• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
புங்கையூரன்

கண்ணீரின் தடங்கள்...!

Recommended Posts

maaveerar-naal.jpg

 

ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....!

 

ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...!

அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..!

என்ன பாடம் என்றில்லை..,

எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..!

ஒரு நாள் கேட்டார்...!

உனக்கு உரிமை இருக்கா எண்டு...?

 

என்னடா இது புது வில்லண்டம்?

வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..!


அப்போது புரியவேயில்லை...!

ஆறாம் வகுப்பு முடிஞ்சு ...,

அட்வான்சு லெவல் வந்த போது..,

எல்லாமே புரிஞ்சது...! 


நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு....

ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....!

கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம்  வெளிச்சது மாதிரி...!

மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல...!

குட்டக் குட்டக் குனிந்தவன் கொஞ்சம் ...நிமிர்வது போல...!


அடித்தவனுக்குத் திருப்பிக் கொடுக்க...,

அட ...அவனுக்கும் வலித்திருக்க வேண்டும்...!


எத்தனை...விமரிசனங்கள்....?

இது நியாயமா.....இது சரிதானா?


எதுவுமே....காதில் விழவில்லை...!

எல்லோரும்....தலைவராகத் துடிக்கும்...,

இனத்தில்.....இப்படியும் ஒரு இயக்கம்...!

எவ்வாறு சாத்தியமானது?


சகுனிகள் முளைத்தார்கள்...!

ஒன்றல்ல.....இரண்டல்ல...,

ஆயிரம் சகுனிகள் உதித்தார்கள்...!

எதிரிகளாக....அல்ல...,

நண்பர்களாக..!

சூரியன்களாக ஒளிர்ந்தார்கள்..!


அந்தப் பிரகாசத்தில்...,

உண்மைச் சூரியன்.....மறைந்து போனது..!


சகுனிகள்...,

இன்னும் பிரகாசிக்கிறார்கள்...!


இன்னுமொரு.....

சூரியன் உதிக்கும் வரை....,

சகுனிகள் பிரகாசிப்பார்கள்..!

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சகுனிகள் வேதம் ஒதுவதுதான் சகிக்க முடியாமல் இருக்கு. நம்பியவரைத்தான் ஏமாத்தலாம், அதுதான் கூடவே இருந்து குழி பறித்து விடுகின்றார்கள்..... புங்கை  நல்ல நேரத்தில் நல்ல நினைவு.....!   👍

Share this post


Link to post
Share on other sites

சகுனிகளின் பயணம் சவகுழியை நோக்கித்தான் இருக்கிறது தோழா.

Share this post


Link to post
Share on other sites
On 11/26/2019 at 9:15 AM, புங்கையூரன் said:

maaveerar-naal.jpg

 

ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....!

 

ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...!

அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..!

என்ன பாடம் என்றில்லை..,

எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..!

ஒரு நாள் கேட்டார்...!

உனக்கு உரிமை இருக்கா எண்டு...?

 

என்னடா இது புது வில்லண்டம்?

வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..!


அப்போது புரியவேயில்லை...!

ஆறாம் வகுப்பு முடிஞ்சு ...,

அட்வான்சு லெவல் வந்த போது..,

எல்லாமே புரிஞ்சது...! 


நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு....

ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....!

கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம்  வெளிச்சது மாதிரி...!

மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல...!

குட்டக் குட்டக் குனிந்தவன் கொஞ்சம் ...நிமிர்வது போல...!


அடித்தவனுக்குத் திருப்பிக் கொடுக்க...,

அட ...அவனுக்கும் வலித்திருக்க வேண்டும்...!


எத்தனை...விமரிசனங்கள்....?

இது நியாயமா.....இது சரிதானா?


எதுவுமே....காதில் விழவில்லை...!

எல்லோரும்....தலைவராகத் துடிக்கும்...,

இனத்தில்.....இப்படியும் ஒரு இயக்கம்...!

எவ்வாறு சாத்தியமானது?


சகுனிகள் முளைத்தார்கள்...!

ஒன்றல்ல.....இரண்டல்ல...,

ஆயிரம் சகுனிகள் உதித்தார்கள்...!

எதிரிகளாக....அல்ல...,

நண்பர்களாக..!

சூரியன்களாக ஒளிர்ந்தார்கள்..!


அந்தப் பிரகாசத்தில்...,

உண்மைச் சூரியன்.....மறைந்து போனது..!


சகுனிகள்...,

இன்னும் பிரகாசிக்கிறார்கள்...!


இன்னுமொரு.....

சூரியன் உதிக்கும் வரை....,

சகுனிகள் பிரகாசிப்பார்கள்..!

