Jump to content

’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன்

பொன்ஆனந்தம்

“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார்.   

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,  

நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள்  தொடர்பாக, தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தனது முடிவை,  ஜனநாயக ரீதியாக எதிர்காலத்தில் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நாம் யாரையும் ஆளமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம். எமது மக்களின் நிலைமைக் குறித்து பேசினோம். எமது மக்களின் நீண்டகால கோரிக்கைத் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு குறித்து எமது மக்களிடம் நாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மக்கள் இம்முறை ஒருங்கிணைந்து அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

“எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில், நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

“எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும். அதன்மூலம் தமது நிலைப்பாட்டை உறுதி செய்யவேண்டும். மக்கள் ஒன்றுபட்டு தக்களது உரிமைசார்ந்த கோரிக்கை தொடர்பாக ஓரணியாக நிற்கின்றார்கள் என்பதை, சர்வதேசம் அறிவதுடன், அவர்கள் ஜனநாயக முடிவுகளுக்கான ஆதரவையும் வழங்க முன்வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததகக-ரணல-இடமளகக-வணடம/175-241344

Link to comment
Share on other sites

'தன் மக்களின் துயர் துடைக்க வழியில்லை மூஞ்சூறு சயித்தையும் கட்டிக்கொண்டதாம்...'  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

’சஜித்துக்கு ரணில் இடமளிக்க வேண்டும்’ - இரா.சம்பந்தன்

பொன்ஆனந்தம்

“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார்.   

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,  

நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள்  தொடர்பாக, தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தனது முடிவை,  ஜனநாயக ரீதியாக எதிர்காலத்தில் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாம் யாரையும் ஆளமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம். எமது மக்களின் நிலைமைக் குறித்து பேசினோம். எமது மக்களின் நீண்டகால கோரிக்கைத் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு குறித்து எமது மக்களிடம் நாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மக்கள் இம்முறை ஒருங்கிணைந்து அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

“எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில், நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

“எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும். அதன்மூலம் தமது நிலைப்பாட்டை உறுதி செய்யவேண்டும். மக்கள் ஒன்றுபட்டு தக்களது உரிமைசார்ந்த கோரிக்கை தொடர்பாக ஓரணியாக நிற்கின்றார்கள் என்பதை, சர்வதேசம் அறிவதுடன், அவர்கள் ஜனநாயக முடிவுகளுக்கான ஆதரவையும் வழங்க முன்வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜததகக-ரணல-இடமளகக-வணடம/175-241344

மிச்சத்தையும் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கூட்டமைப்புக்கும் அடுத்த தலைமை வர நீங்களும் வழிவிடோணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

ஐயா கூட்டமைப்புக்கும் அடுத்த தலைமை வர நீங்களும் வழிவிடோணும்!

இந்த லெக்சனோடை ஒதுங்கும் எண்டு பார்த்தன்....ஒரு அசுமாத்தத்தையும் காணேல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் சாணக்கியம்.. சாம்பிராணி..ப்பா. கேட்டுப் பிரமியுங்கள் மக்களே. 

Link to comment
Share on other sites

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர்.

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக்கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத்தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். 

என்னென்ன அக்கிரமங்கள்?

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

என்னென்ன அக்கிரமங்கள்?

அம்பனை அதை பற்றி பூரண விளக்கம் ஒன்றை தரவுள்ளார்.

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா,அவருக்கு வழி விடவேண்டும் இவருக்கு வழி விடவேண்டும் என்று சொல்லும் நீங்கள் தமிழர் தரப்புக்குள் அதை முன்னுதாரணமாக செய்து காட்டலாமே?

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

என்னென்ன அக்கிரமங்கள்?

யாருக்கும் நன்மை செய்யாதவரோடு கூட்டுச் சேர்ந்த தமிழ்க் கூட்டமைப்பை...

19886.jpg
இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன இப்போது முன்னாள் ஜனாதிபதி என விழிக்கப்படுகின்றார். மகிந்த ராஜபக்ச ­வோடு போட்டியிட்டு ஜனாதி பதித் தேர்தலில் வெற்றி பெற்றவர் மைத்திரி பால சிறிசேன.
 
ஜனாதிபதித் தேர்தலில் என்னோடு போட்டி யிட இருக்கின்ற அந்த வீரனை அறிய ஆசைப் படுகிறேன் என மகிந்த ராஜபக்ச ­ கர்ச்சித்த போது அவர் அருகிலேயே நின்றவர் மைத்திரி பால சிறிசேன. மிகுந்த துணிச்சலும் நேர்மையும் அவரிடம் இருந்தன. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர் பில் நேரிய முறையில் சிந்தித்தவர்.
எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டியது.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்துக்கு வருகின்றபோதெல்லாம் கொழும் பில் இருந்து ஓடிவரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜ யத்தின் போதெல்லாம் எட்டவே நின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லாம் செய்வார் என்பதுபோல் கூட்டமைப்பு நடந்து கொண்டதைப் பார்க்கும்போது எங்கள் இனத் துக்கான மிகப்பெரும் கேடு இதுவென்று உண ரத் தோன்றும். அதுமட்டுமன்றி வடக்கு மாகாண முதல மைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஓரங்கட்டுவதில் கூட்டமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் செய்த கூட் டுச்சதியை என்னவென்று சொல்வது.
 
