• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

மாவீரர் நிகழ்வுகள் 2019

Recommended Posts

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!    தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்!

ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்!  

ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!  ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்!

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்!

 

மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி   வதம் செய்யும் ஆட்சி தன்னை..

உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்..

உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்….

சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்!

(மாவீரர்….)

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள்!

தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீசிய இளம் தென்றல்கள்!

விடுதலை தளிரில் மீன்கள் வெற்றிக்கோர் ஊக்கம் நல்கும் விடுதலை ஆண்பெண் பொன்கள்!

பற்றுகோடாகி எங்கள் பலமாகி நிற்கும் தூண்கள்! பலமாகி நிற்கும் தூண்கள்!

smfhk_159581.jpg

Share this post


Link to post
Share on other sites

டென்மார்கில் Aarhus நகர பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு!

தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூரும்பு னித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது .

முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன இடம்பெற்றன.

அனைத்தும் மாவீரர்களின் தியாகத்தையும் ,அவர்களின் வீரச்செயல்களையும் உணர்த்துவகையாக அமைந்துள்ளன. எமது தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “ தேச விடுதலைப்பணியைத்தீ விரமாக முன்னெடுத்து வருகின்ற புலம் பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டு இருக்கிறார். இளம் சமுதாயம் தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

மாவீரர்களின் கனவை எல்லோரும் சேர்ந்து நனவாக்க வேண்டும். அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு சொல்லவேண்டிய கடமையும் இளையோர்களாகிய எமது கையில் தான் உள்ளது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.

சத்திய இலட்சியத்தீயில் தம்மையே அழித்து சரித்திரமானவர்களின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம். Aarhus பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து 25.11.19 அன்று Odense பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக மாணவர்களின் மாவீர வார நிகழ்வைத் தொடர்ந்து எமது தேசத்தை காக்க எழுந்த வீரர்கள் சாவின் பின்பும் வாழ்கின்றனர்.
மகத்தான சாதனை படைத்த மாவீரர்களாக துயில்கின்றனர்

எமக்கெல்லாம் வழிகாட்டி விழிமூடிய மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27.11.19 அன்று Herning ,Holbæk நகரங்களில் நடைபெற உள்ளது.

“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Aarhus பல்கலைக்கழக மாணவர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், மெழுகுவர்த்திகள்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், உட்புறம்

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

all-au-660x330.jpg

மாவீரர் நாள் நிகழ்வு அறிவித்தல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2019ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் புதன்கிழமை (27 – 11 – 2019) அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே, இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது. எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், 20 – 11 – 2019 இற்கு முன்பதாக தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் இடங்கள்
—————————————————————-

மெல்பேர்ண்
Springvale Town Hall
397 Springvale Road Springvale VIC 3171
06.00pm – 08.00pm
Contact: 0433 002 619

சிட்னி
Newington Reserve
Holker St Silverwater
NSW 2128
06.00pm – 08.00pm
Contact: 0424 757 814

பேர்த்
Madington Community Centre
19 Alcock St Maddington
WA 609
06.00pm – 08.00pm
Contact: 0469 823 269

பிரிஸ்பன்
23 Station Avenue
Darra QLD 4076
06.00pm – 08.00pm
Contact: 0450 120 818

அடேலையிட்
77 Philip Highway
Elizabeth South SA 5112
06.00pm – 08.00pm
Contact: 0470 562 942 & 0470 588 911

கான்பரா
Weston Creek Community Centre
Parkinson Creek ACT 2611
06.00pm – 08.00pm
Contact: 0424 157 366 & 0450 992 127

இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா
https://www.facebook.com/tccaustralia/

Share this post


Link to post
Share on other sites

சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் அமைந்துள்ள அருள் மிகு சிவன் ஆலயத்தில் மிகவும் எழுச்சியுடன் (22.11.2019)இடம்பெற்ற மாவீரர் நினைவாலய பூசை வழிபாடுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this