Jump to content

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

muralitharan.jpg

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின்  தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ வெற்றியடைவார் எனவே வெல்லும் அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போதுதான் நாங்கள் வாதிட்டு எமது உரிமை கேட்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டோம் ஆனால் மக்கள் தெளிவடையவில்லை.

இன்று சஜித் பிரேமதாசவை கொண்டு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும். கிழக்கில்  தமிழன் இருந்திருக்க முடியாதுடன் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் இன்று சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஒரு ஜனாதிபதி உருவாகியுள்ளார் இதனை நிரூபித்து காட்டிய ஜனாதிபதி தேர்தல் இதுதான்.

கடந்த காலத்தில் 6 ஜனாதிபதி தேர்தல் நடந்திருக்கின்றது அந்த ஜனாதிபதியை சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிர்ணயித்தது. ஆனால் இன்றைக்கு பெரும்பான்மை மக்கள் மட்டும் போதும் வேறு இனம் தேவையில்லை என்ற கட்டத்திற்கு இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.

அதேவேளை இதுவரை நடந்த  நாடாளுமன்ற  அமைச்சர்களில் முஸ்லீம் அமைச்சர் இல்லாத அமைச்சர்கள் இதுதான். இது எமக்கு பாரிய வெற்றி. மஹிந்த ராஜபஷ என்ன கூறினார் ஹக்கீம், றிசாட் என ஒருவரையும் எடுக்க மாட்டேன் என அவர் வாக்குறுதியளித்தார் அதனை அவர் செய்துகாட்டியுள்ளார்.

எனவே நாங்கள் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறு பிழையை விட்டுவிட்டு வந்து வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருமாறும் பாலம் கட்டித் தருமாறும் வீதியை போட்டுத் தருமாறும் கேட்க வேண்டுமென்றால்  நாங்கள் அவர்களுக்கு வாக்களித்தால்தான் உரிமையோடு கேட்கலாம். எனவே எதிர்வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த முடிவுளை எடுக்கவேண்டும்.

தேர்தல் காலங்களில் மேடைகளில் சிலரை தேசிய தலைவர் என விழிக்கின்றனர் ஆனால் எவருக்கும் அந்த தகுதியில்லை  எனக்கு கூட தகுதியில்லை நான் கூட தேசிய தலைவர் பிரபாகரினால் வளர்கப்பட்டவன் அந்த தகுதி தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் உள்ளது” என கூறினார்.

http://athavannews.com/தமிழ்-தேசிய-தலைவர்-என-கூற/

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின்  தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:-

தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.[1] மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.[2] கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென கருதப்படுகிறது.

1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரித்தானியா அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அந்த நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை மீறி திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவருகிறது. சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்கு சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்ற முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கைச் பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாக தமிழர்கள் தொகை தொகையாக கொல்லப்பட்டனர்.

1958, 1977, 1983 ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இதுவரை 100 000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இலங்கைத் தீவில் தமிழர்களை முற்றிலுமாக அழுத்தொழிக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை சிங்கள அரசு போரினால் மட்டுமன்றி பல்வேறு வழிகளில் தமிழர் இனத்தையும் வளர்ச்சியையும் முடக்கி வருகின்றது. இதற்கான பல்வேறு உத்திகளைத் திட்டமிட்டு மிகத் தந்திரோபாயமாக கையாண்டு வருகின்றது.

இலங்கையில் போர் நடைபெற்று வரும் வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.[4][5] போரினால் அவலப்பட்டு வவுனியா வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்களம் மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டது.

இது தமிழர்களின் வருங்காலச் சந்ததியினர்களும் இலங்கை இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டம்மிட்ட நடவடிக்கையாகும். ஒரு இனத்தைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயலுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
 
முஸ்லிம்கள் ஆட்சியில் இல்லாத வரலாற்று நிகழ்வால் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் அது பாரிய வெற்றியென்றும் சிங்கள மக்களால் தமிழ் மக்கள் முஸ்லிம் இனவாதிகளின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
 
மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் மத்தியில்  தொடர்ந்து உரையாற்றிய எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் பிரதித் தலைவரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி எனும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின்  தலைவருமான கருணா,
 
'ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ வெற்றியடைவார் எனவே வெல்லும் அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போதுதான் நாங்கள் வாதிட்டு எமது உரிமைகளைக் கேட்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டோம் ஆனால் மக்கள் தெளிவடையவில்லை.
 
தமிழர்களைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை துவேஷவாத முஸ்லிம்களும் இப்பொழுது சஜித்துடன்தான் இருக்கிறார்கள்.
 
தற்செயலாக சஜித் வென்றிருந்தால்  என்ன நடந்திருக்கும். கிழக்கில்  தமிழன் இருந்திருக்க முடியாதுடன் பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும்.
 
