Jump to content

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர்


Recommended Posts

5 hours ago, poet said:

இந்தியா வடகிழக்கின் கழநிலவரங்களை உணர ஆரம்பித்திருக்கிறது. எங்கள் தலைமுறைக்கு இந்தியா மெக்காபோல.  இளைய தலைமுறை  எங்களைவிட உலகளாவிப் பரந்துபட்டது. 

எங்கள் (ஈழ தமிழரின்) இளைய இளைய தலைமுறை எங்களைவிட உலகளாவிப் பரந்துபட்டது. எங்கள் இளைய தலைமுறை திரு.ஜெயசங்கர் அவர்களது சீரிய முயற்ச்சியை ஆதரிக்க முன்வரவேண்டும் என பணிவன்புடன் கோருகிறேன்.
 

*

இந்தியா மட்டுமன்றி அமரிக்கா சீனா என பலரது தலையீடுள்ள பிரச்சினை இது.

*

இந்தியா ஈழத் தமிழரது நட்புறவின் ஆக்கபூர்வமான புதிய அத்தியாயமாக  இந்திய வெளியுறவு அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அவர்களது முயற்ச்சிகள் வெற்றிபெறவேண்டும். நல் வாழ்த்துக்கள் திரு. ஜெயசங்கர் அவர்களே. அத்தகைய ஒரு வளற்ச்சிக்கு நம் எல்லோரதும் ஈடுபாடும் ஆதரவும் அவசியம்.  - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

 

ஐயா பெரியவரே, 

இந்தியா மட்டுமல்ல ஸ்ரீலங்கா கூட இதய சுத்தியோடு வருமாயின் சகலருமே ஆதரவு தருவர்.  

ஆனால் கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் கற்ருக்கொண்டது என்னவென்றால்

""வயித்துக்குத்தய் நம்பினாலும் வடக்கத்தயானை நம்பாதே  """ என்பதுதான். 

நாங்கள் நம்பி அழிந்தவர்கள்.  இனிமேல் நம்புவதற்கு ஒன்றுமில்லை. நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியவர்கள் அவர்களே. 

(குறிப்பு: வடக்கத்தயான் என்கின்ற சொல்லை நான் இங்கு இழிவுபடுத்தும் நோக்கோடு பயன்படுத்தவில்லை)

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
3 hours ago, Rajesh said:

சீனா எங்கட பொருளாதார கூட்டு, இந்தியா அயல்நாடே என்ட கோத்தாட அறிவிப்பில கதிகலங்கிப் போய் சொறிலங்காக்கு ஓடின இந்தியன் அங்கிருந்து தமிழரின் பிரச்சினை பற்றி அறிக்கைவிட தில் இல்லாம இந்தியா திரும்பி அறிக்கை விட்டடிருக்கான்.

ரோட்டுக்கு வந்த நாய் தன்ர வளவுக்குள்ள ஓடிப்போய் நின்டுகொண்டு குரைக்கிற ஞாபகம் தான் வருது.

இந்தியனின் கபட நாடகங்களை நம்பும் ********* கொஞ்சப்பேர் இப்பவும் இருக்கினம்.

எனது தற்போதய மனநிலை கீழ் வருமாறு உள்ளது. 

""""நாங்கள் அழிந்துபோய்விட்டோம்.  எனவே இழப்பதற்கு எம்மிடம் ஒன்றுமில்லை.  எம்மை நேராக மோதி அழித்தவன் சிங்களன்.  ஆனால் சூழ்ச்சியால் எங்களை அழித்தவன் இந்தியன்.  

எனவே இந்தியா என்கின்ற நாடே இந்த உலகில் இல்லாது பிரிந்து அழியவேண்டும்.  அபோதுதான் பலிகொடுக்கப்பட்டவர்களின் ஆன்மா சாந்தி அடையும். 

எனவே இந்தியாவை உடைப்பதற்கு சீனா எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நான் ஆதரவு தர வேண்டும் """"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.

