• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

சிங்கள அரசாங்கம் மாறவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்

Recommended Posts

சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் 

DSC_1238_3.JPG

என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

ஜனநாயக ரீதியிலே புதிய ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாமும் ஜனநாயக முறையிலேயே சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான தீர்வுக்காக தெருவில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறோம்.

இன்றையதினம் நாம் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சிவில் உடையில் வருகைதந்த இருவர் தம்மை பொலிசார் என அறிமுகப்படுத்தியதுடன் எமது போராட்டம் தொடர்பாகவும் விசாரித்திருந்தனர். 

குறித்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த போகின்றீர்களா அல்லது முடிப்பீர்களா என எம்மிடம் கேட்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் ஆதரவினை வழங்கிய நிலையில் அவர் எமக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்கவில்லை. தற்போது வந்திருக்கும் ஜனாதிபதியும் எமது பிரச்சனை தொடர்பாக என்ன சொல்ல போகின்றார் என எமக்கு தெரியவில்லை. எமக்கு யார், எப்போது தீர்வினை வழங்குகிறார்களோ அந்த நேரமே குறித்த போராட்டத்தை நிறுத்துவோம். என அவர்களிடம் கூறியிருந்தோம். என்று தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/69368

Share this post


Link to post
Share on other sites

முகங்கள் மட்டும் மாறும்

 

Edited by Kavi arunasalam

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Jude said:

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து தீர்வு கிடைத்ததா?

சிவாஜிக்கு வாக்குப்போட்டு தமக்கான தீர்வு விடயத்தில்.. கோத்தா.. சஜித் இருவருமே ஒருவர் தான் என்பதை அப்பவே இனங்காட்டி விட்டார்கள் சாதாரண தமிழ் மக்கள்.

ஆனால்.. தமிழ் அரசியல்வாதிகள்.. சேர் பொன் இராமநாதன் காலத்தில் இருந்து குடுகுடுப்பை சம்பந்தன் வரை.. சிங்களவனுக்கு வாக்குப் போட்டு ஏமாந்தது தான் மிச்சம். இந்த மக்கள் அந்த ஏமாளிகளை விட உசார்.

இவர்கள் சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு போராடவில்லை என்று நீங்கள் ஆதங்கப்படலாம்.. அவர்கள் நீதிகேட்பது சர்வதேசத்திடம். அமெரிக்கா உட்பட.. இணைத்தலைமை நாடுகள் என்று போருக்கு முண்டு கொடுத்து இந்த மக்களை அவலத்துக்குள் தள்ளிய அந்த நாடுகளுக்கு இவர்களின் அவலத்தை தீர்த்து வைக்கும் கடப்பாடு.. உண்டு. அதனை அவர்கள் புறக்கணித்து.. ஒதுங்கி நிற்க முடியாது. 

Share this post


Link to post
Share on other sites
58 minutes ago, nedukkalapoovan said:

.. அவர்கள் நீதிகேட்பது சர்வதேசத்திடம். அமெரிக்கா உட்பட.. இணைத்தலைமை நாடுகள் என்று போருக்கு முண்டு கொடுத்து இந்த மக்களை அவலத்துக்குள் தள்ளிய அந்த நாடுகளுக்கு இவர்களின் அவலத்தை தீர்த்து வைக்கும் கடப்பாடு.. உண்டு. அதனை அவர்கள் புறக்கணித்து.. ஒதுங்கி நிற்க முடியாது. 

 

  1. அவலத்துக்குள் தள்ளிய நாடுகளுள் இந்தியா, சீனா, சிறி லங்கா அடங்கவில்லையா?
  2. அவலத்துக்குள் தள்ளியவர்களுக்கு, அவலத்தை தீர்த்து வைக்கும் கடப்பாடு.. உண்டு என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள், அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லையே?
  3. அவர்கள் ஒதுங்கி நிற்க முடியாது என்றும் நீங்கள் தான் சொல்கிறீர்கள், அவர்கள் ஒதுங்கித்தான் நிற்கிறார்கள், என்ன செய்ய முடியும் உங்களால்?

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, Jude said:

 

  1. அவலத்துக்குள் தள்ளிய நாடுகளுள் இந்தியா, சீனா, சிறி லங்கா அடங்கவில்லையா?
  2. அவலத்துக்குள் தள்ளியவர்களுக்கு, அவலத்தை தீர்த்து வைக்கும் கடப்பாடு.. உண்டு என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள், அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லையே?
  3. அவர்கள் ஒதுங்கி நிற்க முடியாது என்றும் நீங்கள் தான் சொல்கிறீர்கள், அவர்கள் ஒதுங்கித்தான் நிற்கிறார்கள், என்ன செய்ய முடியும் உங்களால்?

