• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
வல்வை சகாறா

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்

Recommended Posts

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று குழந்தைக்குமேல் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா பத்தாயிரம் ரூபா நிதி வழங்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

            நகராட்சி மன்ற அமர்வு நேற்று (19) இடம்பெற்றபோது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மக்கள் சனத்தொகையில் குறைவாக உள்ளமையினால், தம்பதியர் மூன்று குழந்தைக்குமேல் பிரசவித்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 10,000 ரூபா நிதி வழங்க வேண்டுமென பிரேரணை சமர்ப்பிக்க ப்பட்டது.

இதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதமளிக்க, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி :- http://www.pagetamil.com/88626/?fbclid=IwAR2D1RiwYZQEYlFFPCbemIBWwldKr-aZzYFXLMt0-y94yUuudFdD_e2O9YY

Share this post

Link to post
Share on other sites

இவ்வகை ஊக்குவிப்புக்களைத்தான் பிரெஞ்சு  அரசு  தனது  பிடியிலிருந்த ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு செய்தது

அது அந்த  நாடுகளில்  பிள்ளைகளை  பெறுவதும்  ஊக்குவிப்புக்களை  பெறுவதுடன் மட்டுமே நின்று

படிப்பறிவற்ற அநேக தலைமுறைகள்  தோன்ற  வழி  அமைத்தது

3  பிள்ளைகளுக்கு மேல்

அதுவும்  10 ஆயிரம்   ரூபாக்களுக்காக

4வது  பிள்ளையை  பெறுவார்கள்  என  தோன்றவில்லை??

 • Confused 1

Share this post

Link to post
Share on other sites

புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு ஊரவரும் அவரவர் ஊர்களை கவனத்தில் எடுத்தாலே போதும் ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்ப முடியும். புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பங்களோடு இனி நாட்டுக்குத் திரும்பி வாழப்போவதில்லை அப்படியே போனாலும் முதுமை எய்திய நிலையில் போய் அங்கு வாழ எத்தனிப்பவர்களைத் தவிர இளையவர்கள் வரவே மாட்டார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை அங்கு நிரவப்பட்டதா? அல்லது யுத்தகாலத்தில் மரணமானவர்கள், விடுதலைக்கு ஆகுதியானவர்கள் இப்படியாக தமிழினத்தின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி உற்றிருக்கும் நிலையில்..... 50 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் வாழும் நாடாக தமிழர்பகுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இன விருத்தி மிகக்குறுக்கப்பட்டிருக்கும் மிக ஆபத்தான ஒரு காலத்தில் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த நகராட்சி மன்றம் மேற்கொண்டுள்ள அறிவிப்பு சிந்திக்கப்படவேண்டிய ஒன்று.

 • Like 2
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

இந்த‌ முய‌ற்சி பாராட்ட‌ த‌க்க‌து 🙏

த‌மிழீழ‌ம் கிடைத்தாலும் புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழ்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் சொந்த‌ ஊர்க‌ளில் போய் வாழ‌ மாட்டின‌ம் அக்கா ( இது நித‌ர்ச‌ன உண்மையும் கூட‌ ) 

எல்லா ஊர்களிலும் இப்ப‌டி ந‌ட‌ந்தா எம் இன‌ம்  மீளும்   , க‌ட‌சிகட்ட‌ இன‌ அழிப்பு ம‌ற்றும் சுனாமியில் , எம் இன‌ ம‌க்க‌ள் கூட‌ அழிந்து போய் விட்டின‌ம் ,

புல‌ம் பெய‌ர் நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளும் ஊரில் உள்ள‌வ‌ர்க‌ளை காசை க‌ட்டி எடுக்கின‌ம் , 2010ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் இருந்து புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌வை அதிக‌ம் , 

25ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒவ்வொரு பாட‌சாலையிலும் ப‌டிச்ச‌ பிள்ளைக‌ள் 600க்கு  மேல‌ , இப்ப‌ 350க்கு கீழ‌ வ‌ந்திட்டு , இப்ப‌டியே இன்னும் 20 வ‌ருட‌ம் போனால்  எங்கும் சிங்க‌ள‌ம் எதிலும் சிங்க‌ள‌ம் என்ற‌ நிலைக்கு நாடு வ‌ந்துடும்   , 

முடிஞ்ச‌ அள‌வு எம் உற‌வுக‌ளை  அவ‌ர்களின் சொந்த‌ ஊர்க‌ளில் த‌ங்க‌ வைச்சு அவைக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்து குடுத்து , இல‌ங்கை தீவில் த‌மிழ‌ர்க‌ளும் பெரும்பான்மை இன‌ம் என்ற‌த‌ நிருபிக்க‌னும் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் /

Share this post

Link to post
Share on other sites

மிகவும் சிறந்த  முயற்சி.  தூரநோக்குடன் செயல்படுகின்றனர் என  நம்பலாம். 

