Sign in to follow this  
ரதி

கோத்தாவின் வெற்றி

Recommended Posts

"அலரி மாளிகையைவிட்டு வெளியேறமாட்டேன்" என்று அடம்பிடித்துக்கொண்டு பிரதமர் பதவியை தனது கழுத்துப்பட்டியைப்போல கொழுவியவாறு கடந்த ஒக்டோபர் மாதம் ஜனநாயகம் பேசிய ரணிலை -

இன்று, அதே ஜனநாயகத்தை சாட்டைபோல வீசி அந்த அலரி மாளிகையிலிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.

விடுதலைப்புலிகள் உட்பட தன்னோடு உறவாடிய எல்லாத்தரப்பிற்குள்ளேயும் வெடி வைத்து தனது பிரித்தாளும் சூட்சுமங்களை அரங்கேற்றி விளையாடிய ரணிலுக்கு "பதிலுபகாரமாக" அவரது ஐக்கிய தேசிய கட்சியை சல்லி சல்லியாக உடைத்து பொறுக்கி எடுத்துக்கொண்டு போகச்சொல்லியிருக்கிறார்கள் ராஜபக்ஷக்கள்.

"ஒட்டுமொத்த கிரிமினல்களும் கிரீடம் சூடிக்கொண்டு நின்று இந்த நாட்டை ஆளப்போவதாக அறைகூவுகிறார்களே" - என்று ஆளுக்காள் முழியை பிதுக்கினாலும், ராஜபக்ஷக்களின் இந்த வெற்றியை இலகுவாக எடைபோட்டுவிடமுடியாது.

இதன் பின்னணியில் மகிந்த என்ற "சிங்களவர்களின் பிரபாகரன்" கடந்தவந்த பாதையும் அதற்காக அவர் போட்ட கணக்குகளும் உலகளாவிய ரீதியில் மிகப்பெறுமதிவாய்ந்த அரசியல் சூத்திரங்கள். அவற்றை அணுகுவதும் அவிழ்ப்பதும் அவர்போன்ற ஒரு சிலரால் மாத்திரமே முடியும்.

அரசியலில் விழ விழ எழுந்துவிடக்கூடிய அசாத்தியமான திறமைகொண்டவர் மகிந்த என்பது அவரது வரலாறு அறிந்தவர்கள் தெரிந்திருக்கக்கூடும்.

ஒரு காலத்தில், சிறிலங்கா சுதந்திர கட்சி என்ற பலமான அமைப்பு ஜேஆரினால் கொடூரமாக துண்டாடப்பட்டு, சிறிமாவின் குடியுரிமை பறிக்கப்பட்டு, அந்தக்கட்சியிலிருந்தவர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அடைக்கலம் தேடினால்தான் தலை தப்பும் என்றளவுக்கு கட்சி தாவி அந்தப்பராம்பரிய கட்சியே அம்மணமாக நின்றபோது, அப்போதிருந்து அந்தக்கட்சிக்கு ஆடை கட்டத்தொடங்கியவர் மகிந்த.

கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை மீளக்கட்டியெழுப்பி, எங்கெங்கோ இருந்தவர்களையெல்லாம் கட்சிக்குள் கொண்டுவந்து, தன்னை முன்னிறுத்தாமல் கட்சியை முன்னிறுத்திக்கொண்டு அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர். பின்னர், சந்திரிகா ஜனாதிபதியானபோது அவரது அரசில் அமைச்சராகி, தொடர்ந்தும் "கட்சிக்காக" என்ற விடயத்தில் உறுதியாக நின்றுகொண்டவர்.

அரசியலின் அடிமுதல் நுனிவரை தெரிந்த அந்த உழைப்புத்தான் அவரை 2005 இல் நாட்டின் ஜனாதிபதியாக்கியது.

2015 தோல்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. பிடரியில் அடித்து கிரீடத்தை பறித்துவிட்டதைப்போல திகைத்துப்போயிருந்தார். பெருந்தோல்வியோடு தலை கவிழ்ந்தபடி சொந்த ஊருக்கு சென்றபோது, சிங்கள மக்கள் சாரி சாரியாக பஸ்களில் அவரிடம் சென்றார்கள். எல்லோருக்கும் பாற்சோறு கொடுத்துவிட்டு "தன்னை தமிழர்கள் தோற்கடித்துவிட்டார்கள்" - என்று அவர்களது இதயத்தில் இறங்கி நின்று பேசினார்.

அன்றைக்கு அவர் முடிவெடுத்தாரோ இல்லையோ, சிங்கள மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள், தங்கள் தலைவனை மீண்டும் அரியணை ஏற்றுவதென்று.

தோல்வியின் வலி உள்ளே அவரை உருட்டியபடியே இருந்தது. 70 வயதிலும் பாதயாத்திரை போனார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் கோமளிக்கூட்டங்களான விமல் வீரவங்ஸ போன்றோருடன் எல்லாம் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் போனார்.

