Jump to content

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது


Recommended Posts

கல்லால் அடிப்பது இருக்க இந்த மாதிரி நாய்களுக்கு வக்காலத்து வாங்கும் காவல்துறை..அரசியல் பிரமுகர்களை..அவர்களுக்கு ஜெயிலில் 4ட சுகவாழ்வை ஏற்படுத்தி தரும் ஜெயிலரகள் யாவரையும் உதைக்கவேண்டும்.

பயமில்லா கயமைத்தனத்திற்கு ..லஞ்சம்..தன்னொழுக்கமின்மை.. எல்லாம் காரணம்..

யார் யாரைத் திருத்துறது..

நாங்க தெளிவாக இருப்போம்

Link to comment
Share on other sites

haiyo........... நான் அவன் இல்லப்பா.... :P :huh::rolleyes:

நீங்க சொன்னாலும் நாம நம்பமாட்டோம்

:P :huh:

Link to comment
Share on other sites

ஏமாந்து போகின்றவர்கள் தான் உண்மையில் குற்றவாளிகள். ஒருவரைப்பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளமால் எப்படி கட்டிக்கொள்வது?!.

அப்ப ஏமாற்றுபவர் நல்லவரா? :huh: அவரைப் பற்றி கதைக்காமல் ஏமாற்றப்பட்ட பெண்ணை குற்றவாளி எண்டு சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியல. :huh:

ஏமாற்றுகின்றவர் ஒவ்வொரு ஊரிலும் போய் ,ஒவ்வொரு பெண்ணிடம் பொய் சொல்லி காதலிச்சு கல்யாணம் செய்வார் அவர் குற்றவாளி இல்லயா?. அவர் நல்லவரா நடிச்சது சரியா? காதலிச்ச பெண் காதலன் சொன்னதத நம்பினது பிழையா ? இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது எண்டு எப்படி தெரியும் அந்த பெண்ணுக்கு ? அவர் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வேசம் போட்டால் எப்படி அந்த பெண் கண்டுபிடிபது ?அந்த பெண் அறியாமல் செய்த தவறே இது. B)

சரி நன்றி வணக்கம். :P

Link to comment
Share on other sites

ஏங்க ஒரு நாள் கட்டற சேலையை மணிணக்கணக்கா பார்த்தெடுக்கிற பொண்ணுங்க..

காலமெல்லாம் கூடி வாழப்போற கணவனை ஊருக்குள்ள வந்ததும் விசாரிக்காம கொள்ளாம..

வேர் விழுது அறியாம கட்டிப்பீங்களே..

நல்ல பொண்ணா இருக்கீங்களே நீங்க எந்த ஊரு மாம் :huh:

Link to comment
Share on other sites

இந்த இந்தியச் செய்திகள் யாழுக்கு தேவைதானா?

தினமும் வினோதமான செய்திகள் விழுந்தடிச்சு ஒட்டப்படுகின்றன...

தமிழக வாசகர்களைப் போல் எங்களையும் முட்டாள்கள் ஆக்க முயற்சிகள் நடக்கின்றதா?

இதை வாசிப்பதில் உங்களுக்கு அப்படியென்ன இன்பம் இருக்கின்றது?

வேண்டுமானால் இதை நகைச்சுவைப் பகுதியில் ஒட்டி இருக்கலாம்...

நமது பெண்கள், ஆண்கம் இருபகுதியனருமே மிகவும் அலேர்ட் ஆனவர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி அவர்கள் ஏனைய பகுதிகளில் கருத்தெழுதுவதை பார்க்க சந்தோசமாக இருக்கின்றது.உங்கள் கருத்துக்களை எல்லாப்பகுதியிலும் எழுதுங்கள் அப்போதுதான் ஒருசில அநாவசிய,அரட்டை கருத்துக்கள் மழுங்கடிக்கப்படும்.உங்களைப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவனப் போல ஆக்களுக்கு விவேக் மைனருக்குச் செய்த வேலை செய்யவேணும்.

Link to comment
Share on other sites

ம்ம் இது ஒரு செய்தி.

ஆண் ஏமாற்றி இருக்கார். பெண் ஏமாறி இருக்கார்.

புது செய்தி இல்லையே. வழமை போல நடந்திருக்கு.