Share this post

Link to post
Share on other sites

நூற்றுக்கு 25விழுக்காடு புல‌ம் பெய‌ர் நாட்டு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள்  பிற‌ந்த‌ நாட்டில் வாழ‌ ஆசை ப‌டுவின‌ம் , மீத‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் வெளிநாடுக‌ளில் வாழ்வ‌தையே விரும்புவின‌ம்  

Share this post

Link to post
Share on other sites

விசுகு சொன்னது போல வெறும் 10 ஆயிரத்துக்கு நாலாவது பிள்ளை பெற எவர் விரும்புவினம்? இலங்கையில் இன்றிருக்கும் விலைவாசிக்கு 10 ஆயிரம் ரூபா என்பது ஒரு வாரத்துக்கு கூட போதுமானது இல்லை.

நாலாவது பிள்ளை பெற்றால் முதல் பிள்ளையின் அல்லது முதல் இரு பிள்ளைகளின் கல்வி தேவையில் அரைவாசியையாவது பொறுப்பெடுத்துக் கொள்ளுவது போன்ற திட்டங்கள் ஓரளவுக்கு தன்னும் பயன்தரலாம், ஆனால் அதற்கான நிதி வசதி நகர சபையிடம் இருக்குமா எனத் தெரியவில்லை.

நடைமுறையில் தோல்வியை சந்திக்கும் திட்டங்களையும் முடிவுகளையும் எடுப்பதுதான் இன்றைய எம் தமிழ் தரப்புகளின் செயற்பாடுகளாக இருக்கு.

 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, நிழலி said:

ஆனால் முயற்சி பாராட்டத்தக்கது. இதில் பெரும்பாலானோருக்கு மருகருத்து இல்லையென நம்புகிறேன். 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, நிழலி said:

விசுகு சொன்னது போல வெறும் 10 ஆயிரத்துக்கு நாலாவது பிள்ளை பெற எவர் விரும்புவினம்? இலங்கையில் இன்றிருக்கும் விலைவாசிக்கு 10 ஆயிரம் ரூபா என்பது ஒரு வாரத்துக்கு கூட போதுமானது இல்லை.

நாலாவது பிள்ளை பெற்றால் முதல் பிள்ளையின் அல்லது முதல் இரு பிள்ளைகளின் கல்வி தேவையில் அரைவாசியையாவது பொறுப்பெடுத்துக் கொள்ளுவது போன்ற திட்டங்கள் ஓரளவுக்கு தன்னும் பயன்தரலாம், ஆனால் அதற்கான நிதி வசதி நகர சபையிடம் இருக்குமா எனத் தெரியவில்லை.

நடைமுறையில் தோல்வியை சந்திக்கும் திட்டங்களையும் முடிவுகளையும் எடுப்பதுதான் இன்றைய எம் தமிழ் தரப்புகளின் செயற்பாடுகளாக இருக்கு.

ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்திற்கு ஆதரவாக கால ஓட்டத்தில் மேலதிக தேவைகளுக்கு உதவ நகரசபையால் முடியாது. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஊரவர்களால் முடியும். ஒரு இந்திரவிழாவை வீழ்ச்சியுறாது தக்க வைக்கவும் வளப்படுத்தவும் பாடுபடும் போது ஒரு நேரிய ஒற்றுமை இயல்பாக ஊருக்கு வந்துவிடும். அதில் புலம்பெயர்ந்தவர்களும் நிலம்வாழ்பவர்களும் விரிசல் தொடுவதில்லை அதுபோல் இதுவும் அவர்களால் வீழ்ச்சியடையாது அவ்விடம் வாழ்பவர்களை நிறைவாகவும் ஆரோக்கியமான சமுதாயமாகவும் கட்டியெழுப்பமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழரைப் பொறுத்தவரை எல்லாவிடயமும் நடைமுறையில் தோல்வியைத் தொட்டுத்தான் மீளெழும் சக்தியுடையதாக மாறும். தோல்வியைச் சந்திக்கும்போதே வெற்றிக்கான பாதைகள் அகலத்திறக்கும் அக்கணம் அதனைச் சரியாக பயன்படுத்தும் விவேகம் இருந்தால் வீழ்ச்சி இல்லை. காலத்தின் அவசியம் நிச்சயமாக கண்களைத் திறக்கும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

