• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
வல்வை சகாறா

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்

Recommended Posts

51 minutes ago, Jude said:

பெண்களை, தலைமயிரை வெட்ட சம்மதிக்க வைத்து, காற்சட்டையும் போட்டு, ஆயுதமும் தூக்கி போர்க்களத்தில் சதிராட வைத்த எங்கள் பெண்களை பார்த்தா இன்று இனம் அழியும் தறுவாயில், “பெண்கள் அனுமதிக்கமாட்டார்கள்“ என்று சொல்கிறீர்கள்? எங்கள் பெண்களுக்கு நிலைமையை விளங்கப்படுத்துங்கள். இது போர்க்களம், இன்றைய ஆயுதம் பிள்ளை பெறுதல், ஆண்களால் முடியாத ஒன்று என்பதை புரிய வையுங்கள், எந்த பெண் எதிர்க்கிறார் என்று பார்க்கலாம்.

மாவீரர்களையும், போராளிகளையும் அதுவும் மாவீரர் மாதம் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தும் உங்கள் பின்னூட்டக் கருத்து மிகுந்த வேதனையளிக்கிறது.  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஏராளன் said:

பிள்ளை பெறக்கூடிய வயதிலுள்ள நண்பனை 3 பெற்றுக்கொள்ளடா என்று சொன்னதிற்கு அவன் அலறுகிறான். 2 பிள்ளைகளோடயே சமாளிக்க முடியலையாம்.

20-28 வயதிற்குள் ஆண் பெண் திருமணம் நடந்துவிடவேண்டும்.

குடும்பத் திட்டமிடல் என்பதை திருமணத்திற்கு முன்னரே ஆரம்பிப்பதுதான் சிறப்பாக இருக்கும். 

 முதலாவது கேள்வி

நீங்கள் எத்தனை வயதில் ஓய்வு பெறப்போகிறீர்கள்,  அப்போது உங்களின் சேமிப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்  ? 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட அவர்கள் ஏதோ ஒன்றை செய்து தமிழ் மக்களை சந்ததிகளை ஊக்குவிக்கின்றார்கள். அதை பாராட்டத்தான் வேண்டும்.  பெரும்பாலும் எதிர்மறையாகவே சிந்திக்கின்றோம். அது தப்பு.

நிழலி  சொல்வதுபோல்  5000 ரூபா ஒரு வாரத்துக்கு காணாதுதான். ஆனால் அங்கு ஒரு ஆளின் ஒருநாள் சம்பளம் சாப்பாடு தேநீருடன் குறைந்தது 1500 ரூபாவுக்கு அதிகம்.(அதுக்கும் ஆள் கிடைப்பது கஷ்டம்). சராசரி 20,000 ரூபா மாதம் உழைத்தால் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் தாராளமாய் ஒரு குடும்பம் வாழ முடியும். "பாலன் பஞ்சம் பத்து வயது வரை" என்று அது பின்பு அந்த குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும்.

அன்று (இந்த யுத்தகாலங்களுக்கு முன்பு) நாங்கள் எல்லாம் அறுசுவை உண்டியும் பாயாசமும் சாப்பிட்டா வளர்ந்தனாங்கள். சுற்றி வர இருக்கும் அயலில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு பிள்ளைகள்.எல்லோரும் செத்தா போனார்கள்.

இங்கு (பிரான்சில்) மூன்று பிள்ளைகளுக்கு மேல்தான் சரியான உதவித் தொகை,மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். அதுக்காக அரசாங்கம் தரும் அந்தப் பணம் பிள்ளைகளை வளர்க்க தாராளமாய் காணும்.ஆனால் நாங்கள் வீட்டுக்கும், காருக்கும் கடன் வாங்கி அதைக் கட்ட இரவு பகல் பாராமல் நாய் பேயாய் உழைக்க வேண்டி இருக்கு.அப்படி இருந்தும் சில பல  பெற்றோர்களின் சண்டைகளால் பிள்ளைகளை அரசாங்கம் எடுத்து வளர்த்து வருகிறது. இங்கு செய்யும் உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ஊரில் செய்தால்கூட போதும் சராசரி வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு. ஏனைய இனங்கள் எல்லாம் வருமானத்தைப் பார்த்தா பிள்ளைகளை பெறுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிழைகளை பெற்று விட்டால்  பின் ஏதோ ஒரு வகையில் வருமானம் வரும்......!  🤔

சுவி அண்ணா,

இங்கு கொடுக்க நினைத்து இருக்கும் பணம் 10000 ஒவ்வொரு மாதத்துக்கும் அல்ல, ஒரே ஒரு தடவை மாத்திரம்.