                லாரா தமிழர்களுக்கு ஒரு தீர்வை இலங்கை தானாக தருமாக இருந்தால் எப்போதோ அது நடந்து இன்று ஆசியாவில் புகழ் பெற்ற நாடாக இருந்திருக்கும்.
               போரும் முடிந்து தோற்றுப் போன ஒரு இனமாக இருக்கும் நிலையில் இனிமேல் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தத்தினால்த் தான் ஏதாவது அரைகுறை தீர்வு என்றாலும் வரலாம்.
                 இந்த நாடுகள் தமிழர் மேல் உள்ள அன்பால் செய்யாது.இதனால் மறுபக்கத்தால் கைமேல் பலன் கிடைக்குமென்றால் நிச்சயம் செய்வார்கள்.
                  நாளையே இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தமிழீழம் தேவைப்பட்டால் அது தமிழரே தேவையில்லை என்றாலும் தமிழீழம் அமைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யாழ் களத்தில்: ஆஹா தொனி மாறிவிட்டது,

நிச்சயமாக இல்லை.

அதற்காக, கதவு திறப்பது தோற்றப்பாடாயினும், அடியெடுத்து வைக்க முயலாமல் இருக்க முடியாது.

ஆயினும், பிஜேபி இந்த அணுகுமுறை consistent ஆக உள்ளது, இதுவரையில் வேறு திரிகளில் கலந்துரையாடியவைகளில் இருந்து.

Link to comment
Share on other sites

இனியும் தலைக்குத்து வேண்டாம்.

சின்னவர் Maharajah அவர்களுக்கும், ஈழப்பிரியன்Kadancha அவர்களே, இனியும் தலைக் குத்து வேண்டாம் தோழ தோழியரே என்பதை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களுக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் அரசியல் நாட்டில் வாழும் மக்களின் நிலைபாட்டின் அடிப்படையில் மட்டுமே நகர வேண்டும். நாங்கள் முக்கியமாக ஈழ விடுதலைக்கான முக்கிய வலு ஊக்கிகளும் பெருக்கிகளும் (FORCE MULTIPLIER ) அடுத்து இரண்டாம் நிலை பங்காளிகள்.  

போரில் பெருக்கிகளின் (Force Multiplier) செயல்பாடும் பெருக்கிகளை கையாளுவதும்பற்றி  நான் நிறைய விவாதித்திருக்கிறேன். வலு பெருக்கிகள் தானாக செயல்பட வாய்ப்பில்லை. கழத்தீல் இயங்கும் செயல்பாட்டாளர்களோடு இணையும் போது மட்டுமே செயற்படும் மாபெரும் சக்தியாக மாறும் தன்மையது. இதை நாம் உணர வேண்டும்.

போரின் வெற்றி தோல்விகள் ஒவ்வொன்றிலும் பெருக்கிகளின் +, - பங்களிப்பு இருப்பதுபற்றிய என் விவாதம் பிடலின் செயல்பாடுகளுக்கு நேர் விரோதமாக அமைந்ததுவிட்டது. புலம் பெயர்ந்த பெருக்கிகளின் கோரிக்கை அகதி அந்தஸ்து கோரும் நாடுகளால் தீர்மானிக்கபட்டது. கொழும்பில் தாக்குதல் இல்லையே, தென் இலங்கையில் தாக்குதல் இல்லையே, யாழ்பாணத்தில் தாக்குதல் இல்லையே, இந்தியாவில் தாக்குதல் இல்லையே நீங்கள் அங்கு போய் இருக்கலாம் அல்லவா என மேல் நாடுகளில்  கேட்கப்பட்டது. இதனால் உத்தி 1. போருக்கான தாக்குதல் உத்தி 2. அகதி அந்தஸ்துக்கு வாய்ப்பான  தாக்குதல் இரண்டு உத்திகளும் முரண்பட்டது.  மறு பக்கத்தில் பணநெருக்கடி  தீவிரமாகி இருந்தது . முக்கியமாக  உத்தி 2 போரை அதன் உண்மையான கழத்துக்கு வெளியே திசை திருப்புவதாகவும்   அதிக எலீட் போராளிகளை இழப்பதாகவும் இருந்தது. நான் உத்தி 1 க்காக வாதாடினேன். இதனால் பிடல் என்னை கைதுசெய்ய கொலை செய்ய முயன்றார். நான் பாதுகாக்கப்பட்டேன். எனினும் பணம் காய்க்கும் மரமான பிடல் பலமானவர்.