தூர நோக்கில் இந்த ஊக்குவிப்பு வழங்குவதாத இருந்தாலும் கூட, இந்த கேள்விகள் என்னுள் எழலாமல் இல்லை

இனத்தை பெருக்குவதற்கு ஊக்குவிப்பாக இருந்தாலும் கூட, 10,000/= விற்காக விருப்பமில்லாது பிள்ளைகளைப் பெற பெண்கள் அல்லது ஆண்கள் தள்ளப்படமாட்டார்களா?

பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்களை உடல் உள ஆரோக்கியமானவர்களாக, எதிர்காலத்தில் தன்னம்பிக்கையையுடன் வாழவும் ஒரு சூழல்நிலவுமா?

இப்பொழுது ஊரில் கூட கணவன் மனைவி என இருவரும் உழைத்து வாழ வேண்டிய நிலையில்இருக்கும் போது .. பிள்ளைகளைப்பெற்றுவிட்டு  வளர்ப்பது எப்படி? வயதான பெற்றோர்களிடமும் வளர்ப்பு நிலையங்களிலும்  அவர்களை வளர விடுவதா?

அது மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றம் காணாது  பிள்ளைகளைப்   பெற்றுவிட்டு பின்பு பெற்றோர் தமது இயலாமையை பிள்ளைகள் அல்லது  கணவன்/மனைவி மீது காட்டுவது நடைபெறுவதும் உண்மைதானே? அதன் மூலம் ஏற்படும் உளவியல் தாக்கங்களிற்கு யார்  உதவுவார்கள்?

தற்போது நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தல், தற்காப்புடனான உடலுறவு பற்றிய அறிவு, பாலியல் கல்வியறிவு இல்லாமையால் நோய்களை  காவுதல், போதைவஸ்து பாவனை, வேலைவாய்பின்மை, கல்வியறிவு வீழ்ச்சி, மனவிரக்தியால் தற்கொலை என பல்வேறு பிரச்சனைக்களுக்கு தீர்வு காணமுடியாமல் இருக்கும் போது,

3 பிள்ளைகளுக்கு மேல் என்பதைவிடஒரு பிள்ளைக்கு மேல்  என்றால் நன்று. ஏனெனில் இப்பொழுது பொருளாதார, மற்றும் வாழ்க்கைசெலவுகளால் ஒரு பிள்ளையுடன் வாழ்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன்..

அத்துடன் இந்த பத்தாயிரம் ரூபாவை சரியான முறையில் உபயோகப்படுத்துவதை நகரசபை உறுதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்..  அந்தப்பணம்    கள்ளுக்கொட்டிலிற்கு  போகாமல் விட்டால் சரி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்களை உடல் உள ஆரோக்கியமானவர்களாக, எதிர்காலத்தில் தன்னம்பிக்கையையுடன் வாழவும் ஒரு சூழல்நிலவுமா?

மிகச்சரியான கருத்து.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் ஆபிரிக்கா ஏழைகள் மாதிரி ஒரு சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நல்ல காலமாக பத்தாயிரம் ரூபாவுக்காக பிள்ளை பெற்று கொள்ளும் அளவிற்கு முட்டாள்களாக மக்கள் அங்கே இல்லை.

Share this post

Link to post
Share on other sites
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மிகச்சரியான கருத்து.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் ஆபிரிக்கா ஏழைகள் மாதிரி ஒரு சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நல்ல காலமாக பத்தாயிரம் ரூபாவுக்காக பிள்ளை பெற்று கொள்ளும் அளவிற்கு முட்டாள்களாக மக்கள் அங்கே இல்லை.

அடிப்படையில் ஒரு நல்ல காரியம் ஒன்றை செய்ய முயற்சிசெய்பவர்களை பாராட்ட வேண்டாமா ? 

விமர்சனம் என்கின்ற பெயரில்,  எல்லாம் தெரியும் என்கின்ற மமதையில்,   எல்லாவற்றையும் குத்திக் குதறி,  அலசி ஆராய்ந்து,  இறுதியாக தீர்ப்பும் எழுதி முடித்தாயிற்று. 