தெரிந்து இந்த செய்தியின் படி பிழை செய்தவர் ஆணே!

அறியாமல் விழுந்தவர் பெண்!

இங்க எல்லாரும் யோசிச்சு தான் செய்றாங்க..இருந்தும் எல்லாம் நம்ம ஆசைப்படியோ..இல்லை

நம்ம நல்லதுக்கோ நடப்பதில்லையே.

ஆனாலும் யாழில் இப்படியான செய்திகளை வாசிச்சுட்டு ஆண் பெண் என்று சண்டை வருவது

வழமையாகவே போயிற்று. ஒரு ஆணுக்காக...ஒட்டு மொத்த ஆண்களையும் குறை சொன்னால்

ஓடி வந்து பதில் எழுதும் உறவுகள், ஏன்..வேறு இடங்களில் சில பெண்களுக்காக

ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்லும் இடத்தில் கருத்துக்கள் வைக்கவில்லை??

ஆண் பெண் என்பதை விட்டு....இதில் எங்கு பிழை என்பதை பார்ப்பதே நல்லதென்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

ஐயோ கோச்சுக்காதீங்க

இதில் ஆண் பெண் வாதமில்லை

ஏமாளி..ஏமாற்றுபவன்..பற்றியே பேசுகிறோம்..

எவ்வளவு காலமா அவன் ஏமாற்றறான்.. இவன் ஏமாற்றுறான்னு சொல்லுறோம்..

ஏன் இலகுவா ஏமாறுறம் என்ன யோசிக்கிறீங்களா...

இப்ப பெண்ணோட சமத்துவம் பேசினா..

வரிஞ்சு கட்டிட்டு வாற பெண்களே..

மணமகனை தேரிந்தெடுக்கும் உரிமைக்காக ஏன் போடுறதில்லை..

ஏன்..கண்டதும் காதல்..கொண்டது கோலம்னு ஏமாறுறீங்க

அந்த ஆண் குற்றவாளி ஆனால்..

அப்பாவியாய்..இருப்பதும்

ஏமாளியாய் இருப்பதனையும் தவிர்த்து பெண் திருமண விடயத்தில் உஸாராக இருக்கவேண்டுமென்பது..

வாதமில்லை..அறிவுரை..

தாய் தந்தை அறிவுரை கேட்டகாமல் வாழ்க்கையைத் தொலைக்கும் பெண்.. தந்தையர் தாய் பேராசைக்காக

வாழ்க்கையை இழக்கும் பெண் ..எமாறக்கூடாது..அவள் வாழ்க்கை அவள் கையில்

போராடக்கூடாதா..

அசாத்திய விடயங்கள் தவிர எங்கள் வாழ்க்கை எங்கள் கையில்தான்..

Link to comment
Share on other sites

ஆனாலும் யாழில் இப்படியான செய்திகளை வாசிச்சுட்டு ஆண் பெண் என்று சண்டை வருவது

வழமையாகவே போயிற்று. ஒரு ஆணுக்காக...ஒட்டு மொத்த ஆண்களையும் குறை சொன்னால்

ஓடி வந்து பதில் எழுதும் உறவுகள், ஏன்..வேறு இடங்களில் சில பெண்களுக்காக

ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்லும் இடத்தில் கருத்துக்கள் வைக்கவில்லை??

ஆண் பெண் என்பதை விட்டு....இதில் எங்கு பிழை என்பதை பார்ப்பதே நல்லதென்று நினைக்கிறன்.

எங்கை மொத்த பெண்களை என தம்பிமார் குறை கூறி இருக்கிறார்கள்

அப்போ சில பெண்கள் என்ற பேய்களை பற்றி தானே சொல்லி இருக்கிறார்கள்

அப்படி மொத்த பெண்களை பற்றி யாரவது சொல்லி இருந்தால் அவர்களை தட்டி கேக்கும் முதல் ஆண் சிங்கம் நானாக தான் இருபேன் ( அப்படா ஒருமாதிரி நானே என்னை சிங்கM என்று சொல்லிவிட்டேன்)

அதுவும் ஜமுனா வை யாரும் ஏதும் சொல்லி இருந்தால் அவர் தலை என கையில் எடுத்து இருப்பேன் :P

Link to comment
Share on other sites

இதில் ஆண் பெண் வாதமில்லை

ஏமாளி..ஏமாற்றுபவன்..பற்றியே பேசுகிறோம்..