இந்த அனுபவங்களின் பின்னணியில் நான் சொல்லக்கூடியது இதுதான். எஞ்சியுள்ள கடைசி அரசியல்  வாய்புகளையாவது  கள நிலவரங்களின் அடிப்படையில் கழ செயல்பாட்டாளர்களின் ஆலோசனைகளோடு விவாதித்துச் செயல் படுங்கள் என்பதுதான். 

சிலரின் கடல் வற்றி கருவாடு உண்ணும் ஆலோசனைகள் நாடுகளை அழிய விடுதலை என்கிற ஆலோசனைகள் பெருங்கவலை தருகிறது. நாமும் எமது பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்கிறோம். நம் நிலமை வேறு கழ நிலமை வேறு என்பதை  புலம் பெயர்ந்த தீவிரவாதிகள் உணருவது முக்கியம். 

சில வர்த்தக சமூகங்களில் புலம்பெயர்ந்த பிள்ளைகள் எல்லோரும் கூட வசதியான ஒரு தருணத்தில் அப்பனை ஆத்தையை “தலைகுத்து” சடங்குவைத்து நீரில் அமுக்கி கொன்று அழுது புலம்பி இழவு வைத்து  ஈமைகிரிகை செய்துவிடுவார்கள். நமது போராட்டம் அப்படி தலைகுத்து ஆக வேண்டாம். கழ நிலவரங்களின் அடிப்படையில் கழத்தில் வாழும் மக்களின் எழுச்சி நிகழ்ச்சி நிரலை உள்வாங்கி கழத்திலும் புலத்திலும் ஐக்கியப்பட்டு விவாதித்து செயல்படுவோம்.  

 

Link to comment
Share on other sites

அன்புக்குரிய Maharajah, நாங்கள் நடுக்கடலில். கடலில் வழிகள் இல்லை. திசைகள் மட்டுதான் உண்டு. திசைகளை நம்புகிறீர்களா இல்லையா என்கிற கேழ்விக்கு இடமேது? நடசத்திரங்களும் நாம் பிள்ளைகளையும் நமது கப்பலையும் காப்பாற்றிக் கரை சேர்க்க வேண்டும் என்கிற இயல்பூக்கமும்தான் நம்மை செயல்ப்பட வைக்கிறது. அதுமட்டும்தான் மாலுமிகளை வழி நடத்துகிறது.  

Link to comment
Share on other sites

விவாதத்தில் பங்குபற்றி தேடலை நெறிப்படுத்திய யாழ்கழ உறவுகளுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தமாக உரையாடுங்கள் ..😢

9WSZaOd43pFwT5LY2aCJ44tAsVz.jpg

 

Link to comment
Share on other sites

அன்புக்குரிய புரட்சிகர தமிழ்தேசியன், மனவேகத்தில் எழுதுவதால் சில சமயம் சிடு சிடுப்பும்  பதிவாகிவிடுகிறது. யாழ்கழ உறவுகள் மன்னிக்க வேண்டும். நாம் ஒரு பல் சந்தியில் நிற்கிறோம் என்கிற தவிப்பு மேலோங்குகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா?

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ்
இலங்கையை வசப்படுத்த ஜெய்சங்கர் மூலம் காய்நகர்த்துகிறதா மோதி அரசு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வருகிறார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, வழக்கத்துக்கு மாறான அவசரத்துடன் இந்தியா தனது வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் புதிய அதிபரை சந்தித்துப் பேசியதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்த்துச் செய்தியை கோட்டாபயவிடம் அவர் ஒப்படைத்தார்.

இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று கோட்டாபயவும் புது டெல்லி வர ஒப்புக்கொண்டார். கோட்டாபய பயணம் செய்யப்போகும் முதல் வெளிநாடு இந்தியாதான்.

முதல் முதலாக இந்தியா

இந்திய வெளியுறவு அமைச்சரின் அவசரமான இலங்கைப் பயணத்தையும், தயக்கமின்றி கோட்டாபய இந்தியா வர ஒப்புக்கொண்டதையும் எப்படிப் புரிந்துகொள்வது?