ஆம், தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில்; வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் நான் கதைக்கமாட்டேன். முன்பும் கதைத்ததில்லை. இனியும் கதைக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் கூறு கிறார். இதன்போது செவ்வி கண்ட ஊடகவிய லாளர் அதிர்ந்து போனார். ஒரு பிரதமர் என்ற வகையில் நீங்கள் வட மாகாணத்தின் முதலமைச்சரோடு கதைக் காமல் எங்ஙனம் வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று அந்த ஊடகவிய லாளர் கேட்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கள் இருக்கிறார்கள். அவர்களோடு கதைத்து அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்கிறார் ரணில்.
 
இதன்போதாவது எங்கள் இனத்துக்கு ஈனம் இழைக்கப்படுகிறது என்பதைக்கூட உணரமுடியாதவர்களாக நாம் இருந்தோம்.
 
அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் ரணில் செய்த அக் கிரமங்கள், சேர்ந்து பயணிப்போம் என்ற சத் தியத்துக்கு இழைத்த பெரும் துரோகமாகும். மைத்திரிபால சிறிசேனவோடு மட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரம் முடியவில்லை. அது சஜித் பிரேமதாஸவையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. எனவே இத்தகையவரோடு கூட்டு நின்ற நம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எப்பேற் பட்டவர்கள் என்பதை இனிமேலாவது நம் தமிழினம் உணர்ந்தாக வேண்டும்.
 
நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் - 4 DEC2018

ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை  நியமித்தது எதேர்ச்சையான நிகழ்வு அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்து வந்த கசப்பான அனுபவங்களின் விளைவாகும்.

ரணில் விக்கிரமசிங்க தனக்கு விருப்பமான முறையில் மிக மோசமான நிலைக்கு ஆட்சியை கொண்டு சென்றார். ஒரு கட்டத்தில் என்னையும் அவர் கெடுத்துவிட்டார்.

மைத்திரி, எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை!  05 AUG

‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற்றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம்.

இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று எங்களுக்கும் தெரியாமல் இருகின்றது.

Link to comment
Share on other sites

13 minutes ago, ampanai said:

நீங்கள் எழுதியது உங்கள் சொந்தக் கருத்து என நினைத்து விட்டேன்.

வலம்புரி ரணில் + தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து விக்கியரை கஷ்டப்படுத்தினர் என்றும் வடக்குக்கு மைத்திரி வரும் போது கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை என்றும் எழுதி விட்டு பின் மைத்திரிக்கு ரணில் அக்கிரமங்கள் செய்தார் என்று போகின்ற போக்கில் எழுதியுள்ளனர். அவர்களும் என்னென்ன அக்கிரமங்கள் செய்தனர் குறிப்பிடவில்லை.

ஏற்கனவே பெரும் கடனில் மிக மோசமாக தள்ளாடிக் கொண்டிருந்த இலங்கை அரசில் காத்திரமாக எதனையும் செய்யும் திறனற்று ரணில் அரசு தள்ளாடிக் கொண்டு இருக்கும் போது திடீரென மகிந்தவை 2018 ஒக்டோபரில் பிரதமராக்கி அரசியல் கூத்தாடி எல்லாவற்றையும் நாசமாக்கியவர் மைத்திரி. அதன் பின் ஏப்ரலில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான விவரங்களை பெற்றும் பாதுகாப்பு சபையைக் கூட கூட்டாமல் இருந்தவரும் அவர் தான். இவற்றை எல்லாம் விட அடுத்த நாள் அரசியல் தீர்வு திட்டத்தின் நகலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்த போது அதை குழப்பியடிக்கவே மகிந்தவை ஒரே நாளில் பிரதமராக்கியவர் மைத்திரி.

இவை எல்லாம் அக்கிரமங்களின் வரிசையில் வராது போல

பொதுவாக ரணிலையும், மைத்தியையும் ஒப்பிட்டால் ரணில் நரிதான் அதில் சந்தேகமில்லை. ஆனால் மைத்திரியோ நரியைவிடப் பயங்கரமான ஓநாய். சனாதிபதியின் ஆதரவில்லாமல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெறச் சாத்தியமில்லை. அந்த இனவழிப்பு வேளையில் மகிந்தா பொறுப்புகளை மைத்திரியிடம் கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். முள்ளிவாய்காலில் தமிழர்களை மிகவும் கொடூரமாக அழித்தது கோத்தபாய என்று நாங்கள் சாடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் சனாதிபதிப் பொறுப்பிலிருந்த மைத்திரியின் ஆதரவும், அனுமதியும் இல்லாமல், கோத்தபாயவால் தமிழின அழிப்பை நடாத்தியிருக்க முடியாது.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.