எவ்வளவு காலமா அவள் ஏமாற்றறாள்.. இவள் ஏமாற்றுறான்னு சொல்லுறோம்..

ஏன் இலகுவா ஏமாறுறம் என்ன யோசிக்கிறீங்களா?

இப்ப ஆண்களுடன் சமத்துவம் பேசினா..

வரிஞ்சு கட்டிட்டு வாற ஆண்களே..

மணமகளை தேரிந்தெடுக்கும் உரிமைக்காக ஏன் போரிடுறதில்லை?

ஏன்..கண்டதும் காதல்..கொண்டது கோலம்னு ஏமாறுறீங்க

அந்த பெண் குற்றவாளி ஆனால்..

அப்பாவியாய்..இருப்பதும்

ஏமாளியாய் இருப்பதனையும் தவிர்த்து ஆண் திருமண விடயத்தில் உஸாராக இருக்கவேண்டுமென்பது..

வாதமில்லை..அறிவுரை..

தாய் தந்தை அறிவுரை கேட்டகாமல் வாழ்க்கையைத் தொலைக்கும் ஆண்.. தந்தையர் தாய் பேராசைக்காக

வாழ்க்கையை இழக்கும் ஆண் ..எமாறக்கூடாது..அவன் வாழ்க்கை அவன் கையில்

போராடக்கூடாதா?

அசாத்திய விடயங்கள் தவிர எங்கள் வாழ்க்கை எங்கள் கையில்தான்..

அதாவது இந்த அறிவுரை ஆண்களுக்கும் பொருந்தும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் முறையில் ஒரு சிறப்பு இருந்தது. ஒரு பெண்ணுக்கு, அல்லது ஆணுக்கு வருகின்ற துணையைப் பற்றி ஊரில் விசாரித்து, அவரின் செயற்பாடுகள் பற்றி அறிந்த பின்னரே திருமணம் செய்து வைப்பார்கள். இதனால் ஏமாற்றங்கள் மிகமிகக் குறைக்கப்பட்டிருந்தன.

ஆனால் சில பெற்றோர்கள் எப்படியாவது ஒருத்தருக்கு பிள்ளையைக் கட்டி வைத்தால் போதும் என்று சிந்தித்துக் கட்டி வைத்தால், சில ஏமாற்றங்கள் நடந்தன என்பதை மறுக்க முடியாது. ஆனால் காதல் ஒரு புனிதம் என்று பள்ளி மாணவிகளையும், சிறுமிகளையும் காதலித்து ஏமாற்றுகின்ற செயல்கள் இப்போது அதிகமாகி விட்டது உண்மை தான்.

பெற்றோர்கள் எம் நன்மைக்காக துணை ஒன்றைத் தேடித்தருவார்கள். அவர்களுக்கு வாழ்க்கை பற்றி அனுபவம் உள்ளது என்று ஒவ்வொருவரும் நம்பினால் காதல், கத்தரிக்காய் என்று விழுந்து ஏமாற்றப்படுவதைத் தடுக்கலாம்.

பெண்கள் ஏமாளிகளாக இல்லாமலும், ஏமாற்றுகின்ற ஆண்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தாலும் இப்படியான செயலைத் தடுக்கலாம்.

( என்ன உளறுகின்றேனா? என்னவோ தெரியவில்லை. இண்டைக்குத் தானாகவே இப்படி எல்லாம் ஊற்றெடுக்குது :D B) )

Link to comment
Share on other sites

பெண்களே ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.

பெண்கள் ஆண்களை ஏமாற்றுவது குறைவு (?)

காரணம் பெண்ணைக் கொடுக்கும்போது கூடவே பொன்னையும் கொடுப்பதுதான்.

Link to comment
Share on other sites

நான் அவனில்லை, அந்த படத்தை நேற்றுத்தான் பார்த்தேன், ஹா ஹா இந்த உலகம் எப்படியப்ப இப்படிப்பட்ட அறிவாளிகள் எல்லாம் தாங்குது என்று தெரியவில்லை, ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிட்டே இருப்பார்கள், அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி

Link to comment
Share on other sites

ஏமாந்து போகின்றவர்கள் தான் உண்மையில் குற்றவாளிகள். ஒருவரைப்பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளமால் எப்படி கட்டிக்கொள்வது?!.