கோட்டாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய ராஜபக்ஷ

"வழக்கமாக, இலங்கையில் பிரதமர், ஜனாதிபதி முதலிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வேலையாக இந்தியா வருவது வழக்கம். டெல்லியில் அவர்கள் பூஜை செய்யப் போகிறார்கள் என்றுகூட தமாஷாக சொல்வார்கள். ஆனால், தற்போது சீனாவை கருத்தில் கொண்டு, புதிய அதிபர் இந்தியா வருவதற்கு முன்பே இந்தியா தனது வெளியுறவு அமைச்சரை இலங்கை அனுப்பியுள்ளது. நிலைமை மாறியுள்ளது என்கிறார்" மூத்த இந்தியப் பத்திரிகையாளரும், இலங்கையில் இருந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான நிருபமா சுப்ரமணியன்.

2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகப் பார்க்கப்படும் நிலையில், "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இப்போது இந்தியா உறவை மேம்படுத்த விரும்புகிறது" என்ற தகவலை வெளியிட இந்தியா விரும்பியிருக்கலாம் என்கிறார் அவர்.

கோட்டாபய சீனா நோக்கிய சாய்வு உள்ளவர் என்று பார்க்கப்படுவதே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஏன் அவசர அவசரமாக இலங்கை சென்றார் என்பதை விளக்குகிறது என்றே பல பார்வையாளர்களும் சொல்கிறார்கள்.

ஜெய்சங்கர்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெய்சங்கர்

இலங்கையில் இந்தியா என்ன சாதிக்க விரும்புகிறது என்ற கேள்விக்கு, "இதற்கு ஒரு விடை இல்லை. பல காரணங்கள் இருக்கலாம்" என்கிறார் நிருபமா.

மைத்ரிபால மீது அதிருப்தி கொண்ட இந்தியா

ஆனால், ஆர்கனைசர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி அமைப்பின் சென்னை பிரிவின் தலைவரான என்.சத்தியமூர்த்தி இதற்கு ஒரு விடை சொல்கிறார்.

2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்று, மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்ற பிறகு, இலங்கையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கூடும், இலங்கையின் சீனாவின் செல்வாக்கு மட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் குறையவே இல்லை என்கிறார் அவர்.

இந்தியாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவதில் சிறிசேன அரசு எந்த முன்னேற்றமும் காட்டவில்லை என்ற ஏமாற்றம் இந்தியாவுக்கு இருந்தது. குறிப்பாக திரிகோணமலை துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தப் பின்னணியில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தரும் அழுத்தத்தில் அவை கூறுவதை செவிமடுக்கும் நிலை இலங்கைக்கு ஏற்படும் முன்பே உறவைக் கட்டமைக்க இந்தியா நினைத்திருக்கும் என்கிறார் சத்தியமூர்த்தி.

மைத்ரிபால சிறிசேனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமைத்ரிபால சிறிசேன

அமெரிக்கா லகான்?

அதே நேரம் ஏன் இந்தியா வருவதற்கு கோட்டாபய எப்படி உடனடியாக ஒப்புக் கொண்டார் என்ற கேள்விக்கு, பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் கௌரிபால் சாத்திரி ஒரு விளக்கம் தருகிறார்.

கோட்டாபய தமது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதாக கூறிவிட்டாலும், அமெரிக்கா வெளியிட்ட குடியுரிமை துறந்தவர்கள் பட்டியலில் கோட்டாபய பெயர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

அமெரிக்காவில் கோட்டாபயவின் சொத்துகள் இருக்கின்றன. இதைவைத்து, கோட்டாபய சீனா பக்கம் அப்பட்டமாக சாய்ந்துவிடாமல் தடுப்பதற்கான அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்திருக்கும் என்கிறார் சாத்திரி.

இதே கருத்து, வேறு சில பார்வையாளர்களுக்கும் இருக்கிறது.

கோட்டாபயவின் இந்தியப் பயணம் எப்படி இருக்கும்?

சரி, கோட்டாபயவின் இந்தியப் பயணம் எப்படி இருக்கும்? இந்தியா விரும்பியதை இலங்கையில் எப்படி எட்டும்?

நரேந்திர மோதி.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநரேந்திர மோதி.

