Sign in to follow this  
nunavilan

தனித்தமிழ்

Recommended Posts

 

 

#

வடசொல் தமிழ்
1 அகங்காரம் செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்
2 அகசுமாத்து தற்செயல், திடீரெனல்
3 அகதி வறியவன், யாருமற்றவன்
4 அகந்தை இறுமாப்பு, செருக்கு
5 அகம்பாவம் தற்பெருமை, செருக்கு
6 அகராதி அகரவரிசை
7 அகற்பிதம் இயல்பு
8 அகாதன் புரட்டன்
9 அகாலமரணம் முதிராச்சாவு
10 அகாலம் தகாக் காலம்
11 அகிம்சை இன்னா செய்யாமை, கொல்லாமை
12 அகிலம் எல்லாம், உலகு, வையம், நிலம்
13 அகோசரம் அறியொணாதது
14 அகோரம் சினக்குறிப்பு, நடுக்கம்
15 அகோராத்திரம் அல்லும் பகலும்
16 அக்காரம் வெல்லம்
17 அக்கி கண், கொப்புளம்
18 அக்கிரகாரம் பார்ப்பனச்சேரி
19 அக்கிரமம் ஒழுங்கின்மை, முறைகேடு
20 அக்கிராசனம் முதலிருக்கை, தலைமை
21 அக்கிராசனாதிபதி அவைததலைவர், முதல்வர்
22 அக்கினி நெருப்பு, தீ, அனல், எரி, தழல்
23 அக்கினிகாரியம் எரியோம்பல்
24 அக்கினி நட்சத்திரம் தீநாள்
25 அங்க சேட்டை உறுப்பு அசைவு
26 அங்கம் உறுப்பு, எலும்பு, அடையாளம்
27 அங்கவீனன் உடற் கேடன், உறுப்பறையன்
28 அங்கீகரணம் அங்கீகாரம், உடன்பாடு, ஒப்பு
29 அங்குசம் யானைத்தோட்டி, கொக்கி
30 அங்குட்டம் பெருவிரல்
31 அங்குலம் விரற்கடை, விரலளவு
32 அசந்தர்ப்பம் நேரமின்மை, காலத்தவறு
33 அசமந்தம் சோம்பல், மடி, மலைவு
34 அசரீரி உருவற்றது, வானொலி
35 அசம் ஆடு
36 அசல் (இந்துஸ்தானி) முதல், மூலம்
37 அசாக்கிரத்தை விழிப்பின்மை, கருத்தின்மை, அசட்டை
38 அசாத்தியம் அருமை, முடிக்கக்கூடாதது
39 அசீரணம் பசியின்மை, செரியாமை
40 அசுத்தம் அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை
41 அசுபம் நன்மையல்லாதது, தீமை, தீயது
42 அசுவம் குதிரை
43 அஞ்சனம் மை, கறுப்பு
44 அஞ்ஞாதம் மறைவு
45 அஞ்ஞாதவாசம் மறைந்துறைதல்
46 அஞ்ஞானம் அறியாமை, இருள், மருள்
47 அட்சரம் எழுத்து
48 அட்டகம் எண்வகை
49 அட்டகாசம் புரளி
50 அணிமா அணுத்தன்மை
51 அதிகம் மிகுதி
52 அதிகாந்தம் பேரழகு
53 அதிகாரம் இயல், நூற்கூறு, பாடு, ஆட்சி
54 அதிகாரி தலைவன், முதல்வன்
55 அதிசயம் புதுமை, வியப்பு
56 அதிட்டம் செல்வம், நல்வினைப்பயன், நன்னுகர்ச்சி
57 அதிதி விருந்தினன், புதியவன்
58 அதோகதி கீழிறக்கம், பள்ளம்
59 அத்தமனம், அஸ்தமனம் சாயங்காலம், மாலை, மறைவு, அடைவு
60 அத்தம், அஸ்தம் கை
61 அத்தி, அஸ்தி எலும்பு
62 அத்திபாரம், அஸ்திபாரம் அடிப்படை, கடைக்கால்
63 அத்தியட்சன் தலைவன், கண்காணி
64 அத்தியந்தம் மிகுதி, மட்டற்றது
65 அத்தியாயம் படலம், நூற்பிரிவு
66 அத்திரம், அஸ்திரம் அம்பு
67 அத்துவிதம் இரண்டற்றது
68 அநந்தம் அளவின்மை, முடிவில்லது
69 அநர்த்தம் பயனின்மை, கேடு, வேறுபாடு
70 அநவரதம் எப்பொழுதும்
71 அநாகதம் நெஞ்சம்
72 அநாதி முன், பழமை, கடவுள்
73 அநாதை யாருமற்றவன்
74 அநியாயம் முறையின்மை, நடுவின்மை, விலக்கு
75 அநிருதம் பொய்
76 அநீதி முறைகேடு
77 அநுகூலம் கைகூடுதல், பயன், உதவி, நன்மை, துணை
78 அநுக்கிரகம் அருளிரக்கம், அருள்
79 அநுசரித்தல் பின்பற்றல், கைக்கொள்ளல்
80 அநுட்டானம் செயற்பாடு, நடைமுறை
81 அநுட்டித்தல் பின்பற்றல்
82 அநுதினம் நாடோறும்
83 அநுபந்தம் பின்சேர்க்கை, தொடர்ச்சி, அடுத்து யாக்கப்படுவது
84 அநுபவம் பழக்கம், நுகர்ச்சி, அழுந்தியறிதல்
85 அநுபவித்தல் துய்த்தல், நுகர்தல், துவ்வல்
86 அநுபானம் துணைமருந்து, கூட்டுமருந்து
87 அநுபோகம் பழக்கம், வழக்கம், ஆட்சி, நுகர்ச்ச்சி, துய்ப்பு
88 அநுமதி உடன்பாடு, விடை, கட்டளை, ஆணை, ஒப்புதல்
89 அநுமானம் ஐயம், வழியளவை
90 அநேகம் பெரும்பான்மை, பல
91 அந்தகன் கூற்றுவன், குருடன்
92 அந்தஸ்து நிலைமை, ஒழுங்கு, நிலை
93 அந்தம் அழகு, முடிவு, குருடு, ஈறு, கேடு, எல்லை
94 அந்தரங்கம் அருமறை, மறைபொருள், உள்ளம், தனிமை
95 அந்தரம் வான், வெளி, இடைவெளி, துனையின்மை, காலம்
96 அந்தரவாணி வானொலி
97 அந்நியம் அயல், வேறு, வேற்றுமை, பிறிது
98 அந்நியோந்நியம் நெருக்கம், ஒற்றுமை, ஒருவர்க்கொருவர்
99 அபகரித்தல் கவர்தல், கொள்ளையிடல், பறித்தல், வவ்வல்
100 அபகாரம் தீங்கு, பொல்லாங்கு, நன்றியில் செயல்
101 அபசயம் தோல்வி
102 அபத்தம் பொய், தவறு
103 அபயம் அடைக்கலம்
104 அபரஞானம் கருவியறிவு, நூலறிவு
105 அபராதம் ஒறுப்புக்கட்டணம், குற்றம், பிழை
106 அபவிருத்தி குறைவு
107 அபாண்டம் பெரும்பொய், பெரும்பழி, இடுபழி
108 அபாயம், அபாயகரம் பேரிடர், அழிவு, கேடு, துன்பம், இடுக்கண்
109 அபிடேகம், அபிஷேகம் திருமுழுக்கு, புதுப்புனலாட்டு
110 அபிநயம் உள்ளக்குறிகாட்டல், கைமெய்காட்ட்டல், கூத்து
111 அபிப்பிராயம் நோக்கம், எண்ணம், உட்கருத்து, உட்கோள், கொள்கை
112 அபிமானம் பற்று, நேயம், செருக்கு
113 அபிவிருத்தி பெருக்கம், ஆக்கம், வளர்ச்சி
114 அபூர்வம் அருமை, அரிய பொருள்
115 அபேட்சை அவா, விருப்பம்
116 அபேதம் வேற்றுமையின்மை, வேறன்மை
117 அப்பியாசம் பழக்கம், பயிற்சி
118 அப்பிராணி ஏழை, கரவிலான், பேதை
119 அப்பு புனல்
120 அமாபஷம் தேய்பிறை
121 அமாவாசை புதுப்பிறை, பிறை, யுவா
122 அமுது சோறு, அடிசில், இனிமை
123 அம்சம் வகை, அன்னப்புள், காலம், எண், பங்கு
124 அம்பாரம் – குவியல்  
125 அம்பிகை தாய், அம்மை
126 அயோக்கியதை தகுதியின்மை, தகாதது
127 அரம்பை ரம்பை, தெய்வப்பெண், அரிவை, வான்மகள்
128 அரவம் ஒலி, பாம்பு
129 அராகம் விருப்பு
130 அருணோதயம் வைகறை, விடியல், கதிரோன்வருகை
131 அருத்தம், அர்த்தம் பொருள், பாதி
132 அருவம் உருவின்மை, அழகின்மை
133 அர்ச்சனை, அருச்சனை பூவழிபாடு, மலர் தூவிவழிபாடு, பூசை
134 அர்த்தசாமம் நள்ளிரவு
135 அர்த்தநாரீசுரன் மங்கைபங்கன், மாதிருக்கும் பாதியன்
136 அர்ப்பணம் நீரோடுகொடுத்தல், உரிமைப் படுத்தல், ஒப்புவித்தல்
137 அலங்காரம் அழகு, ஒப்பனை, அணி, புனைவு
138 அலட்சியம் பொருட்படுத்தாமை, கருத்தின்மை
139 அலுவா கோதுமைத் தேம்பாகு
140 அவகாசம் ஒழிவு, ஓய்வு
141 அவசரம் விரைவு, பரபரப்பு, சுருக்கு, பதைப்பு
142 அவசியம் முதன்மை, கட்டாயம், இன்றியமையாமை
143 அவதாரம் பிறப்பு, இறங்குகை
144 அவதி துன்பம்