தான் ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் தனக்கு எழுந்து நின்ற அந்த நாடாளுமன்றத்தில், மற்றவர்கள் வரும்போது அவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி என்ற  

நினைப்பை அப்படியே மூட்டைகட்டி வைத்துவிட்டு நான்கு வருடங்களாக ஒரு இலக்கோடு திட்டத்தை வகுத்துக்கொண்டே வந்தார்.

வன் சக்திகளை டீல் பண்ணுவதற்கு கோத்தாவை இறக்கிவிட்டார். சிங்கள லிபரல்களை டீல் பண்ணுவதற்கு சாமல் ராஜபக்ஷவை இறக்கவிட்டார். "தக்க வகையில்" டீல் பண்ணவேண்டிய பெரும் பெரும் டீல் மண்டைகளை கழுவுவதற்கு பசிலை இறக்கிவிட்டார். சிறுபான்மையினரோடு டீல் பண்ணுவதற்கு மகன் நாமலை இறக்கிவிட்டார். திட்டங்களை புதுப்பித்துக்கொண்டேயிருந்தார்.

தனக்கு முன்னாலிருந்து எல்லா வேலிகளையும் எல்லா முட்களையும் இஞ்ச் இஞ்சாக தெரிந்துவைத்திருந்த காரணத்தினால், எங்கு குனியவேண்டும் எங்கு குதிக்கவேண்டும் என்று நேர்த்தியாக தெரிந்து வைத்திருந்தார்.

2015 இல் தோற்றார்.
2018 இலும் ஒக்டோபர் புரட்சியில் தோற்றார்.

ஆனால், 2019 இல் சொல்லிவைத்தது போல அடித்தார்.
ஆட்சியை பிடித்தார்.

அதுவும் சும்மா வெற்றியில்லை வெற்றிலையில் மைபோட்டு பிடித்த வெற்றியும் இல்லை.

இலங்கையின் வரலாறு காணாத சாதனை மிகுந்த வெற்றி. அதுவும் ஒட்டுமொத்த சிங்களவர்களையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டு, தமிழர்களை கசக்கி எறிந்த வெற்றி. 

உண்மையை சொல்லப்போனால், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிங்கள படைகளினால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள். 2019 ஜனாதிபதி தேர்தலில்தான் சிங்கள மக்களினால் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

இவ்வளவு விடயங்களையும் வாசிக்கும் ஒரு தேசியக்குஞ்சுக்கு எனக்கு மண்டையிலேயே வெடிவைக்கவேணும் போலத்தானிருக்கும். ஆனால், இந்த உண்மைவரலாற்றில் இருக்கின்ற உழைப்பையும் அரசியல் சூழ்ச்சிகளையும் அரசியல் பாதைகளையும் பயிலாதவரை தமிழர்கள் "வீடிழந்த விக்னேஸ்வர்களாகத்தான்" அறிக்கைவிட்டுக்கொண்டிருக்கவேணும்.

வெறுமனே வீரத்தமிழர்கள், சூரத்தமிழர்கள் என்று நாக்கை வெளியில் தள்ளிக்கொண்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடித்திரிவதல்ல வீரம். வீழ்ந்தால் எழுவதும், சமயத்தில் விட்டுக்கொடுப்பதும்கூட வீரம்தான்.

தமிழர்கள் போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளி என்று கடந்த பத்து வருடங்களாக குடல் தெறிக்க கத்தியவனை இன்று சிங்கள தேசம் தனது தலைவன் என்று அறிவித்துவிட்டது. "உங்களுக்கு கண்களுக்கு கொடூரமான குற்றவாளியாக தெரிபவன்தான் எங்களது தலைவன்" என்று இன்று கோத்தபாய உட்பட அனைவருக்கும் வெள்ளையடித்து வெளியே  

விட்டிருக்கிறது சிங்கள தேசம். தமிழ் மக்களின் முகங்களில் ஓங்கி அறைந்திருக்கும் இந்த ஆணையிலிருந்து வெளியே வருவதென்றால் -

- ஒரே ஒரு வழிதானுள்ளது.

- அதுதான் மகிந்த வழி.

 

மு.புத்தகத்தில் சுட்டது 
 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

"சிங்களவர்களின் பிரபாகரன்"

இதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா? ஏன் பிரபாகரனுடன் ஒப்பிடுகின்றார்கள்? முக நூல் பக்கங்களிலும் கோத்தாவை சிங்கள பிரபாகரன் என விளிக்கின்றார்கள்.

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, குமாரசாமி said:

இதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா? ஏன் பிரபாகரனுடன் ஒப்பிடுகின்றார்கள்? முக நூல் பக்கங்களிலும் கோத்தாவை சிங்கள பிரபாகரன் என விளிக்கின்றார்கள்.