ஆனால் இன்று சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 
சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஒரு ஜனாதிபதி உருவாகியுள்ளார் இதனை நிரூபித்து காட்டிய ஜனாதிபதி தேர்தல் இதுதான்.
 
கடந்த காலத்தில் 6 ஜனாதிபதி தேர்தல் நடந்திருக்கின்றது அந்த ஜனாதிபதியை சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிர்ணயித்திருந்தது.
 
ஆனால் இன்றைக்கு பெரும்பான்மை மக்கள் மட்டும் போதும் வேறு இனம் தேவையில்லை என்ற கட்டத்திற்கு இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
 
அதேவேளை இதுவரை நடந்த  நாடாளுமன்ற  அமைச்சர்களில் முஸ்லீம் நபர்கள் இல்லாத அமைச்சரவை இதுதான்.
 
இது எமக்கு பாரிய வெற்றி. வாக்குறுதியளித்தது போன்று ஹக்கீம், றிசாட் என ஒருவரையும் எடுக்க மாட்டோம் என்று கூறியதை செய்தும் காட்டியுள்ளனர்.
 
எனவே நாங்கள் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறு பிழையை விட்டுவிட்டு வந்து வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருமாறும் பாலம் கட்டித் தருமாறும் வீதியை போட்டுத் தருமாறும் கேட்க வேண்டுமென்றால்  நாங்கள் அவர்களுக்கு வாக்களித்தால்தான் உரிமையோடு கேட்கலாம். எனவே எதிர்வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த முடிவுளை எடுக்கவேண்டும்.
 
தேர்தல் காலங்களில் மேடைகளில் சிலரை தேசிய தலைவர் என விளிக்கின்றனர் ஆனால் எவருக்கும் அந்த தகுதியில்லை  எனக்கு கூட தகுதியில்லை நான் கூட தேசிய தலைவர் பிரபாகரனால் வளர்க்கப்பட்டவன் அந்த தகுதி தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் உள்ளது' என கூறினார் கருணா.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/26/2019 at 4:29 PM, தமிழ் சிறி said:

சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஒரு ஜனாதிபதி உருவாகியுள்ளார் இதனை நிரூபித்து காட்டிய ஜனாதிபதி தேர்தல் இதுதான்.

தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை ஒவ்வொரு புத்த சங்கத்துக்கும் அள்ளிக் கொட்டி வாக்குப்பெற்று ஜனாதிபதியாகி நல்ல தியாகி ஆக காட்ட முயற்சிக்கிறார். ஏமாறப்போவது இந்த ஏமாளி. இருந்தாலும் மண் ஓட்டேலை  எண்டு சாதிக்கும். அதுக்கும் போறதுக்கு வேற போக்கிடம் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/26/2019 at 6:29 AM, தமிழ் சிறி said:

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா

ஈழத்தமிழின வரலாறுகள் தெரியாதவனையெல்லாம் அண்ணா  அண்ணா என்று கதறி சொந்தம் கொண்டாடும் உறவுகள் இருக்கும் வரைக்கும்............................... கொண்ணர் இதுவும் சொல்லுவார்.இதுக்கு மேலையும் சொல்லுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கயவன் கருணா காரியத்தோடு கதைக்கிறான்' எனத் தலைப்பிடலாம். இதில் வேறு என்ன சொல்ல ? வெட்கம், மானம் இவை அறிந்தும் அறியாதது போல், இவனைப் போன்றோர் தமிழகத்திலும் இலங்கையிலும் சமூக தளத்தில் வலம் வருதல் தமிழனுக்கு நேர்ந்த அவலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/26/2019 at 8:43 AM, puthalvan said:

இவருக்கு ஒரு பதவி அவசரம் தேவை 

காரியம் முடிந்தவுடன் கறிவேப்பிலை எறிவது போல் மெல்ல மெல்ல  தூக்கி எறியப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன்.😎

Link to comment
Share on other sites

21 hours ago, satan said:

தமிழ் மக்களிடம் கொள்ளை அடித்த பணத்தை ஒவ்வொரு புத்த சங்கத்துக்கும் அள்ளிக் கொட்டி வாக்குப்பெற்று ஜனாதிபதியாகி நல்ல தியாகி ஆக காட்ட முயற்சிக்கிறார். ஏமாறப்போவது இந்த ஏமாளி. இருந்தாலும் மண் ஓட்டேலை  எண்டு சாதிக்கும். அதுக்கும் போறதுக்கு வேற போக்கிடம் இல்லையே.

20 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழின வரலாறுகள் தெரியாதவனையெல்லாம் அண்ணா  அண்ணா என்று கதறி சொந்தம் கொண்டாடும் உறவுகள் இருக்கும் வரைக்கும்............................... கொண்ணர் இதுவும் சொல்லுவார்.இதுக்கு மேலையும் சொல்லுவார்.