145 அவத்தை நிலை, துன்பம், நிலைமை
146 அவதூறு பழிச்சொல்
147 அவமானம் மானக்கேடு, புகழின்மை, இழிவு
148 அவயம் உறுப்பு
149 அற்பம் சிறுமை, அணு, புன்மை
150 அற்புதம் புதுமை, வியப்பு, அருள்நிகழ்ச்சி, அரியசெயல்
151 அனுபவம் துய்ப்பு
152 அனுபோகம் நுகர்ச்சி
153 அன்னசத்திரம் ஊட்டுப்புரை
154 ஆகாசம் விண், வெளி, வான், விசும்பு, வானம்
155 ஆகாயவிமானம் வானவூர்தி
156 ஆகாரம் உணவு, அடிசில்,
157 ஆகுலம் – ஆரவாரம், வருத்தம்  
158 ஆக்ஞேயம் புருவநடு
159 ஆசங்கை ஐயம
160 ஆசமனம் குடித்தல்
161 ஆங்காரம் இறுமாப்பு, செருக்கு, தருக்கு
162 ஆசர், ஆஜர் (உருது) நேர்வருகை
163 ஆசனம் இருக்கை, அணை
164 ஆசனவாய் எருவாய், மலவாய்
165 ஆசாபாசம் அவாக்கட்டு, அன்பு, உலகப்பற்று
166 ஆசாமி (உருது) ஆள்
167 ஆசாரம் – ஒழுக்கம், வழக்கம், நன்னடை, துப்புரவு  
168 ஆசியம் எள்ளல், நகை, சிரிப்பு
169 ஆசிரமம் பள்ளி, பாழி, முனிவருறையுள்
170 ஆசீர்வாதம் வாழ்த்துரை
171 ஆசை விருப்பம், அவா, பற்று, வேட்கை, விழைவு
172 ஆச்சரியம் புதுமை, வியப்பு, இறும்பூது
173 ஆஸ்தி பொருள், செல்வம்
174 ஆஸ்திகன் கடவுட்கொள்கையன்
175 ஆஸ்பத்திரி மருந்துச்சாலை
176 ஆக்கிராணம் மூக்கு
177 ஆக்ஞை ஆணை, கட்டளை
178 ஆடம்பரம் ஆரவாரம்
179 ஆட்சேபம் தடை, மறுப்பு, எதிர்மொழி
180 ஆதரவு துணை, உதவி, சார்பு, பற்றுக்கோடு, நிலைக்களன்
181 ஆதாரம் பற்றுக்கோடு, நிலைக்களன், களைக்கண், சான்று, அடிப்படை
182 ஆதி முதல், பழமை, அடி, தொடக்கம், காரணம், எழுவாய், கடவுள்
183 ஆதிக்கம் உரிமை, முதன்மை, மேன்மை, தலைமை, மேலீடு
184 ஆதியந்தம் அடிமுதல்
185 ஆதியோடந்தமாய் ஒன்றும் விடாமல், முதலிலிருந்து கடைசிவரை
186 ஆதிரம் நெய்
187 ஆதுலம் வறுமை
188 ஆத்திரம் விரைவு, பரபரப்பு
189 ஆத்துமா ஆன்மா, உயிர்
190 ஆநந்தம் இன்பம்
191 ஆநந்தபரவசம் இன்பவயம்
192 ஆந்திரதேசம் தெலுங்குநாடு
193 ஆபத்து இடர், துன்பம், இக்கட்டு, ஊறுபாடு
194 ஆபாசம் அருவருப்பு, பொய், சிதைவு, அளவைப்போலி
195 ஆப்தம் அன்பு, நட்பு
196 ஆமோதித்தல் உடன்படல், வழிமொழிதல், மகிழ்தல்
197 ஆயத்தம் (ஹிந்தி) முயற்சி, முன்னேற்பாடு
198 ஆயஸாம் களைப்பு, இளைப்பு, சோர்வு, அயர்வு, மயக்கம்
199 ஆயுசு, ஆயுள் வாழ்நாள், ஆண்டு
200 ஆயுதம் கருவி, படைக்கலம், படை, வாள்
201 ஆரம் பூமாலை, தொடையல்
202 ஆரம்பம் துவக்கம், தொடக்கம்
203 ஆராதனை வழிபாடு
204 ஆராதித்தல் வழிபடுதல்
205 ஆரியம் வடமொழி
206 ஆரியர் மிலேச்சர்
207 ஆருடம் முன்னறிதல்
208 ஆரோகம் ஏற்றுதல்
209 ஆரோக்கியம் நலம், நோயின்மை
210 ஆலயம் கோவில்
211 ஆலிங்கனம் தழுவல்
212 ஆலோசனை சூழ்ச்சி, சூழ்தல், ஓர்வு, எண்ணம், ஆராய்ச்சி
213 ஆவசியம் கட்டாயம், முதன்மை, இன்றியமையாமை
214 ஆவலாதி புறங்கூற்று, புறந்தூற்றல்
215 ஆவேசம் மருள், தெய்வமேறல், உட்புகல், பேய்
216 இகம் இவ்வுலகம், இவ்விடம், இப்பிறப்பு
217 இக்கணம் இப்போது
218 இச்சகம் முகமன்
219 இச்சை விருப்பம், அவா, விழைவு, வேட்கை
220 இடங்கம் உளி
221 இடபம் எருது, காளை, ஏறு
222 இடம்பம் ஆரவாரம், வீண்பெருமை
223 இட்டம், இஷ்டம் அன்பு, விருப்பம்
224 இஷ்டன் நண்பன்
225 இதம்,ஹிதம் இனிமை, நன்மை, அன்பு, அறம்
226 இதரம் வேறு, அயல், அறிவு, பகைமை
227 இதாதீதம் நன்மைதீமை
228 இந்திரியங்கள் ஐம்பொறிகள்
229 இமிசை கடுந்துன்பம், வருத்தம்
230 இயந்திரம் பொறி, மறைமொழித்தகடு
231 இயமன் எமன், கூற்றுவன், காலன், மறலி
232 இரகசியம் மறைபொருள், மறை, அற்றம்
233 இரசம் சாறு, மிளகுநீர்
234 இரசவாதம் பொன்னாக்கல்
235 இரசாபாசம் அருவருப்பு, ஒழுங்கின்மை
236 இரசிகன் சுவைஞன்
237 இரசித்தல் – சுவைத்தல்  
238 இரட்சித்தல் காப்பாற்றல், புரத்தல், ஓம்புதல்
239 இரணவைத்தியம் புண்மருத்துவம், அருவைமருத்துவம்
240 இரதம் தேர்
241 இரத்தம் குருதி, செந்நீர்
242 இரத்தினம் மாமணி, செம்மணி
243 இரம்பம் ஈர்வாள்
244 இராகம் இசை, பண், அவா
245 இராஜஸ்ரீ – திரு  
246 இராஜா அரையன், மன்னன்
247 இராஜதானி அரசர் தலைநகர்
248 இராசதம் மனவெழுச்சி
249 இராசி ஓரை
250 இராச்சியம் அரசியல், நாடு
251 இராணுவம் போர்ப்படை
252 இராத்திரி இரவு, கங்குல்
253 இருசால் இறைப்பணம், திறை
254 இருடி முனிவன், தவசி, துறவி
255 இருதயம், இதயம் நெஞ்சம், உள்ளம், அன்பு
256 இருது, ருது பருவம், மகளிர் முதற்பூப்பு
257 இருதுமங்களஸ்நானம் பூப்புநன்னீராட்டு
258 இருதுசாந்தி பூப்புக்கழிப்பு
259 இரேகை வரி, எழுத்து, கயிறை, நிறை, தொடர்
260 இலகான் (இந்துஸ்) கடிவாளம்
261 இலகிமா மென்மை
262 இலக்கம், இலட்சம் எண், நூறாயிரம்
263 இலக்குமி திருமகள், அழகு, செல்வம்
264 இலஞ்சம் கைக்கூலி, கையுறை
265 இலட்சணம் அழகு, பார்வை
266 இலட்சியம் குறிக்கோள்
267 இலயம், லயம் ஒடுக்கம், அழிவு
268 இலவசம் விலையின்மை
269 இலவணம் உப்பு
270 இலவுகிகம் உலகியல், உலகப்போக்கு
271 இலாகா ஆட்சி, எல்லை
272 இலாகிரி வெறி, மயக்கம்
273 இலாடம் காற்பறளை
274 இலாபம் ஊதியம், மிச்சம், பேறு
275 இலாபநஷ்டம் கூடுதல் குறைதல், ஊதியமும் பொருட்கேடும்
276 இலாயம் குதிரைப்பந்தி
277 இலாவாதேவி கொடுக்கல் வாங்கல், பண்டமாற்று
278 இலிங்கம் குறி, அடையாளம்
279 இலேகியம் பாகுமருந்து, இளகம்
280 இலேசு மேலாடை
281 ஈசன் தலைவன், ஆள்வோன்
282 ஈசானம் வடகீழ்ப்பால்
283 ஈசுரநிச்சயம் கடவுளுண்மை
284 ஈடணம் விருப்பம்
285 ஈநம் இழிவு, குறைபாடு, குறைவு
286 உக்கிரம் கடுமை, வெப்பம், சினம், ஊக்கம், மிகுதி
287 உக்கிராணம் களஞ்சியம், சரக்கறை
288 உசிதம் உயர்வு, சிறப்பு, மேன்மை, தகுதி, ஒழுங்கு
289 உச்சந்தம் தணிவு
290 உச்சரிப்பு எழுத்தோசை
291 உச்சி மேடு, முகடு
292 உஷ்ணம் வெப்பம், சூடு
293 உதயம் காலை, விடியல், பிறப்பு, வெளிப்படல், தோற்றம்
294 உதரம் வயிறு
295 உதாரம், உதாரகுணம் வள்ளன்மை, தண்ணளி, ஈகைத்தன்மை
296 உதாரணம் எடுத்துக்காட்டு, சான்று
297 உதித்தல் பிதற்றல், தோன்றுதல்
298 உதிரம் செந்நீர், குருதி
299 உத்தமம் உண்மை, மேன்மை
300 உத்தமி கற்புடையவள்
301 உத்தரம் மறுமொழி
302 உத்தரவு கட்டளை
303 உத்தியோகம் அலுவல், முயற்சி, தொழில்
304 உத்தேசம் கருத்து, மதிப்பு, ஏறக்குறைய