உங்கள் கண்களை அகலத் திறந்து உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்றுப் பாருங்கள். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சிறீலங்காவில் சிங்களவர்களும் சோனகர்களும் ஆபிரிக்க ஏழைகள் மாதிரியா வாழ்கிறார்கள்???

மட்டக்களப்பு மாநாகரசபையும் இப்படி ஓர் தீர்மானத்தை எடுத்தார்கள். 

Share this post

Link to post
Share on other sites

எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட அவர்கள் ஏதோ ஒன்றை செய்து தமிழ் மக்களை சந்ததிகளை ஊக்குவிக்கின்றார்கள். அதை பாராட்டத்தான் வேண்டும்.  பெரும்பாலும் எதிர்மறையாகவே சிந்திக்கின்றோம். அது தப்பு.

நிழலி  சொல்வதுபோல்  5000 ரூபா ஒரு வாரத்துக்கு காணாதுதான். ஆனால் அங்கு ஒரு ஆளின் ஒருநாள் சம்பளம் சாப்பாடு தேநீருடன் குறைந்தது 1500 ரூபாவுக்கு அதிகம்.(அதுக்கும் ஆள் கிடைப்பது கஷ்டம்). சராசரி 20,000 ரூபா மாதம் உழைத்தால் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் தாராளமாய் ஒரு குடும்பம் வாழ முடியும். "பாலன் பஞ்சம் பத்து வயது வரை" என்று அது பின்பு அந்த குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும்.

அன்று (இந்த யுத்தகாலங்களுக்கு முன்பு) நாங்கள் எல்லாம் அறுசுவை உண்டியும் பாயாசமும் சாப்பிட்டா வளர்ந்தனாங்கள். சுற்றி வர இருக்கும் அயலில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு பிள்ளைகள்.எல்லோரும் செத்தா போனார்கள்.

இங்கு (பிரான்சில்) மூன்று பிள்ளைகளுக்கு மேல்தான் சரியான உதவித் தொகை,மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். அதுக்காக அரசாங்கம் தரும் அந்தப் பணம் பிள்ளைகளை வளர்க்க தாராளமாய் காணும்.ஆனால் நாங்கள் வீட்டுக்கும், காருக்கும் கடன் வாங்கி அதைக் கட்ட இரவு பகல் பாராமல் நாய் பேயாய் உழைக்க வேண்டி இருக்கு.அப்படி இருந்தும் சில பல  பெற்றோர்களின் சண்டைகளால் பிள்ளைகளை அரசாங்கம் எடுத்து வளர்த்து வருகிறது. இங்கு செய்யும் உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ஊரில் செய்தால்கூட போதும் சராசரி வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு. ஏனைய இனங்கள் எல்லாம் வருமானத்தைப் பார்த்தா பிள்ளைகளை பெறுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிழைகளை பெற்று விட்டால்  பின் ஏதோ ஒரு வகையில் வருமானம் வரும்......!  🤔

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

விதவைகள் பெறும். ஒவ்வொரு பிள்ளைக்கும், அந்த பிள்ளை 21 வயதை அடையும்வரை மாதம் 10,000 அனுப்புவோம் என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், சில பத்து ஆண்டுகளிலேயே தமிழர் மீண்டும் முதலாவது சிறுபான்மையாகி விடுவர். சர்வதேச நாடுகளில் காணப்படும் தனித்தாய் ஆதரவு (single mother support) திட்டங்கள் போன்றதாக இந்த திட்டம் அமையும். இதற்கு காரணம் பிள்ளை பெறும் பராயத்தை சேர்ந்த பல்லாயிரம் பெண்கள் போரால் விதவைகளாகி பத்துவருடங்களாக சனப்பெருக்கம் சுருங்கி வருகிறது.

Edited by Jude
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, Jude said:

விதவைகள் பிள்ளை பெறுவதை எமது சமூகம் எப்படி பார்க்கும் அண்ணா?
விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, ஏராளன் said:

விதவைகள் பிள்ளை பெறுவதை எமது சமூகம் எப்படி பார்க்கும் அண்ணா?
விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கலாம்.

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, Maharajah said:

அடிப்படையில் ஒரு நல்ல காரியம் ஒன்றை செய்ய முயற்சிசெய்பவர்களை பாராட்ட வேண்டாமா ? 

