• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நிலாமதி

மாடாய் உழைத்து ..

Recommended Posts

வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது.
 
அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார்.
 
பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது.
 
அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார்.
 
வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி..
 
“மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.
 
கோபமடைந்த மாடு “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி..
 
“மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார்.
 
தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது.
 
மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை.
 
சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார்.
 
“எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது.
 
“உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது..
 
“எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..“நான் செய்வது துரோகம் இல்லை
 
 ஒரு  முதலாளியின் லட்சியம், தன் தொழிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது. அதையே நானும் செய்தேன், உன் மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை 3 ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன். நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார்.
 
 
தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
 
இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
 
 
 படித்ததில்   பிடித்தது 
 
 • Like 4
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

இது மனிதருக்கும்... பொருந்தும்.

வேலை இடத்தில்... நீங்கள் திடகாத்திரமாக வேலை செய்யும் மட்டும் தான்,
முதலாளிக்கு... அந்த வேலையாள் தேவை.

அவரால்.... அந்த வேலையை செய்ய முடியாமல் போனால்....
அந்த இடத்திற்கு, வேறு ஒருவரை... முதலாளி நியமிப்பார்.

Share this post


Link to post
Share on other sites

முதலாளியை விடுங்கள்....இப்போதெல்லாம் தொழிலாளியே தொழிலாளிக்கு எதிரியாகின்றார்கள்.....!

---- ஒருத்தரை வேலைக்கு கொண்டு போய் சேர்த்தால் சில நாட்களிலேயே கொண்டு போய் சேர்த்தவரை புறஞ் சொல்லி ஓரங்கட்டி விடுகின்றார்கள்.....!

---- பத்து ஈரோவுக்கு வேலை செய்பவன் எதாவது சிறு பிரச்சினை வரும்போது முதலாளி சொல்கிறான் விருப்பமில்லை என்றால் விட்டுட்டு போ ....பின்னால எட்டு ஈரோவுக்கு வேலை செய்ய ஆள் ரெடியாய் இருக்கு என்று......!   🤔

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

முதலாளியை விடுங்கள்....இப்போதெல்லாம் தொழிலாளியே தொழிலாளிக்கு எதிரியாகின்றார்கள்.....!

---- ஒருத்தரை வேலைக்கு கொண்டு போய் சேர்த்தால் சில நாட்களிலேயே கொண்டு போய் சேர்த்தவரை புறஞ் சொல்லி ஓரங்கட்டி விடுகின்றார்கள்.....!

---- பத்து ஈரோவுக்கு வேலை செய்பவன் எதாவது சிறு பிரச்சினை வரும்போது முதலாளி சொல்கிறான் விருப்பமில்லை என்றால் விட்டுட்டு போ ....பின்னால எட்டு ஈரோவுக்கு வேலை செய்ய ஆள் ரெடியாய் இருக்கு என்று......!   🤔

உண்மைதான்,  வேலையை விட்டு விட்டால் வேறு வேலை கிடைப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை .எனவே எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு மாடாக உழைக்கத்தான் வேண்டும். 

 • Like 3
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, நிலாமதி said:
தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
 
இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கதையாக இருந்தாலும் மனதுக்கு கஸ்டமாக இருந்தது.

முதலாளியாகிவிட்டால் மனிதன் மிருகமாகி ஆறாவது அறிவை இழக்கிறான்.