305 உந்நதம் உயர்ச்சி, மேன்மை
306 உபகரணம் கொடுத்தல், உதவிப்பொருள், கருவிப்பொருள்
307 உபகாரம் வரவேற்பு, முகமன், வேளாண்மை
308 உபதேசம் அருண்மொழி, அறிவுரை
309 உபத்தம் கருவாய்
310 உபத்திரவம் இடர், இக்கட்டு, துன்பம், வருத்தம், தடை
311 உபநதி கிளையாறு
312 உபநயநம் பூணூற்சடங்கு, வழிநடத்துதல், மூக்குக்கண்ணாடி
313 உபந்நியாசம் சொற்பொழிவு
314 உபயோகம் பயன்
315 உபவனம் பூஞ்சோலை
316 உபாசனை வழிபாடு, வணக்கம்
317 உபாதி நோய், துன்பம்
318 உபாத்தியாயன் ஆசிரியன், கற்பிப்போன், கணக்காயன்
319 உபாத்தியாயினி ஆசிரியை
320 உபாயம் சூழ்ச்சி நொய்மை, எளிது, சிறிது
321 உபேட்சை அசட்டை, விருப்பின்மை, வெறுப்பு
322 உயிர்ப்பிராணி உயிர்ப்பொருள்
323 உருக்குமணி பொன்மணி
324 உருசி சுவை
325 உருத்திராக்கம் சிவமணி, அக்குமணி
326 உரூபித்தல் மெய்ப்பித்தல்
327 உரொக்கம் கைப்பணம், இருப்பு, மொத்த இருப்பு
328 உரோகம் நோய், ஒளியின்மை
329 உரோமம் மயிர், முடி, குஞ்சி
330 உலகப்பிரசித்தம் எங்கும் பரந்தபுகழ்
331 உலோகம் உலகம், வெள்ளி, பொன், செம்பு, முதலியன
332 உலோபம் ஈயாமை, இவறன்மை, கடும்பற்றுள்ளம்
333 உல்லாசம் மகிழ்ச்சி, விளையாட்டு, உள்ளக்களிப்பு
334 உற்சவம் திருவிழா, திருநாள்
335 ஊகித்தல் நினைத்தல், ஓர்தல்
336 ஊநம் குறைவு, இழிவு
337 ஊர்ச்சிதம் உறுதி, நிலைப்படுதல்
338 எக்கியம் வேள்வி
339 எசமானன் தலைவன், முதல்வன்
340 எதார்த்தம் உறுதி, உண்மை
341 எதேச்சம் விருப்பப்படி
342 எவ்வநம், யௌவநம் இளமை, அழகு
343 ஏகதேசம் ஒருபால், ஒருபுடை, சிறுபான்மை
344 ஏகம் ஒன்று, தனிமை
345 ஏகாங்கி தனியன், துறவி
346 ஏகாதிபத்தியம் தனியாட்சி
347 ஏகாந்தம் தனிமை, ஒருமுடிவு
348 ஏடணை விருப்பம்
349 ஏதம் குற்றம், துன்பம், தீங்கு
350 ஏது காரணம்
351 ஏனம் பன்றி
352 ஐக்கியம் ஒற்றுமை
353 ஐச்வரியம் செல்வம், திரு
354 ஐதிகம் உலகுரை
355 ஓமம் வேள்வி
356 ஒளடதம் மருந்து
357 ஒளபாசனம் வேள்வித்தீயோகம், புகை, உணவொழிநோன்பு, எரியோம்பல்
358 கங்கணம் காப்பு
359 கடகம் வாள்
360 கட்சி, கஷி பக்கம், சார்பு
361 கஷாயம் மருந்துக்குடிநீர்
362 கடினம் வன்மை, கடுமை, வருத்தம், கொடுமை
363 கடூரம் கொடுமை
364 கஷ்டம் துன்பம், வருத்தம்
365 கஷ்டசாத்தியம் அரிதின்முடிவது
366 கணபதி பிள்ளையார்
367 கணிதம் கணக்கு
368 கண்டம் நிலப்பிரிவு, பிரிவு, துண்டு, கட்டி, மிடறு, கழுத்து
369 கண்டனம் மறுப்பு
370 கண்திருஷ்டி கண்ணேறு, கண்ணெச்சில்
371 கதம்பம் கூட்டம், மணப்பொருட்கூட்டு
372 கநகம் பொன்
373 கந்தமூலம் கிழங்கு
374 கந்தம் மணம், நாற்றம்
375 கந்துகம் குதிரை, பந்து
376 கந்நிகை மணமாகாதவள், இளம்பெண்
377 கபம் கோழை
378 கபோதி குருடன்
379 கமலம் தாமைரை
380 கம்பீரம் செருக்கு, உயர்தோற்றம், பெருமை, ஆழம்
381 கயரோகம் எலும்புருக்கிநோய்
382 கயிலாசம். கயிலாயம் சிவப்பேறு, நொடித்தான்மலை
383 கரகோஷம் கைதட்டுதல்
384 கருடன் கலுழன்
385 கருணை அருள், இரக்கம்
386 கருத்தா, கர்த்தா தலைவன், வினைமுதல், ஆக்கியோன், நூலாசிரியன்
387 கருமம் வினை, தொழில்
388 கர்க்கடகம் நண்டு
389 கர்ச்சனை முழக்கம்
390 கர்ப்பக்கிரகம் அகநாழிகை, திருஉள் நாழிகை
391 கர்ப்பவதி சூலி
392 கர்வம் செருக்கு
393 கலசம் குடம்
394 கலாசாலை கல்லூரி
395 கல்யாணம் மணம், மன்றல்
396 கவி செய்யுள், பாவலன், பாட்டு
397 கனம் சுமை, பளுவு
398 காசம் ஈளைநோய், இருமல்நோய்
399 காஷாயம் காவி
400 காஷ்டம் விறகு
401 காயம் உடல், யாக்கை, வான்
402 காரகன் செய்பவன்
403 காரியதரிசி அமைச்சன், செயலாளன்
404 காரியஸ்தன் செயலாளன்
405 காலக்கிரமம் கால ஒழுங்கு
406 காலச்சேபம் வாழ்க்கை, நாட்கழித்தல்
407 காளம் எருமை, முகில்
408 கிஸ்தி (இந்துஸ்) திறை
409 கிஞ்சுகம் கிளி
410 கிடாரம் கொப்புரை
411 கியாதி புகழ், மேன்மை
412 கிரகசாரம் கோள்நிலை, கோட்சாரம்
413 கிரகணம் பற்றுதல், பிடித்தல்
414 கிரகம் வீடு, கோள், பற்றுதல், பிடிப்பு
415 கிரகஸ்தம் இல்லறநிலை
416 கிரகித்தல் பற்றுதல், இழுத்தல், கவர்தல், உணர்தல்
417 கிரந்தம் நூல்
418 கிரமம் ஒழுங்கு, முறைமை
419 கிரயம் விலை
420 கிராதகன் குறவன், வேட்டுவன்
421 கிராமம் சிற்றூர்
422 கிரியை தொழில், செயல், வினை, சடங்கு
423 கிரீடம் முடி
424 கிருஷி பயிர், உழவு, பயிர்செய்கை
425 கிருஷ்ணபஷம் தேய்பிறை
426 கிருபை அருள், இரக்கம்
427 கிருமி பூச்சி, புழு
428 கிலம் அழிவு
429 கிலேசம் அச்சம், கவலை, துன்பம்
430 கீணம், ஷீணம் கேடு, சிதைவு
431 கீதம் இசை, இசைப்பாட்டு
432 கீர்த்தி புகழ், இசை
433 குக்குடம் கோழி
434 குலசம் நலம், நன்மை
435 குஞ்சரம் யானை
436 குஷ்டம் தொழுநோய், பெருநோய்
437 குணம் இயல்பு
438 குதூகலம் பெருங்களிப்பு, பெருமகிழ்ச்சி
439 குபேரன் பெருஞ்செல்வன், செல்வக்கடவுள்
440 குமரி, குமாரி நங்கை, மணமாகப்பெண், புதல்வி, மகள்
441 கும்பகோணம் குடமூக்கு
442 கும்பாபிஷேகம் குடமுழுக்கு
443 கும்பம் குடம்
444 குருபக்தி ஆசானிடத்தன்பு, குருவினிடத்தன்பு
445 குரூபி உருவிலி, அழகிலி
446 குரூரம் கொடுமை, அஞ்சாமை, தறுகண், ஈரமின்மை
447 குரோதம் உட்பகை, சினம்
448 குலஸ்திரீ குலமகள்
449 குன்மம் சூலை, வயிற்றுவலி
450 கூசுமாண்டம் பூசுணி
451 கூபம் கிணறு, கூவம்
452 கூர்மம் ஆமை
453 கேலி பகிடி
454 கைங்கரியம் தொண்டு, பணி
455 கோஷ்டம் கூட்டம், மணப்பொருள், பேரொலி
456 கோஷம் முழக்கம்
457 கோஷ்டி கூட்டம்
458 கோதண்டம் வில்
459 கோத்திரம் குலம், வகுப்பு, மரபு
460 கோமயம் ஆனீர்
461 கோரம் கொடுமை, அச்சம்
462 சகசம் இயற்கை, ஒற்றுமை
463 சகடம், சகடு வண்டி
464 சகலம் எல்லாம்
465 சகலர் மும்மலக்கட்டினர்
466 சகவாசம் கூடவிருத்தல், உடனுறைதல், பழக்கம், சேர்க்கை, நட்பு
467 சகன் தோழன், கூட்டாளி
468 சகாயம் உதவி, துணை, நயம், நன்மை, மலிவு, பயன்
469 சகித்தல் பொறுத்தல்
470 சகுனம் குறி
471 சகோதரன் உடன்பிறந்தான், தமையன், தம்பி
472 சகோதரி உடன்பிறந்தாள், தம்க்கை, தங்கை
473 சக்கரம் நிலாமுகிப்புள்
474 சக்காதரன் திருமால்
475 சக்கரவர்த்தி தனியரசாள்வோன், மன்னர்மன்னன், அரசர்க்கரசன்
476 சக்தி ஆற்றல், வல்லமை, வலி