Share this post

Link to post
Share on other sites

இந்த விடயத்தில் யூதர்களை போற்ற வேண்டும்.அவர்களிடம் சிறிய ரக கார் கிடையாது.பெரிய பெரிய வான் தான் வைத்திருப்பார்கள்.

ஒரு குடும்பம் போனால் புகைவண்டி போன மாதிரி இருக்கும்.

நம்மவர்கள் திருமணம் செய்முதலே குடும்ப கட்டுப்பாடு பற்றி பேசி முடிவெடுத்துக் கொள்கிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites

ஒரு ஊக்குவிப்புதான் முக்கியம் நிழலி ...... பிறக்கிற பிள்ளைகள் எப்படியும் வளர்ந்திடும்.அதில் சந்தேகமில்லை......!  🤔

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

மாவீரர்களையும், போராளிகளையும் அதுவும் மாவீரர் மாதம் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தும் உங்கள் பின்னூட்டக் கருத்து மிகுந்த வேதனையளிக்கிறது.  

“சதிராட” என்ற சொல் உங்களுக்கு வேதனையளிக்கிறது என்றால், நீங்கள் தமிழ் அறிவை மேம்படுத்த வேண்டிய தேவை வந்திருப்பது தெரிகிறது. தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள சபதம் செய்து கொள்வதற்கு  மாவீரர் மாதம் மிகவும் பொருத்தமானது.

Share this post

Link to post
Share on other sites

பலமான பொருளாதார பின்னணியின்றி சகட்டுமேனிக்கு மக்கள் தொகையை அதிகரித்தால் எதிர் காலத்தில்  வறுமைக்கோட்டுக்குகீழ் வாழும் பெரும் மக்கள் கூட்டம் உருவாகும். 

வறுமையோடு போராடும் மக்கள் கூட்டத்திலிருப்பவர்கள்  தற்போது கிழக்கில் இடம்பெறுவதுபோல் மிக இலகுவாக பிற இனங்களாலும்  மதமாற்று கோஷ்டிகளினாலும் விழுங்கப்படுவார்கள்.

அப்போது தானாகவே இனத்தின் ஒருபகுதி பிறரால் விழுங்கப்படுமே ,அப்புறம் இனத்தை விருத்தி செய்து என்ன பயன்?

Share this post

Link to post
Share on other sites
56 minutes ago, valavan said:

இன்றைய நாளைக்கான மிகச் சிறந்த (நகைச்சுவை மிக்க ) யோசனைக்கான  விருது திருவாளார்  valavan க்கு வழங்கப்படுகிறது.  

வாழ்த்துக்கள் திருவாளர் valavan,  விருது பெற்றமைக்கு. 

4 hours ago, Paanch said:

மாவீரர்களையும், போராளிகளையும் அதுவும் மாவீரர் மாதம் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தும் உங்கள் பின்னூட்டக் கருத்து மிகுந்த வேதனையளிக்கிறது.  

சதிர் ஆட்டம் என்பது மிகச் சிறந்த தமிழ்ச் சொல் எங்கள் பெண் போராளிகளின் ஆகப் பெரும் சாதனைகளை குறிப்பதற்கு. 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maharajah said:

சதிர் ஆட்டம் என்பது மிகச் சிறந்த தமிழ்ச் சொல் எங்கள் பெண் போராளிகளின் ஆகப் பெரும் சாதனைகளை குறிப்பதற்கு. 

சதிர் ஆட்டம் என்பது மிகச் சிறந்த தமிழ்ச் சொல்தான் ஆனால் அது யாருக்குப் பொருந்தும்? இவர்களுக்கு!👇 

தமிழீழ விடுதலைப் போராளிகள் களமாடியது வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம். 