20 hours ago, சுப.சோமசுந்தரம் said:

'கயவன் கருணா காரியத்தோடு கதைக்கிறான்' எனத் தலைப்பிடலாம். இதில் வேறு என்ன சொல்ல ? வெட்கம், மானம் இவை அறிந்தும் அறியாதது போல், இவனைப் போன்றோர் தமிழகத்திலும் இலங்கையிலும் சமூக தளத்தில் வலம் வருதல் தமிழனுக்கு நேர்ந்த அவலம்.

15 hours ago, குமாரசாமி said:

காரியம் முடிந்தவுடன் கறிவேப்பிலை எறிவது போல் மெல்ல மெல்ல  தூக்கி எறியப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன்.😎

  1. கருணா என்ற பெயர் இவருக்கு எப்படி வந்தது?
  2. இவரை தமிழ் மக்கள் முதன்முதலில் எப்படி அறிந்து கொண்டார்கள்?
  3. இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக காரணமானது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Jude said:

  1. கருணா என்ற பெயர் இவருக்கு எப்படி வந்தது?
  2. இவரை தமிழ் மக்கள் முதன்முதலில் எப்படி அறிந்து கொண்டார்கள்?
  3. இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக காரணமானது என்ன?

உங்களை பார்க்க பாவமாக இருக்கிறது. பாவம் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகளோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

  1. கருணா என்ற பெயர் இவருக்கு எப்படி வந்தது?
  2. இவரை தமிழ் மக்கள் முதன்முதலில் எப்படி அறிந்து கொண்டார்கள்?
  3. இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக காரணமானது என்ன?

1 hour ago, விசுகு said:

உங்களை பார்க்க பாவமாக இருக்கிறது. பாவம் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகளோ

எனக்கும் பார்க்க பாவமாய் கிடக்கு....இதோடை விட்டுடுவம்.

Link to comment
Share on other sites

6 hours ago, விசுகு said:

உங்களை பார்க்க பாவமாக இருக்கிறது. பாவம் உங்களுக்கு என்னென்ன பிரச்சினைகளோ

4 hours ago, குமாரசாமி said:

எனக்கும் பார்க்க பாவமாய் கிடக்கு....இதோடை விட்டுடுவம்.

உங்கள் எல்லோரையும் பார்க்க எனக்கு நல்ல சந்தோசமாக இருக்கிறது 😃😀 😁 

அனுபவி இராஜா, அனுபவி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

உங்கள் எல்லோரையும் பார்க்க எனக்கு நல்ல சந்தோசமாக இருக்கிறது 😃😀 😁 

அனுபவி இராஜா, அனுபவி 😎

அதைத்தான்  நானும்  குமாரசாமியண்ணையும்   மேலே உறுதிப்படுத்தியுள்ளோம்🤣

ஒன்றும் பயமில்லை  எமக்கு

தூரத்தானே  இருக்கின்றோம்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎27‎/‎2019 at 10:44 AM, குமாரசாமி said:

ஈழத்தமிழின வரலாறுகள் தெரியாதவனையெல்லாம் அண்ணா  அண்ணா என்று கதறி சொந்தம் கொண்டாடும் உறவுகள் இருக்கும் வரைக்கும்............................... கொண்ணர் இதுவும் சொல்லுவார்.இதுக்கு மேலையும் சொல்லுவார்.

அண்ணா, சம்மந்தரை தேசிய தலைவர் என்று சொல்வோமா?

On ‎11‎/‎27‎/‎2019 at 4:01 PM, குமாரசாமி said:

காரியம் முடிந்தவுடன் கறிவேப்பிலை எறிவது போல் மெல்ல மெல்ல  தூக்கி எறியப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன்.😎

உங்களுக்கும் சரி,இங்கு யாழில் இருக்கும் சிலருக்கும் சரி அவரின் அரசியல் புரியாது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அண்ணா, சம்மந்தரை தேசிய தலைவர் என்று சொல்வோமா?

உங்களுக்கும் சரி,இங்கு யாழில் இருக்கும் சிலருக்கும் சரி அவரின் அரசியல் புரியாது.😀

தான் என்ன செய்கிறன் என்று சம்பந்தருக்கே தெரியாது.

அப்புறம் எப்படிம்மா மற்றவர்களுக்கு தெரியும்.

இன்று ஒன்றைச் சொல்லுவார் நாளை நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை என்கிறாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

உங்களுக்கும் சரி,இங்கு யாழில் இருக்கும் சிலருக்கும் சரி அவரின் அரசியல் புரியாது.😀

அவருடைய  அரசியல்  என்னவென்று  அவரின்  இன்றைய  சொத்து  மதிப்பை  பார்த்தாலே  புரியுதே...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவருடைய  அரசியல்  என்னவென்று  அவரின்  இன்றைய  சொத்து  மதிப்பை  பார்த்தாலே  புரியுதே...?