எல்லாம் ஹோர்மோன் செய்யிற வேலைதானே! :P

காதலிக்கும்போது,

"கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா..ஆஆ.." :lol:

கல்யாணத்தில,

"கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா!" :D

அப்பால,

"என் புருஷன்தான்.. எனக்கு மட்டும்தான்.. சொந்தம்தான் என்று நான் நினைச்சேனே!" :wacko:

Link to comment
Share on other sites

ம்ம் இது ஒரு செய்தி.

ஆண் ஏமாற்றி இருக்கார். பெண் ஏமாறி இருக்கார்.

புது செய்தி இல்லையே. வழமை போல நடந்திருக்கு.

தெரிந்து இந்த செய்தியின் படி பிழை செய்தவர் ஆணே!

அறியாமல் விழுந்தவர் பெண்!

இங்க எல்லாரும் யோசிச்சு தான் செய்றாங்க..இருந்தும் எல்லாம் நம்ம ஆசைப்படியோ..இல்லை

நம்ம நல்லதுக்கோ நடப்பதில்லையே.

ஆனாலும் யாழில் இப்படியான செய்திகளை வாசிச்சுட்டு ஆண் பெண் என்று சண்டை வருவது

வழமையாகவே போயிற்று. ஒரு ஆணுக்காக...ஒட்டு மொத்த ஆண்களையும் குறை சொன்னால்

ஓடி வந்து பதில் எழுதும் உறவுகள், ஏன்..வேறு இடங்களில் சில பெண்களுக்காக

ஒட்டு மொத்த பெண்களையும் குறை சொல்லும் இடத்தில் கருத்துக்கள் வைக்கவில்லை??

ஆண் பெண் என்பதை விட்டு....இதில் எங்கு பிழை என்பதை பார்ப்பதே நல்லதென்று நினைக்கிறன்.

நான் இங்கு ஆண் பெண் என பார்க்கவில்லை.ஆணுக்காக வக்காளத்தும் வாங்கவில்லை என்பதை தெளிவாக்கி கொள்ள விரும்புகின்றேன்.ஒட்டு மொத்த ஆண்களையும் ஏமாற்றுவர்களாக கள உறவு ஒருவரின் கருத்து எனக்கு பட்டது அதற்காகவே நான் எனது கருத்தில் எல்லா ஆன்களையும் குற்ரம் சாட்ட வேண்டாம் என கூறியிருந்தேன் ஆனால் அதனை தவறாக எடுத்து ஆண் பெண் சண்டைகளை களத்தில் இழுக்க வேண்டாமே

அந்த செய்தியில் எனக்கு உடன் பாடு இல்லை ஏன் எனின் அந்த பெண் அந்த குற்றத்துக்கு உடந்தை என நான் சொல்கின்றேன் அதனை யராவது மறுக்கின்றீர்களா.ஊடகமும் அரச இயந்திரமும் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருகின்றது.பெண் ஒருவர் அழுது கொண்டு போய் வழக்கு பதிந்தால் அந்த ஆணை சந்தேக நபராக பார்க்காமல் குற்றவாளியாகவே நடத்துகின்றனர்..இத்தகைய ஒரு செயற்பாடு தமிழீழ காவல்துறையிலும் நடைபெற்றது தவறான ஒரு பெண்ணின் பொய் வாக்குமூலத்தின் மூலம் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது ஒரு வருடம் கழித்து இதே பெண் இதே போல வழ்க்கினை பதிவு செய்யும் போது இவரின் குட்டு புலப்பட்டு அவரை தமிழீழத்தை விட்டு வெளியேறச்செய்த சம்பவம் யாழில் நடந்தது முன்னைய மரணதண்டனை அழிக்கப்பட்ட நபரின் குடும்பத்தாருக்கு தேசியத்தலைவர் தன் கைபட கடிதம் எழுதி இருந்தார்.அதன் பின்னர் தமிழீழ நீதித்துறை எந்த விதமான இப்படிபட்ட தவறுகளை செய்யவில்லை.