கொலை செய்தவனில்.. கொஞ்சமாவது.. ஈரமுள்ளவனிடம் தான்.. நீ செய்தது தப்புப்பா.. பரிகாரம் தேடன்னு கேட்க முடியும். அதுவும் வெளிப்படையாக மனித உரிமை காப்புக்கு என்று கோப்புகள் இயற்றி வைத்து செயற்படும் நாடுகளிடம் தான் நீதி கேட்க முடியும். அந்த வகையில்.. இணைத்தலைமை நாடுகளிடம் அந்தக் கோரிக்கியை முன் வைப்பது.. ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன் வைப்பது மிக அவசியம்.  இவர் எல்லாம்... ஏதோ ஒரு வகையில்.. இந்த மக்களின் அவலத்துக்கு காரணம்.

அவலத்துக்குள் தள்ளியவன்.. எப்பவுமே தன்னை அவலத்துக்குள் தள்ளியவன் என்று காட்டிப் பரிகாரம் செய்யமாட்டான். நாம் தான்.. அதனைச் சுட்டிக்காட்டி.. நீதி கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

உங்களால் முடியாததை அந்த மக்கள் 1000 நாட்களாக தமக்குத் தெரிந்த முறையில் போராடி.. ஐநா வரை கவனத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்களின் விடாமுயற்சியும்.. அவர்கள் பக்கம் நிற்கும் நீதியும் அவர்களின் குரல் ஒருநாள் சபை ஏற்றும் என்பதை என்னால் உணர முடிகிறது.

நிச்சயம்.. எந்தச் சிங்களவனும் இதனை உணர முடியாது. அவங்களுக்கு வாக்குப் போட்டு ஏமாறாமல் இருந்தது.. இந்த மக்களின் புத்திசாலித்தனம். அதுதான் அவர்கள் உங்களில் இருந்து வேறுபட்டு நின்று நீடித்துப் போராடுகிறார்கள்.. நீதிக்காக. இந்த உலகில் குற்றத்தை குறுகிய காலத்தில் செய்யலாம்... ஆனால்.. நீதியை நிலைநாட்ட நீண்ட காலம் தேவை. தவறாக ஒழுங்கமைக்கப்பட்ட பக்கச்சார்பான..  உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்.. அதற்குள் இருந்து தான்.. குறைந்த பட்ச நீதியையாவது நிலைநாட்ட வேண்டி இருக்கிறது. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

சொறீலங்காவை பணிய வைக்க உள்ள ஒரே மார்க்கம்.. அதன் பொருளாதாரத்தில் கை வைப்பது தான். 

சொறீலங்காவின் பொருளாதாரம் வீழ்கின்ற போது.. சிங்களம் கஞ்சிக்கு அலையும் போது.. சிங்கள பெளத்த இனவெறி தாண்டவம் ஆடுவது குறையும்.

சர்வதேச ரீதியில்.. இனப்படுகொலையாளர்களால்.. போர்க்குற்றவாளிகளால்.. தீவிர மனித உரிமை மீறலாளர்களால்.. ஆளப்படும் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள்.. இறுக்கங்கள் கொண்டு வரப்படுவது.. அவர்களை சரியான பாதைக்கு கொண்டு செல்வதோடு..  நீதியின் பால் குற்றவாளிகள் தண்டிக்க உதவும்.

தமிழ் மக்கள் இப்போது முன்வைக்க வேண்டியது..

புறக்கணி சிறீலங்கா.. மற்றும் சர்வதேச சமூகம்.. சொறீலங்கா கொடும் ஆட்சியாளர்கள் மீது பொருண்மிய இறுக்கங்களை அமுல்படுத்துவது பற்றித்தான். குறிப்பாக ஈரான்.. ரஷ்சியா.. வடகொரியா மீதான அழுத்தங்களுக்கு ஒப்ப ஒரு அழுத்தம்.. சொறீலங்கா மீது கொண்டு வர தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் எழுச்சிக் குரல் எழுப்ப வேண்டும்.. சர்வதேசத் தமிழினம்.. ஒருங்கிணைந்து. 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Jude said:

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து தீர்வு கிடைத்ததா?

பெரிய பேய் பூச்சாண்டி காட்டி குட்டிப் பேய்க்கு வாக்களிச்சு தீர்வு கிடைச்சுதா?

 

குட்டிப் பேய்கள் தரப்பு எல்லாம் துண்டைக் காணம் துணியைக் காணம் என்று ஓடிக்கொண்டிருக்கினம்.

சம்பந்தனும், சுமந்திரனும் வழமைபோல தமிழர்களை பூச்சாண்டி காட்டி வாக்குகளைப் பெற்று உடனேயே நடுத்தெருவில விட்டிருக்கீனம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this