறார்கள்.  தமிழ் மக்களின் நிலை இன்னும் மாறவில்லை.  தொடர்ந்தும் தற் பெருமை பேசிக்கொண்டு இருக்கப்போகின்றோமா அல்லது  சனத்துக்கு ஏதாவது செய்யப்போகின்றோமா ????? இதே போக்கில் போனால் 20 வருடங்கள் கழித்து மக்களின் நிலை என்ன  ??? 

("""""நீங்களும்தான் ஓவரு காலையும் மலம் கழிக்கிறீர்கள் 
உங்கள் மலமும்தான் நாறுகிறது...""""

நீங்கள் இன்னும் கொஞ்சம் நாகரீகமான வார்த்தை பிரயோகத்தை பாவித்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் )

தற்பெருமைதான் மனிதனை வாழ வைக்கிறது 
"உன்னால் முடியும்" என்ற நம்பிக்கைதான் ஒருவனை உருவாக்குகிறது 
ஈழ விடுதலை போராட்டம் ஓங்கி இருந்த காலத்தில் கூட 
நாம் பண்டாரவன்னியன்  சோழ மன்னர்கள் பெருமை பேசிக்கொண்டுதான் இருந்தோம் 
அதுதான் எமக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது.
அவர்களால் முடியும்போது ஏன் எம்மால் முடியாது என்ற கேள்வியை எமது 
அடிமை புத்தியில் உருவாக்கியது. 

பல சூழ்ச்சிகளுக்கும் துரோகங்களுக்கும் பல தமிழ் மன்னர்கள் 
தர்மத்தை நம்பி பலியானர்கள் என்பதால்.....
சிங்களவனின் ஆதிக்க வெறியை மெருகூட்டி வளர்ப்பதில் என்ன காண போகிறீர்கள்? 

"திரும்பவும் எங்கள் முதுகை நாங்களே தட்டி,  தட்டி  சொறிந்து,  சொறிந்து  இன்பம் காண்போம். ( இதைத்தானே காலம் காலமாக செய்துவருகிறோம் )"

தமிழ் மன்னர்கள் பற்றி எழுதும்போது நீங்கள் இன்னும் கொஞ்சம் நாகரிகமாக எழுதி  இருக்கலாம் 
என்றுதான் எனக்கும் தோன்றியது ( அது முதுகு சொறிதல் இல்லை எமது மூதையாரின் கல்லில் வரைந்த வரலாறு)   அதனால்தான் உங்களை கழிப்பறை வரை கூட்டி சென்றேன். 
 
Link to comment
Share on other sites

3 minutes ago, Maruthankerny said:

மருதர், 

நான் ஏதாவது ஒரு திரியில்தானும் எமது வரலாறு தொடர்பில் இழிவாக பதிவிட்டதை காட்ட முடியுமா? 

தற்பெருமை பேசி ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட,  நடைமுறை சார்ந்து சிந்தித்து செயல்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். 

(மன்னிக்கவும்,  கழிவகற்றல் தொடர்பில் வாதிட்டு என் தரத்தை குறைத்துக்கொள்ள நான் தயார் இல்லை. )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.