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான் அக்கா சில அல்ல பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. அதற்கான காரணம் எம்மவர் பலர் எம்மவரையே உரித்து அந்நிய முதலாளிகளுக்கு இலாபம் ஈட்டிக் கொடுப்பதுதான்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சமூக அக்கறை உள்ளவர்கள் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பதற்கே முனைவார்கள். ஆனால் இங்கே பிரச்சனையை பெரிதாக்கும் போக்கே தென்படுகிறது.  ஐயா உங்களுக்குள் பிரசிசனை இருந்தால் பேசித்தீருங்கள். அதுதான் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்தவர்கள் கடைப்பிடிக்கும் முறை.  புரிந்தால் சரி.
  • நூறு கதை நூறு படம்: 45 ஆறிலிருந்து அறுபது வரை July 8, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்கள் ஒரு குழந்தையாகவும் முதியவராகவும் ஒருங்கே திகழ்வதற்கான வாய்ப்பை ஒருவருக்கு சினிமா வழங்குகிறது. நிஜ வாழ்வில் அது நிகழாவொன்று. அப்பாஸ் கிராஸ்தொமி காவியத் தன்மை மிகும் கலைப்படைப்புகள் அவை உண்டாகிவரும் காலத்தில் பெறக்கூடிய வெற்றி தோல்வியைத் தாண்டிய வேறொன்றாக காலத்தின் மடியில் உறைபவை. அப்படியான தன்மை சினிமாவுக்கும் உண்டு. பல படங்கள் அவை வெளியான காலத்தில் அலட்சியப்படுத்தப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் சரிவர ஏற்றுக்கொள்ளாமலும் கடந்து சென்று பிற்பாடு கலையின் ஒளிர்தலை நிரந்தரமாக்கிக் கொண்ட காவிய மலர்களெனவே உயிர்த்திருக்கின்றன. அதைவிடவும் அபூர்வமான வெகு சில படங்களுக்கு மட்டுமே வெளியாகும் காலத்திலும் கொண்டாடப்பட்டு காலங்கடந்தும் போற்றப்படுவது நிகழும். அப்படியான ஒரு படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினி கர்நாடக மாநிலத்திலிருந்து மதராஸூக்கு வந்து நடிகரானவர். அன்றைய காலத்தில் தென் மொழிப் படங்கள் மட்டுமின்றி பெருவாரி இந்திப் படங்களுமே சென்னை சார்ந்து படப்பிடிப்புகளும் பிற்சேர்க்கை வேலைகளும் நடந்து வந்தது சரித்திரம். அப்படி இருக்கையில் எல்லா மொழிப் புதுமுகங்களுக்கும் சென்னை ஒற்றை ஸ்தலமாக தேடலுக்கும் காத்திருத்தலுக்குமாய் இருந்ததில் வியப்பில்லை. ரஜினிகாந்த் தமிழில் நடிகரானார். முதல் சில படங்களில் சாதாரணமான வேடங்களில் நடித்தவர் தன்னைப் பிறரினின்றும் அன்னியம் செய்து தனித்து நோக்கச் செய்வதற்காகக் கையில் எடுத்த விஷயம்தான் ஸ்டைல் என்பது, முன் காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்ஜி.ஆர் அரசியலில் கடுமையான போராட்டத்தில் இருந்து கொண்டிருந்த நேரம் ரஜனியின் உதயம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆரின் சகாவான சிவாஜி போட்டியில்லாத ராஜாவாக வலம்வரத் தொடங்கி இருந்தார். அடுத்த காலத்தின் ஒளிர்தலை நோக்கிய பயணத்தில் கமல்ஹாஸன், விஜய்குமார், ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், சுமன், ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர், ஏவிஎம்ராஜன், முத்துராமன் எனக் கலந்து கட்டிய பழைய புதியவர்களுக்கிடையிலான போட்டியும் அடுத்தது யார் என்கிற வினவாத வினாவுமாய்க் குழம்பிய காலம் 1975 முதல் 1980 வரையிலான 5 ஆண்டுகள். இந்தக் காலத்தில் தன்னை ஒரு நாயகனாக நின்று நிதானமாக நிலை நிறுத்திக்கொண்ட கமல்ஹாசனையும் விஞ்சி முதலிடத்தை அடைந்த ஆச்சர்யம்தான் ரஜ்னிகாந்த்.   