கர்ணாவை விட்டு நம்ம தேசிய கூத்தமைப்பு காரர்களின் சொத்தைப்பார்த்தால் எப்படி இருக்கும் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கர்ணாவை விட்டு நம்ம தேசிய கூத்தமைப்பு காரர்களின் சொத்தைப்பார்த்தால் எப்படி இருக்கும் ??

அதுக்கு  ஏன்  நம்ம  என்று  என்னையும் உங்க  கூட  சேர்க்கிறீர்கள் ராசா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அதுக்கு  ஏன்  நம்ம  என்று  என்னையும் உங்க  கூட  சேர்க்கிறீர்கள் ராசா??

எங்க போனாலும் தமிழ் என்பதை சேர்த்துக்கொள்வதால் அந்த வார்த்தைக்கு மட்டும் நானும் இணைந்து கொள்கிறேன் மற்றபடி இவங்களுக்கு எங்கு சென்றாலும் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க போனாலும் தமிழ் என்பதை சேர்த்துக்கொள்வதால் அந்த வார்த்தைக்கு மட்டும் நானும் இணைந்து கொள்கிறேன் மற்றபடி இவங்களுக்கு எங்கு சென்றாலும் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறேன் 

இந்த  இவர்கள் என்பதற்குள்

முரளிதரனும்   இருக்கக்கடவது.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இந்த  இவர்கள் என்பதற்குள்

முரளிதரனும்   இருக்கக்கடவது.....???

காட்டு வெள்ளத்தை கடக்க சில கட்டைகளை பயன்படுத்திய பின்னர் அதை அந்த காட்டு வெள்ளத்தில் விட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான் பயணத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

தான் என்ன செய்கிறன் என்று சம்பந்தருக்கே தெரியாது.

அப்புறம் எப்படிம்மா மற்றவர்களுக்கு தெரியும்.

இன்று ஒன்றைச் சொல்லுவார் நாளை நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை என்கிறாரே?

ஈழப்பிரியன் அண்ணா,நான் இரண்டாவதாய் எழுதின கருத்து  கருணாவைப் பற்றி 😁
 
5 hours ago, nunavilan said:

நுணா இந்த வீடியோவுக்கு நான் எப்பவோ பதில் கொடுத்துட்டேன் 

3 hours ago, விசுகு said:

அவருடைய  அரசியல்  என்னவென்று  அவரின்  இன்றைய  சொத்து  மதிப்பை  பார்த்தாலே  புரியுதே...?

எவ்வளவு காசு வைத்திருக்கிறார் என்பது தான்  உங்கள் கண்ணுக்குள் குத்துகுது ஆக்கும்...தமிழ்த்தேசியம் பேசிக் காசு அடித்தவர்களை விட ,கூட்டமைப்பினரை விட ,புலியை சொல்லி காசு அடுத்தவர்களை விட டக்ளசும்,கருணாவும் தங்களுக்கு முடிந்ததை மக்களுக்கு செய்யினம் ...உங்களுக்கு நம்பிக்கை இல்லாட்டில் நீங்களும் ,கு.சா அண்ணரும் ஊருக்கு போய் 3ல் இருந்து 6 மாதம் வரைக்கும் மக்களோடு மக்களாய் இருந்திட்டு வாங்கோ 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

ஈழப்பிரியன் அண்ணா,நான் இரண்டாவதாய் எழுதின கருத்து  கருணாவைப் பற்றி 😁
 
நுணா இந்த வீடியோவுக்கு நான் எப்பவோ பதில் கொடுத்துட்டேன் 

எவ்வளவு காசு வைத்திருக்கிறார் என்பது தான்  உங்கள் கண்ணுக்குள் குத்துகுது ஆக்கும்...தமிழ்த்தேசியம் பேசிக் காசு அடித்தவர்களை விட ,கூட்டமைப்பினரை விட ,புலியை சொல்லி காசு அடுத்தவர்களை விட டக்ளசும்,கருணாவும் தங்களுக்கு முடிந்ததை மக்களுக்கு செய்யினம் ...உங்களுக்கு நம்பிக்கை இல்லாட்டில் நீங்களும் ,கு.சா அண்ணரும் ஊருக்கு போய் 3ல் இருந்து 6 மாதம் வரைக்கும் மக்களோடு மக்களாய் இருந்திட்டு வாங்கோ 
 
இதில் கோபப்பட ஒன்று இல்லை சகோதரி இவருக்கு எப்படி காசு வந்தது என்பது தான் கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இதில் கோபப்பட ஒன்று இல்லை சகோதரி இவருக்கு எப்படி காசு வந்தது என்பது தான் கேள்வி.

ஒரு துரோகிக்கு எப்படி காசு வந்தால் உங்களுக்கு என்ன அண்ணா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.