477 சங்கடம் நெருக்கம், துன்பம், கேடு, வருத்தம்
478 சங்கதி செய்தி
479 சங்கமம் ஆறுகடலோடுகூடுமிடம்,கூடுகை,இயங்குதிணைப்பொருள்,அசைவன
480 சங்கற்பம் நினைப்பளவு
481 சங்காரம் அழித்தல்
482 சங்கிராந்தி திங்கட்பிறப்பு, ஒன்றினின்று பிரிதொன்றின்கட் செல்லல்
483 சங்கீதம் இசை
484 சங்கேதம் குறியீடு, நினைவு
485 சங்கை எண், ஐயம், அச்சம்
486 சந்கோசம் கூச்சம், வெட்கம், உட்புகுதல்
487 சச்சிதானந்தம் உண்மையறிவின்மை
488 சஞ்சலம் கலக்கம், கவலை, துன்பம், அசைவு
489 சஞ்சிதம் ஈட்டியது, எஞ்சியது
490 சடுதி, சடிதி (இந்துஸ்) விரைவு
491 சஷ்டியப்தபூர்த்தி அறுபதாம் ஆண்டு நிறைவு
492 சட்சு கண்
493 சண்டித்தனம் முரட்டுத்தனம்
494 சதா எப்பொழுதும்
495 சதானந்தம் இடடையறாவின்பம்
496 சதுரம் அறிவுடைமை, திறமை, நாற்பக்கம்
497 சத்தம் ஓசை, ஒலி, சொல், ஏழு
498 சத்தியம் உண்மை, ஆணை, மெய்
499 சத்திரம் உணவுச்சாலை, ஊட்டுப்புரை, சாவடி, குடை
500 சத்துரு பகைவன்
501 சத்துவம் விறல், மெய்ப்படுதல்
502 சந்ததம் எப்பொழுதும்
503 சந்ததி வழிவழி, பிள்ளை, எச்சம், கால்வழி
504 சந்தர்ப்பம் சமயம், அற்றம், நேரம்
505 சந்தியாவந்தனம் காலை மாலை வழிபாடு
506 சந்திரன் திங்கள், தண்கதிர், நிலவு, மதி, அம்புலி, பிறை
507 சந்து முடுக்கு, இயங்கும் உயிர்,தூது, பிளப்பு, பொருத்து, இரண்டு, மூட்டு
508 சந்துஷ்டி மகிழ்ச்சி
509 சந்தோஷம் மகிழ்ச்சி, உவகை, களிப்பு
510 சந்நிதி, சந்நிதானம் திருமுன்
511 சந்நியாசம் துறவு, துறவறம்
512 சந்நியாசி துறவி
513 சபதம் வஞ்சினம், ஆணை
514 சபம், ஜெபம் உருவேற்றல்
515 சபா, சபை அவை, மன்றம், கழகம், அரங்கம்
516 சமஸ்கிருதம் நன்றாகச்செய்யப்பட்டது, வடமொழி
517 சமத்தன், சமர்த்தன் வல்லவன், திறமையாளன்
518 சமத்துவம் ஒத்த உரிமை, ஒன்று படல்
519 சமயம் பொழுது, நேரம், காலம்
520 சமயோசிதம் காலப்பொருத்தம், தக்கநேரம்
521 சமரசம் போது, வேறுபாடின்மை
522 சமாசம் கழகம், கூட்டம்
523 சமாசாரம் செய்தி
524 சமாதானம் அமைதி, இணக்கம், தணிவு, உடன்பாடு, தக்க விடை
525 சமாதி அமைதி, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு
526 சமாநம் உவமை, ஒப்பு, இணை
527 சமிக்ஞை குறிகாட்டல்
528 சமீபம் அருகு, அண்மை, மருங்கு
529 சமூகம் நேர், திருமுன்
530 சமுதாயம், சமூகம் கூட்டம்
531 சமுத்திரம் கடல்
532 சமேதம் கூட இருத்தல்
533 சம்ஸாரம் குடும்பம்
534 சமஸ்கிருதம் வடமொழி
535 சம்பத்து செல்வம்
536 சம்பந்தம் உறவு, பற்று, இயைபு, சார்பு, தொடர்பு, பொருத்தம்
537 சம்பவம் நிகழ்ச்சி, செயல்,
538 சம்பாஷணை உரையாடல்
539 சம்பாதித்தல் ஈட்டல், தேடல், தொகுத்தல்
540 சம்பிரதாயம் தொன்று தொட்ட வழக்கு, முன்னோர் நடை, பண்டைமுறை
541 சம்பூரணம் நிறைவு
542 சம்மதம் உடன்பாடு, ஒப்பு
543 சயநம் படுக்கை, உறக்கம்
544 சயம், ஜெயம் வெற்றி
545 சயிலம் மலை
546 சரசம் இனிய பண்பு, இனிய விளையாட்டு
547 சரசுவதி கலைமகள், நாமகள்
548 சரணம் அடைக்கலம், வணக்கம், கால், திருவடி
549 சரணாகதி புகலடைதல், அடைக்கலம் புகுதல்
550 சரணாரவிந்தம் திருவடித்தாமைரை
551 சரம் மாலை, அம்பு
552 சரவணம் நாணல், பொய்கை
553 சரிதம், சரித்திரம் வரலாறு
554 சரீரம் உடல், யாக்கை, மெய்
555 சர்ப்பம் பாம்பு
556 சருமம் தோல்
557 சருவம் எல்லாம்
558 சரோசம் தாமரை
559 சர்வகலாசாலை பல்கலைக்கழகம்
560 சர்வமானியம் இறையிலி
561 சர்வேஸ்வரன் எப்பொருட்கும் இறைவன்
562 சலசம் தாமரை
563 சலசந்தி கடலிணைக்கால்
564 சலசாட்சி தாமரைக்கண்ணி
565 சலம், ஜலம் நீர்
566 சலதோஷம் நீர்க்கோவை
567 சலநம் அசைவு
568 சல்லாபம் உரையாடல்
569 சவம் பிணம்
570 சனம், ஜனம் மக்கள், நரல்
571 சனனம், சன்மம் பிறப்பு
572 சனி காரி
573 சன்மார்க்கம் நன்னெறி
574 சன்மானம் பரிசு
575 சன்னல் பலகணி,சாளரம்; திட்டிவாயில்.
576 சாகரம் கடல்
577 சாக்கிரதை விழிப்பு, உன்னிப்பு, எச்சரிக்கை
578 சாக்கிரம் நனவு
579 சாகை தங்குமிடம், வீடு
580 சாசனம் முறி
581 சாசுவதம் அழியாமை, அசையா நிலை, உறுதி, வீடுபேறு
582 சாடி தாழி
583 சாட்சி சான்று, கரி
584 சாஷ்டாங்கம் எட்டுறுப்பு
585 சாதகம் பயிற்சி, பிறந்தநாடகுறிப்பு, உதவி, காரியங்கைகூடல்
586 சாதம் சோறு
587 சாதனம் கருவி, இடம், பயிற்சி, உறுதிமுறி, அடையாளம், முயற்சி கைகூடல்
588 சாதாரணம் பொது
589 சாதி இனம், குலம், வகுப்பு
590 சாதித்தல் நிலைநிறுத்தல்
591 சாதியாசாரம் குலஒழுக்கம்
592 சாது துறவி
593 சாதுரியம் திறமை, வன்மை
594 சாத்திரம் கலை, நூல்
595 சாத்மிகம், சாத்துவிகம் அமைதித்தன்மை
596 சாந்தம் அமைதி, பொறுமை
597 சாந்திரம் நெருக்கம், திங்கட்டொடர்புடையது
598 சாபம் தீமொழி, வசவு, வில்
599 சாமர்த்தியம் வல்லமை, திறமை, கூறுபாடு
600 சாமான் பொருள்கள், தட்டுமுட்டுகள்
601 சாமி, சுவாமி கடவுள், தலைவன், அடிகள்
602 சாமீப்பியம் சிவனருகிருப்பு
603 சாயை நிழல்
604 சாயுச்சியம் சிவப்பேறடைவு
605 சாரதி வலவன்
606 சாராம்சம் சிறந்த பகுதி
607 சாரீரம் இனிய குரல், இன்னிசை, உடற்றொடர்பு
608 சாரூபம் சிவனுருவம்
609 சாலோகம் சிவவுலகு
610 சாவகாசம் ஒழிவு, ஓய்வு, வசதி, விரைவின்மை
611 சாவதானம் ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு
612 சிகரம் தலை, மலை, உச்சி, முகடு, குவடு
613 சிகிச்சை – மருத்துவம், பரிகாரம்  
614 சிகை குடுமி, கூந்தல்
615 சிங்கம், சிம்ஹம் அரிமா, ஏறு
616 சிங்காசனம் அரியணை
617 சிங்காரம் ஒப்பனை, திருத்தம், அழகு
618 சிங்குவை வாய்
619 சிசு குழந்தை, மகவு
620 சிசுருஷை பணிவிடை
621 சிட்சை, சிஷை கற்பித்தல், கல்வி பயிற்றல், ஒறுத்தல்
622 சிருட்டி, சிருஷ்டி படைப்பு
623 சித்தம் உள்ளம், நினைவு, கருத்து
624 சித்தி பேறு, ஆக்கம்
625 சித்திரம் ஓவியம், படம்
626 சித்திரவதை வன்கொலை
627 சிநேகம், சிநேகிதம் நட்பு, கேண்மை
628 சிரஞ்சீவி நீடுவாழ்வோன்
629 சிரத்தை அன்பு, முதன்மை, உளத்திட்பம், விருப்பு
630 சிரமம் துன்பம், தொல்லை
631 சிரவணம் கேள்வி
632 சிரார்த்தம் இறந்தநாட்கடன்
633 சிருட்டி படைத்தல், ஸ்த்ரீதனம், ஸ்ரீதனம் – மகளுக்குக்கொடுக்கும் கொடை, மகட்கொடை
