Jump to content

ஜபிசி தமிழ்


Recommended Posts

ஜபிசி தமிழ் வானொலி  மாவீர வார நிகழ்வுகள் எல்லாம்  விட்டு விட்டு  வியாபார நிகழ்வுகளை மட்டுமே  வழமையான நிகழ்ச்சிகளையே மட்டுமே ஒலிபரப்புகிறார்கள்ஆதவன்  வானொலி போல் வந்து விட்டார்கள்    வானொலிப்  பெயரை விற்று விட்டார்களா?    உறவுப்பாலம் என்னாச்சு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நேசன் said:

உறவுப்பாலம் என்னாச்சு?

அந்தப் பாலத்தில்  நடந்து கொண்டே கூவிக் கூவி வியாபாரம் செய்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிசி ஊடகம் வியாபார ஊடகம் ஆகி ஆண்டுகள் பல. உங்களைப் போல் பலர் 2009 ற்கு முன்னர் இருந்த ஐபிசி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

வியாபார ஊடகம் தான்,  இருந்தாலும் கொஞ்ச  நஞ்சம் என்டாலும்  ஏதோ நினைவுகள்,  மறவர்களின் நினைவேந்தல் நாட்கள்.  ஒருநாள்  ஏதோ ஒரு வியாபார ஸ்தாப ஆதரவுடன்  ஈழ விடுதலைப்பாடல்கள் என்று போட்டார்கள்

இப்ப யாழ்ப்பாணத்துக்கு கொண்டு போய்   புலம் பெயர் மக்களின்  விடுதலையின் பால் நடந்தவற்றை  நினைவூட்டிக்கொண்டிருந்த  அற்ப சொற்ப நினைவுகளை  கூட போட முடியாமல் கொண்டு வந்து   எல்லாவற்றையும்   அழிக்க நினைக்கிறார்கள்.  இது ஒரு  தூர நோக்கத்தோடு   நிகழ்த்த படும்   செயல் பாடு.  யாழ்ப்பாணம்  கலையகம் கொண்டு சென்றால் சிங்களவன்  எங்கள் பக்க நினைவுகளை  ஒலி பரப்ப விடமாட்டான் என்று  பால் குடிக்கும் குழந்தைக்கும் விளங்கும்.    இதுக்கு  வேற  ஒலிபரப்பாளர்கள் சப்பைக்கட்டு.   எல்லாம்  போரின் மேல் ஏறி சவாரி செய்து வளர்ந்து விட்டு   இழுத்து விழுத்தி  அழிக்க நினைக்கிறார்கள்     ஜ.பி.சி  தமிழ்   புலம் பெயர் தமிழரின்  பிரான்ட் NAME .   அந்த  ஊடக பெயரை  தனிப்பட்ட வியாபாரி    தன் நலனுக்காக  சிங்களத்தின் சட்ட அமைவுக்கு கீழ் கொண்டு சென்றது   புலம் பெயர் தமிழருக்கு   செய்யும்  ஒரு அநீதி.  மீண்டும்    புலம் பெயர் தேசத்தில்  சுதந்திரமாக  இயங்கி  எங்கள் உணர்வுகளை  எங்களை  பற்றி பாட நினைவூட்ட   ,கருத்து சொல்ல  எல்லாரும் சேர்ந்து ஆவண செய்வோம்...     சினிமா பாட்டு போட   யாழ்ப்பாணம்  தேவை இல்லை  ஆயிரம்  இணைய வானொலிகள்   வந்து விட்டன.  எங்கள்  வலியை  எங்கள் தாகத்தை, எங்கள் ஆதங்கத்தை  நாங்கள்   பாடாமல் சொல்லாமல்  யார் சொல்வது.? நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.