"கோட்டாபய பொறுப்பேற்று 15 நாட்களுக்குள் திடீரென எதுவும் மாறிவிடாது. இரு தரப்பு மற்றும் சர்வதேசப் பிரச்சனைகளில் என்னமாதிரியான பார்வை இருக்கிறது என்று இலங்கை மற்றும் இந்தியா ஒன்று மற்றொன்றை மதிப்பீடு செய்யும். தனது எதிர்பார்ப்புகளை இந்தியா பகிர்ந்துகொள்ளும். தமிழர் பிரச்சனை போன்றவற்றை எழுப்பும். ஆனால், கோட்டாபயவின் முதல் பயணத்திலேயே புதிய ஒப்பந்தம் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது" என்கிறார் சத்தியமூர்த்தி.

https://www.bbc.com/tamil/india-50508229

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

"வழக்கமாக, இலங்கையில் பிரதமர், ஜனாதிபதி முதலிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல்வேலையாக இந்தியா வருவது வழக்கம். டெல்லியில் அவர்கள் பூஜை செய்யப் போகிறார்கள் என்றுகூட தமாஷாக சொல்வார்கள். ஆனால், தற்போது சீனாவை கருத்தில் கொண்டு, புதிய அதிபர் இந்தியா வருவதற்கு முன்பே இந்தியா தனது வெளியுறவு அமைச்சரை இலங்கை அனுப்பியுள்ளது. நிலைமை மாறியுள்ளது என்கிறார்" மூத்த இந்தியப் பத்திரிகையாளரும், இலங்கையில் இருந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவருமான நிருபமா சுப்ரமணியன்.

" சஜித் தோற்று கோத்தா ஜனாதிபதியாக வந்தால்" என்ற தலைப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சும் இலங்கையில் உள்ள இந்த உயர் தூதுவராலயமும் இணைந்து ஒரு அறிக்கையை பாதுகாப்பு செயலாளருக்கு நவம்பர் முதல்வாரம் கையளித்து இருந்திருக்கும்.

இந்திய பாதுகாப்பு செயலாளர் தனது இலங்கை மீதான இந்தியநலன் சார்ந்த கொள்கை பற்றி மோடி அவர்களிடம் விளக்கம் அளித்திருப்பார். 

மோடி அவர்களின் ஆதரவுடன், இலங்கைக்கு ஜெய்சங்கர் வரவேண்டியதாகி விட்டது. இந்த சதுரங்கத்தில் அடுத்த காயை சீன அரசும் நகர்த்தி விட்டது. கோத்தாவை தங்கள் நாட்டிற்கு வாங்கள் என அழைப்பு விட்டுள்ளது. 

சீன அரசு அமைதியாகவும் இந்திய அரசு அவசரமாகவும் காய்களை நகர்த்த வேண்டிய நிலை இலங்கையில்.     

Link to comment
Share on other sites

வடகிழக்கும் இலங்கை மலையக தமிழரும் தவிர இலங்கையில் இந்தியாவுக்கு காலூன்ற இடமில்லை என்பதையும் எங்கள் தலைமுறைபோல எங்கள் இளைய தலைமுறை எது செய்தாலும் இந்தியா என்கிற நிலை பாட்டை எடுக்க மாட்டார்கள் என்பதையும் இந்தியா உணர ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்திய இலங்கை விவகாரங்களை எழுதுகிற இந்திய பத்திரிகையாளர்கள் பலர் இதனைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை. அண்மையில் சந்தித்த என் மேற்படி கருத்துக்களில்  இந்திய பத்திரிகையாளர் ஒருவர் ”இதற்க்கு முன்னம் நீங்க இந்தியாவில் இருந்து டிபோட் பண்ணுப்படவில்லையா” என கேட்டார். அவரது கேழ்வி “இனிதான் முதல் தடவையா” என்பதுபோல தொனித்தது. ”எனது தலை முறையின் இரத்தத்தில் இந்தியா மீதான காதல் உள்ளது. எங்கள் இளைய தலை முறையினர் அப்படியல்ல அவர்கள் உலகம் இந்தியா மட்டுமின்றி அமரிக்கா மேற்க்குலகம் சீனா என பரந்துபட்டது” என சொன்னேன். ’டீபோட்’ என்கிற சொல் என் தலைமுறையை அச்சுறுத்தும் இளையவர்களை அல்ல என்கிற தொனியில் சொன்னேன். நிலமைகளில் ஏற்பட்டுவரும் மாறுதலை இந்திய பத்திரிகையாளரை

விட  உயர் அதிகாரிகள் உணர்கிறார்கள்.  