634 சிரேஷ்டம் சிறப்பு
635 சிரேஷ்டன் தலைவன், மூத்தோன்
636 சிலாகித்தல் புகழ்தல்
637 சிலாக்கியம் மேன்மை, நன்மை
638 சிலேட்டுமம் சளி, கோழை
639 சிவிகை பல்லக்கு
640 சிற்பம் கற்றச்சு
641 சின்னம் அடையாளம்
642 சின்னாபின்னம் உருக்குலைவு
643 ஸ்ரீமத் திருவாளர்
644 ஸ்ரீலஸ்ரீ மறைத்திருவாளர்
645 சீக்கிரம் விரைவு, ஒல்லை, கடிது
646 சீடன் மாணாக்கன்
647 சீணதசை அழிவுக்காலம், மழுக்கம்
648 சீதபேதி வயிற்றளைச்சல்
649 சீதம், சீதளம் குளிர்ச்சி
650 சீதோஷ்ணம் தட்பவெப்பம்
651 சீமந்தம் சூல்காப்பிடுஞ்சடங்கு
652 சீமந்த புத்திரன் தலைமகன்
653 சீமந்தினி பெண்மகள்
654 சீரணம் செரித்தல், பழுது
655 சீர்ணோத்தாரணம் பழுதுபார்த்தல்
656 சீலம் ஒழுக்கம்
657 சீவசெந்து உயிர்ப்பொருள்
658 சீவகாருண்ணியம் – உயிர்களிடத்தன்பு, அருள் ஒழுக்கம்  
659 சீவனம் பிழைப்பு
660 சீவியம் வாழ்நாள், பிழைப்பு, வாழ்க்கை
661 சுகந்தம் நறுமணம்
662 சுகம் நலம், இன்பம்
663 சுகாதாரம் நலவழி
664 சுகிர்தம் நன்மை
665 சுக்கிரவாரம் வெள்ளிக்கிழமை
666 சுக்கிலபஷம் வளர்பிறை
667 சுக்கிலம் வெண்ணீறு, வெண்மை
668 சுதந்திரம் உரிமை
669 சுதேசம் தாய்நாடு
670 சுத்தம் தூய்மை, துப்புரவு
671 சுந்தரம் அழகு
672 சுபாவம் தன்மை, இயற்கை, இயல்பு
673 சுயபாஷை – தாய்மொழி  
674 சுபிஷம் – செழிப்பு  
675 சுயம்வரம் தான் விரும்பும் மணம்
676 சுயார்ச்சிதம் தான் தேடிய பொருள்
677 சுயேச்சை தன் விருப்பம்
678 சுரஸம் முறித்த சாறு
679 சுரம் காய்ச்சல், வெப்புநோய்
680 சுருதி குரல்
681 சுலபம் எளிது
682 சுவதந்திரம் உரிமை
683 சுவர்க்கம் துறக்கம், பேரின்பவீடு
684 சுவாசகாசம் இளைப்பிருமல்
685 சுவாசம் மூச்சு, உயிர்ப்பு
686 சுவாதிஷ்டானம் கொப்பூழ்
687 சுவீகாரம் தனதாக்குதல்
688 சுவேதம் வெண்மை
689 சுழுத்தி உறக்கம்
690 சூக்குமம் நுண்மை, அணு
691 சூசிகை ஊசி, யானை, துதிக்கை
692 சூதகம் தீட்டு
693 சூரணம் தூள்
694 சூரியன் ஞாயிறு, பகலவன், கதிரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன்
695 சூலம் வேல்
696 சூன்யம் பாழ், இன்மை, இல்பொருள்
697 சேஷம் எச்சில், மிச்சம்
698 சேஷ்டன் தமையன், மூத்தோன்
699 சேஷ்டை குறும்பு, தமக்கை, அக்காள்
700 சேத்திரம் திருக்கோயில், திருப்பதி
701 சேமம் நலம், காவல், புதையல்
702 சேவகன் காவற்காரன், போர் மறவன்
703 சேவித்தல் தொழுதல், வணங்கல்
704 சேனாதிபதி படைத்தலைவன், சேனைத்தலைவன்
705 சைந்யம் படை
706 சைலம் மலை
707 சொஸ்தம் நலம், குணம்
708 சொப்பனம் கனவு
709 சோதரன் உடன்பிறந்தான்
710 சோதனை ஆராய்ச்சி, ஆய்வு, தேர்வு
711 சோதி, ஜோதி ஒளிவிளக்கம்
712 சோதிடர், சோசியர் கோள்நூலார், காலக்கணிதர், குறிப்பாளர்
713 சோத்திரம் செவி
714 சோபித்தல் ஒளிர்தல், விளங்கல்
715 சோமன் திங்கள், மதி
716 சோமவாரம் திங்கட்கிழமை
717 சோலி(தெலு) வேலை, தொழில்
718 சௌக்கியம் நலம், மகிழ்ச்சி
719 சௌஜன்யம் நல்லிணக்கம்
720 சௌந்தரம் அழகு
721 சௌபாக்கியவதி செல்வி, திருமகள்
722 ஞாதி – சுற்றம்  
723 ஞானம் அறிவு, கல்வி, மெய்யுணர்வு, அருளறிவு
724 ஞாபகம் நினைவு
725 தகநம் எரித்தல், சுடுதல்
726 தக்கணம் உடன், தெற்கு
727 தசாவதாரம் பத்துப்பிறப்பு
728 தயை, தசா ஊண், புலால்
729 தட்சிணாமூர்த்தம் குருவடிவம், தென்முகக்கடவுள்
730 தட்சிணை, தக்கணை காணிக்கை
731 தண்டனை ஒறுப்பு, ஆணை, கட்டளை
732 தத்தம் கொடுத்தல், ஈகை
733 தத்துவம் உண்மை, மெய், பொருளியல் உண்மை
734 தநம், தனம் செல்வம், பொருள், கொங்கை
735 தநவான் செல்வன்
736 தந்தம் பல்
737 தந்தி கம்பி, மின்செய்தி, ஆண்யானை
738 தந்திரம் சூழ்ச்சி, நூல்
739 தபசு, தவசு தவம்
740 தபால் (இந்துஸ்) அஞ்சல்
741 தமரகம் உடுக்கை
742 தமாஷ் (இந்துஸ்) பகடி, விளையாட்டு
743 தம்பதி கணவனும் மனைவியும்
744 தம்பம், ஸ்தம்பம் தூண்
745 தயவு, தயா, தயை அன்பு, இரக்கம், கண்ணோட்டம்
746 தயிலம் எண்ணெய்
747 தரா நிலம், வையகம்
748 தராசு, திராசு துலாக்கோல், நிறைக்கோல்
749 தரிசனம் காட்சி, பார்வை, கண்
750 தரித்தல் அணிதல், பூணல், உடுத்தல், மேற்கொள்ளல்
751 தரித்திரம் வறுமை, எளிமை, நல்குரவு, மிடி, இன்மை
752 தருக்கம் அளவை, அளவைநூல்
753 தருணம் – வேலை, பொழுது  
754 தருமம் அறம்
755 தலம், ஸ்தலம் இடம், கோயில், பதி
756 தலயாத்திரை திருக்கோயிற்பயணம், திருக்கோயிற்செலவு
757 தற்சமயம் இப்போது, இவ்வேளை
758 தாகம் விடாய், நீர்வேட்கை
759 தாசன் அடியான், அடிமை
760 தாநம், ஸ்தாநம் இடம், இருக்கை
761 தாபரம், தாவரம் நிலையியற்பொருள், நிற்பன, அசையாப்பொருள்
762 தாபித்தல் நிறுவுதல், நாட்டல், நிலைநிறுத்தல்
763 தாமசம், தாமதம் தாழ்த்தல், அட்டி, மயல்
764 தாமம் கயிறு, மாலை
765 தாம்பரபரணி பொருகை
766 தாரதம்மியம் ஏற்றத்தாழ்வு
767 தாற்பாரியம் கருத்துரை
768 தானம் ஈகை, கொடை
769 தானியம் கூலம்
770 திடம் வன்மை, உறுதி
771 திட்டி,திருட்டி கண், பார்வை, கண்ணேறு
772 திநம், தினம் நாள், ஞான்று
773 தியாகம் கொடை
774 தியானித்தல் நினைத்தல், வழிபடல்
775 திரம், ஸ்திரம் நிலை, உறுதி
776 திரயம் மூன்று
777 திரவியம் பொருள், செல்வம்
778 திராவகம் செய்நீர், சாரம்
779 திராட்சை கொடிமுந்திரி
780 திரி, ஸ்திரி பெண்
781 திருட்டாந்தம் சான்று, எடுத்துக்காட்டு, மேற்கோள்
782 திருத்தி, திருப்தி மனநிறைவு,அமைவு, சால்வு
783 திரோபவம் மறைத்தல்
784 திலகம் பொட்டு
785 திவ்வியம் நேர்த்தி, இனிமை, மேன்மை
786 தினசரி நாடோறும்
787 தீபஸ்தம்பம் விளக்குத்தண்டு, கலங்கரை விளக்கம்
788 தீபாராதனை ஒளியால் வழிபடுகை
789 தீரம் கரை
790 தீரன் திண்ணியன், ஆண்டகை, திரனாளன்
791 தீர்க்கதரிசி முக்காலவுணர்வினன், மெய்க்காட்சியாளன்
792 தீர்க்கம் தெளிவு
793 தீர்த்தம் புனிதநீர், திருக்குளம்
794 தீவாந்தரம் தீவு, வெளி
795 தீவிரம் விரைவு
796 துக்கம் துன்பம், பரிவு, கவலை, வருத்தம், துயரம்
797 துஷ்டன் தீயவன், பட்டி, வம்பன்
798 துதி, ஸ்துதி வணக்கம், வழுத்துரை
799 துரிதம் விரைவு
800 துரியம் பேருறக்கம்
801 துரியாதீதம் உயிர்ப்படக்கம்
802 துரோகம் இரண்டகம், வஞ்சனை