விமர்சனம் என்கின்ற பெயரில்,  எல்லாம் தெரியும் என்கின்ற மமதையில்,   எல்லாவற்றையும் குத்திக் குதறி,  அலசி ஆராய்ந்து,  இறுதியாக தீர்ப்பும் எழுதி முடித்தாயிற்று. 

உங்கள் கண்களை அகலத் திறந்து உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்றுப் பாருங்கள். 

இதுக்கு தான் அண்ணா 2009ம் ஆண்டு எம் இன‌ம் எம் க‌ண் முன்னே கொன்று அழிக்க‌ ப‌ட்ட‌ போது ஒருத‌ரும் உத‌வ‌ முன் வ‌ர‌ வில்லை / 

எம் இன‌த்தின் சாவ‌க் கேடு எதிலும் குறை கண்டு பிடிப்ப‌து , 

அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌ ஒரு முய‌ற்சியில் இற‌ங்கும் போது அவ‌ர்க‌ளை பாராட்டி ஊக்கிவித்து அவ‌ர்க‌ளின் முய‌ற்சி வெற்றிய‌டைய‌ வாழ்த்துவ‌தை த‌விர்த்து விட்டு , தேவை இல்லா வெட்டி க‌தைக‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு  

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, Jude said:

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

பலதார மணத்திற்கு ஆண்கள் ஓரளவு தயாரானாலும் பெண்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
பிள்ளை பெறக்கூடிய திருமணமான குடும்பங்களில் 1 அல்லது 2 பிள்ளைகளே போதும் என்று நிறுத்துகிறார்கள். குறைந்தது 3 பிள்ளைகள் பெற அவர்களை ஊக்குவிக்கலாமே? இதை தானே இந்த செய்தி தலைப்பும் சொல்கிறது.

Share this post

Link to post
Share on other sites
Just now, Kavi arunasalam said:

0-D46912-E-FE84-489-A-9500-F5-AA56-F5885

அது சரி,  உவரும் கர்ப்பமோ?😃

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Kavi arunasalam said:

0-D46912-E-FE84-489-A-9500-F5-AA56-F5885

கவி ஐயா திருமணமாகாவிட்டாலும் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் போட தடை இல்லை தானே?

ஆரோக்கியமான வலிமையான ஆண்கள் 10 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளணும், சட்டபூர்வமாகவோ இல்லை வேறு மார்க்கமாகவோ (விந்துதானம்).

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, Jude said:

விதவைகள் பெறும். ஒவ்வொரு பிள்ளைக்கும், அந்த பிள்ளை 21 வயதை அடையும்வரை மாதம் 10,000 அனுப்புவோம் என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், சில பத்து ஆண்டுகளிலேயே தமிழர் மீண்டும் முதலாவது சிறுபான்மையாகி விடுவர். சர்வதேச நாடுகளில் காணப்படும் தனித்தாய் ஆதரவு (single mother support) திட்டங்கள் போன்றதாக இந்த திட்டம் அமையும். இதற்கு காரணம் பிள்ளை பெறும் பராயத்தை சேர்ந்த பல்லாயிரம் பெண்கள் போரால் விதவைகளாகி பத்துவருடங்களாக சனப்பெருக்கம் சுருங்கி வருகிறது.

20 minutes ago, ஏராளன் said:

விதவைகள் பிள்ளை பெறுவதை எமது சமூகம் எப்படி பார்க்கும் அண்ணா?
விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கலாம்.

13 minutes ago, Jude said:

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

2 minutes ago, ஏராளன் said:

பலதார மணத்திற்கு ஆண்கள் ஓரளவு தயாரானாலும் பெண்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
பிள்ளை பெறக்கூடிய திருமணமான குடும்பங்களில் 1 அல்லது 2 பிள்ளைகளே போதும் என்று நிறுத்துகிறார்கள். குறைந்தது 3 பிள்ளைகள் பெற அவர்களை ஊக்குவிக்கலாமே? இதை தானே இந்த செய்தி தலைப்பும் சொல்கிறது.

பெண்களை, தலைமயிரை வெட்ட சம்மதிக்க வைத்து, காற்சட்டையும் போட்டு, ஆயுதமும் தூக்கி போர்க்களத்தில் சதிராட வைத்த எங்கள் பெண்களை பார்த்தா இன்று இனம் அழியும் தறுவாயில்,