சீனாவின் ராஜதந்திரம் பலத்தின் அடிப்படையானது. அவர்கள் வயலை மேயும் யானைபோல எப்பவும் எதற்க்கும் மானைப்போல அலட்டிக் கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

Former IFS diplomat advises New Delhi to embrace Rajapaksas trading off rights with interests

[TamilNet, Thursday, 21 November 2019, 23:41 GMT]
“There is no way Rajapaksa will accept federalism in Sri Lanka. The Tamil community will have to come to terms with the grim implications of it and learn to live with what is on offer,” commented M K Bhadrakumar, a former Indian Foreign Service diplomat responding to a question from the Turkish Anadolu news agency on Thursday. Eezham Tamils were “dispossessed by Colombo and disowned by New Delhi,” he said advising New Delhi to trade-off Tamil rights-oriented concerns with the strategic interests of India. “The bottom line is that Gotabaya will be no less a strongman than Prime Minister Modi. It will be exceedingly foolish to adopt a prescriptive attitude toward Colombo. Any such attempt will meet with rebuff. Success lies in carrying the new president along,” the former envoy Bhadrakumar said.

India’s recent act of revoking constitutional provision that had granted special autonomous status to the Muslim-majority region of Jammu and Kashmir is now haunting its position concerning Tamils in the island, the Anadolu Agency report has pointed out.

The report was also citing the author and commentator Shastri Ramachandran as telling that India would no longer be able to convince Colombo to devolve powers to Tamil region in the island.

In the run-up to the election campaign, elder Rajapaksa and leader of now ruling Sri Lanka Podujana Peramuna (SLPP), said that the devolution debate in the country would now consider the developments in Jammu and Kashmir, the report further said.

Link to comment
Share on other sites

On 11/21/2019 at 11:07 PM, ஈழப்பிரியன் said:

                லாரா தமிழர்களுக்கு ஒரு தீர்வை இலங்கை தானாக தருமாக இருந்தால் எப்போதோ அது நடந்து இன்று ஆசியாவில் புகழ் பெற்ற நாடாக இருந்திருக்கும்.
               போரும் முடிந்து தோற்றுப் போன ஒரு இனமாக இருக்கும் நிலையில் இனிமேல் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தத்தினால்த் தான் ஏதாவது அரைகுறை தீர்வு என்றாலும் வரலாம்.
                 இந்த நாடுகள் தமிழர் மேல் உள்ள அன்பால் செய்யாது.இதனால் மறுபக்கத்தால் கைமேல் பலன் கிடைக்குமென்றால் நிச்சயம் செய்வார்கள்.
                  நாளையே இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தமிழீழம் தேவைப்பட்டால் அது தமிழரே தேவையில்லை என்றாலும் தமிழீழம் அமைப்பார்கள்.

நான் கூற வந்தது அமெரிக்காவோ இந்தியாவோ அழுத்தம் கொடுத்து இலங்கை தமிழர்களுக்கு தீர்வு தராது. இலங்கை தர விரும்பினால் மட்டுமே அது நடக்கும்.

ஜெய்சங்கர் தமிழர்களை பற்றி கதைத்தது வரும் பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து என்பது என் எண்ணம்.

தேர்தலின் பின் கூட்டமைப்பு கோத்தா தரப்புடன் கைகோர்த்தால் தீர்வு நிச்சயம் என சொல்லி கைகோர்க்க சொன்னாலும் சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

On 11/21/2019 at 10:04 PM, ampanai said:

நீங்கள் சம்பந்தமில்லாமல் எதையாவது கொண்டு வந்து இணைப்பதில் வல்லவர்.

பதாகைகளில் தமிழை நீக்கிக்கொண்டிருக்கிறார்களாம். முதலில் அதை காப்பாற்றுங்கள்.