ஆனால் இந்தியவை எடுத்து கொண்டால் கண்டபடி ஈப்ரீஸிங் கேச் போடலாம் உள்ளே தள்ளி பழி தீர்கலாம்.ஆனால் நான் அந்த போதகரின் செயலுக்கு நியாயம் கற்பிக்கவரவில்லை அவர் செய்தது முற்றிலும் பிழை அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை ஆனால் எமாற்ற பட்டதாக கூறும் அந்த பெண் ஏமாறியதாக கூறுவதை நான் ஏற்கமாட்டேன் ஒரு கார் வாங்குவதானால் கூட அதன் எஞ்சின் எப்படி அதன் சேர்விஸ் ஹிஸ்ரி எப்படி உரிமையாளர்கள் எத்தினை பேர் மைலேர்ஜ் எவ்வளவு என எல்லாம் விசாரித்துதான் வாங்குகிறோம் ஆனால் இந்த பெண் என்னத்தை விசாரித்து தன் கணவனை தெரிவு செய்தார் ? அல்லது அந்த போதகருக்கு 3 மனைவி இருந்ததும் தெரிந்திருக்கலாம்[இது வழக்கு தாக்கலே இன்னும் விசாரணை முடியவில்லை] அப்படி அவர் பனத்துக்காகவும் செல்வாக்குகாவும் கலியானம் செய்திருக்கலாம் இதனை மறுகின்றீர்களா?

ஆண் பெண் சண்டையையும் வைத்து நான் கரூத்து எழுதவரவில்லை.பெண்களுக்கு எதிரான சில விடயங்களில் நான் கருத்துக்களை கூறி இருந்தேன்.மற்றய சில பிரச்சினைகளின் நான் தலையிட விரும்பவில்லை அது என் தனிப்பட்ட விருப்பம் ஏன் எழுதவில்லை என கேட்க யாருக்கும் உரிமை இல்லை.அது என் கருத்து சுதந்திரம் என்னை எப்படிப்பட்டவன் என நினைத்தாலும் பறுவாயில்லை இதுவே என் நிலைப்பாடு.அன்று எமக்காக எழுதவில்லை இன்ரு இப்படி எழுதீட்டான் என போர்கொடி துக்கி எழுதுவது உங்கள் சின்னபிள்ளைத்தனத்தையே காட்டுகின்ரது

Link to comment
Share on other sites

நானும் இங்கு ஆண் பெண் என்று வாதிடவில்லை.

மொத்தத்தில் யாருமே வாதிடவில்லை.

இந்த தலைப்பில் பிழை ஆணில்! அதை சொன்னேன்.

இதுவே பெண் பிழை விட்ட இடத்திலும் என் கருத்துக்கள் சொல்லி இருக்கேன்.

இதில என்னவென்றால்..சிலர் பெண்கள் சரியில்லை என்று யாழில் சொல்கிறார்கள்.

சரி அப்பிடியானவர்களும் இருக்கிறார்கள். இல்லை என்றவில்லை.

அப்பிடியானவர்களிடம் ஏமாறும் ஆண்களுக்கும் உங்கள் இந்த

கவனமாக இருக்க வேண்டும்..

கார் வாங்கும் போது பார்த்தது போல பார்க்க வேண்டும்...

சாரி வாங்குவது போல பார்க்க வேண்டும்...

என்ற கருத்துக்கள் பொருந்தும் இல்லையா??

இதை இங்கே வந்து சொல்லி இருக்கும் உங்கள் கருத்துக்கள், அறிவுரைகள் ஏன் அங்கே காணவில்லை.

இதே அறிவுரையை அங்கும் சொல்லி இருக்கலாமே??

இது உங்கள் கருத்து சுதந்திரத்தில் நான் தலை இடுவதென்று இல்லை.(அப்படி எண்ணுவது பிழை!)

மாறாக..

உங்கள் கருத்தை பற்றிய எனது கேள்வி..

நீங்கள் பொதுவாக கதைக்கின்றவர்கள் என்றால்...

இந்த அறிவுரை அங்கும் பொருந்தும். அங்கும் சொல்லி இருக்கலாம்!

இதை தான் கேட்டேன். இது சிறு பிள்ளை தனம் என்றால்..சந்தோஷம். நான் கடைசி பிள்ளை தான் வீட்டில். :unsure:

சரி சரி..