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Jude said:

அது சரி,  உவரும் கர்ப்பமோ?😃

866619-DA-28-A6-4-E37-AB08-CB8291970573.

Share this post

Link to post
Share on other sites

எம்ஜிஆரின் ரிக்ஷாகாரன் படத்தில்பம்பை உடுக்கை கொட்டி பரிவட்டம் ....” என்றொரு பாடல் இருக்கிறது. அந்தப் பாடலின்  இடையில் உள்ள வரிகள் இவை

(ஆண்)

ஏழ் எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு

வாழாம வாடுறாங்க ரோட்டுல நின்னு

அந்த வாட்டத்த தீர்பதற்கு கூறனும் ஒண்ணு

(பெண்)

கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து

படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே

பின்னாலே அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

சதிர் ஆட்டம் என்பது மிகச் சிறந்த தமிழ்ச் சொல்தான் ஆனால் அது யாருக்குப் பொருந்தும்? இவர்களுக்கு!👇 

இடை என்னும் கொடியாட நடமாடிவா
குழல் இசைக்கொஞ்சி விளையாட நீ  ஆடி வா
தடை மீறி போராட சதிராடிவா
செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா
                           -கவிஞர் முத்துக்கூத்தன்

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Kavi arunasalam said:
இடை என்னும் கொடியாட நடமாடிவா
குழல் இசைக்கொஞ்சி விளையாட நீ  ஆடி வா
தடை மீறி போராட சதிராடிவா
செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா
                           -கவிஞர் முத்துக்கூத்தன்

கவி அருனாசலம் அவர்களே! இதற்கு நான் கருத்து எழுதப்போவதில்லை, ஏனென்றால்...! இந்தக் கவிதையின் உட்பொருள் உங்களுக்கா தெரியாது.....? 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Paanch said:

சதிர் ஆட்டம் என்பது மிகச் சிறந்த தமிழ்ச் சொல்தான் ஆனால் அது யாருக்குப் பொருந்தும்? இவர்களுக்கு!👇 

தமிழீழ விடுதலைப் போராளிகள் களமாடியது வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம். 

பாஞ், 

சதிர் என்பது ஒருவகையான ஆடல் கலை. ஆட்டம் என்பதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.  இவ் ஆட்டத்தை  ஆடல் மகளிர் தமது நிகழ்வுகளில் ஆடியபடியால் இக் கலை வவடிவத்தினை இகழ்ச்சியாக பார்க்க முடியாது.  இலங்கைத் தமிழர் தமது சொல் வழக்கில் இகழ்ச்சியாக பாவித்ததனால் அதன் உண்மையான அர்த்தம் மாறுபடும் என நான் நம்பவில்லை.  Jude அவர்கள் இச் சொற்பதத்தை உயர்வாகவே பாவித்ததாக நான் உணர்கிறேன்.  பலரது சந்தேகத்தினை நிவர்த்தி செய்வது நலம் என்கின்ற காரணத்தினால் கீழே உசாத்துணைகளை இணைத்துள்ளேன். உங்கள் கருத்து உண்மையில் நன்மையே பயர்ந்திருப்பதால் உங்களுக்கு நன்றி. 

சதிர் - நாட்டியத்தின் மூதாய்

 பதிவு செய்த நாள்

24அக் 2017
 12:02
 
0
 
0
 
0
Google +
சதிர் - நாட்டியத்தின் மூதாய்

 ரலாற்று நோக்கில் இந்தியாவின் செவ்விய ஆடல் கலைகளில் ஒன்று, பரதம் எனும் நடனக்கலை. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழகத்தில் கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் ஆட்டம் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப் பெற்று வருகின்றன. அவ்வகை நடன முறைகளில் சில மாற்றங்கள் செய்து வடிவமைக்கப் பெற்றதுதான் பரதநாட்டியம் என்றும் சொல்லப்படுகின்றது. 

நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவங்களில் தொண்சுவையையும் வெளிக்கொணருதலைக் காணலாம். கோவில் நடனக்கலை என்று வழங்கபட்டுவந்த சதிர் ஆட்ட நடனக்கலை அக்காலத்தில் தேவரடியவர்கள் என்று குறிப்பிடப்பெற்ற பெண்கள் முறைப்படி பயின்று ஆடி வந்தனர். இறைப்பணியாகக் கருதப்பட்டு, தனிப்பட்ட முறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற திறம் நிறைந்த நடனக்கலைஞர்கள் இவர்கள். 

வரலாற்றிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு, தங்களது இளமைக் காலத்தில் முழுமையாகத் தமது உழைப்பினை நடனக் கலைக்காகத் துய்த்து, ஈட்டிய சொத்து, உடைமைகள் யாவற்றையும் முற்றிலும் இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் அவற்றின் இன்ப நினைவலைகளில் ஆங்காங்கே வாழ்வின் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கும் ஒரு பெருமை மிகு முயற்சியாக ‘சதிர்- நாட்டியத்தின் மூதாய்’ கலைநிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பயிற்சிப் பட்டறையினை முதுபெரும் சதிர் ஆட்டக் கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணம்மாள் ஒருங்கிணைத்துள்ளார். தன் 88வது அகவையில், இனிய குரல் வளத்தோடு, பழம் பாடல்களைப் பாடும் சதிராட்டக் கலைஞர், விராலிமலை முத்துக்கண்ணம்மாள் 1929ம் ஆண்டில் ஆடல் பாடல்களை நன்கு கற்றறிந்து பயிற்றுவிக்கும் நட்டுவனார் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே நட்டுவனார் ஆகிய தம் தந்தையாரிடமும் பாட்டியாரிடமும் பாடல், ஆடல், சதிர் ஆட்டக்கலை உள்ளிட்ட அனைத்து கலைகளையும் நுட்பமாகக் கற்றுத்தேர்ந்து, விராலிமலை முருகன் கோவிலிலும், புதுக்கோட்டை சிவன் கோவிலிலும் தேவரடியாராக ஆடியும், பாடியும் வந்தவர். தமது முப்பதாம் அகவையிலிருந்து தாம் ஆடுவதை நிறுத்திவிட்டாலும், தன் சேமிப்புகள் அத்தனையையும் இழந்துபோனாலும், தன் கலையின் மீது தீராதாகத்தோடு இயங்கி வருபவர்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kavi arunasalam said:

எம்ஜிஆரின் ரிக்ஷாகாரன் படத்தில்பம்பை உடுக்கை கொட்டி பரிவட்டம் ....” என்றொரு பாடல் இருக்கிறது. அந்தப் பாடலின்  இடையில் உள்ள வரிகள் இவை

(ஆண்)

ஏழ் எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு

வாழாம வாடுறாங்க ரோட்டுல நின்னு

அந்த வாட்டத்த தீர்பதற்கு கூறனும் ஒண்ணு

(பெண்)

கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து

படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே

பின்னாலே அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே

சொல்லப்பட்டது இந்தியாவிற்கு,  மிகவும் வறிய,  அபிவிருத்தி அடையாத,  மக்கள் தொகைப் பெருக்கம் கூடிய குறிப்பிட்ட காலத்திற்க்கு முந்திய இந்தியாவிற்கு. 

நாமோ அழியும் நிலையில் இருக்கும் ஒர் இனம்.  இரண்டையும் ஒப்பிடுதல் சரியாகப் படவில்லை 

Edited by Maharajah
சொற்பிழை

Share this post

Link to post
Share on other sites

வல்வெட்டித் துறை நகராட்சி சபையின், அறிவிப்பு பாராட்டத்  தக்கது.
ஈழப் போரில்....  போராளிகள் உட்பட,  மூன்று லட்சத்துக்கு  மேற்பட்ட..   
தமிழ் மக்களை, இழந்து விட்டோம். 

ஆறு  லட்சம்,   மக்கள்.... புலம்  பெயர்ந்து விட்டார்கள்.
அவர்களின்... பிள்ளைகளையும்  சேர்த்தால், 
நான்கு லட்சம்  அளவில் வரும் என நினைக்கின்றேன்.

மொத்தமாக பார்த்தால்... 13 லட்சம்  தமிழ் மக்களை,  ஈழ மண்... இழந்து விட்டது.
அந்த... இடத்தை, ஏற்கெனவே... முஸ்லீம்களும், சிங்களவர்களும்.. 
அபகரித்துக் கொண்டு வருகின்றார்கள்.

