• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ampanai

மாவீரர் துயிலும் இல்லத்தில் தற்காலிக நினைவு தூபி , நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினால் அகற்றல்

Recommended Posts

வடக்கு- கிழக்குப் பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூபி மற்றும் நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

 

2222.jpg

 

நாளை புதன் கிழமை (27) தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் தினத்திற்கு என மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொது சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,  மன்னார் மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கற்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை  இரவு இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த நேரத்தில் மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் அதிகளவிலான இராணுவ வீரர்கள் மற்றும்   இராணுவ வாகனங்களும் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

IMG_3460.jpg

 

கடந்த வாரம் குறித்த துயிலும் இல்லம் சிரமதான பணிகளின் போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் பலர் வருகை தந்து பொது மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

6ceae3af-5c40-4c17-bfff-ed385ab1721c.jpg

 

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்  நினைவு கூறுமாறு தெரிவித்த நிலையிலும் நாளைய தினம் புதன் கிழமை மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

15114def-29f7-4483-855d-6c586da78de9.jpg

 

00__4_.jpg

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு நாட்டின் அரசின் கட்டுப்பாயிலேயே முப்படைகளின் செயற்பாடுகளும் அமைந்திருக்கும். சிறீலங்கா சிங்கள அரசில்மட்டும், புதிய பழைய சனாதிபதிகள், அமைச்சர்கள், படை அதிகாரிகள் என பல பிரிவுகளின் கட்டுப்பாட்டில் அவரவர்கள் செயற்பாடுகள் அமைந்திருக்கும்.   

Share this post


Link to post
Share on other sites

அவர்களால் நினைவு தூபிகளை மட்டும்  தான் அகற்ற முடியும். 
எங்கள் மனங்களில் இருந்து ஒரு போதும் எம் காவல் தெய்வங்களை அகற்ற முடியாது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.