தலைவருக்கு ஒன்று கிடைக்க வேண்டுமானால் அதை எப்படியாவது போராடி எடுத்து விடுவாராம். இறுதி யுத்தத்தை தவிர ....கோத்தாவும் இதே போன்ற குணத்தை உடையவராம்...இது வரை கோத்தாவுக்கு தோல்வியே கிடைக்கவில்லையாம்.
இருவரும் ஒன்று கிடைப்பதற்காக எந்த வித எல்லைக்கோ அல்லது முயற்சிக்கோ போவார்கள்.
இருவரும்  ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால்,யார் சொன்னாலும் நிறுத்த மாட்டார்கள் 
இருவருக்கும் பேச்சு வார்த்தைகள் பிடிக்காது.
செய் அல்லது செத்துமடி என்பது தான் இருவரது கொள்கையும் 
கோத்தாவுக்கு பின் புலம் அதாவது சகோதர சப்போட் முக்கியமாய்  இருந்தது. உலக நாடுகள் இருந்தது.
தலைவருக்கு இது எதுவும் இல்லை  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • விக் நேரம் கிடைக்கும் போது இந்த காணொளிகளை பாருங்கள்.  Indigenous Australians Are Being Imprisoned At A Startling Rate Are Australian Laws Biased Against Aborigines? (2000)      
  • ஆல்டா நகருக்கு அருகே சக்திவாய்ந்த நிலச்சரிவுக்குப் பின்னர் நோர்வேயில் எட்டு வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவை ஒரு உள்ளூர் குடியிருப்பாளரான ஜான் எகில் பக்கெடால் படமாக்கியுள்ளார் - இழந்த வீடுகளில் ஒன்று அவருக்கு சொந்தமானது - மேல் உள்ளது அவரின் ஒளி தொகுப்பு . இணைப்பு பெருமாள் https://www.theguardian.com/world/video/2020/jun/04/landslide-in-norway-sweeps-houses-into-the-sea-video?CMP=fb_gu&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR2iz_dBalPoyA48ZVC3TbZWT8bPKzklIxAe5UGcwrSy4FZRZVu4VXhExIo#Echobox=1591308230
  • Excellent Post Praba.  Much appreciated.  I will bother you in the future if I need any help. 
  • Tholar Balan 16 நிமிடங்கள்  ·    •கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்! செய்தி - புத்தரின் போதனைகள் மூலம் கொரோனோவை வெற்றி கொண்டுள்ளோம் - பிரதமர் மகிந்த ராஜபக்சா. நம்பிட்டோம் பிரதமர் அவர்களே! அப்படியே அந்த கிளிநொச்சிவரை வந்தவிட்ட வெட்டுக்கிளி கூட்டத்தையும் புத்தரின் போதனைகள் மூலம் விரட்டிவிடுங்கள். அடுத்து, மலையகத்தில் நேற்றும் ஒரு பெண் குளவிக்கடியால் இறந்துள்ளார். அந்த குளவிகளையும் கொஞ்சம் புத்தரின் போதனைகள் மூலம் கலைத்து விடுங்கள். தமிழர்களின் கிழக்கு மண்ணில் தொல்பொருள் ஆய்வு செயலணி நியமித்துள்ளீர்கள். அதில் ஒரு தமிழருக்குகூட இடமளிக்கவில்லை. அதற்கும்கூட புத்தரின் போதனைகள்தான் காரணமா பிரதமர் அவர்களே? அடுத்தமுறை இந்தியா சென்று திருப்பதி வெங்கடஜலபதியை வணங்கும்போது உங்கள் நண்பர் மோடிக்கும் புத்தர் போதனைகள் சிலவற்றை கூறிவிடுங்கள். ஏனெனில் அவர் இந்தியாவில் கொரோனோவுக்கு கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இப்ப கடைசியாக கொரோனோவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்.             Tholar Balan 8 மணி நேரம்  ·    கடந்த வருடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயார் ஒருவர் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார். அப்போது அதை அரசியல் நாகரீகம் அற்றது என்று கூறி கண்டித்தவர்கள் இப்போது சுந்தரவள்ளி “அறுத்திடுவேன்” என்று பொதுவெளியில் பேசியதை அறச்சீற்றம் என்று பாராட்டுகிறார்கள். சம்பந்தர் ஜயாவிடம் தேசியக்கொடி பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதையே தவறு என்று கூறியவர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் தேசியகொடி எரிக்கப்படுவதை பாராட்டுகிறார்கள். இந்த அரசியல் நாகரீகம் என்பதுகூட ஈழத் தமிழருக்கு ஒரு வரையறை, உலகத்திற்கு இன்னொரு வரையறை என்பதை நாம் தெரிந்துகொண்ட நாள் இன்று.