803 துவசம் கொடி
804 துவாரம் வாயில், புழை, துளை
805 துவேஷம் பகை, வெறுப்பு
806 தூஷணை இகழ்ச்சி, பழி, பழிச்சொல்
807 தூதர் ஒற்றர், வேவுகாரர்
808 தூபம் புகை
809 தூபி, ஸ்தூபி முடி,
810 தூரதிருஷ்டிக்கண்ணாடி தொலைநோக்காடி
811 தூரம் சேய்மை, தொலைவு, எட்டாக்கை
812 தூலம் பருமை
813 தேகம் உடல், யாக்கை, மெய்
814 தேகவியோகம் சாக்காடு
815 தேகாப்பியாசம் உடற்பயிற்சி
816 தேசசு ஒளி
817 தேசம் நாடு
818 தேயு அனல்
819 தேவபக்தி, தெய்வபக்தி கடவுட்பற்று, கடவுளிடத்தன்பு, தெய்வநேயம்
820 தேவன் இறைவன், தலைவன்
821 தேவஸ்தானம் கடவுள் நிலையம், கோயில்
822 தேவாதீனம் கடவுட்செயல்
823 தேவி இறைவி, அரசி, தலைவி
824 தைரியம் உறுதி, திட்பம், ஆண்மை, ஊக்கம்
825 தைலம் எண்ணெய்
826 தொக்கு மெய்தோடம்,
827 தோஷம் குற்றம்
828 தோத்திரம் வாழ்த்து, வழுத்து
829 நகல்(அராபி) – படி  
830 நகுலம் – கீரி  
831 நடராஜாமூர்த்தி, நடராஜன் கூத்தன், அம்பலவாணன்
832 நட்சத்திரம் மீன், வெள்ளி, நாள்
833 நட்டம், நஷ்டம் கேடு, இழப்பு
834 நதி ஆறு, யாறு
835 நந்தர் இடையர்
836 நந்தவனம், நந்தனவனம் பூந்தோட்டம், பூங்கா
837 நபர் (அராபி) ஆள்
838 நமஸ்காரம் வணக்கம்
839 நயம் நன்மை
840 நயனம் கண்
841 நரகம் நிரயம், அளறு
842 நரன் மனிதன்
843 நர்த்தனம் கூத்து
844 நவக்கிரகம் ஒன்பது கோள்
845 நவதானியம் ஒன்பது வகைத்தவசம்
846 நவநீதம் வெண்ணெய்
847 நவீனம் புதுமை
848 நாகம் பாம்பு
849 நாசம் அழிவு, கேடு
850 நாசி மூக்கு
851 நாஸ்திகன் தெய்வமில்கொள்கையான்
852 நாதம் ஒலி, ஓசை, செம்பால், செந்நீர்
853 நாதன் தலைவன்
854 நாநாவிதம் பலவகை
855 நாபிதன், நாவிதன் மயிர்வினைஞன்
856 நாமம் பெயர்
857 நாயகன் தலைவன்
858 நாயகி தலைவி
859 நாராசம் இருப்பாணி
860 நாரிகேளம் தேங்காய்
861 நிக்கிரகம் அழிக்கை, ஒழிப்பு
862 நிசம் உண்மை, மெய்
863 நிசி இரவு
864 நிச்சயம் உறுதி, மெய், துணிவு, திண்ணம், தேற்றம்
865 நிஷ்டூரம் கொடுமை
866 நிதரிசனம் கண்கூடு
867 நிதானம் மதிப்பு
868 நிதி செல்வம், வைப்பு, பொருள்
869 நித்தியம் நாடோறும், எப்பொழுதும், அழியாமை
870 நித்திரை தூக்கம், துயில், உறக்கம், கண்படை
871 நிந்தனை இகழ்ச்சி, பழிப்பு
872 நிபந்தனை கட்டுப்பாடு, உறுதி, ஏற்பாடு
873 நிபுணர் தேர்ந்தவர், வல்லவர்
874 நிமிஷம் நொடிப்பொழுது, நொடி
875 நிமித்தம் குறி, காரணம், பொருட்டு, அடையாளம்
876 நியதி ஊழ், செயகடன், முறை, ஒழுங்கு, பிறழா நிகழ்ச்சி
877 நியமம் ஒழுங்கு, முறை, நெறி, நாட்கடன்
878 நியமனம் கட்டளை, ஒழுங்கு
879 நியமித்தல் அமைத்தல், ஏற்படுத்தல்
880 நியாயம் நெறி, முறை, நடுநிலை
881 நியாதிபதி முறைமன்றத்தலைவர், நடுவர்
882 நிருணயம் உறுதி
883 நிருமூலம் அடியற்றது, அழிவு, வேரோடு கல்லல்
884 நிருவாகம் கொண்டு நடத்துதல், பொருப்பு
885 நிருவாணம் உடையின்மை, முண்டம், பற்றின்மை
886 நிரூபித்தல் மெய்ப்பித்தல், நிலைபெறுத்தல்
887 நிர்ப்பந்தம் நெருக்கம், தொல்லை, இடர், வலுகட்டாயம்
888 நிவர்த்தி, நிவிர்த்தி விடுதலை, நீக்கம்
889 நீசன் கீழ்மகன், தாழ்ந்தோன்
890 நீதி நெறி, முறை, அறம்
891 நீதிஸ்தலம் முறைமன்றம்
892 நூதனம் புதுமை
893 நேத்திரம் கண்
894 பகவன, பகவான் கடவுள், பெருமாள்
895 பகிஷ்காரம் விலக்கு
896 பகிரங்கம் வெளிப்படை
897 பக்குவம் தகுதி, நிலை
898 பங்கஜம் தாமரை, முளரி
899 பங்கம் குறை, பழுது, சேறு, குற்றம்
900 பசார் (பார்சி) சந்தை, அங்காடி
901 பசு ஆ, உயிர்
902 பச்சாத்தாபம் கண்ணோட்டம், கழிவிரக்கம்
903 பஞ்சபாதகன் ஐம்பெருங்குற்றத்தான்
904 பஞ்சாட்சரம் ஐந்தெழுத்து
905 பட்சணம் தின்பண்டம
906 பட்சம் உருக்கம், அன்பு
907 பட்சி பறவை, புள்
908 பட்டாபிஷேகம் முடிசூட்டல்
909 பண்டிகை பெருநாள், திருவிழா
910 பண்டிதன் புலவன், அறிஞன், மருத்துவன்
911 பதட்டம் பதறுதல், விரைதல், அஞ்சல்
912 பதம் சொல், விலை
913 பதார்த்தம் சொற்பொருள், பொருள்
914 பதி கடவுள்
915 பதிவிரதை கற்பரசி
916 பதுமாவதி, பத்மாசநி திருமகள்
917 பத்தர் அன்பர, தொண்டர்
918 பத்தி, பக்தி அன்பு, நேயம், பற்று
919 பத்தியம் மருந்துணா, செய்யுள்
920 பத்திரம் இல்லை, ஆவணம்
921 பத்திரிகை செய்தித்தாள், செய்தி இதழ்
922 பந்தம் உறவு, தொடர்பு, கட்டு
923 பந்தி வரிசை, தொகுதி
924 பயங்கரம் கொடுமை, அச்சம்
925 பயம் அச்சம்
926 பரஸ்பரம் ஒருவர்க்கொருவர்
927 பரதேசம் பிறர்நாடு
928 பரமகதி வீடுபேறு, மேல்நிலை
929 பரம்பரை கால்வழி, தலைமுறை
930 பரவசம் தன்னுணர்வின்னமை
931 பராக்கிரமசாலி ஆண்டகை
932 பரிகாசம் பகடி, ஏளனம்
933 பரிசம் ஊறு
934 பரிசுத்தம் தூய்மை, துப்புரவு, மாசின்மை, புனிதம்
935 பரிதாபம் இரக்கம்
936 பரிமாணம் அளவு
937 பரிமிதம் அளவுபட்டது
938 பரீட்சை தேர்வு
939 பருவதம், பர்வதம் மலை
940 பரோபகாரம் உதவி, கைம்மாறு கருதா உதவி
941 பர்த்தா கணவன்
942 பலஹீனம் வலுககுறைவு
943 பலம் பலம், வலிவு
944 பலன் பயன்
945 பலாத்காரம், பலவந்தம் வலுகட்டாயம்
946 பலி இறை, காணிக்கை, வேள்வி, கடவுளுணா, ஒப்புவித்தல்
947 பலித்தல் கைகூடுதல், பயன்றருதல்
948 பவனம் வீடு
949 பாக்கியம் பேறு, செல்வம், நல்வினை
950 பாசம் – தளை, கட்டு, கயிறு, அன்பு  
951 பாஷை மொழி
952 பாடாணம் நஞ்சு
953 பாடியம், பாஷியம் அகலவுரை, விரிவுரை, பேருரை
954 பாணி கை
955 பாதகம் தீமை
956 பாதம் தாள், கால, அடி
957 பாதை வழி, பாட்டை
958 பாத்தியம் உரிமை
959 பாத்திரம் ஏனம், களம, தகுதி, உரிமை
960 பாநகம் பருகுநீர், குடிநீர்
961 பாபமோசனம் தீவினைநீக்கம்
962 பாபி தீயோன்
963 பாயுரு எருவாய்
964 பாரம் சுமை, பொறை, கடமை
965 பாரியா, பாரியை மனைவி
966 பார்வதி மலைமகள்
967 பாலகன் குழந்தை
968 பாலப்பருவம் பிள்ளைப்பருவம்
969 பால்யர் இளைஞர்
970 பாவனை கற்பனை, ஒப்பு, எண்ணம், நினைப்பு
971 பாஸ்கரன் பகலோன்
972 பிங்கலை வலதுமூச்சு
973 பிசாசு பேய், அலகை
974 பிச்சை,பிட்சை இரப்பு, ஐயம்
975 பிச்சைக்காரன் இரப்போன்
976 பிஞ்ஞகம் தலைக்கோலம்
977 பிடிவாதம் விடாப்பிடி
978 பிதா தந்தை, தகப்பன், அத்தன
979 பிதிரார்ச்சிதம் முன்னோர் தேட்டம்
980 பிதிர்க்கடன் மூதாட்கள் கடன், தென்புலத்தார் கடன்