அந்த வெள்ளத்தை... தடுத்து நிறுத்த, 
இந்தத் திட்டம், கை  கொடுக்கும் என்பது நிச்சயம்.

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

10 ஆயிரம் ரூபாய்க்கு தமிழர்கள் ஒரு போதும் நாலாவது பிள்ளை பெற மாட்டார்கள் அது பெற்றார் என்ற தமிழர்களது பெருமதிப்புக்குரிய வாழ்க்கையை கேலியாக்கிவிடும் இந்த மதிப்பை பெரிதும்   பாதுகாப்பவர்கள்  தமிழர்கள்.

ஆனால் ஆனால் மாறாக மற்ற இனத்த வரை தூண்டி எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்றே தோன்றுகின்றது

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

10 ஆயிரம் ரூபாய்க்கு தமிழர்கள் ஒரு போதும் நாலாவது பிள்ளை பெற மாட்டார்கள் அது பெற்றார் என்ற தமிழர்களது பெருமதிப்புக்குரிய வாழ்க்கையை கேலியாக்கிவிடும் இந்த மதிப்பை பெரிதும்   பாதுகாப்பவர்கள்  தமிழர்கள்.

ஆனால் ஆனால் மாறாக மற்ற இனத்த வரை தூண்டி எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்றே தோன்றுகின்றது

விசுகு.... 10, 000  ரூபாய்க்கு,  ஆசைப் பட்டு,  நாலாவது பிள்ளையை... 
பெற்றுக்   கொள்ள, ஒரு தம்பதியினருமே.... விரும்ப மாட்டார்கள். 

இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால்.... ஒரு பிள்ளையை, பெற நினைத்தவர்கள், இரண்டு பிள்ளையுடனும்,
இரண்டு பிள்ளையை... பெற நினைத்தவர்கள்... மூன்று  பிள்ளைகளுடனும் இருப்பார்கள். :)

######   #####   ######  ######   #####   ######

மாற்று இனத்தவர்கள்..... ?

1958´ல் அகிம்சை வழியில்...  சத்தியாக் கிரகம்  இருந்த போதே... அடாவடி காட்டியர்வர்கள்.

தனியே... ஆயுதம் ஏந்தி போராடிய போது, 11 நாடுகள் கூட்டு சேர்ந்து அழித்தார்கள்.  

இனியும்.... இதனை நினைத்து, கவலைப் பட வேண்டாம். 

போராடி.... தோற்றோம், என்ற பெருமையுடன் வாழ்வோம்...  விசுகு. 

  • Like 2
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Jude said:

“சதிராட” என்ற சொல் உங்களுக்கு வேதனையளிக்கிறது என்றால், நீங்கள் தமிழ் அறிவை மேம்படுத்த வேண்டிய தேவை வந்திருப்பது தெரிகிறது. தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள சபதம் செய்து கொள்வதற்கு  மாவீரர் மாதம் மிகவும் பொருத்தமானது.

சதிராட்டம் நல்ல சொல்லாக இருந்தாலும் ஈழத்தில் நல்ல அல்லது புனித சொல்லாக பொதுவில் பாவிப்பதில்லை. .
அது சந்தியிலை நிண்டு சதிராடுது என நையாண்டி நகைச்சுவைக்கு மட்டுமே அந்த சொல்லை  பயன்படுத்துவர்.

சரி......விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய பெண்கள் போராட போனார்களா  அல்லது சதிராட(நடனம்) போனார்களா? :cool:

இந்த கேள்விக்கு விளக்கு பிடிப்பவர்களும் பதிலளிக்கலாம். 😎

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, விசுகு said:

10 ஆயிரம் ரூபாய்க்கு தமிழர்கள் ஒரு போதும் நாலாவது பிள்ளை பெற மாட்டார்கள் அது பெற்றார் என்ற தமிழர்களது பெருமதிப்புக்குரிய வாழ்க்கையை கேலியாக்கிவிடும் இந்த மதிப்பை பெரிதும்   பாதுகாப்பவர்கள்  தமிழர்கள்.