சூரியன் தானாக உதிப்பதை எவராலும் தடுக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • உப்புடி சம்பந்தன் ஆக்கள் போல ஒரு வட்டத்துக்குல, அதுவும் ஆதாரத்தோட சிந்திச்சா தமிழினத்துக்கு ஒருநாளும் விடிவு வராது.      உப்புடி அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்கோணுமோ? ஒரு முயற்சி எடுத்தா உந்த அட்டவணை மாறாதோ, அல்லது மாற்ற முடியாதோ? ஒரு குழந்தை பெற்றுக்கொள்ற பல தமிழர் 3 அல்லது 4 குழந்தை பெற்றா சாத்தியப்படாதோ? அல்லது எந்த முயற்சியும் இல்லாம எல்லாம் தானா தான் நடக்கோணுமோ? ஆதாரங்கள் இருந்தா எடுத்துவிடுங்கோ. நம்புற ஆட்கள் குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓடட்டும்.
    • கிட்டடில தான் இங்க பல கொலைகளை செய்த ஒராளை அரசாங்கம் இரகசியமா விடுதலை செய்துள்ளது கவனிக்கத்தக்கது. 
    • இந்த அரசால் இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு, லண்டன் தூதரகத்தில் கழுத்தறுப்பதில் வல்ல பிரியங்காவின் வேலைக்கு அமர்த்தப்படுவார் என்று  நம்பலாம். ஒரே இடத்தில தான் உதைக்குது. செத்தது சிங்களப் பிள்ளை ஆச்சே.
    • அதானே! வன்னியிலும், கிழக்கிலும் நடந்த அபிவிருத்திகளை தெரியாமல் சகல உண்மைகளும் எனக்கு மட்டுமே அத்துப்படி என்கிற ரேஞ்சில ரீல்விட்டுடு, யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்று பிரதேசவாத்தை உசுப்பிவிட்டுடு , இப்ப உண்மை சுட பிளேட்டை மாத்தி போடக்கூடாது அண்ணே!
    • வேத வியாஸரின் மகன் சுகப்பிரமம் என்னும் சுகர்......இவர் பிறக்கும்போதே ப்ரம்ம ஞானியாக பிறந்தவர்.ஆயினும் விளக்கின் அடியில் இருக்கும் சிறு இருள்போல் இவரிடமும் சிறு கர்வம் (செருக்கு) இருந்ததை தந்தை வியாசர் கவனித்துள்ளார். பொதுவாக பெற்றோர் எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் பொறுமையாக அவர்களிடம் படிக்க மாட்டார்கள். அவர்களும் எருமைகளாக பிள்ளைகளை முட்டுவார்கள். அதனால் இன்னொருவரிடம் டியூசனுக்கு சென்றுதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். இது பொதுவான நியதி.அதனால் சுகர் ஜனகமன்னரிடம் ட்யூசன் எடுக்க செல்கிறார்.......! ஜனக மகாராஜா, இவர் மிதிலை நாட்டிற்கு(சீதாப்பிராட்டியாரின் ஊர்.சீதைக்கு ஜானகி என்றும்,மைதிலி என்றும்  கூட  பெயர்கள் உண்டு.). மன்னராக இருந்தபோதிலும் ஒரு ஜீவன்முக்தராகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த ஜீவன்முக்தர் என்பது முனிவர், ரிஷி, பிரம்மரிஷி (வசிஷ்டர்,விசுவாமித்திரர்) ஸப்தரிஷி (அகத்தியர்,அத்ரி, பரத்வாஜர் போன்றவர்கள்)போன்றவர்களைவிடவும் மேலான நிலை. ஒரு அகில உலக உச்சநீதிமன்ற நீதிபதி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.....! இந்த ஜனக மகாராஜாவிடம் ஏற்கனவே நாரதர், அகத்தியர் ஆகியோர் வந்து தமக்கு ஏற்படும் அற்பசொற்ப கர்வம், ஆணவம் களை  களைந்து விட்டு சென்றிருக்கின்றார்கள். அப்பேற்பட்டவரிடம் சுகர் வருகின்றார்.(சுகம் என்றால் கிளி. இவரது முகம் கிளி முகம் போன்று இருக்கும்). வந்தவர் வாயிற்காப்போனிடம் தனது பட்டங்கள், கப்புகள், மெடல்கள் எல்லாவற்றையும் சிறிது செருக்குடன் சொல்லி, சொல்லி விட்டதால் அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வரும்படி மகாராஜாவால் அறிவுறுத்தப்படுகிறார்.( பின்னாளில் அவர் ஆடைகளையும் துறந்து விட்டு பரிநிர்வாணமாகவே வாழ்ந்து வந்தார்).......! அப்போதே அவரது செருக்கில் பாதி போய் விட்டது. அரசவைக்குள் செல்கிறார்.அங்கு வழக்கு நடைபெறுகின்றது.தீர்ப்பு கொடுக்கப் படுகின்றது. அதை  ஊண்றிக் கவனிக்கின்றார். அந்த குற்றவாளி தனது தலை சிதறப்போகின்றது என்ற நிலை வரும்போது ஆட்டம் பாட்டம் எதிலும் கவனம் செலுத்தாமல் தனது தலையில் உள்ள எண்ணெய் மீது மட்டுமே கவனத்தை குவித்து ஊரை சுற்றி வந்து தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறான்......! (இதே போன்றதொரு தண்டனையை மகாவிஷ்ணு நாரதருக்கும் கொடுத்திருக்கிறார்). பிரம்மஞானத்தை பெறுவது அப்படியே. ஒருமுகபட்ட  சிந்தனையுடன் அதை தியானித்து,அதையே தியானித்து பெறவேண்டும் என்பதை சுகர் புரிந்து கொள்கிறார்.......!  😂 கல்லால மரத்தின் கீழ் குரு  தட்ஷணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். அவரிடம் கல்வி கற்க பிரம்மாவின் பிள்ளைகளான சனகர்,சனந்தனர்,சனாதனர்,சனத்குமாரர் ஆகியோர் வருகின்றனர்.யாரும் யாரோடையும் எதுவும் பேசவில்லை.காலம் செல்கிறது.கண்விழித்த குரு  பார்வையால் வினவுகிறார் புரிந்ததா என்று, அவர்களும் நன்றாக புரிந்தது என்று வணங்கி செல்கின்றனர்.....! ஏதோ என் சிற்றறிவில் படித்தது, கேட்டதை கொண்டு சொல்லியிருக்கிறேன்.சுகரை பற்றி  மேலும் பல கதைகள் உள்ளன.....!  🤔