EJ99SN4VAAYhMyG?format=png&name=small

Link to comment
Share on other sites

படத்தில் இருப்பவர் பர்மா அல்லது மியன்மார் நாட்டை சேர்ந்தவர். நீங்கள் முதலில் இணைத்த படத்தில் ஒருவர் புத்த மதகுருமாருக்கு முன் மண்டியிடுவதாயும் அவரால் எவ்வாறு தீர்வு ஒன்றை தரமுடியும் என கேட்பது போன்று. ( பின்னூட்டம் இடப்பட்ட கருத்து : "தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.  ஆனால், இலங்கையின் மனத்தில் மாற்றம் வருவதற்ககு அகத்திலும் புறத்திலும் அழுத்தம் கொடுக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது.")

இந்த பர்மிய தலைவரை, ஒரு போர்க்குற்றவாளியாக்க முடியும் எம்மாலும் முடியும்.   

Link to comment
Share on other sites

19 minutes ago, ampanai said:

படத்தில் இருப்பவர் பர்மா அல்லது மியன்மார் நாட்டை சேர்ந்தவர். நீங்கள் முதலில் இணைத்த படத்தில் ஒருவர் புத்த மதகுருமாருக்கு முன் மண்டியிடுவதாயும் அவரால் எவ்வாறு தீர்வு ஒன்றை தரமுடியும் என கேட்பது போன்று. ( பின்னூட்டம் இடப்பட்ட கருத்து : "தமிழர்களுக்கு தீர்வு தருவது என்பது இலங்கையின் கைகளில் உள்ளது. இந்தியாவின் கைகளில் இல்லை.  ஆனால், இலங்கையின் மனத்தில் மாற்றம் வருவதற்ககு அகத்திலும் புறத்திலும் அழுத்தம் கொடுக்கும் வல்லமை எம்மிடம் உள்ளது.")

இந்த பர்மிய தலைவரை, ஒரு போர்க்குற்றவாளியாக்க முடியும் எம்மாலும் முடியும்.   

நான் படத்தை இணைத்தது தமிழர்களுக்கு தீர்வு தருவதை பிக்குகள் கூட ஆதரிக்க மாட்டார்கள் என்பதை நினைவுபடுத்துவதற்கு.

இது கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது.

“We will ensure that Sri Lanka remains a unitary state. No one will be permitted to challenge this principle.”

Link to comment
Share on other sites

முக்கியமான பொறுப்பில் இருக்கிறவர்களைத்தவிர ஊடகங்களில் தலைகாட்டும் எல்லோருக்கும் பதில் சொல்லும் அரசியல் செய்வது இன்றைய திருப்புமுனைச் சூழலில் உகந்ததல்ல. நான் இந்த சேதியை உள்வாங்கி கடந்து செல்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கோத்தபாய The Hindu க்கு வழங்கிய செவ்வியில் கூறியிருப்பது,

On the issue of rights for Tamil-majority areas, Mr. Gotabaya said he intends to focus on development of the region, not political issues as the previous push for “devolution, devolution, devolution” has not changed the situation there. Full devolution of powers as promised by the 13th Amendment to the Constitution in 1987 could not be implemented “against the wishes and feeling of the majority [Sinhala] community.” He added: “No Sinhala will say, don’t develop the area, or don’t give jobs, but political issues are different.”

https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் சொந்த இடத்தில் சுதந்திரமாக சகல உரிமைகளுடன் வாழ வேண்டும் ஜெய்சங்கர் கோட்டாபயவிடம் நேரில் வலியுறுத்து

இலங்கையில் போரால் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும்.

அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலைமையை புதிய அரசு ஏற்படுத்த வேண்டும் என இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை நேற்று முற்பகல் புதுடில்லியில் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட ஐ.நா. தீர்மானம், இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, வடக்கு, கிழக்கில் இந்திய நிதியுதவியில் தமிழ் மக்களுக்கு வீடு கட்டும் திட்டம், திருகோணமலை எண ணெய் கிடங்கு விவகாரம், தமிழர் பகுதிகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர் பான இந்திய மத்திய அரசின் நிலைப் பாட்டை கோட்டாபயவிடம் ஜெய்சங்கர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.  

http://valampurii.lk/valampurii/content.php?id=19993&ctype=news

Link to comment
Share on other sites

கேள்வி பதிலாக,

Last week, after Dr. Jaishankar’s visit to Colombo the Indian government issued a statement urging justice and equality for Tamils. What is your reaction?