981 பிநாகம் வில்
982 பிந்நம் சிதைவு, வேறுபாடு
983 பிரகடனம் விளம்பரம்
984 பிரகதாம்பாள் பெரியநாகயகி
985 பிரகஸ்பதி வியாழன்
986 பிரகாசம் ஒளி, துலக்கம், வெளிச்சம்
987 பிரகிருதி இயற்கை, பகுதி
988 பிரக்கினை உணர்வு
989 பிரசங்கம் விரிவுரை, சொற்பொழிவு
990 பிரசண்டமாருதம் பெரும்புயல், பெருங்காற்று
991 பிரசவம் பிள்ளைப்பேறு, கருவுயிர்ப்பு
992 பிரசாதம் படைப்பு, அருள்
993 பிரசாரம் பரப்புதல்
994 பிரசித்தி வெளிப்படை, அறிவிப்பு, புகழ்பாவல்
995 பிரசுரம் வெளியீடு
996 பிரதட்சிணம் வலம்வருதல்
997 பிரணவம் ஓங்காரம்
998 பிரதானம் முதன்மை, சிறப்பு
999 பிரதி படி
1000 பிரதிகூலம் மாறுபாடு, எதிர்
1001 பிரதிக்கினை உறுதி, ஆணை, மேற்கோள்
1002 பிரதிஷ்டை நிலைபெறுத்தல், கோயில் கொள்ளுவித்தல்
1003 பிரதிதினம் நாடோறும், ஒவ்வொரு நாளும்
1004 பிரதிநிதி ஆணையாளர்
1005 பிரதியுபகாரம் கைம்மாறு
1006 பிரதிவாதி எதிர் வழக்காளி
1007 பிரதேசம் இடம்
1008 பிரத்தாபம் அறிவித்தல், வெளிப்படுத்தல்
1009 பிரத்தியஷம் கண்கூடு, தெளிவு
1010 பிரத்தியேகம் தனிமை
1011 பிரபஞ்சம் உலகம்
1012 பிரபந்தம் நூல், நூற்றொகுதி
1013 பிரபல்லியம் புகழ், முதன்மை, சிறப்பு
1014 பிரபாவம் புகழ், பெருமை
1015 பிரபு பெருந்தகை, பெருஞ்செல்வன், தலைவன்
1016 பிரமசாரி மணமாகாதவன்
1017 பிரமா நான்முகன்
1018 பிரமாணம் அளவை, தலைமை, மேற்கோள், ஆணை, கட்டளை
1019 பிரமாண்டம் பேருலகம்
1020 பிரமாதம் மிகுதி
1021 பிரமானந்தம் பேரின்பம்
1022 பிரமித்தல் மலைத்தல், திகைத்தல், மருளல்
1023 பிரமேயம் அளக்கப்படும் பொருள்
1024 பிரமை மயக்கம், அறியாமை
1025 பிரமோற்சவம் பெருவிழா
1026 பிரயத்தனம் முயற்சி
1027 பிரயாசை முயற்சி, வருத்தம், பாடு, உழைப்பு, தொல்லை
1028 பிரயாணம் பயணம், வழிப்போக்கு, வழிச்செலவு, செலவு
1029 பிரலாபம் புலம்பல்
1030 பிரவர்த்தி முயற்சி, செய்கை
1031 பிரவாகம் வெள்ளப்பெருக்கு
1032 பிரவேசம் நுழைவு, முயற்சி
1033 பிரளயம் அழிவுகாலம், உலக ஒடுக்கம், வெள்ளம்
1034 பிரளயாகலர் இருமலக்கட்டினர்
1035 பிரகாரம் கோயிற்சுற்று
1036 பிராகாமியம் நிறைவுண்மை
1037 பிராணவாயு உயிர்க்காற்று, உயிர்வளி, உயிர்ப்பு
1038 பிராணி உயிரி, சிற்றுயிர்
1039 பிராது (அராபி) முறையீடு, முறைப்பாடு
1040 பிராப்தம் ஊழ்வினை
1041 பிராப்தி விரும்பியதெய்தல்
1042 பிராமணன் பார்ப்பான்
1043 பிரார்த்தனை நேர்த்திக்கடன், வேண்டுகோள்
1044 பிரியம் அன்பு, விருப்பம்
1045 பிரீதி அன்பு, உருக்கம், அவா
1046 பிருதிவி மண்
1047 பிரேதம் பிணம்
1048 பிரேரேபித்தல் முன்மொழிதல்
1049 பீசம் முளை, விதை
1050 பீடம் இருக்கை, மேடை
1051 பீடை – துன்பம், பீழை, நோய்  
1052 பீதாம்பரம் பொற்பட்டாடை
1053 புஸ்தகம், புத்தகம் சுவடி, நூல்
1054 புஷ்டி பருமன், தடிப்பு
1055 புட்பம், புஷ்பம் பூ, மலர்
1056 புட்பராகம் வெள்ளைக்கல்
1057 புட்பவதி பூப்பானவள்
1058 புண்ணிய திநம் நன்னாள்
1059 புண்ணிய பாவம் நல்வினை தீவினை, அறம் மறம்
1060 புதன் அறிவன்
1061 புத்தி உணர்ச்சி, அறிவு
1062 புத்திரன் புதல்வன், மகன், மைந்தன், கான் முளை
1063 புத்திரி புதல்வி, மகள்
1064 புயபலம், புஜபலம் தோள்வலி
1065 புராணம் பழங்கதை, பழைய, வரலாறு
1066 புராதனம் பழமை, தொன்மை
1067 புருடன் ஆண்மகன், கணவன்
1068 புருடார்த்தம் உறுதிப்பொருள்
1069 புரோகிதன் வேள்வி செய்வோன்
1070 புவனி, புவி இடம்
1071 புனர்ப்பாகம் சோற்றின் மறுபால், தெளு
1072 பூகம்பம் நிலா நடுக்கம்
1073 பூகோள சாஸ்திரம் நிலநூல்
1074 பூசாரி வழிபாடு செய்வோன்
1075 பூசை வழிபாடு, வணக்கம்
1076 பூஷணம் அணிகலன், அணி
1077 பூச்சியம் இன்மை, அருமை
1078 பூதம் முதற்பொருள், முதல், புலன், பேய்
1079 பூமி நிலம், உலகு
1080 பூரணம் நிறைவு, எல்லாம்
1081 பூரித்தல் நிறைதல்
1082 பூர்த்தி முடிவு, நிறைவு
1083 பூர்வ சென்மம் – முன்பிறப்பு  
1084 பூர்வபஷம் வளர்பிறை
1085 பூர்விகம் பழமை
1086 பேதம் ஒவ்வாமை, வேற்றுமை, வேறுபாடு
1087 பைத்தியம் பித்து, வெறி, கோட்டி
1088 பொக்கிஷம் (தெலு) பொருட்களஞ்சியம், பொக்கிஷசாலை, கருவூலம்
1089 போகம் இனபம், துய்ப்பு, நுகர்பொருள்
1090 போசனம் உணவு, சோறு, உண்டி, ஊண்
1091 போஷகர் ஊட்டகர்
1092 போஷணை நுகர்பொருள்
1093 போதனை கற்பனை
1094 போதை வெறி, மயக்கம்
1095 பெளதிகசாஸ்திரம் இயற்கைப்பொருள் நூல்
1096 பெளத்திரன் பேரன்
1097 பெளத்திரி பேர்த்தி
1098 பெளர்ணமி, பூரணை முழுநிலா
1099 பெளவம் கடல்
1100 வகித்தல் பொறுத்தல், பூணல், ஏற்றல்
1101 வக்கிரம் வளைவு
1102 வசநம் உரைநடை
1103 வசந்தம் தென்றல்காற்று, மணம்
1104 வசித்தல் உறைதல், வாழ்தல்
1105 வசியம், வசீகரம் கவர்ச்சி
1106 வச்சிரம் உறுதியானது
1107 வஸ்திரம் ஆடை, துணி, கூறை
1108 வஸ்து பொருள்
1109 வண்ணம், வர்ணம் நிறம், எழில், அழகு
1110 வதந்தி பேச்சு, பலரறிசொல்
1111 வதுவை மணம், மணப்பெண்
1112 வது பெண்
1113 வநம் காடு
1114 வநவாசம் காடுறை வாழ்க்கை
1115 வந்தனம் வணக்கம், வழிபாடு
1116 வந்தனோபசாரம் வணக்கவுரை  
1117 வமிசம், வம்சம் கால்வழி, பரம்பரை, தலைமுறை
1118 வயசு, வயது ஆண்டு, அகவை
1119 வயம் அதுவாதல், வழி
1120 வயிரம் கூர்மை, ஒளிமணிக்கல், காழ்ப்பு
1121 வயோதிகம் முதுமை
1122 வரம் பேறு, மேன்மை, அருள்
1123 வருக்கம், வர்க்கம் இனம், வகுப்பு, ஒழுங்கு
1124 வருடம் ஆண்டு
1125 வருணம் நிறம், குலம்
1126 வருணனை ஒப்பனை
1127 வர்த்தமானம் செய்தி
1128 வல்லபம் வலிமை, ஆற்றல், திறம்
1129 வாகனம் ஊர்தி, அணிகம்
1130 வாக்கியம் சொற்றொடர்
1131 வாக்கு, வாயுரை சொல், மொழி
1132 வாக்குத்தத்தம் உறுதிமொழி
1133 வாகுமூலம் உறுதிச்சொல்
1134 வாசகம் சொல்
1135 வாசம் மணம், இருப்பு
1136 வாசனை மணம்
1137 வாஞ்சை விருப்பம், அவா
1138 வாதம் காற்று, குளிர்ச்சி, காற்றுப்பிடிப்பு, வழக்கு
1139 வாதனை துன்பம், வருத்தம்
1140 வாதிதல் வழக்கிடுதல்
1141 வாத்சல்யம் அன்பு, விருப்பம்
1142 வாத்தியம் இசைக்கருவி
1143 வாநரம் குரங்கு
1144 வாந்தி வாயாலெடுப்பு, கக்கல்
1145 வாந்தி பேதி கக்கற் கழிச்சல்