சிலவேளை நீங்கள் அந்த தலைப்பை / தலைப்புக்களை பார்க்காமல் விட்டிருக்கலாம் இல்லையா :unsure:

Link to comment
Share on other sites

ஒரு கார் வாங்குவதானால் கூட அதன் எஞ்சின் எப்படி அதன் சேர்விஸ் ஹிஸ்ரி எப்படி உரிமையாளர்கள் எத்தினை பேர் மைலேர்ஜ் எவ்வளவு என எல்லாம் விசாரித்துதான் வாங்குகிறோம் ஆனால் இந்த பெண் என்னத்தை விசாரித்து தன் கணவனை தெரிவு செய்தார் ? அல்லது அந்த போதகருக்கு 3 மனைவி இருந்ததும் தெரிந்திருக்கலாம்[இது வழக்கு தாக்கலே இன்னும் விசாரணை முடியவில்லை] அப்படி அவர் பனத்துக்காகவும் செல்வாக்குகாவும் கலியானம் செய்திருக்கலாம் இதனை மறுகின்றீர்களா?

ஜெய்மார்ட்ன் லூதர் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு நான் அடிக்கடி ஜெபம் செய்ய செல்வேன். அப்போது எனக்கும், ஜெய்மார்ட்டின் லூதருக்கும் பழக்கம் ஏற்பட்டது.இது நாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய் மார்ட்டின் லூதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் மேரி, பரிமளம், சலோமியா ஆகிய 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவர்கள் மூவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.

மேல் உள்ள செய்தியை வாசியுங்கோ ஈழவன். :unsure:

திருமணத்திற்கு பின் தான் அந்த பெண்ணிற்கு இவரைப் பற்றி தெரியவந்திருக்கு,இந்தப் பெண்ணை காதலித்த காதலன் நல்லவராக நடித்து கல்யாணம் கட்டி ஏமாற்றிவிட்டார்.

விகடகவி, இந்த தலைப்பில் என்ன நடக்குது எண்டு விளங்கிதான் கருத்து எழுதுறீங்களோ ? இங்கு இந்த ஏமாற்றப்பட்ட பெண்ணைப் பற்றி கதை நடக்குது. நீங்கள் பெண்புத்தி பின்புத்தி ஆண் புத்தி கல்புத்தி எண்டு ஏதோ எல்லாம் எழுதுறீங்க அதுதான் கேட்டன் :lol::unsure: :P

Link to comment
Share on other sites

அட அவன் கட்டி ஜெயிலுக்கும் போயிட்டான் இவையின்ட பிரச்சினை இன்னும் முடியல்ல

Link to comment
Share on other sites

+அனி எல்லாம் விளங்கித்தான் எழுதினேன்..

ஏமாத்தினவன் குற்றவாளி என்பதனையும் அவன் கடுமையாக தண்டிக்கபடவேண்டியவன் என்பதனையும்

முதலே நான் எழுதியிருக்கிறேன்..

நான் எழுதியது

ஏமாறுபவர்கள்பெண்கள் ஆயினும் சரி ஆண்களாயினும் சரி பொறுப்பாளிகள் அவர்கள்தான்..

இது கலிகாலம்..

பித்தலாட்டம்..ஏமாற்றுக்காரர் நிறைந்த பூமி

எங்களை முதலில் நாங்கள் காப்பாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

முன்பின் தெரியாதவனை மணம் முடிக்க விளைவது சரியென நீங்கள் சொன்னால் அது சரியா..

மற்றும் பிரியசகி சொன்னதுக்கு மட்டும்தான் பெண்புத்தி பின்புத்தி யென நகைச்சுவைக்காக மெய் சொன்னேன்

இல்லை

பொய் சொன்னேன்..

கோபப்படாமல் முழுவதையம் படியுங்கோ.. அனி

Link to comment
Share on other sites

யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே யாரும் யாருக்கும் வக்காளத்து வாங்கி கதைக்க வேண்டாம் ஆண் பெண் என்பது இங்கு முக்கியம் இல்லை ஆனால் குற்றம் செய்தவர் தன்னை திருத்திக்கொண்டால் நல்லது அல்லது அவருக்கு தண்டனை தான் வழி!

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.