My approach, as I told the Foreign Minister, is that it is more important to give the [Tamils] development, and a better living. In terms of freedoms, and political rights there are already provisions in the constitution. But I am clear that we have to find ways to directly benefit people there through jobs, and promoting fisheries and agriculture. We can discuss political issues, but for 70 odd years, successive leaders have promised one single thing: devolution, devolution, devolution. But ultimately nothing happened. I also believe that you can’t do anything against the wishes and feeling of the majority community. Anyone who is promising something against the majority’s will is untrue. No Sinhala will say, don’t develop the area, or don’t give jobs, but political issues are different. I would say, judge me by my record on development [of North & East] after five years.

Are you promising talks on devolution or the 13th amendment on rights for the Tamil majority areas?

Look, the 13th amendment is part of the constitution and is functional, except for some areas like control of police powers, which we can’t implement. I am willing to discuss alternatives to that.

https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்கு தீர்வு கிடைக்கிறதாய் இருந்தால் எப்பவோ கிடைச்சிருக்கும்.
இப்ப சிங்களத்துக்கு இருக்கிற பிரச்சனை என்னவெண்டால்......ஈழத்தமிழனுக்கு எதுவுமே குடுக்காமல்  இவர்களுக்கு எந்தபிரச்சனையுமே இல்லை எண்டு கதையை முடிக்கிறதுதான் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் ஈழத்தை ஆக்கிரமித்தபோது இலங்கைத்தீவில் மேற்குறிப்பிட்ட ஜெயசங்கர்தான் ஈழத்தில் இந்தியாவில் எடுக்கப்பட்ட அரசியல் முன்னெடுப்புகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் ஆகவே தியாகி திலீபனது உண்ணாவிரத்ததின் பின்னதான சாவுக்கு இவரே காரணமானவர். இந்தச் சாத்தான் இபோது வேதம் ஓதுகின்றது.

தவிர கொத்தாவின் இந்தியப் பயணத்தில் இந்தியாவால் முன்வைக்கப்பட்ட விடையம் கீழ் வருவனவே

அதாவது, இந்தியாவின் இறையாண்மை, அரசியல், புவியியல், மற்றும் இராணுவ நலஙளுக்கு இடையூறாக கொத்தாவின் அரசு இருக்கக்கூடாது, தவறின், ஈழத்தமிழர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கான சர்வதேச விசாரணகான வேண்டுகோளை இந்தியா ஆதரிக்கும் அதன் பின்பு உங்களால் மின்சாரக்கதிரையில் இருந்து சாட்சி சொல்லலாமே தவிர ஆட்சி செய முடியாது. தமிழர்கள் பெயரைச் சொல்லி கொஞ்சம் காசுதாறம் செலவுக்கு வைச்சுக்கொள்ளுங்கோ. எனக்கூறப்பட்டிருக்குமே தவிர 

ஈழத்தமிழர் பிரச்சனையை பதின்மூன்றாவது சரத்துக்கு அப்பால் சென்று தீர்க்கவேண்டும் இல்லையேல் நாம் போர்க்குற்றச் சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிப்போம் எனச் சொல்லப்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை இந்தியா தன்னுடைய முழுமையான பணியை தமிழர் பிரச்சனையில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது. தமிழர்களுக்கு நன்மைகள் சில நடக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். இங்கு தூதுவராக வந்த ஜெய்சங்கருக்கும் ஈழத்திற்கும் நீண்டகால தொடர்புகள் உள்ளன. திடீரென்று முளைத்த ஒருவராக ஜெய்சங்கரை நினைத்துவிடமுடியாது நீண்டகால அடிப்படையில் அனைத்துவிடயங்களும் தெரிந்த ஒரு நபராகவே அவர் இருக்கிறார். அவர் தன்னுடைய அநுபவரீதியாக செயல்படும் புத்திசாலித்தனம் கொண்டவராக இருப்பார் என் நம்புவோம். மோடிக்கும் இப்போது பலப்பரீட்சை ஜெயிக்கிறாரா பார்ப்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.