1146 வாமம் அழகு, இடப்பக்கம்
1147 வாயு கால, காற்று
1148 வாரம் கிழமை, அன்பு
1149 வாராவதி பாலம்
1150 வார்த்தை சொல்
1151 வாலிபம் இளமை
1152 விகடன் பகடி, வேடிக்கை
1153 விகற்பம், விகாரம் வேறுபாடு
1154 விகாரம் அழகின்மை, வேறுபாடு
1155 விகிதம் நேயம், நட்பு, விழுக்காடு
1156 விக்கிரமம் உருவம், பருப்பொருளுரு
1157 விக்கிநம் இடையூறு, தீங்கு
1158 விஜயம் வெற்றி, எழுந்தருளல்
1159 விசாரணை ஆராய்ச்சி, கேள்வி
1160 விசாரம் கவலை, எண்ணம்
1161 விசாலம், விஸ்தீரணம் விரிவு, அகலம, பெருக்கம்
1162 விசித்திரம் வியப்பு, புதுமை
1163 விசுவாசம் நம்பிக்கை, உண்மை
1164 விசேடம் மேன்மை, சிறப்பு
1165 விச்சை, வித்தை அறிவு
1166 விஞ்ஞாபனம் விண்ணப்பம், முறையீடு, வேண்டுகோள்
1167 விடம், விஷம் நஞ்சு
1168 விடயம், விஷயம் பொருள், நுதலிய பொருள்
1169 விட்டுணு, விஷ்ணு திருமால்
1170 விதண்டாவாதம் அழிவழக்கு
1171 விதந்து, விதவை கைம்பெண், அருதாலி
1172 விதம் வகை, ஆறு, வழி
1173 விதி ஊழ், தெய்வம், முறை, செயற்கை, கட்டளை
1174 விதேயன் பணிவுள்ளவன்
1175 விஸ்தாரம் விரிவு
1176 வித்தியாசம் வேறுபாடு, ஏற்றத்தாழ்வு, வேற்றுமை
1177 வித்துவான் புலவன்
1178 விந்து ஒலிமுதல்
1179 விநயம் வணக்கம், அறிவு
1180 விநாயகர் பிள்ளையார்
1181 விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் நோன்பு
1182 விந்தை, வினோதம் புதுமை
1183 விபத்து இக்கட்டு, இடையூறு
1184 விபரீதம் வேறுபாடு, திரிபு
1185 விபூதி திருநீறு, நீறு
1186 விமோசனம் நிகம், விடுதலை
1187 வியபிசாரி ஒழுக்கமிலான்
1188 வியவகாரம் வழக்கு
1189 வியாக்கியாநம் விரிவுரை
1190 வியாசம் கட்டுரை
1191 வியச்சியம் வழக்கு
1192 வியாஜம் தலைக்கீடு
1193 வியாதி நோய், பிணி
1194 வியாபாரம் வாணிபம், கொண்டுவிற்றல், பண்டமாற்று
1195 விரதம் நோன்பு, தவம்
1196 விருச்சிகம் தேள்
1197 விருட்சம் மரம்
1198 விருத்தன் கிழவன், முதியோன்
1199 விருத்தாசலம் பழமலை
1200 விருத்தாந்தம் வரலாறு
1201 விருத்தி ஆக்கம், பெருக்கம்
1202 விரோதம் பகை, முரண், மாறுபாடு
1203 விலாசம் முகவரி
1204 விவகாரம் வாய்பாடு, வழக்கு
1205 விவசாயம் பயிர்த்தொழில், உழவுத்தொழில், வேளாண்மை
1206 விவரணம் விளக்கம்
1207 விவாகம் திருமணம், மன்றல்
1208 விவாதம் வழக்கு
1209 விவேகம் பகுத்தறிவு, அறிவு
1210 வீதம், விகிதம் விழுக்காடு
1211 வீதி தெரு
1212 வீரர் மள்ளர், மறவர்
1213 வீரியம் மறம், ஆண்மை
1214 வெகுமானம் பரிசு, கொடை
1215 வேகம் விரைவு
1216 வேடம், வேஷம் கோலம்
1217 வேதனம் கூலி
1218 வேதனை துன்பம்
1219 வேதாந்தம் மறைமுடிவு
1220 வேதாரண்யம் மறைக்காடு
1221 வேதியர் அந்தணர், பார்ப்பார்
1222 வைகுண்டம் திருமாலுலகு
1223 வைசூரி அம்மைநோய்
1224 வைடூரியம் பூனைக்கண்மணி, ஒளிமணி
1225 வைதிகம் மறையியல் நெறி
1226 வைத்தியம் மருத்துவம்
1227 வைபவம் கொண்டாட்டம், நிகழ்ச்சி
1228 வைராக்கியம் வெறுப்பு
1229 மகத்துவம் மேன்மை
1230 மகாராசன் அரசன், செல்வன்
1231 மகா பெரிய, மிகுதி, மேன்மை
1232 மகாத்மா பெரியோன்
1233 மகிமா பருமை
1234 மகிமை பெருமை, மேன்மை
1235 மகுடம் தலையணி, முடி
1236 மசானம், மயாநம் சுடுகாடு
1237 மச்சம் – மீன்  
1238 மணிபூரகம் மேல் வயிறு
1239 மண்டூகம் தவளை
1240 மதம் கொழுப்பு, கொள்கை
1241 மது கள், தேன்
1242 மதுகரம் வண்டு
1243 மத்திபம், மத்திமம் நடுநிலை, நடு
1244 மத்தியானம் நண்பகல்
1245 மநசு உள்ளம், மனம்
1246 மநஸ்தாபம் துன்பம், மனவருத்தம்
1247 மநநம் இடையறா நினைவு
1248 மநப்பூர்வம் முழுமனது
1249 மநோகரம் உள்ளக்கவர்ச்சி
1250 மநோராச்சியம் மனக்கோட்டை, வீண் எண்ணம்
1251 மந்தம் செரியாமை, சோம்பல்
1252 மந்தாரம் மப்பு, மழைவானம்
1253 மந்திரம் மறைமொழி
1254 மந்திரி அமைச்சன்
1255 மமகாரம் எனதென்றல்
1256 மரணபரியந்தம் இறக்குமளவும்
1257 மரணம் சாவு, இறப்பு, சாக்காடு
1258 மாசூல் (இந்துஸ்) விளைவு
1259 மாதம் திங்கள்
1260 மாதா தாய், அன்னை
1261 மாதாந்தம் திங்களிறுதி
1262 மாத்திரம் மட்டும்
1263 மாத்திரை அளவு
1264 மாநபங்கம் பெருமைக்குறைவு, மானக்கேடு
1265 மாநியம் இறையிலி நிலம்
1266 மாந்தம் செரியாமை
1267 மாமிசபட்சணம் ஊனுணா
1268 மாமிசம் இறைச்சி, ஊன், புலால்
1269 மாலுமி மீகாமன்
1270 மிதம அளவு, மட்டு
1271 மித்திரன், மித்துரு நட்பு, நண்பு
1272 மிருகம் விலங்கு
1273 மிருதங்கம் மத்தளம்
1274 மிருது மென்மை, நொய்மை
1275 மிலேச்சன் அறிவிலான், வேடன்
1276 மீனாட்சி கயற்கண்ணி
1277 முகஸ்துதி முகமன்
1278 முகூர்த்தம் முழுத்தம், நல்வேளை
1279 முக்கியம் முதன்மை
1280 முத்தி வீடுபேறு
1281 முத்திரை அடையாளம், பொறி
1282 மூடர் அறிவிலார்
1283 மூர்க்கன் அறிவிலான், முருடன்
1284 மூர்ச்சை அறிவு மயக்கம், களைப்பு, உணர்ச்சியின்மை
1285 மூர்த்தி கடவுள்
1286 மூலதனம் முதற்பொருள், விடுமுதல்
1287 மேகம் முகில், எழிலி, வான்
1288 மேடம் ஆடு
1289 மோகம் அவா, மயக்கம், பெருவேட்கை, விருப்பம், மருள்
1290 மோட்சம் வீடு, துறக்கம்
1291 மெளனம் அடக்கம், பேசாமை
1292 யசமானன் தலைவன்
1293 யதார்த்தம் மெய், உண்மை
1294 யதேச்சை விருப்பம், இயற்கை
1295 யத்தனம் முயற்சி
1296 யாகம் வேள்வி
1297 யாசகம் இரப்பு
1298 யாதவன் இடையன்
1299 யாத்திரை வழிச்செலவு , வழிப்பயணம், ஊர்ப்பயணம்
1300 யுகம் ஊழி
1301 யுத்தகளம் போர்முனை, அமர்க்களம்
1302 யுத்தி, யுக்தி சூழ்ச்சி, பொருந்துமாறு
1303 யூகம் நுண்ணறிவு, சூழ்ச்சி, கருங்குரங்கு
1304 யோகஷேமம் நலச்செய்தி
1305 யோகம் தவநிலை, ஒன்றுதல், மனவொருக்கம், நல்வினை
1306 யோக்கியம், யோக்கியதை தகுதி
1307 யோசனை ஓர்வு, ஆராய்ச்சி, சூழ்ச்சி
1308 ரசம் சுவை
1309 ரசீது பற்றுமுறி
1310 ரஸ்தா பெரியதெரு, பாட்டை
1311 ரணம் போர், புண்
1312 ருசுப்படுத்தல் மெய்ப்பித்தல்
1313 ருதுமங்களஸ்நானம் பூப்புநீராட்டு
1314 ரூபம் வடிவம்
 
 
 
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

என்மொழி, எம்மொழி , செம்மொழி. பெருமையாய் உணர்கிறேன்.நன்றி நுணா ......!    💐

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this