ரஜினியிடம் இருப்பதை மாற்றித் தன்னை வேரூன்றிக் கொள்ளும் பிடிவாதம் இருந்தது. எத்தனை பேர் கொண்ட கூட்டத்திலும் தான் தனித்துத் தெரியவேண்டியதன் அவசியத்தை எப்போதும் மறந்துவிடவில்லை. ஒரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டாற்போலத் தோற்றமளித்தாலும்கூட அவற்றால் தன்னுடைய ஏற்றத்திற்கு என்ன பயன் என்பதைப் பார்த்தவண்ணமே ரஜினி நடை போட்டார். ஒருவழியாக பைரவி, பில்லா, ப்ரியா போன்ற படங்கள் இனி ரஜினி என்று ஆக்கிற்று. மக்கள் தங்கள் தேர்வுகளில் எந்தவித ஆதிக்கத்தையோ பரிந்துரையையோ ஏற்பதேயில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்தவண்ணம் உதயமானார் தமிழின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அனேகமாக ரஜினியின் ஐம்பதாவது படமாக வந்திருக்க வேண்டிய அவரது 51ஆவது படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்த் எனும் மக்கள் ப்ரிய நடிகர் தனக்கென்று நடித்து மிளிர்ந்த வெகு சில படங்களில் முள்ளும்மலரும் ஜானி ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எப்போதும் இடம்பெறும். தணியாத நடிப்பு தாகம் கொண்ட கலைஞன் ஒருவனால் மட்டுமே வென்றெடுக்கக்கூடிய காத்திரமான சந்தானம் எனும் பாத்திரத்தில் மிளிரவே செய்தார் ரஜனி. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல் இப்படத்தின் முகவரியானது. சிறுவயதில் தாய் தந்தையரை இழக்கும் சந்தானம் எனும் சின்னஞ்சிறுவன் தன்னை அடுத்த தம்பி தங்கையரை வளர்த்தெடுக்க தன்னையே மெழுகாக்கிக் கொள்வதும் மாறும் காட்சிகளில் அவனால் வளர்க்கப்பட்டு முன்னேற்றம் கண்ட உடன்பிறந்தோர் மின்மினிக் காலம் முடிந்ததென எண்ணி உறவைத் துச்சமென்றெண்ணித் துண்டாடிப் பிரிவதும் சந்தானம் வாழ்க்கையின் எல்லா கடினங்களையும் ஒன்றன்பின் ஒன்றென அடைவதும் அவனது ப்ரியமான மனைவியை தீவிபத்தில் இழப்பதும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் அந்தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதும் சந்தானம் பெரிய எழுத்தாளனாகப் புகழடைவதும் சுயநலமிக்க அவனது சகோதரர்கள் அவனை மீண்டும் அண்டுவதும் தனக்கென்று இருந்த ஒற்றை உறவான தன் மனைவியை எண்ணியபடி அறுபது வயதில் மரித்துப் போகும் சந்தானத்தின் முழு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் ஆறிலிருந்து அறுபது வரை. நம் கண்களுக்கு முன்பாக சந்தானம் எனும் மனிதனைத் தெரியச் செய்ததுதான் ரஜினி எனும் புகழ்பிம்பத்தின் வியக்கத்தக்க நடிப்பாற்றலின் பலன் எனலாம். “உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவன் அதை உயர்வாகப் பேசுகிறான்”  என்றொரு வசனம் வரும் இந்தப் படத்தின் இறுதியில் வணிக நிர்ப்பந்தங்கள் எது குறித்த சிந்தனையும் இன்றி முழுவதுமாகக் கதையின் செல்திசையிலேயே படத்தை எடுத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன். பிற்காலத்தில் ரஜினியை முழு சூப்பர்ஸ்டாராக வடிவமைத்து வார்த்தெடுத்ததில் பெரும் பங்கு வகிக்கும் அதே எஸ்.பி.எம் இயக்கத்தில்தான் நம்பமுடியாத அபூர்வமான ஆறிலிருந்து அறுபது வரை எனும் காவியமும் உருவானது. ஆறிலிருந்து அறுபது வரை மலைக்குறிஞ்சி   https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-45-ஆறிலிர/
  • அப்போ அந்த இந்து மாணவரகள் ??சைவவீதிகள் ??ஏன்டா சாமி என்னை படைத்தாய் அவரகளை என்ன செய்யலாம் ?? சொன்னால் திசை திருப்பும் ஆன்மாக்கள் எனக்கும் ......
  • இதில் மதம் புகுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இது ஒரு பத்திரிக்கை சுதந்திரம் பற்றிய பிரச்சனை.  அண்ணனும் தம்பியும் பேசித்தீர்க்க வேண்டிய சின்ன சிக்கலுக்குள் பக்கத்துவீட்டு மாமா புகுந்துவிட்டால் .... 
  • சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் பாவமடா 😪 பொறுங்கள் எல்லாவீதிகளும் வத்திக்கானை நோக்கியே