ஆனால் ஆனால் மாறாக மற்ற இனத்த வரை தூண்டி எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்றே தோன்றுகின்றது

விசுகு, 

நீங்கள் சிறிது ஆழமாக சிந்தித்து பாருங்கள். உண்மையை நிச்சயம் உணர்வீர்கள். போதுமானவன் மக்கள் கூட்டம் இல்லாமல் போராடத்தான் முடியுமா அல்லது போராடி கிடைக்கும் மண்ணை பாதுகாக்கவும் முடியுமா ? 

2 minutes ago, குமாரசாமி said:

சதிராட்டம் நல்ல சொல்லாக இருந்தாலும் ஈழத்தில் நல்ல அல்லது புனித சொல்லாக பொதுவில் பாவிப்பதில்லை. .
அது சந்தியிலை நிண்டு சதிராடுது என நையாண்டி நகைச்சுவைக்கு மட்டுமே அந்த சொல்லை  பயன்படுத்துவர்.

சரி......விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய பெண்கள் போராட போனார்களா  அல்லது சதிராட(நடனம்) போனார்களா? :cool:

இந்த கேள்விக்கு விளக்கு பிடிப்பவர்களும் பதிலளிக்கலாம். 😎

ஐயா நான் விளக்கு பிடிப்பவன்தான் ஏனென்றால் கொஞ்சமாவது வெளிச்சம் பரவட்டும் என்கின்ற தூய நோக்குடன்  விளக்கு பிடிப்பவன்.  தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த தமிழில் புலமை மிக்கோரை கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்.  

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Maharajah said:

விசுகு, 

நீங்கள் சிறிது ஆழமாக சிந்தித்து பாருங்கள். உண்மையை நிச்சயம் உணர்வீர்கள். போதுமானவன் மக்கள் கூட்டம் இல்லாமல் போராடத்தான் முடியுமா அல்லது போராடி கிடைக்கும் மண்ணை பாதுகாக்கவும் முடியுமா ? 

ஐயா நான் விளக்கு பிடிப்பவன்தான் ஏனென்றால் கொஞ்சமாவது வெளிச்சம் பரவட்டும் என்கின்ற தூய நோக்குடன்  விளக்கு பிடிப்பவன்.  தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த தமிழில் புலமை மிக்கோரை கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள்.  

எனக்கு தெரிந்ததை/ ஊர்களில் இருக்கும் வழக்கத்தை நான் எழுதுகிறேன். அது உங்களுக்கு எங்கேயும் முட்டுகின்றதா? 

உங்களின் மறு பெயர் விளக்கு பிடிப்பவனா? 😜

Share this post

Link to post
Share on other sites
On 11/21/2019 at 5:58 PM, வல்வை சகாறா said:

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று குழந்தைக்குமேல் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா பத்தாயிரம் ரூபா நிதி வழங்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எந்த ஊக்குவிப்பும் இல்லாமலே டசின் கணக்கிலை பெள்ளை பெத்த சமுதாயத்துக்கு காசைக்காட்டி பிள்ளை பெற வைக்கவேண்டிக்கிடக்கு. ஒரு பரப்பு காணி இல்லாட்டிலும் அங்கினேக்கை ஒரு சின்ன கொட்டிலை கட்டி அதுக்கை 10,12 சீவன்கள் சந்தோசமாய் சீவிச்ச காலமெல்லாம் மலையேறிப்போச்சுது. அந்த குபேர குடும்பங்களை பாத்து நக்கலடிச்ச கூட்டங்கள்  இப்ப........வேண்டாம் அதைப்பற்றியெல்லாம்  பப்பிளிக்கிலை பேசப்படாது.😎

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்..... பிள்ளைப்பெறுவுக்கு காசு குடுக்கிறதை விட....பிறந்த பிள்ளை 10,15 வயது வரும் மட்டும் படிப்புச்செலவு,உடுப்புச்செலவுக்கெண்டு மாதாமாதம் கொஞ்ச காசு குடுத்தால் நல்லாயிருக்குமெண்டு நான் நினைக்கிறன்.

  • Like 1
  • Thanks 2

Share this post

Link to post
Share on other sites