Jump to content

14,600 செம்மறியாடுகளுடன் கருங்கடலில் கவிழ்ந்த குயின் ஹின்ட் கப்பல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ship-sheep.jpg

14,600 செம்மறியாடுகளுடன் கருங்கடலில் கவிழ்ந்த குயின் ஹின்ட் கப்பல்!

ரொமேனிய கரையோரம், கருங்கடல் பகுதியில் 14,600 செம்மறியாடுகளை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்துள்ளது.

சவுதி அரேபியாவுக்குச் செல்லும் வழியில் Queen Hind என்ற குறித்த கப்பல் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்று இன்னும் அறியப்படவில்லை.

கப்பலிலிருந்து சிரியாவைச் சேர்ந்த 20 பேரும், லெபனானைச் சேர்ந்த ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 32 செம்மறியாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கப்பலின் சரக்கு கிடங்கில் உள்ள எஞ்சிய செம்மறியாடுகள் இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என மீட்புக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கப்பலை நிலை நிறுத்தி அதனை மீண்டும் துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமான விலங்குகள் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று விலங்கு நல அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ரொமேனியத் துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் அனுப்பப்படும் கால்நடைகள், மோசமான நிலையில் கொண்டு செல்லப்படுவதாக விலங்குநல ஆர்வலர்கள் ஏற்கனவே முறைப்பாடு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/14600-செம்மறியாடுகளுடன்-கருங/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.